Students can Download 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.4 சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 1.
சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தை அறிந்துவந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
பதினாறு வயதுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் இனிதே வாழ்கின்றனர்.

கோவலன் கலைகளின் காதலன். ஆடல் பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் மீட்டுவதில் வல்லவன். ஒரு நாள் ஆடல் அரசி அழகுப்பாவை மாதவியின் ஆடலில் மயங்குகிறான்.

மாதவியின் பசிய மாலையை யார் வாங்குகிறார்களோ அவர்கள் மாதவியை அடையலாம் என்று அவள் இல்லத்தில் ஒருத்தி கடைத்தெருவுக்கு வந்து கூறுகிறாள்.

கோவலன் மாலையை வாங்கி மாதவியை அடைகிறான். மாதவியோடு வாழ்கின்ற காலத்தில் அவன் செல்வம் எல்லாம் கரைகிறது.

மனம் வேறுபட்டு கண்ணகியை வந்தடைகிறான். இழந்தப் பொருளை மீட்டு மதுரைக்குச் சென்று ஆயர்குலப் பெண் மாதரியின் வீட்டில் தங்குகிறான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பொருள் ஈட்டுவதற்காக கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக்கொண்டு மதுரை வீதிக்குச் செல்கிறான். பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அப்பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன் அதை மறைக்க சமயம் கிடைத்ததை எண்ணி அரண்மனைச் சென்று மன்னனிடம் கோவலன் மீது பழி சுமத்துகிறான். மன்னனின் ஆணையால் கோவலன் கொலை செய்யப்படுகிறான்.

இதைக்கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரசபைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். உண்மை அறிந்த அரசனும் அரசியும் உயிர் துறக்கிறார்கள். மதுரையும் தீக்கிரையாகிறது.

பின் சேரநாட்டை அடைந்து வேங்கை மர நிழலில் தங்குகிறாள். பிறகு வானுலகோர் சூழ கோவலன் கண்ணகியை அழைத்துச் சென்றதைக் குன்றக் குறவர்கள் கூறுகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

செங்குட்டுவன் இமயம் வென்று, கல்லெடுத்து கங்கையில் நீராட்டி வஞ்சியில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான்.

இக்கதையின் மூலம் நாம் அறியும் மூன்று உண்மைகள்:

  1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
  2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

Question 2.
சிலப்பதிகாரம் காட்டும் மருவூர்ப்பாக்கம் பற்றிய விவரிப்பை இன்றைய கடைத் தெருவுடன் ஒப்பிட்டு உரையாடுக.
Answer:

உரையாடல்

மாணவர்களே! மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் பற்றிக் கற்றோம் அல்லவா! அதை மனதில் கொண்டு இன்றைய கடை வீதிகளோடு ஒப்பிட்டு உரையாடலாமா? சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ஒளிப்படங்களாகச் சேகரித்து. வரலாற்றுக் குறிப்பேடாக வைத்துக் கொள்ளுங்கள்.

உரையாடுபவர்கள்: மதன், சுதன், உமா.

மதன் : சுதன், உமா எப்படி இருக்கிறீர்?
இருவரும் : நன்றாக இருக்கிறோம்!
மதன் : இருவரும் விடுமுறைக்கு எங்காவது சென்றீர்களா?
உமா : நான் சென்னை சென்றேன் மதன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனேன்.
மதன் : நானும் திருச்சிக்குச் சென்று இருந்தேன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனபோது அங்கு ‘மால்’ என்று சொல்லப்படும் வணிக வளாகத்துக்குச் சென்றேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

உமா : சென்னையிலும் பெரிய பெரிய வணிக வளாகங்கள் அதிகமாக உள்ளன.
மதன் : நானும் தான் சென்றேன். அவற்றையெல்லாம் பார்க்கும் போது ஏனோ! என் மனதில் நாம் பாடத்தில் பயின்று தெரிந்து கொண்ட மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளின் காட்சி என் மனதில் வந்து போனது.
சுதன் : ஆமாடா…….. வணிக வீதிகளில் எல்லாப் பொருள்களும் கிடைத்தது போல் இங்கும் கிடைக்கிறது.
உமா : மருவூர்ப்பாக்க வீதியை விட இங்கு ஆரவாரமும், அலங்காரமும் அதிகமாக உள்ளது.

மதன் : அங்கு உற்பத்தியாளரே பொருளைக் கொண்டு வந்து விற்பார். இங்கு முதலீட்டாளர்கள் இடைத்தரகர் மூலம் வாங்கி வந்து விற்பனையாளரை வைத்து விற்கின்றனர்.
சுதன் : அந்தக் காலத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் நியாயமான விலை, பண்டமாற்று முறை இருந்தது.

உமா : தானியங்கள் குவித்து வைத்து அளந்து கொடுத்தனர். ஆனால். இந்த வளாகங்களிலும், அங்காடிகளிலும் வண்ணக் காகிதங்களில் ஏற்கனவே கட்டிவைத்து அடுக்கி வைத்துள்ளார்கள். நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மதன் : மூன்று ஊர்களிலும் பொதுவான முறையில் ஒரு விற்பனை முறை இருந்ததை யாரும் உணர்ந்தீர்களா……
சுதன் : பொதுவான விற்பனை முறையா…… என்னடா அது?
உமா : எனக்குத் தெரிந்து விட்டது. நடைபாதை கடைகளைத்தானே சொல்கிறாய்.

மதன் : ஆமா உமா…. ஒவ்வொரு கடைத்தெருவிலும் கண்ணைக் கவரும் பலமாடிக் கட்டிடங்கள், அலங்கார விளக்குகள் அமைத்து பல் பொருள் அங்காடிகள் இருப்பினும் அதே பொருள்களை நடைபாதைகளில் வைத்து சிறுகுறு வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருளை விற்றல் ஆகிய காட்சிகளையும் காண முடிந்தது தானே……

இருவரும் : ஆம் மதன்! நடைபாதைக் கடைகளிலும் தரமான பொருள் கிடைக்கும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.
மூவரும் : ஒருவருக்கொருவர் …… நேரமாகிவிட்டது போய் வரலாமா….. என்று விடைபெற்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
Answer:

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
  • பல்நிணவிலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

சிறுவினா

Question 1.
பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்;
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

அ) இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
Answer:
சிலப்பதிகாரம்

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
Answer:
கர்வனர், ட்டினும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
Answer:
ட்டினும் மயிரினும், கட்டு நுண்வினை

ஈ) காருகர் – பொருள் தருக.
Answer:
நெய்பவர் (நெசவாளர்)

உ) இப்பாடலடியில் காணப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?
Answer:
சந்தனமும் அகிலும்.

நெடுவினா

Question 1.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
Answer:

  • • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடி விற்பது போல் இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப்பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன. விற்கப்படுகின்றன.
  • • பொன், மணி, முத்து, பவளம் ஆகியவை மருவூர்ப்பாக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம்’ விற்கப்படுகிறது.
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்தது தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடைபோட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மருவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள். இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.

மருவூர்ப்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தினவேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பலதிறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.

அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

இலக்கணக்குறிப்பு

வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
பயில்தொழில் – வினைத்தொகை
நுண்வினை, அரும்பௌல் – பண்புத்தொகை
பகருநர் – வினையாலணையும் பெயர்
செறிந்த – பெயரெச்சம்
நன்கலம், வெறுக்கை – பண்புத்தொகை
குழலினும் யாழினும் – எண்ணும்மை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பகுபத உறுப்பிலக்கணம்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம் - 1

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் …………………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
Answer:
அ) சிலப்பதிகாரம்

Question 2.
சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ……………………
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஒன்பது
Answer:
இ) மூன்று

Question 3.
சிலப்பதிகாரத்தின் காதைகள் ………………………..
அ) 30
ஆ) 27
இ) 33
ஈ) 36
Answer:
அ) 30

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 4.
‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் ……………………..
அ) கம்பர்
ஆ) கபிலர்
இ) திருத்தக்கதேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
Answer:
ஈ) சீத்தலைச்சாத்தனார்

Question 5.
சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ……………….
அ) மணிமேகலை
ஆ) சூளாமணி
இ) வளையாபதி
ஈ) நீலகேசி
Answer:
அ) மணிமேகலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 6.
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) உமறுப்புலவர்
Answer:
இ) இளங்கோவடிகள்

Question 7.
மணிமேகலையின் ஆசிரியர் …………………..
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கதேவர்
ஈ) புத்தமித்திரர்
Answer:
ஆ) சீத்தலைச்சாத்தனார்

Question 8.
இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….
அ) புகார்க்காண்டம்
ஆ) மதுரைக்காண்டம்
இ) வஞ்சிக்காண்டம்
ஈ) பாலகாண்டம்
Answer:
அ) புகார்க்காண்டம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 9.
சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………
அ) பாகம்
ஆ) அங்கம்
இ) காண்டம்
ஈ) காதை
Answer:
இ) காண்டம்

Question 10.
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு …………….
அ) படலம்
ஆ) சருக்கம்
இ) காதை
ஈ) காட்சி
Answer:
இ) காதை

Question 11.
சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை……………..
அ) உரைப்பாட்டு மடை
ஆ) உரைநடை
இ) வசனநடை
ஈ) செய்யுள் நடை
Answer:
அ) உரைப்பாட்டு மடை

Question 12.
பேசும் மொழியின் ஓட்டம் என்பது ………………….
அ) மொழி
ஆ) உரை
இ) காதை
ஈ) காட்சி
Answer:
ஈ) காட்சி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 13.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்……………………. ஆகும்.
அ) இணைகாப்பியம்
ஆ) முதற்காப்பியம்
இ) பினைகாப்பியம்
ஈ) இரட்டைக்காப்பியம்
Answer:
ஈ) இரட்டைக்காப்பியம்

Question 14.
கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்……………………..
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) திருவரங்கம்
இ) உறையூர்
ஈ) கொடும்பாளூர்
Answer:
ஈ) கொடும்பாளூர்

Question 15.
இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
அ) சேர

Question 16.
அழகர் மலை என்பது …………………..
அ) திருவரங்கம்
ஆ) திருமால்குன்றம்
இ) வேலவன் குன்றம்
ஈ) மால்குன்றம்
Answer:
ஆ) திருமால்குன்றம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 17.
கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ………………….
அ) கவுந்தியடிகள்
ஆ) மாதரி
இ) மாதவி
ஈ) ஆயர்குலப்பெண்
Answer:
அ) கவுந்தியடிகள்

Question 18.
கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்…………………
அ) வைகைக்கரை
ஆ) வேங்கைக்கானல்
இ) அழகர்மலை
ஈ) உறையூர்
Answer:
ஆ) வேங்கைக்கானல்

Question 19.
பெருங்குணத்துக் காதலாள் யார்?
அ) கண்ணகி
ஆ) மாதவி
இ) மாதரி
ஈ) மணிமேகலை
Answer:
அ) கண்ணகி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 20.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) தூசு – 1. செல்வம்
ஆ) துகிர் – 2. பட்டு
இ) வெறுக்கை – 3. விலை
ஈ) நொடை – 4. பவளம்
அ) 3, 1, 4, 2
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3

Question 21.
மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம் ………….. ஆகும்.
அ) புகார்
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) காஞ்சி
Answer:
அ) புகார்

Question 22.
மண்ணீ ட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர் ……………………….
அ) ஓவியர்
ஆ) வணிகர்
இ) சிற்பி
ஈ) சாலியர்
Answer:
இ) சிற்பி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 23.
கூவம் குவித்த – இதில் ‘கூவம்’ என்பதன் பொருள் …………………….
அ) தானியம்
ஆ) குப்பை
இ) பழம்
ஈ) தோல்
Answer:
அ) தானியம்

Question 24.
கள் விற்பவர் ……………………….
அ) பரதவர்
ஆ) உமணர்
இ) பாசவர்
ஈ) வலைச்சியர்
Answer:
ஈ) வலைச்சியர்

Question 25.
பொருத்துக.
1. கண்ணுள் வினைஞர் – அ) சிற்பி
2. மண்ணீட்டாளர் – ஆ) ஓவியர்
3. கிழி – இ) தொழில்
4. வினை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 26.
சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
அ) சுண்ண ம் – நறுமணப்பொடி
ஆ) காருகர் – நெய்பவர்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் முத்து
Answer:
ஈ) துகிர் – முத்து

Question 27.
சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) சுண்ணம் – நெய்பவர்
ஆ) காருகர் – பவளம்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் நறுமணப்பொடி
Answer:
இ) தூசு – பட்டு

Question 28.
சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) வெறுக்கை – செல்வம்
ஆ) நொடை – எண்ணெய் விற்போர்
இ) பாசவர் – விலை
ஈ) ஓசுநர் – வெற்றிலை விற்போர்
Answer:
அ) வெறுக்கை – செல்வம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 29.
‘பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் ‘காருகர்’ என்பதைச் சுட்டும் சொல் …………..
அ) நெய்பவர்
ஆ) நுண்வினை
இ) சிற்பி
ஈ) ஓவியர்
Answer:
அ) நெய்பவர்

Question 30.
‘அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா’ இவ்வடிகளில் ‘வெறுக்கை’ என்பதைச் சுட்டும் சொல் ……………….
அ) துணி
ஆ) பவளம்
இ) பட்டு
ஈ) செல்வம்
Answer:
ஈ) செல்வம்

Question 31.
‘ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’ இவ்வடிகளில் ‘ஓசுநர்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) எண்ணெய் விற்போர்
ஆ) வெற்றிலை விற்போர்
இ) சிற்பி
ஈ) துணி விற்போர்
Answer:
அ) எண்ணெய் விற்போர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 32.
‘கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்’ இவ்வடிகளில் ‘மண்ணுள்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) சிற்பி
இ) சாலியர்
ஆ) ஓவியர்
ஈ) செல்வம்
Answer:
ஆ) ஓவியர்

Question 33.
‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) எதுகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

Question 2.
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள், காதைகள் குறிப்பிடுக.
Answer:
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் மூன்று, காதைகள் முப்பது ஆகும். அவை:

  • புகார்க்காண்டம் – 10
  • மதுரைக்காண்டம் – 13
  • வஞ்சிக்காண்டம் –

Question 3.
சிலப்பதிகாரத்தின் வேறுபெயர்கள் யாவை?
Answer:
முதல்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக்காப்பியம் – உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 4.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் விளக்குக.
Answer:

  • உரையிடையிட்ட பாட்டுடை என்பது ‘உரைப்பாட்டு மடை’ என்னும் தமிழ்நடை.
  • இது சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது.
  • உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.

Question 5.
‘கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்
மரம் கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

இவ்வடி அமைந்த நூல் எது?
Answer:
சிலப்பதிகாரம்.

இவ்வடி அமைந்த காதை எது?
Answer:
இந்திரவிழா ஊரெடுத்த காதை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

கருங்கைக் கொல்லர் எனப்படுபவர் யார்?
Answer:
இரும்புக் கொல்லர்.

இவ்வடியில் அமைந்த தொடை எது?
Answer:
இயைபுத் தொடை – செய்குநரும் கொல்லரும்.

Question 6.
மருவூர்ப்பாக்க வீதியில் இருந்த கைவினைத் தொழில் வல்லுநர்கள் யாவர்?
Answer:
செப்புப் பாத்திரம் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், பொற்கொல்லர், தையற்காரர், தோல் பொருள் தைப்பவர் ஆகியோர்.

Question 7.
இரட்டைக் காப்பியங்கள் யாவை?
Answer:

  • சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இரட்டைக்காப்பியம் ஆகும்.
  • காலத்தாலும், கதைத் தொடர்பாலும் தொடர்புடையதாய் இருக்கும்.

Question 8.
சிலப்பதிகாரத்தில் மருவூர்ப்பாக்கம் பற்றிய செய்தி இடம் பெறும் காண்டம் மற்றும் காதை யாவை?
Answer:
மதுரைக் காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 9.
‘கூலம் குவித்த கூல வீதியும்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
மருவூர்ப்பாக்கத்தில் எட்டு வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்கள் உள்ளன.

Question 10.
‘குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்வழுவின்றி இசைத்து’ இவ்வடிகளில் சுட்டும் குரல் முதலான ஏழிசைகள் யாவை?
Answer:
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்,

Question 11.
ஏழு சுரங்களைச் சுட்டுக.
Answer:
ஸ, ரி, க, ம, ப, த, நி.

Question 12.
நன்கலம் தருநர் – என்று எவரைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது?
Answer:
இரத்தினம் முதலான அணிகலன்கள் வேலை செய்பவர்.

Question 13.
‘பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் இளங்கோவடிகள் புலப்படுத்தும் கருத்தினை எழுதுக.
Answer:
மருவூர்ப்பாக்கத்தில் பட்டு, பருத்தி நூல், முடி இவற்றைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகளும் உள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 14.
‘மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்’ – இவ்வடியில் சிலப்பதிகாரம் சுட்டும் செய்தி யாது?
Answer:

  • மீன்விலைப் பரதவர் – மீன் விற்கும் பரதவர்
  • வெள்உப்புப் பகருநர் – வெண்மையான உப்பு விற்கும் உமணர்

சுட்டும் செய்தி :
மீன்களை விற்பனை செய்யும் நெய்தல் நில பரதவர் மற்றும் வெண்மையான உப்பு விற்கும் உமணர்மருவூர்ப்பாக்கத் தெருக்களில் வணிகம் செய்கின்றனர்.

சிறுவினா

Answer:1.
‘பால்வகை தெரிந்த பகுதிப் பாண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்தில் இந்திர விழா காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:
மருவூர்ப்பாக்க வணிக வீதியில் நடைபெற்ற வணிகம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

விளக்கம் :
மருவூர்ப்பாக்கத் தெருக்களில் பலப்பல பண்டங்களின் (பொருட்களின்) விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

Question 2.
மருவூர்ப்பாக்கத் தெருக்களில் எவ்வெவ் மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்?
Answer:
புகார் நகர மருவூர்ப்பாக்க வணிக வீதிகளில் :
வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப்பொருள்கள், அகில் – முதலான மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்.