Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 27 அறிவுநிலா Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 27 அறிவுநிலா

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

வாங்க பேசலாம்

நீங்கள் அறிந்திருக்கும் புதிர்க்கதைகளுள் ஒன்றை வகுப்பில் பகிர்ந்து கொள்க.
Answer:
ஓர் ஊரில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழ்மையில் இருந்தான். அவனுடைய அப்பாவிற்குக் கண் தெரியாது. அவனுக்குத் திருமணம் ஆகி நீண்ட நாட்களுக்குப் பிறகும் குழந்தை இல்லை. எப்போதும் அவன் கவலையுடன் இருப்பான். ஒருநாள் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு தன் வறுமையை எண்ணியபடியே உறங்கிவிட்டான். கொஞ்ச நேரம் உறங்கியபின் விழித்தெழுந்தான். அடுத்த வேலை உணவிற்கு விறகு வெட்டி எடுத்துச் சென்றால்தான் என்ற நிலைமை. சுறுசுறுப்பானான்.

மரத்தை வெட்ட தன் வாளை எடுத்தான்.
போது அம்மரம் “விறகு வெட்டியே! நில் என்னை வெட்டாதே! நான் ஓர் அதிசய மரம். என் நிழலில் யார் அமர்கிறார்களோ அவர்களுக்கு உதவி செய்வேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். நான் தருகிறேன். ஆனால் ஒரு வரம்தான் கேட்க வேண்டும்” என்று கூறியது.

விறகு வெட்டி எனக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை. வீட்டிற்குச் சென்று என் குடும்பத்தினரிடம் கேட்டு நாளை வந்து கேட்கிறேன் என்றான். மரமும் “சரி” என்று கூறியது. விறகு வெட்டி வீட்டிற்குச் சென்ற நடந்தவற்றைக் கூறினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

விறகு வெட்டியின் தந்தை ‘தனக்குப் பார்வையில்லாமல் மிகவும் சிரமப்படுவதாகக் கூறினார். தாய் வீடு பெரிய மாடி வீடாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். மனைவி, ‘நமக்குக் குழந்தை வேண்டும்’ என்று கூறினாள். மூவருடைய தேவையை எவ்வாறு ஒரு வரத்தினால் பூர்த்தி செய்வது என்று சிந்தித்தான் விறகு வெட்டி.

அடுத்தநாள் விறகு வெட்டி விடியற்காலையில் எழுந்தான். காட்டிற்குச் சென்று அந்த அதிசய மரத்திடம் ஒரு வரம் கேட்டான். மரமும் கொடுத்தது. விறகு வெட்டியும் மகிழ்ந்தான்.

அவன் கேட்ட ஒரு வரம் என்ன?
Answer:
பதில் :
“என் மகனை நான் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சியை என் பெற்றோர் வீட்டு மாடியிலிருந்து பார்க்க வேண்டும்” என்பதுதான் விறகு வெட்டி கேட்ட வரம்,

  • தந்தைக்குப் பார்வை கிடைத்துவிட்டது.
  • தாய் கேட்டதைப் போல் மாடி வீடு கிடைத்தது.
  • அவனுக்கு மகனும் பிறந்து விட்டான்.

சிந்திக்கலாமா?

இக்கதையில் வரும் அண்ணனைப்போல் நீ இருந்தால், தம்பிக்கு என்ன செய்திருப்பாய்? கூறுக.
Answer:
இக்கதையில் வரும் அண்ணனைப் போல் நான் இருந்தால் என் தம்பிக்கு நல்லதைச் செய்வேன் பசுவை அவனிடம் கொடுப்பேன். மேலும் அவனைத் தனியே இருக்க வேண்டாம், என்னுடன் சேர்ந்தே இரு என்று கூறுவேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘தினமும்’ என்ற சொல்லின் பொருள் ……………………………..
அ) நாள்தோறும்
ஆ) வேலைதோறும்
இ) மாதந்தோறும்
ஈ) வாரந்தோறும்
Answer:
அ) நாள்தோறும்

Question 2.
‘பனிச்சறுக்கு’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………..
அ) பனி + சறுக்கு
ஆ) பனிச் + சறுக்கு
இ) பன + சறுக்கு
ஈ) பன் + சறுக்கு
Answer:
அ) பனி + சறுக்கு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

Question 3.
‘வேட்டை + நாய்’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ……………………………..
அ) வேட்ட நாய்
ஆ) வேட்நாய்
இ) வேட்டை நாய்
ஈ) வேட்டநாய்
Answer:
இ) வேட்டை நாய்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் யார்?
Answer:
ஓராண்டு அண்ணனுடைய நிலத்தில் தம்பி உழைத்தார்.

Question 2.
பெரியவர் சொன்ன புதிர்கள் எத்தனை?
Answer:
பெரியவர் சொன்ன புதிர்கள் மூன்று. அவை,

  • முதல் புதிர் – மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?
  • இரண்டாவது புதிர் – மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது?
  • மூன்றாவது புதிர் – அதிக விரைவாகச் செல்வது எது?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

Question 3.
புதிருக்குச் சரியான பதிலளித்தவர் யார்?
Answer:
புதிருக்குச் சரியான பதிலளித்தவர் தம்பி.

Question 4.
பெரியவர் பசுவை யாருக்குக் கொடுத்தார்?
Answer:
பெரியவர் பசுவைத் தம்பிக்குக் கொடுத்தார்.

Question 5.
கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு என்ன?
Answer:
கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு சிட்டுக்குருவி.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 2

இணைந்து செய்வோம்

விளையாடலாம் வாங்க! தூண்டில் மீன் விளையாட்டு!

மீன் வடிவத்தில் அட்டைகளை வெட்டிக் கொண்டு அட்டையில் பின்வரும் சொற்களை எழுதிக் கொள்ள வேண்டும். அட்டையில் குண்டூசியைக் குத்தி, வகுப்பறையின் நடுவில் வட்டமிட்டு அதில் அட்டைகளை பரப்பி வைக்க வேண்டும். ஒரு குச்சியின் நுனியில் நூலின் ஒரு முனையைக் கட்ட வேண்டும். மறுநுனியில் காந்தத்தை வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பெரியதொரு வட்டமிட்டு வட்டத்தில் ஓர் அம்புக்குறி இடவேண்டும். வட்டத்தில் மாணவர்களை ஓடவிட வேண்டும். ஆசிரி ஊதியவுடன் மாணவர்கள் வட்டத்தில் நிற்க வேண்டும். அம்புக்குறி இட்ட இடத்தில் எந்த மாணவர் நிற்கிறாரோ அவர், தூண்டில் மூலம் ஓர் அட்டையை எடுத்து, அதில் உள்ள சொல்லுக்குப் பன்மைச் சொல் கூற வேண்டும்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

கலையும் கைவண்ணமும்

வண்ணம் தீட்டி மகிழ்வோம்

பாதி என்னிடம் மீதி உன்னிடம் வரைந்து வண்ணம் தீட்டு.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 4
மாணவர்கள் தாங்களாகவே வண்ணம் தீட்டி மகிழ வேண்டும்.

மொழியோடு விளையாடு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

அறிந்து கொள்வோம்

விடுகதைகளுக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளன.

1. புதிர்
2. சொல் விளையாட்டு
3. மாற்றெழுத்துப் புதிர்
4. வினோதச் சொற்கள்
5. எழுத்துக்கூட்டு
6. விகடம்
7. ஓவியப் புதிர்
8. சொற்புதிர்
9. நொடிவினா

சொல்லுக்குள் சொல் கண்டுபிடி!

கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 10

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

செயல் திட்டம்

உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேட்டு 20 விடுகதைகள் எழுதி வருக.
Answer:

  1. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைக்கிறான். அது என்ன?
  2. புறப்பட்டது தெரிகிறது; போன சுவடு தெரியவில்லை . அது என்ன ?
  3. பார்த்தால் கல்; பல் பட்டால் நீர். அது என்ன?
  4. பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை . அது என்ன ?
  5. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள். அது என்ன?
  6. மட்டை உண்டு, கட்டை இல்லை; பூ உண்டு, மணமில்லை. அது என்ன?
  7. மூடாத வாய்க்கு முழ வால். அது என்ன?
  8. முகம் பார்த்து வளரும்; முடிவில்லாமல் தொடரும். அது என்ன?
  9. திரி இல்லாத விளக்கு; உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?
  10. சின்னத் தம்பி , குனிய வச்சான். அது என்ன?
  11. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது – அது என்ன?
  12. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது – அது என்ன?
  13. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை ?
  14. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.
  15. தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணிர் குடித்தால் மடியும்.
  16. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை
  17. பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை.
  18. நூல் நூற்கும்; இராட்டை அல்ல, ஆடை நெய்யும், தறியும் அல்ல.
  19. சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான்.
  20. பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா 11

கூடுதல் வினாக்கள்

நீரப்புக:

1. வறுமையில் வாடியவன் …………………………….
2. செல்வச்செழிப்பில் இருந்தவன்  …………………………….
3. அண்ணனுடைய நிலத்தில் தம்பி  ……………………………. முழுவதும் உழைத்தான்.
4. பெரியவர் கூறிய புதிர்கள் மொத்தம்  …………………………….
5. பெரியவரின் புதிர்களுக்கு விடையைக் கூறியவர்  …………………………….
6. விடையைத் தம்பிக்குக் கூறியவர் அவருடைய மகள்  …………………………….
Answer:
1. வறுமையில் வாடியவன் தம்பி.
2. செல்வச்செழிப்பில் இருந்தவன் அண்ணன்.
3. அண்ணனுடைய நிலத்தில் தம்பி ஓராண்டு முழுவதும் உழைத்தான்.
4. பெரியவர் கூறிய புதிர்கள் மொத்தம் மூன்று.
5. பெரியவரின் புதிர்களுக்கு விடையைக் கூறியவர் தம்பி.
6. விடையைத் தம்பிக்குக் கூறியவர் அவருடைய மகள் கவின்நிலா.

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
‘அறிவு நிலா’ பாடம் உணர்த்திய நீதி யாது?
Answer:

  • வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு.
  • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

Question 2.
பசுவைக் கேட்ட தம்பியிடம் அண்ணன் என்ன கூறினான்?
Answer:
அண்ணன், தம்பியிடம், “அதெப்படி முடியும்? ஓராண்டுக் காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது” என்றான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

Question 3.
மூன்று புதிர்களுக்கும் அண்ணன் என்ன பதில் கூறினான்?
Answer:
அண்ண ன், அவரிடம், “பெரியவரே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை அறுசுவை உணவு சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது.

இரண்டாவது மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும். மூன்றாவதாக அதி விரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூடப் பிடித்த விடுகின்றனவே” என்று சொல்லிவிட்டுப் பெரியவரைப் பார்த்து, “பசு எனக்குத்தானே” என்று கேட்டான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 27 அறிவுநிலா

Question 4.
மூன்று புதிர்களுக்கும் தம்பி அளித்த பதில்களை எழுதுக.
Answer:
தம்பி பெரியவரைப் பார்த்து, “நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமித்தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம், தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான் மூன்றாவது அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம் அது நாம் விரும்பியபோது, விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்” என்று பதில் கூறினான்.