Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 2 பனைமரச் சிறப்பு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 2 பனைமரச் சிறப்பு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

வாங்க பேசலாம்

Question 1.
மரம் வளர்ப்பதனால் நாம் பெறும் பயன்கள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
அமலன் : மரம் வளர்ப்பதனால் நமக்கு என்னனென்ன பயன்கள் உள்ளன?
ராதா : மரம் வளர்ப்பதனால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன.
அமலன் : அப்படியா! எங்கே? சொல்லு பார்ப்போம்.
ராதா : மரங்கள் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு நமக்குத் தேவையான உயிர் காற்றைக் கொடுக்கிறது.
அமலன் : மரங்களினால் வேறு என்ன பயன் உள்ளது?

ராதா : மரங்கள் நமக்குக் கனிகள், காய்கள், இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்கள்
என்று பலவற்றைத் தருகின்றன.
அமலன் : மரங்கள் மண் அரிப்பை எவ்வாறு தடுக்கிறது?
ராதா : மழைக்காலங்களில் அதிக நீர் பெருக்கெடுத்து ஓடும் போது நீருடன் மண்ணும்  சேர்ந்து அரித்துக்கொண்டு ஓடும் அந்த சமயங்களில் மரங்களின் வேர்கள்  மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

அமலன் : நன்றாகச் சொல்கிறாய். இன்னும் கூடுதலாக சொல்லேன்.
ராதா : மரங்கள் நமக்கு வாசனை பொருட்கள், மூலிகைப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், எரிபொருட்கள் என பலவகையான பொருட்களை தருகின்றன. அதுமட்டுமல்லாமல் மரம் வளர்ப்பதால் தான் மழை வரும். மரங்கள் நீராவி சுழற்சிக்கு அதிக பயனை நல்குவதால், மரம் வளர்த்தால் மழை கிடைப்பது உறுதியே. மரம் மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், ஊர்வன, சிறு உயிரினங்கள் என்று எல்லாவற்றிற்கும் பயன் கிடைக்கின்றன.

கூடுதல் வினாக்கள்

Question 1.
உனது ஊரில் 108 வாகனத்தைப் பார்த்திருக்கிறாயா?
Asnwer:
வளவன் : 108 வாகனத்தை பார்த்திருக்கிறாயா? நான் பார்த்திருக்கிறேன். தமிழ்செல்வி : நான் பார்த்ததில்லை? 108 வாகனம் என்றால் என்ன?
வளவன் : அவசர கால ஆம்புலன்ஸை அழைக்கும் எண் 108.
முத்து : எதற்கெல்லாம் 108 வாகனத்தை அழைக்கலாம்?
வளவன் : 24 மணிநேரமும் சேவை கட்டணமில்லாத சேவை. விபத்துகளின் போது அடிபட்டவரை காப்பாற்றவும், தீ விபத்தின் போது தீக்காயம் பட்டவரை காப்பாற்றவும் தமிழகத்தில் 6800 மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச சிகிச்சை வழங்க 108 ஆம்புலன்ஸ் உதவுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

சிந்திக்கலாமா?

கிளி வளர்த்தேன், பறந்து போனது அணில் வளர்த்தேன், ஓடிப்போனது, மரம் வளர்த்தேன்… இரண்டும் திரும்பி வந்தது…..
– டாக்டர் அப்துல்கலாம்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
வல்லமை என்ற சொல்லின் பொருள் …………………….
அ) வலிமை
ஆ) எளிமை
இ) இனிமை
ஈ) புதுமை
Answer:
அ) வலிமை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 2.
‘உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல் …………………….
அ) மேலே
ஆ) நிறைய
இ) தாழ
ஈ) அதிகம்
Answer:
இ) தாழ

Question 3.
விழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்…………………….
அ) நடந்து
ஆ) பறந்து
இ) எழுந்து
ஈ) நின்று
Answer:
இ) எழுந்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 4.
கரையோரம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) கரை + ஓரம்
ஆ) கரை + யோரம்
இ) கரைய + ஓரம்
ஈ) கர + ஓரம்
Answer:
அ) கரை + ஓரம்

Question 5.
அங்கெல்லாம் – இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) அங் + கெல்லாம்
ஆ) அங்கு + எல்லாம்
இ) அங்கு + கெல்லாம்
ஈ) அங்கெ + ல்லாம்
Answer:
ஆ) அங்கு + எல்லாம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 6.
கீழ்க்காணும் சொற்களைகளைப் பிரித்து எழுதுக.
அ) சாலையோரம் = …………… + ………………….
ஆ) குருத்தோலை = …………… + ………………….
Answer:
அ) சாலையோரம் = சாலை + ஓரம்
ஆ) குருத்தோலை = குருத்து + ஓலை

வினாக்களுக்கு விடையளி

Question 1.
பனைமரத்தில் இருந்து கிடக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், கற்கண்டு, கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கின்றன.

Question 2.
சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?
Answer:
பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றை செய்து சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் உதவுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 3.
பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
Answer:
“மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை” இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். பனை மரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை அறிந்து கொண்டு, பனையின் சிறப்பினை நமது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் விதைகளை ஊன்றி பாதுகாக்கலாம்.

Question 4.
பனை மரத்தின் பயன்களாக நீ கருதுவனவற்றை உன் சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப் பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைபீலி, பனங்காய், பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இப்பொருட்கள் அனைத்தும் மனிதர்களுக்குப் பயன்படுவன.

(ii) நுங்கும், பனங்கிழங்கும், பனம்பழமும் உணவாகப் பயன்படுகின்றன. ஓலை கூடைகள் முடையவும், கைவினைப்பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

(iii) பனஞ்சாறு பதனீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன் தருகிறது. பனை மரம் புயலைத் தாங்கும் வல்லமை பெற்றது. பனை ஓலை ஓலைச்சுவடிக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

(iv) பனை மரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக்கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர் மட்டம் உயர் காரணமாக அமைகிறது.

(v) பனங்காய் வண்டி, பனைஓலை காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றைச் செய்து விளையாட்டுக்கள் விளையாட பயன்படுகிறது. பறவைகளுக்கு வாழிடமாகவும் விளங்குகிறது.

உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மரத்தாலான பொருள்களைப் பட்டியலிடுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

இணைந்து செய்வோம்

சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக .
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

மொழியோடு விளையாடு

ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 6

இலக்கணம் – பால்

திணையின் உட்பிரிவே பால் ஆகும். பால் என்ற சொல்லிற்குப் பகுப்பு என்பது பொருள்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

கீழ்க்காணும் சொற்களை வகைப்படுத்துக

அவள், சென்றனர், படித்தான், வந்தது, பறந்தன, ஓடினர், எழுதினான், விளையாடினர், குயவன், நாட்டிய மங்கை , மேய்ந்தன, வகுப்பறை, கற்கள், ஆசிரியர், மாணவர்கள், வீடு, பெற்றோர், தங்கை , அண்ண ன், மரங்கள், செடி, மலர், பூக்கள்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 10

பொருத்துக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 11
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 12

1. அவன் வரைந்தான்.
2. அவள் ஆடினாள்.
3. அவர்கள் பாடினார்கள்.
4. அது ஓடியது.
5. அவைகள் பறந்தன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
பனை மரம் ………….. உறுப்புகளை உடைய மரம்.
அ) பன்னிரண்டு
ஆ) எட்டு
இ) பத்து
ஈ) ஏழு
Answer:
அ) பன்னிரண்டு

Question 2.
பனை மரத்திற்கு ……………… பெயரும் உண்டு
அ) பெருமரம்
ஆ) தண்ணீர் மரம்
இ) கற்பகத்தரு
ஈ) கற்பூரம்
Answer:
இ) கற்பகத்தரு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 3.
கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுவது …………….. ஆகும்.
அ) ஓலை
ஆ) சில்லாட்டை
இ) நடுமரம்
ஈ) மட்டை
Answer:
அ) ஓலை

Question 4.
கற்கண்டாக பயன்படுவது …………….. ஆகும்.
அ) பனஞ்சாறு
ஆ) நுங்கு
இ) பாளைபீலி
ஈ) பனங்காய்
Answer:
இ) பாளைபீலி

Question 5.
பண்டைய இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு உதவியது ……………..
முதல் பருவம்
அ) கல்வெட்டு
ஆ) ஓலைச்சுவடி
இ) ஓவியம்
ஈ) செப்பேடு
Answer:
ஆ) ஓலைச்சுவடி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 6.
தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சியாக விளங்கும் மரம்
அ) பலா மரம்
ஆ) புன்னை மரம்
இ) பனை மரம்
ஈ) வேப்ப மரம்
Answer:
இ) பனை மரம்

Question 7.
தமிழ்நாட்டின் மாநில சின்னம் …………………. ஆகும்.
அ) தஞ்சை பெரிய கோவில் கோபுரம்
ஆ) திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம்
இ) மதுரை மீனாட்சி கோவில் கோபுரம்
ஈ) தாராசுரம் கோவில் கோபுரம்
Answer:
ஆ) திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம்

Question 8.
தமிழக அரசின் மாநில மரம் ……………. ஆகும்.
அ) தாமரை
ஆ) கொன்றை
இ) ரோஜா
ஈ) செங்காந்தாள்
Answer:
ஈ) செங்காந்தாள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 9.
தமிழக அரசின் மாநில விலங்கு ………………ஆகும்.
அ) சிங்கம்
ஆ) வரையாடு
இ) கரடி
ஈ) – புலி
Answer:
ஆ) வரையாடு

Question 10.
மரத்தினால் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) மரம் + தினால்
ஆ) மரத்தின் + ஆல்
இ) மரத்து + ஆனால்
ஈ) மரத் + தினால்
Answer:
ஆ) மரத்தின் + ஆல்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பனைமரத்தின் வேறு பெயர் யாது?
Answer:
பனை மரத்தின் வேறு பெயர் கற்பகத்தரு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 2.
பனை மரத்தின் உறுப்புகளை எழுதுக.
Answer:
வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பந்தைமட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரை ஓலை, குருத்தோலை.

Question 3.
பழங்காலத்தில் பனை ஓலை எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer:
நமது முன்னோர்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவிய ஓலைச்சுவடிகளாகப் பனை ஓலை பயன்படுத்தப்பட்டுள்ளது.

Question 4.
நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்குப் பனை மரம் எவ்வாறு உதவுகிறது?
Answer:
பனை மரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 5.
பனை மரங்கள் வெட்டப்படுவதால் எந்தெந்தப் பறவைகளுக்கு இழப்பு?
Answer:
பனை மரங்கள் வெட்டப்படுவதால் அந்த மரத்தைச் சார்ந்து இருக்கும் பனங்காடை, பனை உழவரான் போன்ற பறவைகள் தம் வாழிடங்களை இழக்கின்றன.