Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 26 உறவுமுறைக் கடிதம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

வாங்க பேசலாம்

உறவுமுறைக் கடிதத்தில் உள்ள செய்திகளை சொந்த நடையில் கூறுக.
Answer:
பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா’ பற்றிய செய்திகள்.
பாண்டி ஆட்டம், கபடி முதலிய வெளி விளையாட்டுகளும் தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி முதலிய உள் விளையாட்டுகளும் நம் பாரம்பரிய விளையாட்டுகளாகும். இவை உடலுக்கும் அறிவுக்கும் ஆற்றல் தரும்.

பாண்டி ஆட்டம் ஒருமுகத்திறன், கூர்மைப் பண்பு, குதிதிறன் ஆகியவற்றைத் தருகிறது. பல்லாங்குழி சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல் மிக்கது. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்க்குக் கொடுக்கும் நற்பண்பை உணர்த்தும்.

தாய விளையாட்டின் போது ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும் இறக்கத்திற்கான தீய வழிகளையும் தெரிந்து கொள்ளலாம். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்து கொள்ளும் சரியான விளையாட்டு ஆகும்.

கல்லாட்டம், ஐந்தாங்கல் ஆகிய விளையாட்டுகள் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளையாடப்படுகிறது. கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடும் போது ‘கவனச் சிதறல்’ வராமல் மனம் ஒருமுகப்படுகிறது. அடுத்த கல்லில் விரல் படாது எடுத்து ஆடுகையில் விரலின் பங்கோடு எண்ணமும் சரியாகப் பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சேர்க்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

தமிழக விளையாட்டுகள் நம் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் கூட்டுகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

சிந்திக்கலாமா?

நவீன் தான் நினைப்பதையெல்லாம் தன் மாமாவிடம் சொல்ல நினைப்பான். ஆனால், அலைபேசியில் பேசும்போது அத்தனையும் மறந்துவிடுவான்.
குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தில் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள்.
Answer:
குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தல் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள். இச்சூழல்தான் சிறந்தது.

ஒருநாளில் நாம் பலவிதமான நிகழ்வுகளைக் காண்கிறோம். அவற்றைக் காணும் போது நம் மனம் அவற்றைப் பற்றிச் சிந்திக்கும். எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்வது என்பது இயலாது. அதற்குக் குழலி செய்வதுதான் சிறந்தது.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
நற்பண்பு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………………
அ) நல்ல + பண்பு
ஆ) நற் + பண்பு
இ) நல் + பண்பு
ஈ) நன்மை + பண்பு
Answer:
ஈ) நன்மை + பண்பு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 2.
பின்வருவனவற்றுள் எது உள்ளரங்க விளையாட்டு இல்லை? ………………..
அ) தாயம்
ஆ) ஐந்தாங்கல்
இ) பல்லாங்குழி
ஈ) கபடி
Answer:
ஈ) கபடி

Question 3.
பாரம்பரியம் – இச்சொல்லுக்குரிய பொருளைத் தராத சொல்……………………
அ) அண்மைக்காலம்
ஆ) தொன்றுதொட்டு
இ) தலைமுறை
ஈ) பரம்பரை
Answer:
அ) அண்மைக்காலம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

வினாக்களுக்கு விடையளி

Question 1.
தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் எவை?
Answer:
பாண்டி ஆட்டம், கபடி, தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி ஆகியவை தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும்.

Question 2.
உள்ளரங்க விளையாட்டுகளின் பெயர்களை எழுதுக.
Answer:
தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி ஆகியவை உள்ளரங்கு விளையாட்டுகளாகும்.

Question 3.
கடிதத்தில் இடம்பெற்றுள்ள பழமொழியின் பொருள் யாது?
Answer:
கரும்பு தின்னக் கூலியா?
நாம் விரும்பியதைச் செய்வதற்கு நமக்கு யாரும் கூலி கொடுக்க வேண்டியதில்லை. நாமாகவே அச்செயலை சிறப்பாக செய்வோம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

மொழியோடு விளையாடு

உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைக் கட்டத்தில் கண்டறிந்து எழுதுக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம் 2

1. கிளித்தட்டு
2. பம்பரம்
3. பல்லாங்குழி
4. சடுகுடு
5. அம்மானை
6. தாயம்
7. ஆடுபுலி
8. கோலி
9. ஐந்தாங்களல்
10. கிட்டிபுள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

கலையும், கைவண்ணமும்

இராக்கெட் செய்வோம்! செடிக்கு நீர் ஊற்றுவோம்!
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம் 3
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவன. சங்க காலத்தில் இளையரும் முதியவரும் பலவகையான விளையாட்டுகளிலும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டனர். அவற்றுள் ஒன்று, ஏறுதழுவுதல். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், கூரிய கொம்புகளை உடைய காளைகளை அடக்குவதனை வீர விளையாட்டாகக் கருதினர்.

Question 1.
ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவனவாகும்.

Question 2.
ஏறுதழுவுதல் என்றால் என்ன?
Answer:
காளைகளை அடக்கும் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் எனப்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 3.
உரைப்பகுதியில் இடம்பெற்றுள் எதிர்ச்சொற்களை எழுதுக.
Answer:
இளையவர் × முதியவர்

Question 4.
ஏறுதழுவுதல் எந்த நிலத்துடன் தொடர்புடையது?
Answer:
ஏறு தழுவுதல் முல்லை நிலத்துடன் தொடர்புடையது.

Question 5.
நிரப்புக. ஏறு தழுவுதல் என்பது, …………….. விளையாட்டு.(உள்ளரங்க/வெளியரங்க)
Answer:
வெளியரங்க.

அறிந்து கொள்வோம்

கடிதத்தில் அனுப்புநர், பெறுநர் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இல்லையெனில் அனுப்பியவர்க்கே திரும்பி வந்துவிடும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

செயல் திட்டம்

எவையேனும் பத்து விளையாட்டுகளின் பெயர்களையும் அவற்றிற்குரிய படங்களையும் திரட்டிப் படத்தொகுப்பை உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

கூடுதல் வினாக்கள்

நீரப்புக:

1. பள்ளியில் ………………………………. விழா நடைபெற்றது.
2. பாடலோடு ஆடும் ஆட்டம் ……………………………….
3. சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டுகள் ……………………,……………………. மற்றும் ……………………………….
4. வாழ்விற்கு அவசியமான நற்பண்பு ……………………………….
5. பாரம்பரிய விளையாட்டுகள் பெருமையின் ………………………………. மட்டுமன்று; நன்மையின் ………………………………. ஆகும்.
Answer:
1. பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது.
2. பாடலோடு ஆடும் ஆட்டம் கபடியாட்டம்.
3. சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டுகள் பல்லாங்குழி, கல்லாட்டம் மற்றும் ஐந்தாங்கல்.
4. வாழ்விற்கு அவசியமான நற்பண்பு ஒழுக்கம்.
5. பாரம்பரிய விளையாட்டுகள் பெருமையின் அடையாளம் மட்டுமன்று; நன்மையின் விளைநிலமும் ஆகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
குறள்செல்வி, இளவேனிலுக்கு எழுதிய கடிதத்தில் எதைப் பற்றி எழுதினாள்?
Answer:
குறள் செல்வியின் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா , பற்றியும் அவளுடைய அனுபவங்களைத் தன் தோழியிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் கடிதம் எழுதினாள்.

Question 2.
உள்விளையாட்டு, வெளிவிளையாட்டுகளாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை யாவை?
Answer:
உள் விளையாட்டுகள் – தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி
வெளி விளையாட்டுகள் – பாண்டி ஆட்டம், கபடி.

Question 3.
தமிழக விளையாட்டுகள் நமக்கு எவற்றைத் தருகிறது?
Answer:
தமிழக விளையாட்டுகள் உடலுக்கும், அறிவுக்கும் ஆற்றல் தருகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 4.
பாண்டி ஆட்டத்தினால் நாம் எவற்றைப் பெறுகிறோம்?
Answer:
பாண்டி ஆட்டத்தினால் ஒருமுக திறன், கூர்மைப்பண்பு, குதிதிறன் ஆகியவற்றைப் பெறுகிறோம்.

Question 5.
பல்லாங்குழி, தாயம் – விளக்குக.
Answer:
பல்லாங்குழி : பல்லாங்குழி சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டு. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்கக்குக் கொடுக்கும் நற்பண்பை உணர்த்தும்.

தாயம் : இவ்விளையாட்டின் மூலம் வாழ்வின் ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும், இறக்கத்திற்கான தீயவழிகளையும் அறியலாம். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்து கொள்ளும் சரியான விளையாட்டு ஆகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 6.
கல்லாட்டம், ஐந்தாங்கல் பற்றி எழுதுக.
Answer:
கல்லாட்டம், ஐந்தாங்கல் ஆகிய விளையாட்டுகள் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளையாடப்படுகிறது.

தூக்கிப்போட்டு விளையாடும்போது கவனச்சிதறல்’ வராமல் ஒருமுகப்படுத்தி வெற்றி பெறுதல் பயிற்சி ஆகிறது.

அடுத்த கல்லில் விரல்படாது எடுத்து ஆடுகையில் விரலின் பங்கோடு எண்ணமும் சரியாகப் பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சேர்க்கிறது.