Students can Download 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.5 இலக்கணம் – பொது

கற்பவை கற்றபின்

Question 1.
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
ஆ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்.
இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
Answer:
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
கால வழுவமைதி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

ஆ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்.
இட வழுவமைதி.

இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
கால வழுவமைதி.

ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
பால் வழுவமைதி.

Question 2.
அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!” என்று சொன்னார்.
(ஆண்பாற் பெயர்களைப் பெண்பாற் பெயர்களாக மாற்றி எழுது)
ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
இ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே முன்னர் கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
உ) குழந்தை அழுகிறான் பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக).
Answer:
அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!” என்று சொன்னார்.
(ஆண்பாற் பெயர்களைப் பெண்பாற் பெயர்களாக மாற்றி எழுது)
தாய், “மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா” என்று சொன்னாள்.

ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
அக்கா நேற்று வீட்டிற்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினார்(னாள்).

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

இ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே முன்னர் கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
“இதோ முடித்துவிட்டேன்” என்று செயலை முடிக்கும் முன்னர் கூறினார்.

ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

உ) குழந்தை அழுகிறான் பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக).
குழந்தை அழுகிறது பார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க.

Malar: Devi, switch off the lights when you leave the room.
Devi: Yeah, we have to save electricity.
Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!
Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lot power!
Answer:

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 5
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 6

வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும் பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு.
Answer:
காகத்திற்குக் காது உண்டா ? அதற்குக் காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு, காதுக் கேட்கும் பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ) இயற்கை – செயற்கை
எ.கா : பாதைதெரியாத இயற்கைக்காடுகளில் பயணிக்கச்செயற்கைக்கருவிகள் பயன்படுகின்றன.

ஆ) கொடு – கோடு
இராகவன் தன் நண்பன் கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தான்.

இ) கொள் – கோள்
கோள்களின் இயக்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஈ) சிறு – சீறு
சிறு பொந்துக்குள் இருந்து பாம்பு சீறுவதைக் கண்டேன்.

உ) தான் – தாம்
இராமன், “தான் தான் குற்றவாளி” என்று தாமே ஒப்புக் கொண்டான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

ஊ) விதி – வீதி
கண்ணனின் தலைவிதி அவனை வீதியில் நிறுத்தியது.

பத்தியைப் படித்துப் பதில் தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறித்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உயிர்கள் தோன்று நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

வினாக்கள் :
1. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
Answers:
1. மீண்டும் மீண்டும்.
2. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
3. பெய்மழை.
4. பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்புக் கொள்கை).
5. நிலம், நீர், காற்று, நெருப்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கட்டுரை எழுதுக.

தலைப்பு – விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 7

முன்னுரை :
ஆணுக்குப் பெண் சரிசமம்’ என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால்பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு :

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 8

  • 01.07.1961 அன்று இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் – பனாரஸ் லால் சாவ்லா (தந்தை), சன்யோகிதா தேவி (தாய்).
  • பஞ்சாபிக் குடும்பத்தைச் சார்ந்தவள்.
  • ‘கல்பனா’ என்றால் ‘கற்பனை’ என்று பொருள்.
  • இவருக்குச் சுனிதா மற்றும் தீபா என்ற இரு சகோதரிகளும் சஞ்சய் என்ற சகோதரனும் இருக்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கல்வி :

கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். 1982-இல் சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றாள். 1984-இல் அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்” பெற்றாள். 1988-இல் விண்வெளிப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம் :

  • நாசா ஆராய்ச்சிக் கூடத்தில் “ஓசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத்தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1995-இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.
  • 1997 ஆம் ஆண்டு கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87ல் முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்கினார்.
  • 372 மணி நேரம் விண்வெளியிலேயே இருந்து சாதனை படைத்தார்.

கொலம்பியா விண்கல நிகழ்வு :

  • 16.01.2003ல் அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் – 107 (STS – 107) விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இந்த விண்கலத்தில் சாவ்லா உட்பட ஏழு பேர் பயணித்தனர்.
  • பதினாறு நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு திரும்பிய போது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான் பரப்பில் அவ்விண்கலம் வெடித்துச் சிதறியது.
  • சாவ்லா உட்பட ஏழு பேரும் பலியாகினர்.

விருதுகளும் அங்கீகாரங்களும் :

  • இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க தமிழக அரசாங்கம் “கல்பனா சாவ்லா” விருதினை 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
  • நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்.
  • நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்.
  • நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்குக் “கல்பனா (way)” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

முடிவுரை :

பெண்ணினத்திற்கே பெருமை சேர்ந்தவர் கல்பனா.
“கனவுகளைக் கண்டு அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திச் சென்ற வீரப்பெண்ணை நாமும் போற்றுவோம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 9

நயம் பாராட்டுக.

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ ? – பாரதியார்
தலைப்பு : இயற்கை
ஆசிரியர் : பாரதியார்

திரண்ட கருத்து :
வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து நிலா, விண்மீன், காற்று ஆகிய இவற்றையெல்லாம் செம்மையுற்ற ஏற்படுத்தி வைத்து, அவற்றிலெல்லாம் தோய்ந்துள்ளது. திருவருளாகிய அமுதரசம். அந்த அமுதரசத்தைப் பருகி, அழகிய உன்னத நிலைக்கு யாம் உள்ளானோம். உலவுகின்ற மனமாகிய சிறுபறவையை எங்கெங்கும் செலுத்திக் களிப்படைவோம். பலாச்சுளை ஏற்றப்பட்ட வண்டியை ஒரு வண்டானது ரீங்காரம் செய்து வட்டமிடுவது ஆச்சரியகரமானதா என்ன?

தொடை நயம் :
தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்
செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.

மோனை நயம் :
மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். சான்று: குலாவும், குழம்பைக், குடித்தொரு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

எதுகை நயம் :
வீரத்துக்கு அழகு வேங்கை
பாட்டுக்கு அழகு எதுகை
முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

சான்று:

அடி எதுகை:
நிலாவையும்
குலாவும்
உலாவும்
பலாவின்

அணி நயம் :
கோவிலுக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு
இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

மொழியோடு விளையாடு

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்………….
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ………………
3. கல் சிலை ஆகுமெனில், நெல் ………….  ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ………….
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது ………….
Answer:
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்.
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை கரு.
3. கல் சிலை ஆகுமெனில், நெல் சோறு ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து எழுத்து.
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது பூவில்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

அகராதியில் காண்க.

அவிர்தல், அழல், உவா, கங்குல் , கனலி
Answer:
அவிர்தல் – ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்.
அழல் – உட்டணம், எருக்கு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி, செவ்வாய், தீ, நரகம், வெப்பம், பொறாமை, அழுதல்.
உவா – அமாவாசி, இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை, வாலிபன்,
உகாமரம்.
கங்குல் – இரவு, இருள், பரணி நாள்.
கனலி – கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு, சூரியன்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 14
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 11

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

செயல்திட்டம்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள் சில உலகினில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய படங்களுடன் குறிப்பு எழுதி வருக.
Answer:
செய்தி -1 :

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
  • இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
  • வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன.
  • இவை மனிதனின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
  • பெப்பரை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

செய்தி – 2 :
2016இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக்கணினியானவாட்சன், சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

செய்தி – 3 :

  • ஹாங்காங் நகரத்தின் ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய சோபியா என்னும் இயந்திரப் பெண்ணுக்கு சௌதி அரேபியாவில் குடியுரிமை வழங்கியிருக்கிறார்கள்.
  • இதனுடைய உரையாடல்களும், முகபாவனைகளும் மனிதர்களைப் போன்றிருந்தன.

கலைச்சொல் அறிவோம்

மீநுண் தொழில்நுட்பம் – Nanotechnology
விண்வெளித் தொழில்நுட்பம் – Space Technology
உயிரித் தொழில்நுட்பம் – Biotechnology
விண்வெளிக் கதிர்கள் – Cosmic Rays
புறஊதாக் கதிர்கள் – Ultraviolet Rays
அகச்சிவப்புக் கதிர்கள் – Infrared Rays

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

நிற்க அதற்குத் தக

தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி;
திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை;
காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்;
எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி;

இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 12

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 15
Answer:

  • கபடி, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடச் செய்வேன்.
  • கோலி, பம்பரம் போன்ற விளையாட்டுகளை விளையாடச் செய்வேன்,
  • நூலகத்திற்கு அழைத்துச் செல்வேன்.
  • சமூகசேவை செய்ய பழக்குவேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
Answer:
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

குறுவினா

Question 1.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
Answer:
கோடையில் பள்ளி விடுமுறை என்பதால் ஆரல்வாய்மொழிக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் உறுதித்தன்மை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் அமைகிறது.

Quesiton 2.
“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்கமாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
Answer:
சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

சிறுவினா

Question 1.
நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்” என்றார். ‘இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள், அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுக்களைத் திருத்தியும் வழுவமைதிகளைப் பட்டியலிட்டும் எழுது.
Answer:
திருத்தப்பட்ட வழுக்கள் :

  • நேற்றிரவு பெய்த மழை தொட்டியை நிறைத்தது.
  • வாழைத் தோட்டத்தில் கன்றுடன் நின்றிருந்த மாடு கதறியது.
  • துள்ளிய கன்றைத் தடவிக்கொடுத்த…..

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 2.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மருதன் – 1. பலர்பால்
ஆ) பெண்கள் – 2. ஒன்றன்பால்
இ) யானை – 3. ஆண்பால்
ஈ) பசுக்கள் – 4. பலவின்பால்
அ) 4, 3, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 3, 1, 2, 4

Question 3.
பால் என்பது ……………. உட்பிரிவு ஆகும்.
அ) திணையின்
ஆ) திணையின்
இ) காண்டத்தின்
ஈ) படலத்தின்
Answer:
ஆ) திணையின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 4.
உயர்திணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 5.
அஃறிணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 6.
இடம் ……………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 7.
பொருத்திக் காட்டுக.
i) நான், யான், நாம், யாம் – 1. தன்மை வினைகள்
வந்தேன், வந்தோம் – 2. தன்மைப் பெயர்கள்
iii) நீ, நீர், நீவிர், நீங்க ள் – 3. முன்னிலை வினைகள்
iv) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் – 4. முன்னிலைப் பெயர்கள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 8.
பொருத்திக் காட்டுக.
i) அவன் – தன்மை வினை
ii) பறந்தன – 2. முன்னிலை வினை
iii) நடந்தாய் – 3. படர்க்கை வினை
iv) வந்தேன் – 4. படர்க்கைப் பெயர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 9.
பொருத்திக் காட்டுக.
i) செழியன் வந்தது – 1. கால வழு
ii) கண்ண கி உண்டான் – 2. இட வழு
iii) நீ வந்தேன் – 3. பால் வழு
iv) நேற்று வருவான் – 4. திணை வழு
அ) 4,3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4,3, 2, 11

Question 10.
ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு.
அ) விடை
ஆ) வினா
இ) மரபு
ஈ) கால
Answer:
ஆ) வினா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 11.
கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று கூறுவது ……………. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
இ) விடை

Question 12.
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ……………….. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
ஈ) மரபு

Question 13.
பொருத்திக் காட்டுக.
i) என் அம்மை வந்தாள் – 1. பால் வழுவமைதி
ii) கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் – 2. கால வழுவமைதி
iii) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – 3. மரபு வழுவமைதி
iv) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது – 4. திணை வழுவமைதி
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 14.
மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………………
அ) பால் வழுமமைதி
ஆ) திணை வழுவமைதி
இ) இட வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
Answer:
இ) இட வழுவமைதி]

Question 15.
பொருத்துக.
1. வீரன், அண்ணன், மருதன் – அ) பெண்பால்
2. மகள், அரசி, தலைவி – ஆ) பலர்பால்
3. மக்கள், பெண்கள், ஆடவர் – இ) ஒன்றன்பால்
4. யானை, புறா, மலை – ஈ) ஆண்பால்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
விடை :
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நீ வந்தேன் – அ) இட வழாநிலை
2. நீ வந்தாய் – ஆ) இட வழு
3. நேற்று வருவான் – இ) கால வழாநிலை
4. நேற்று வந்தான் – ஈ) கால வழு
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 17.
பொருத்துக.
1. என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது – அ) பால் வழுவமைதி
2. வாடா இராசா, வாடா கண்ணா என மகளைத் தாய் அழைப்பது – ஆ) இடவழுவமைதி
3. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இ) கால வழுவமைதி
4. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – ஈ) திணைவழுவமைதி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

குறுவினா

Question 1.
திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
திணை இரண்டு வகைப்படும். அவை: உயர்திணை, அஃறிணை.

Question 2.
பால் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறு.
Answer:
பால் என்பது திணையின் உட்பிரிவு. பால் ஐந்து வகைப்படும். அவை:
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 3.
உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
உயர்திணைக்குரியப் பால்கள் மூன்று. அவை: ஆண்பால், பெண்பால், பலர்பால்.

Question 4.
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் எத்தனை? அவை யாவை?
Answer:
அஃறிணைக்குரியப் பால் பிரிவுகள் இரண்டு. அவை: ஒன்றன்பால், பலவின்பால்.

Question 5.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
Answer:

  • வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால் (ஒரு ஆணை மட்டும் குறிக்கும்)
  • மகள், அரசி, தலைவி – பெண்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)
  • மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)

Question 6.
அஃறிணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
Answer:

  • அஃறிணையில் ஒன்றனை மட்டும் குறிப்பது ஒன்றன்பால். எ.கா: யானை, புறா, மலை
  • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால். எ.கா: பசுக்கள், மலைகள்.

Question 7.
இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இடம் மூன்று வகைப்படும். அவை: தன்மை, முன்னிலை, படர்க்கை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 8.
வழு – வழா நிலை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 2

Question 9.
வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழு ஏழு வகைப்படும். அவை:
திணை வழு, பால் வழு, இட வழு , கால வழு, வினா வழு, விடை வழு, மரபு வழு.

Question 10.
வழுவமைதி என்றால் என்ன?
Answer:
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்.

Question 11.
வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழுவமைதி ஐந்து வகைப்படும். அவை:
திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால வழுவமைதி, மரபு வழுவமைதி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 12.
திணை வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழு.
காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

Question 13.
பால் வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : “வாடா ராசா, வாடா கண்ணா ” என்று தன் மகளைப் பார்த்துக் கூறுவது பால் வழுவமைதி.
காரணம் : உவப்பின் காரணமாக பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

Question 14.
இட வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : மாறன் என்பான் தன்னைப் பற்றி பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்” எனக் கூறுதல்.
காரணம் : தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவதால் இடவழுவமைதி ஆயிற்று.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 15.
கால வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். (வருவார் என்பதே சரி)
காரணம் : குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். வருகையின் உறுதித் தன்மை காரணமாக கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.

Question 16.
மரபு வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : “கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும்”-பாரதியார்.
(குயில் கூவும் – மரபு) காரணம் : குயில் கூவும் என்பது மரபு. பாரதியார் மகாகவி, அவர் குயில் கத்தும் என்று கூறியதால்
வழுவாயினும் மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Question 17.
வீரன், அண்ண ன், மருதன் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : ஆண்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 18.
மகள், அரசி, தலைவி ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : பெண்பால்

Question 19.
மக்கள், பெண்கள், ஆடவர் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : பலர்பால்

Question 20.
யானை, புறா, மலைஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : அஃறிணை
  • பால் : ஒன்றன்பால்

Question 21.
பசுக்கள், மலைகள் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : அஃறிணை
  • பால் : பலவின்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 22.
வழா நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழாநிலை ஏழு வகைப்படும். அவையாவன:

  1. திணை வழாநிலை,
  2. பால் வழாநிலை,
  3. இடவழாநிலை,
  4. காலவழாநிலை,
  5. வினாவழாநிலை,
  6. விடைவழாநிலை,
  7. மரபுவழாநிலை

Question 23.
“நான் தேர்வில் தேர்ச்சியடைந்து விட்டேன்” என்று தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பு கூறும் வழுவமைதி யாது?
Answer:
கால வழுவமைதி; நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்படுவது.

சிறுவினா

Question 1.
மூவிடப் பெயர்களைப் பெயர்/வினை அடிப்படையில் எடுத்துக்காட்டுடன் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Qeuestion 2.
செழியன் வந்தது
கண்ணகி உண்டான்
நீ வந்தேன்
நேற்று வருவான்.
ஒரு விரலைக் காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்.
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல். தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் – இத்தொடர்களில் உள்ள வழு எவ்வகை வழு எனவும் வழுவை நீக்கியும் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 4