Students can Download 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.1 சிற்றகல் ஒளி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

கற்பவை கற்றபின்

Question 1.
எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.
Answer:
பேரறிஞர் அண்ணா வாழ்வில் நிகழ்ந்ததைக் கூறுதல்.

அண்ணாவாகிய நான்,

என்னைப் பொறுத்தவரை, சிந்திப்பதும், படிப்பதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும்.
கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது, நான் ஆங்கில கட்டுரை ஒன்று எழுதினேன். அதனைப் படித்துப் பார்த்த என் பேராசிரியர், ‘பொருட் செறிவுடனும், நயமுடனும் இருக்கிறது. இதை எங்கிருந்து எடுத்தாய்’ என்றார்.

‘நான் இங்கிருந்து எடுத்தேன்’ என்று என் நெஞ்சைத் தொட்டுக் காட்டினேன். பேராசிரியர் வியப்புடனும், மகிழ்வுடனும் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.

பெரியாருடன் நான் இணைந்து பணியாற்றினேன். அப்போது இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் செல்வோம். வடநாட்டுப் பயணங்களில் பெரியாரின் தமிழ்ப்பேச்சை நானே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

என் அழகான ஆங்கிலத்தால் கவரப்பட்ட மக்கள் அனைவரும் என்னையே பேசும்படி வற்புறுத்துவர். ஆனால் நான் நயமாக அவ்வலியுறுத்தலை மறுத்துவிடுவேன்.

எவ்வளவுதான் புலமை திறமை இருந்தாலும், ஒருவருடைய பேச்சை மொழிபெயர்க்க வந்ததை விட்டு தனியுரை நிகழ்த்த முற்படுவது, கண்ணியமற்ற செயல் அல்லவா! அதனை நான் செய்யலாமா? கண்ணியம் தவறக் கூடாதன்றோ

Question 2.
நீங்கள் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதைகள் பற்றி வகுப்பறையில் உரை நிகழ்த்துக.
Answer:
மாணவர்களே! சமீபத்தில் நான் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதை ‘சிவகாமியின் சபதம்’ ஆகும். இது ஒரு வரலாற்றுப் புதினம். இதனை எழுதியவர் அமரர் கல்கி ஆவார்.

12 வருடங்களாக வாரந்தோறும் ‘கல்கி’ வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பின்பே நூல் வடிவம் பெற்றது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்தி, எழுதப்பட்ட புதினம் ஆகும். முதலாம் நரசிம்ம பல்லவன் இப்புதினத்தில் முக்கிய இடம் பெறுகிறார். பரஞ்சோதியாத்திரை, காஞ்சி முற்றுகை, பட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது.

வாதாபியின் மீது பல்லவர் போர் தொடுத்தது, காஞ்சியின் போர்ச் சூழல், சாளுக்கிய நாட்டின் வரலாறு ஆகியவை சுவைபட எடுத்தியம்பப்பட்டுள்ளது. சமணர்களால் காஞ்சியால் ஏற்பட்ட மதமாற்றம் குறித்தும் கூறுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

பேரழகியான சிவகாமியையும், அவள் தந்தை ஆயனாரும் மதம் கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட செய்தியும் நயம்பட நவிலப்பட்டுள்ளது. மூலிகை ஓவியங்கள், அஜந்தா குகைகளில் உள்ள வண்ண ஓவியங்கள் குறித்தும் இப்புதினத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு ‘தன் காதலர் நரசிம்மவர்மர் பல்லவர் வாதாபி நகரை தீக்கிரையாக்கி தன்னை மீட்டுச் செல்லும் வரை, அந்நகரை விட்டு, வெளியேறுவதில்லை என்ற சூளுரைப் பகுதியையும் கல்கி நம் கண்முன் விரித்துக் காட்டுகிறார்.

மேலும் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், கடல்புறா என பல வரலாற்றுக் கதைகள் நம் சிந்தையைக் கொள்ளை கொள்ளும் வண்ணமாக மட்டுமின்றி, நற்றமிழை நாம் அறியும் வகையிலும் உள்ளது. மாணவர்களே நேரம் கிடைக்கும் போது, நூலகம் செல்லுங்கள். கற்று இன்புறுங்கள்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே ……………..
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
Asnwer:
அ) திருப்பதியும் திருத்தணியும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஈ) சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
Answer:

 • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
 • இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
 • இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
 • செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
Answer:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

சிறுவினா

Question 1.
‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
Answer:
இடம்:
‘ம.பொ.சி’யின் தன் வரலாற்றுப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

பொருள்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத் தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

விளக்கம்:
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அப்பொழுது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் சென்னை’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.முன்மொழிந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று ம.பொ.சி முழங்கினார். 25.03.1953இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை, நாடாளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

நெடுவினா

Question 1.
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப்பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
Answer:

‘மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’

அறிமுகவுரை:

அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

மாணவப்பருவமும் நாட்டுபற்றும்:

 • ‘நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்படுகிறது’ என்றார் நேரு. எனவே கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
 • சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்டு விழாக்களைக்கொண்டாடும்போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்படவேண்டும்.
 • அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை, வெள்ளையனே வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறத்தல் கூடாது.
 • செக்கடியிலும், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
 • மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப்பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்துக் கொண்டால் நாளை நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்.
 • கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே.
 • நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தல் வேண்டும்.
 • சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

நிறைவுரை:

 • நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்கள் செய்வோம் எனக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
அ) சிவஞானம்
ஆ) ஞானப்பிரகாசம்
இ) பிரகாசம்
ஈ) பொன்னுசாமி
Answer:
ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.
சிவஞானி என்ற பெயரே……………..
என நிலைத்தது.
அ) சிவஞானம்
ஆ) சிவப்பிரகாசம்
இ) ஞானப்பிரகாசம்
ஈ) பிரகாசம்
Answer:
அ) சிவஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..
அ) பொன்னுசாமி
ஆ) சரவணன்
இ) சரபையர்
ஈ) சிவஞானி
Answer:
இ) சரபையர்

Question 4.
காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1919
Answer:
ஆ) 1906

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 5.
ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் ……………..
அ) கல்வி, கேள்வி
ஆ) கல்வி, ஓவியம்
இ) கலை, பண்பாடு
ஈ) கலை, மேடைப்பேச்சு
Answer:
இ) கலை, பண்பாடு

Question 6.
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
அ) 1942 ஜனவரி 8
ஆ) 1939 ஆகஸ்டு 8
இ) 1942 ஆகஸ்டு 8
ஈ) 1947 ஆகஸ்டு 18
Answer:
இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..
அ) 1955 அக்டோபர் 10
ஆ) 1957 ஆகஸ்டு 10
இ) 1957 ஆகஸ்டு 10
ஈ) 1949 அக்டோபர் 15
Answer:
அ) 1955 அக்டோபர் 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 8.
ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..
அ) இலண்ட ன்
ஆ) டெல்அவிவ்
இ) வியன்னா
ஈ) சிட்னி
Answer:
இ) வியன்னா

Question 9.
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..
அ) எனது போராட்டம்
ஆ) என் பயணம்
இ) என் விருப்பம்
ஈ) என் பாதை
Answer:
அ) எனது போராட்டம்

Question 10.
ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..
அ) சொல்லின் செல்வர்
ஆ) நாவலர்
இ) சிலம்புச் செல்வர்
ஈ) சிலம்பு அறிஞர்
Answer:
இ) சிலம்புச் செல்வர்

Question 11.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆ) மனுமுறை கண்ட வாசகம்
இ) எனது போராட்டம்
ஈ) வானம் வசப்படும்
Answer:
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 12.
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1986
Answer:
ஆ) 1966

Question 13.
மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..
அ) கன்னியாகுமரி
ஆ) தூத்துக்குடி
இ) நெல்லை
ஈ) நாகர்கோவில்
Answer:
ஈ) நாகர்கோவில்

Question 14.
ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..
அ) 1906-1955
ஆ) 1906-1995
இ) 1906 -1966
ஈ) 1906-1998
Answer:
ஆ) 1906-1995

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 15.
ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..
அ) திருத்தணி, தியாகராயநகர்
ஆ) திருத்தணி, திருநெல்வேலி
இ) திருத்தணி, கன்னியாகுமரி
ஈ) திருத்தணி, திருப்பதி
Answer:
அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..
அ) 1906
ஆ) 1908
இ) 1947
ஈ) 1946
Answer:
அ) 1906

Question 17.
மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
அ) ஆயிரம் விளக்கு

Question 18.
மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
ஆ) சால்வன் குப்பம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 19.
மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..
அ) தாமதமாக வந்தது
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை
இ) படிக்காமை
ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை
Answer:
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.
மா.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – ……………..
அ) ஐந்தாம் வகுப்பு
ஆ) மூன்றாம் வகுப்பு
இ) ஆறாம் வகுப்பு
ஈ) இரண்டாம் வகுப்பு
Answer:
ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.
மா.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ. நேசமணி
Answer:
அ) அன்னை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 22.
மா.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..
அ) கல்வி
ஆ) கேள்வி
இ) கட்டுரை
ஈ) சிறுகதை
Answer:
ஆ) கேள்வி

Question 23.
மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.
வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
இ) மங்கலங்கிழார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 25.
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.
நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.
குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 28.
‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ .சி

Question 29.
சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

Question 30.
மா.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு ……………..
அ) தன்வரலாறு
ஆ) கவிதை
இ) சிறுகதை
ஈ) புதினம்
Answer:
அ) தன்வரலாறு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 31.
தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

Question 32.
பொருத்துக.
1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) மா.பொ.சிவஞானம்
4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.
பொருத்துக.
1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்
4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 34.
பொருத்துக.
1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை
2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி
3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை
4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

குறுவினா

Question 1.
1906 ஆம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
Answer:

 • ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906இல் பிறந்தார்.
 • காந்தியடிகள் சத்தியாகிரக’ அறப்போர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு.
 • ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் வ.உ.சி.

Question 2.
ம.பொ.சிக்கு அவரது அன்னையார் பயிற்றுவித்த பாக்கள் யாவை?
Answer:
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களைப் பயிற்றுவித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
விடுதலைப் போரில் ஈடுபட தமிழர்க்கு ம.பொ.சி எவ்வாறு அழைப்பு விடுத்தார்?
Answer:

 • 30.09.1932ல் ‘தமிழா துள்ளி எழு’ என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை மக்களிடையே வழங்கினார்.
 • பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம்நாடு, ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்தார்.

Question 4.
ம.பொ.சி. சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியக் காரணம் என்ன?
Answer:
சிலப்பதிகாரம் தமிழினத்தின் பொதுச்சொத்து. இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும், தமிழ் இனத்தை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு உண்டான செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரத்தில் காணப்பட்டதால் மக்களிடையே சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றார்.

Question 5.
ம.பொ.சி வகித்த பதவிகளைக் குறிப்பிடுக.
Answer:

 • 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர்.
 • 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர் – போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 6.
ம.பொ.சி வாழ்நாள் மகிழ்ச்சியாக எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:

 • புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வட எல்லை வேங்கட மலையாகவும், தென் எல்லை குமரிமுனையாகவும் உள்ளது.
 • இதனைப் படித்தபோது ம.பொ.சி மகிழ்ந்து, ‘மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது தவப்பயன். இத்தெய்வீக எல்லையை, தமிழகம் திரும்பப் பெற்றதே தன் வாழ்நாள் மகிழ்ச்சி’ என்று குறிப்பிடுகிறார்.

Question 7.
விடுதலைப் போரில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களாக மா.பொ.சி. குறிப்பிடுவோர் யாவர்?
Answer:
காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்.

Question 8.
ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் யார்? அவரின் பெற்றோர் யாவர்?
Answer:

 • ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் மா.பொ.சிவஞானம்.
 • அவரின் பெற்றோர் : பொன்னுசாமி – சிவகாமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 9.
மா.பொ.சிக்குச் சிவஞானம் என்னும் பெயர் அமையக் காரணம் யாது?
Answer:

 • மா.பொ.சிக்குப் பெற்றோர் இட்டபெயர் : ஞானப்பிரகாசம்
 • சரபையர் என்ற முதியவர் ஒருவர் ‘ஞானப்பிரகாசம்’ என்ற இயற்பெயரை மாற்றி சிவஞானி’ என்று அழைத்தார்.
 • சிவஞானி என்ற பெயர் திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.

Question 10.
அறிவு விளக்கம் பெற மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி யாது?
Answer:

 • அறிவு விளக்கம் பெறுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று கல்வி, மற்றொன்று கேள்வி.
 • ஏட்டுக் கல்வி நின்று போனதால் மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி கேள்வியாகும்.

Question 11.
பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்க புனித நாள் எது, ஏன்?
Answer:

 • 1942 ஆகஸ்டு 8.
 • இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றிய நாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 12.
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் எது?
Answer:
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம்: மலபார்

Question 13.
கேரளாவிலிருந்து சென்னை மாநிலத்திற்கு இணைந்த பகுதிகள் யாவை?
Answer:
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை.

சிறுவினா

Question 1.
‘சென்னையை மீட்போம்’ – என்று ம.பொ.சி. குறிப்பிடுவது பற்றி எழுதுக.
Answer:

 • ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று சில ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
 • தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் இராஜாஜி முன்வந்தார்.
 • மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு சென்னை பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டது.
 • தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கிய தன்விளைவாக 25.08.1953 அன்று சென்னை தமிழருக்கே என்பது உறுதியானது என்று சென்னையை மீட்போம்’ என்று சென்னையை மீட்டது குறித்து ம.பொ.சி குறிப்பிடுகிறார்.

Question 2.
மார்ஷல் ஏ. நேசமணி – குறிப்பு வரைக.
Answer:

 • இளம் வயதில் சமூக விடுதலைக்காகப் போராடியவர்.
 • நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
 • குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதால் ‘மார்ஷல்’ என்று அழைக்கப்பட்டார்.
 • 1956 நவம்பர் 1-இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தமிழக தென் எல்லையாக மாறக் காரணமானவர்.
 •  தமிழக அரசு இவர் நினைவாக நாகர்கோவிலில் சிலையோடு மணி மண்டபமும் அமைத்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
பண்டைய ‘கடல் கடந்த தமிழ் வணிகம்’ குறித்து எழுதுக.
Answer:

 • ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ‘பேபிரஸ்தாளில்’ எழுதப்பட்ட கையெழுத்து சுவடி கண்டு பிடிக்கப்பட்டது.
 • அச்சுவடியில் சேரர் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும், எகிப்தின் ‘அலெக்ஸாண்டிரியா’ துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 • இது கி.பி. 2ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும்.
 • இதிலிருந்து பண்டைத் தமிழர் கடல் கடந்த வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பதை அறியலாம்.

Question 4.
மா.பொ.சிவஞானம் குறிப்பு வரைக
Answer:
பெயர் : மா.பொ.சிவஞானம் பெற்றோர்
இட்ட பெயர் : ஞானப்பிரகாசம்
பெற்றோர் : பொன்னுச்சாமி – சிவகாமி
பெயர் மாற்றம் : சரபையர் என்ற முதியவர் இவரைச் ‘சிவஞானி’ என்றே அழைத்தார். அதுவே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்றானது.
சிறப்பு : சிலப்பதிகாரத்தின் பெருமையை உலகறியச் செய்ததால் ‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுகின்றார்.
படைப்புகள் : எனது போராட்டம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு முதலியன.
பணி : சிறந்த விடுதலைப்போராட்ட வீரர், 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர், 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர்.
விருது – 1966ல் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது
அரசு : தமிழக அரசு திருத்தணி மற்றும் சென்னை தியாகராயநகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Question 5.
சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறுவது யாது?
Answer:

 • நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணம் உண்டு.
 • திருக்குறளையோ , கம்பராமாயணத்தையோ விரும்பாதவன் அல்லன்.
 • ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டு என்றால் , அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
 • இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.

என்று சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 6.
சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் ‘புத்தகப்பித்தன்’ என்பதை நிறுவுக.
Answer:

 • நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையைப் போக்க பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று, விருப்பமான புத்தகங்களை, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் மா.பொ.சிவஞானம் .
 • உணவுக்காக வைத்திருந்த பணத்தில் புத்தகம் வாங்கி, பல வேளைகளில் பட்டினிகிடந்தார்.
 • குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்தால் பேரானந்தம் அடைவார்.
 • இவர் தன்னுடைய வாழ்நாளில் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் பல்லாயிரக் கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்கிறார்.

இதன் மூலம் சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம், புத்தகப்பித்தன்’ என்பதை அறியலாம்.