Students can Download 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.3 தேம்பாவணி
கற்பவை கற்றபின்
Question 1.
வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக.
Answer:
- வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழகத்தில் இருந்து தமிழ்ப்ப ணி ஆற்றினார்.
- சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார்.
- இலக்கியச் சுவடிகளைத் தேடி எடுத்ததால் “சுவடி தேடும் சாமியார்’ எனப்பட்டார்.
- திருக்குறள், தேவாரம், திருப்புகழ் போன்ற நூல்களைப் பிற ஐரோப்பிய மொழிகளில்
- மொழிபெயர்த்தார்.
- தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீனில் விளக்கம் அளித்து உள்ளார்.
- திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்தார்.
- 1728இல் புதுவையில் இவரின் பரமார்த்தக் குருவின் கதை நூல் முதல் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
- வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி இலக்கணம், உரைநடை என பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைக்கவில்லை.
- இத்தமிழ்ப் பணிகளை இவர் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ஆற்காடு வேலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் தங்கிப் பணியாற்றினார்.
Question 2.
கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மலைப் பொழிவுப் பகுதியைப் படித்து அதில் வரும் அறக் கருத்துகளை எழுதுக.
Answer:
மலைப் பொழிவின் அறக்கருத்துகள்:
- எளிய மனத்தோர் பேறு பெற்றோர்.
- வஞ்சமில்லாத நெஞ்சத்துடன், பிறரைப் பழி சொல்லாது வாழ்பவர் விண்ணரசு எய்துவார்.
- துயரம் அடைவோர் பேறு பெற்றோர் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
- சாந்தம் உடையவர் பேறு பெற்றவர்கள்; தரணி (உலகம்) முழுவதும் அவர்களுக்கு உரியது.
- நீதியின்மேல் பற்றுக்கொண்டு வாழ்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
- இரக்க சிந்தை உடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்களுக்கே இரக்கம் கிடைக்கும்.
- தூய மனதையுடையவர்கள் சிறப்புப் பெற்றவர்கள்; தோன்றும் கடவுளை அவர்கள் நேரில் காண்பர்.
- பிறர் வேதனை தீர்க்க, தம்மை வருத்தும் ஞானிகள் எவரோ, அவர்கள் விண்ணக அரசை அடைந்தே தீர்வர்.
- மனிதர்கள் பால் பகை கொண்டு, மடி நிறைய காணிக்கையை இறைவனுக்கு மட்டும் செலுத்துவதால் பயன் என்ன?
“ஊருக்குத் தீமைகள் செய்து – உன்
உள்ளம் மகிழ்வது பாவம்
யாருக்கும் தீமையில்லாமல் – நீ
அழிந்து விடுவதே லாபம்”
இவைபோன்ற இன்னும் பல அறக்கருத்துகள் “மலைப்பொழிவில்” இடம்பெற்று உள்ளன.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக
ஈ) எலிசபெத், பூமிக்காக
Answer:
அ) கருணையன், எலிசபெத்துக்காக
குறுவினா
Question 1.
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?
Answer:
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்
உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.
சிறுவினா
Question 1.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
Answer:
- கருணையனாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
- அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
- உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
- காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.
“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”
நெடுவினா
Question 1.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரி.
Answer:
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி
- முடிவுரை
முன்னுரை:
தாயின் அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்லில் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.
வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி :
1) மலர்ப்படுக்கை :
கருணையனின் தாய் மறைந்துவிட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்ப்படுக்கையை பரப்பினான். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.
2) இளம்பயிர் வாட்டம்:
என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது. இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்போல் வாடுகிறது.
3) அம்பு துளைத்த வேதனை:
தீயையும் நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்ததால் ஏற்படும் புண்ணின் வரியைப் போல என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது வாடுகிறேன்.
4) தவிப்பு :
சரிந்த வழுக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழிதெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.
5) உயிர்கள் அழுதல்:
புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல கூச்சலிட்டன.
முடிவுரை:
வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலக்கணக் குறிப்பு.
காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய் மணி – வினைத்தொகை
உய்முறை – வினைத்தொகை
செய்முறை – வினைத்தொகை
மெய்முறை – வேற்றுமைத்தொகை
கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஒலித்து – வினையெச்சம்
வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பரப்பி – வினையெச்சம்
வீ – ஓரெழுத்தொருமொழி
தடவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லறம் – பண்புத்தொகை
இளங்கூழ் – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………
அ) பேதுரு
ஆ) ஆபிரகாம்
இ) திருமுழுக்கு யோவான்
ஈ) சூசை
Answer:
இ) திருமுழுக்கு யோவான்
Question 2.
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ) கருணாமூர்த்தி
ஈ) வலின்
Answer:
ஆ) கருணையன்
Question 3.
கருணையனின் தாயார் யார்?
அ) எலிசபெத்
ஆ) மரியாள்
இ) சாரா
ஈ) அண்ணாள்
Answer:
அ) எலிசபெத்
Question 4.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
ஆ) 4, 1, 2, 3
Question 5.
தேம்பா + அணி என்பதன் பொருள் …………………
அ) வாடாத மாலை
ஆ) சூடாத மாலை
இ) பாடாத மாலை
ஈ) தேன்மாலை
Answer:
அ) வாடாத மாலை
Question 6.
கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….
அ) கருணையன்
ஆ) சூசையப்பர்
இ) தாவீது
ஈ) ஈசாக்கு
Answer:
ஆ) சூசையப்பர்
Question 7.
தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) மூன்று
Question 8.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..
அ) 7ஆம் நூற்றாண்டு
ஆ) 12ஆம் நூற்றாண்டு
இ) 17ஆம் நூற்றாண்டு
ஈ) 19ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 17ஆம் நூற்றாண்டு
Question 9.
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Answer:
ஈ) 3615
Question 10.
தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..
அ) 33
ஆ) 35
இ) 36
ஈ)
Answer:
இ) 36
Question 11.
தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.
அ) பெருங்காப்பிய
ஆ) புதின
இ) நாடக நூல்
ஈ) வரலாற்று
Answer:
அ) பெருங்காப்பிய
Question 12.
தேம்பாவணியை இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) கால்டு வெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) வீரமாமுனிவர்
Question 13.
தமிழ் முதல் அகராதி எது?
அ) சதுரகராதி
ஆ) தமிழ் அகராதி
இ) தொன்மை அகராதி
ஈ) பழைய அகராதி
Answer:
அ) சதுரகராதி
Question 14.
வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
ஆ) தாமஸ் பெஸ்கி
இ) இஸ்மத்
ஈ) கால்டுவெல்
Answer:
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
Question 15.
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Answer:
இ) இஸ்மத் சன்னியாசி
Question 16.
இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………
அ) தூயவன்
ஆ) புனிதன்
இ) பெரியோன்
ஈ) தூயதுறவி
Answer:
ஈ) தூயதுறவி
Question 17.
இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) எபிரேய
ஈ) உருது
Answer:
அ) பாரசீக
Question 18.
கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?
அ) எலிசபெத் கூற்று
ஆ) கருணையன் கூற்று
இ) சூசையப்பர் கூற்று
ஈ) தாவீது கூற்று
Answer:
ஆ) கருணையன் கூற்று
Question 19.
பொருத்துக.
1. கூழ் – அ) கிளை
2. கொம்பு – ஆ) பயிர்
3. புழை – இ) காடு
4. கான் – ஈ) துளை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
Question 20.
பொருத்துக.
1. கடிந்து – அ) விலக்கி
2. உவமணி – ஆ) மாலை
3. படலை – இ) மணமலர்
4. துணர் – ஈ) மலர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Question 21.
பொருத்துக.
1. காக்கென்று – அ) இடைக்குறை
2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்
3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை
4. மெய்முறை – ஈ) வினைத்தொகை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
Question 22.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) திருமுழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) எலிசபெத்
Answer:
ஈ) எலிசபெத்
Question 23.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஈ) இயேசு
Question 24.
‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள் ………………
அ) வானம்
ஆ) நிலம்
இ) காடு
ஈ) கிளை
Answer:
ஆ) நிலம்
Question 25.
நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………
அ) ஆறு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஒன்பது
Question 26.
‘நல்லறப் படலைப் பூட்டும்’ இவ்வடிகளில் ‘படலை’ என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) மாலை
ஆ) மணமலர்
இ) மலர்கள்
ஈ) நிலம்
Answer:
அ) மாலை
Question 27.
கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ………………
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஆ) யோவான்
Question 28.
கருணையன் என்பவர் ………………
அ) வீரமாமுனிவர்
ஆ) யோசேப்பு
இ) அருளப்பன்
ஈ) சாந்தாசாகிப்
Answer:
இ) அருளப்பன்
குறுவினா
Question 1.
தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக.
Answer:
- தேம்பாவணி – தேம்பா + அணி என்றும் தேன் + பா + அணி என்றும் பிரிக்கலாம்.
- தேம்பா + அணி என்பதற்கு வாடாத மாலை என்று பொருள்.
- தேன் + பா + அணி என்பதற்கு தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்று பொருள்.
Question 2.
வீரமாமுனிவர் படைத்த இலக்கியங்கள் யாவை?
Answer:
- சதுரகராதி
- தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
- சிற்றிலக்கியங்கள்
- உரைநடை நூல்கள்
- பரமார்த்தக் குரு கதைகள்
- மொழிபெயர்ப்பு நூல்கள்
ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
Question 3.
எதனை மட்டும் தான் அறிந்ததாகக் கருணையன் கூறுகிறார்?
Answer:
தன் தாயாகிய எலிசபெத் தன் கையால் காட்டிய முறைகளை மட்டும் அறிவேன். வேறொன்றும் அறியேன் என்று கூறுகிறார்.
Question 4.
தேம்பாவணி குறிப்பு வரைக.
Answer:
- தேம்பாவணி பெருங்காப்பிய வகை நூல்.
- இந்நூல் மூன்று காண்டங்களை உடையது.
- 36 படலங்களையும் 3615 பாடல்களையும் உடையது.
- இந்நூல் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூலாகும்.
- இந்நூலின் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார்.
Question 5.
கருணையன் உள்ளம் வாடியது எதற்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது?
Answer:
கருணையன் உள்ளம் ,மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்வாடுதலுக்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது.
Question 6.
கருணையன், ‘இரும்புழைப் புண்போல்’ நோகக் காரணம் யாது?
Answer:
கருணையனின் தாய் இறந்து விட்டார். தாயை இழந்து வாடும் அவர், தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்று வருந்துகின்றார்.
Question 7.
‘நவமணி வடக்க யில்போல்’ – இவ்வடிகள் சுட்டும் நவமணிகள் யாவை?
Answer:
- கோமேதகம்
- முத்து
- நீலம்
- புருடராகம் (புஷ்பராகம்)
- பவளம்
- வைடூரியம்
- மரகதம்
- வைரம்
- மாணிக்கம்
Question 8.
திருமுழுக்கு யோவான் என்பவர் யார்?
Answer:
- கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
- இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
- இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
- தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் காட்டினில் வாழ்ந்தார்.
- வீரமாமுனிவர் கருணையன் என்று இவரை அழைக்கின்றார்.
Question 9.
‘அழுங்கணீர் பொழிந்தான்’ யார்? ஏன்?
Answer:
- அழுங்கணீர் பொழிந்தவர் : திருமுழுக்கு யோவான்(கருணையன்)
- கருணையன் தன் அன்னையின் உடலை மண்ணுள் அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும் கண்ணீரையும் ஒன்றாகப் பொழிந்தான்.
Question 10.
கருணையன் புலம்பியதைக் கேட்டு, அழுவன போன்று கூச்சலிட்டன எவை?
Answer:
கருணையன் புலம்பியதைக் கேட்டு, தேன்மலர்கள் பூத்த மணம் வீசும் மலர்களும், சிறுகுட்டைகள் தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டில் அழுவன போன்று கூச்சலிட்டன.
சிறுவினா
Question 1.
கருணையனிடம் இயற்கை கொண்ட பரிவு யாது?
Answer:
நல் அறங்களையெல்லாம் ஒரு கோவையாக இணைத்த அறமாலையை அணிந்த மார்பனாகிய கருணையன் கொண்ட துயரைக் கண்டு இயற்கையும் பரிவு கொண்டது.
பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும், சுனை தோறும் தங்கியுள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையன் உடன் இணைந்து அழுவன போல கூச்சலிட்டன.
Question 2.
இஸ்மத் சன்னியாசி – விளக்குக.
Answer:
- வீரமாமுனிவரின் எளிமையையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
- இஸ்மத் சன்னியாசி என்பதற்குத் தூயதுறவி என்று பொருள்.
- இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.
Question 3.
வீரமாமுனிவர் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : வீரமாமுனிவர்
இயற்பெயர் : கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி
புனைபெயர் : தைரிய நாத சுவாமி இலக்கியப் பணி : இலக்கண நூல், மொழிபெயர்ப்பு,
சிற்றிலக்கியம், உரைநடை.
இயற்றிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்தக் குருகதைகள், வேதியர் ஒழுக்கம்,
செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம்.
காலம் : கி.பி. 1680-1747.
பிறமொழிப் புலமை : இலத்தீன், கிரீக்கு, எபிரேயம், ஆங்கிலம், தெலுங்கு.
மறைந்த ஊர் : அம்பலக்காடு
Question 4.
‘தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடி’ என்ற உவமையை விளக்கிப் பொருளொடு பொருத்துக.
Answer:
உவமை :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்.
பொருள் :
கருணையன் தாயை இழந்து வாடுதல்.
பொருத்தம் :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல் போன்று கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றார்.
Question 5.
கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) யாவை?
Answer:
- இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்
- மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்
- தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருத்தம்.
- துணையைப் பிரிந்த பறவை
- சரிந்த வழுக்கு நிலத்தில் தனியே விடப்பட்டு வழி தெரியாமல் தவிப்பவன்.
– ஆகியன கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) ஆகும்.
Question 6.
‘தாயும் கடிந்தெனைத் தனித்துப் போனாள்’ என்று கருணையன் வருந்தக் காரணம் யாது?
Answer:
- நான் உயிர்ப்பிழைக்கும் வழி அறியேன்.
- நினைத்ததைக் கண்ட அறிவுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
- உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளையும் அறியாதவன்.
- என் தாய் கையால் காட்டிய அறிவுரையை மட்டுமே நான் அறிவேன்.
- இப்படி என்னைத் தவிக்க விட்டுவிட்டு என் தாய் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!
– என்னையும் என் தாய் கூட்டிச் சென்று இருக்கலாம், எதுவும் தெரியாத நான் எப்படி வாழ்வேனோ?