Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Tamil Guide Pdf Chapter 9.5 அணி Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.5 அணி
கற்பவை கற்றபின்
Question 1.
முன் வகுப்புகளில் கற்ற அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்து ஒப்படைவு ஒன்றை உருவாக்குக.
Answer:
உவமையணி:
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
பிறிது மொழிதலணி:
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்”
வேற்றுமையணி:
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”
சொற்பொருட்பின்வரு நிலையணி: :
“உதவி வரைத்தன் றுதவி
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.”
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்ப்பு
1. Education is what remains after one has forgotten what one has learned in School. – Albert Einstein.
Answer:
ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்னே!
2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb
Answer:
இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே அதிக வேலைப்பளு உள்ளது.
3. It is during our darkest moments that we must focus to see the light. – Aristotle
Answer:
நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. – Winston Churchill.
Answer:
வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பதும் விதியல்ல. இரண்டுக்காகவும் தொடர்ந்து முயற்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்படுவதே எண்ணப்படும்.
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர் போல
Answer:
என் நண்பன் தாமரை இலைநீர் போலப் பட்டும் படாமலும் பழகுவான்.
2. மழைமுகம் காணாப் பயிர்போல
Answer:
தாயை இழந்த கருணையன் மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.
3. கண்ணினைக் காக்கும் இமைபோல
Answer:
இறைவன் அனுதினமும் நம்மைக் கண்ணினைக் காக்கும் இமைபோலக் காத்துக் கொண்டு இருக்கிறார்.
4. சிலை மேல் எழுத்து போல
Answer:
சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலைமேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.
பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.
சேரனின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
Answer:
வாழ்த்துரை எழுதுக.
உம் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்கவிழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்குக.
Answer:
” இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்”
ஆம்! அன்பார்ந்த மாணவர்களே!
நாளைய தலைவர்களான உங்களை இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மூலம் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
நவீன பாரதத்தை உயர்த்துபவர்களே!
“நூறு இளைஞர்களைக் கொடுங்கள்: இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகின்றேன்” என்றார் சுவாமி விவேகானந்தர் அன்று. அவர் இன்று இருந்திருந்தால், இந்த முகாமிலுள்ள உங்களை வைத்து நவீன பாரதத்தையே வடிவமைத்திருப்பார். நவீன பாரதத்தை உயர்த்தும் உன்னத தூண்கள் நீங்கள்தான்.
சேவைச் செம்மல்களே!
மக்கள் தொண்டே! இறைவன் தொண்டு என்பார்கள். அதைப்போலவே நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய காத்திருக்கும் சேவைச் செம்மல்களே! அன்னை தெரஸாவின் உள்ளங்களே! சேவை செய்ய பணம் தேவை இல்லை. நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை அறிந்து செயல்படும் செல்வங்களே! உங்களை மனம் நெகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.
நாளைய கலாம்களே!
“தூக்கத்தில் வருவது கனவன்று
உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு”
என்றார் டாக்டர். அப்துல் கலாம். நாட்டைத் தூய்மையாக்குவதிலும் நாட்டைப் பசுமையாக்குவதிலும் நீங்கள் தூங்காமல் கனவு கண்டு நனவாக்குங்கள். உங்கள் கைகளால் வைக்கப்படும் இந்த மரங்கள்தான் நீங்கள் நாளைய கலாம் என்பதைப் பறைசாற்றும். இன்றைய இளைய கலாம்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டு நலத்திட்டப் பணிபுரியும் வள்ளல் களை மீண்டும் வாழ்த்தி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.\
நன்றி! வணக்கம்!
குறுக்கெழுத்துப் போட்டி.
Answer:
பாடலில் இடம்பெற்றுள்ளத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிக.
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம் புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
Answer:
புலவர் பெயர்கள்
- கம்பன்
- உமறுப்புலவர்
- ஜவ்வாதுப் புலவர்
- அபுல் காசிம்
- குணங்குடி மஸ்தான்
- சேக்கிழார்
- செய்கு முதலியார்
விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
Answer:
நன்றியுரை எழுதுக.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “மரம் நடு விழாவுக்கு” வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர், பெற்றோர்க்கு பசுமைப் பாதுகாப்பு படை சார்பாக நன்றியுரை எழுதுக.
Answer:
நன்றியுரை
வணக்கம், நாளைய நிகழ்வின் தொடக்கம்தான், இன்றைய நன்றி
எம் பள்ளியின் பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி!
எம் அழைப்பிற்கிணங்க, பல பணிகளுக்கு இடையிலும் தன் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கித் தந்து, மரங்கள் பற்றிய சிறப்புரை வழங்கி இவ்விழாவை சிறப்பு செய்து கொண்டிருக்கும் வனச்சரக அலுவலர் அவர்களுக்கு மறவாத நன்றியை உரித்தாக்குகிறேன்.
அதுமட்டுமின்றி, மரம் நடுவதற்குத் தேவையான மரக்கன்றுகளைத் தந்து உதவியதற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விழாவில் பங்கேற்று முன்னிலை வகித்துக்கொண்டிருக்கும் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். விழாவைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் பெற்றோர்களுக்கும், எம்மை ஊக்குவித்த தலைமை ஆசிரியர்க்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் அமைதி காத்த நண்பர்களுக்கும் எம் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றி மலர்களைக் காணிக்கையாக்கி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!
நாள் : 08.03.2020
இடம் : சேலம்
இப்படிக்கு,
செயலர்,
தேசிய பசுமைப்படை,
அரசு உயர்நிலைப்பள்ளி,
சேலம்.
மொழியோடு விளையாடு
விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க.
Answer:
“சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு” விழா
ஜனவரி 18, நெல்லை .
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் தலைமையேற்றார். சாலைக் குறியீடுகளை விளக்கி, குறியீடுகள் உணர்த்துவதை மனதில் கொண்டு கட்டுப்பாட்டுடன் கூடிய வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் மாணவர்கள் மனதில் சாலைவிதிகளைப் பதித்து விழிப்புணர்வுடன் வளர்க்க அறிவுறுத்தினார். தலைக்கவசம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை பட்டை கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களை நம் விழிப்புணர்வால் தடுத்து விடலாம் என்றார். நிறைவாக வருகை தந்திருந்த பெரியோர், குழந்தைகள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இணைந்து “சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி” மாரத்தான் தொடர் ஓட்டம் நிகழ்த்தினர்.
கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.
Answer:
அகராதியில் காண்க.
குணதரன்
செவ்வை
நகல்
பூட்கை
Answer:
குணதரன் – முனிவன், நற்குணமுள்ளவன்.
செவ்வை – நேர்மை, மிகுதி, வழி செப்பம், சரியான நிலை.
நகல் – சிரிக்கை , மகிழ்ச்சி , நட்பு, படி, ஏளனம்.
பூட்கை – கொள்கை, வலிமை, மனஉறுதி, சிங்கம், யானை.
செயல் திட்டம்
மாணவர்களே விளையாட்டு உலகில் உங்களுக்குப்பிடித்த ஆளுமைத்திறன் மிக்க விளையாட்டு வீரர் பற்றிய படங்கள், செய்திகளை தொகுத்து தொகுப்பேடு (Album) செய்து கொள்ளுங்கள். (மாணவர் செயல்பாடு)
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:
நிற்க அதற்குத் தக
ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்; உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள்; சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம். தொல்லை வேண்டாம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்!
Answer:
கலைச்சொல் அறிவோம்
Humanism – மனித நேயம்
Cabinet – அமைச்சரவை
Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?
அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம்
ஈ) தீவகம் குறுவினா
Answer:
இ) உருவகம்
குறுவினா
Question 1.
தீவக அணியின் வகைகள் யாவை?
Answer:
தீவக அணி மூவகைப்படும். அவை:
- முதல் நிலைத் தீவகம்
- இடைநிலைத் தீவகம்
- கடைநிலைத் தீவகம் எனப்படும்.
Question 2.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
Answer:
- இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி நிரல்நிறையணியாகும்.
- இலக்கணம்: நிரல் – வரிசை: நிறை – நிறுத்துதல்
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
சிறுவினா
Quesiton 1.
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக் காட்டுக.
Answer:
அணி இலக்கணம்:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை (கருத்தை) ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
எ.கா: “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட”
பாடல் பொருள்:
கோட்டை மதில்மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கைகாட்டியது என்பது பொருள்.
விளக்கம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேல் இருந்த கொடிகள் | காற்றில் இயற்கையாக அசைந்தன.
ஆனால் இளங்கோவடிகள், மதுரையில் கோவலன் கொலை செய்யப்படுவான் எனக் கருதி அக்கொடிகள், கையை அசைத்து இம் மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாக தன் கருத்தைக் கொடியின் மேல் ஏற்றிக் கூறுகிறார். எனவே இப்பாடல் தற்குறிப்பேற்ற அணிக்குச் சான்றாகியது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மக்களுக்கு அழகு சேர்ப்பன……………….ஆகும்.
அ) அணிகலன்கள்
ஆ) கலை
இ) கல்வி
ஈ) பேச்சுத்திறன்
Answer:
அ) அணிகலன்கள்
Question 2.
தீவகம் என்ற சொல்லின் பொருள் ……………….
அ) விளக்கம்
ஆ) சான்று
இ) விளக்கு
ஈ) வெளிச்சம்
Answer:
இ) விளக்கு
Question 3.
கோவலனும் கண்ண கியும்……………….நகருக்குள் சென்றபோது கொடிகள் அசைந்தன.
அ) தஞ்சை
ஆ) புகார்
இ) மதுரை
ஈ) வஞ்சி
Answer:
இ) மதுரை
Question 4.
தீவக அணி……………….வகைப்படும்.
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) மூன்று
Question 5.
நிரல் நிறையணி – இதில் ‘நிரை’ என்பதன் பொருள் ……………….
அ) நிறுத்துதல்
ஆ) வரிசை
இ) எடை
ஈ) கூட்டம்
Answer:
ஆ) வரிசை
Question 6.
இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது……………….அணி ஆகும்.
அ) தற்குறிப்பேற்றணி
ஆ) நிரல்நிறை அணி
இ) உயர்வு நவிற்சி அணி
ஈ) தன்மையணி
Answer:
ஈ) தன்மையணி
Question 7.
தன்மை அணியின் வகைகள்……………….ஆகும்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) நான்கு
Question 8.
தன்மை அணியை……………….என்றும் கூறுவர்.
அ) தீவக அணி
ஆ) உவமை அணி
இ) தன்மை நவிற்சி அணி
ஈ) தற்குறிப்பேற்ற அணி
Answer:
இ) தன்மை நவிற்சி அணி
Question 9.
வைகை நதி பாயும் நகரம்……………….
அ) நெல்லை
ஆ) மதுரை
இ) தஞ்சை
ஈ) கடலூர்
Answer:
ஆ) மதுரை
Question 10.
‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?
அ) தீவக அணி
ஆ) தன்மை அணி
இ) தற்குறிப்பேற்ற அணி
ஈ) உவமை அணி)
Answer:
அ) தீவக அணி
Question 11.
பொருத்துக.
1. சேந்தன் – அ) பகை
2. தெவ் – ஆ) சிவந்தன
3. சிலை – இ) பறவை
4. புள் – ஈ) வில்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
Question 12.
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
குறுவினா
Question 1.
தன்மையணியின் வகைகளை எழுதுக.
Answer:
தன்மையணி நான்கு வகைப்படும். அவை:
- பொருள் தன்மையணி
- சாதித் தன்மையணி
- குணத் தன்மையணி
- தொழிற் தன்மையணி ஆகியவை ஆகும்.
Question 2.
தன்மையணியை விளக்குக.
Answer:
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரியச் சொற்கள் அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
சிறுவினா
Question 1.
நிரல்நிறை அணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி இலக்கணம்:
நிரல் – வரிசை நிறை – நிறுத்துல்.
சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
சான்று:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அணிப் பொருத்தம்:
இக்குறளில் “அன்பும் அறனும்” என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி “பண்பும் பயனும்” என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணிக்குச் சிறந்த சான்றாகும்.
Question 2.
தீவக அணியை விளக்கி, சான்று கூறுக.
Answer:
அணி இலக்கணம்:
தீவகம் என்னும் சொல்லுக்கு விளக்கு என்று பொருள். செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது தீவக அணி என்பர்.
சான்று: “சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து
திசை அனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து”
பாடலின் பொருள்:
அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன. கண்கள் சிவந்த அளவில் பகை மன்னர்களின் தோள்கள் சிவந்தன. இரத்தம் பாய்ந்த திசைகள் அனைத்தும் சிவந்தன; அம்புகள் சிவந்தன. இரத்தம் மேலே வீழ்வதால் பறவைகள் சிவந்தன.
அணிப்பொருத்தம்:
முதலில் உள்ள சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது.
Question 3.
‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்’ அணி எது? சான்றுடன் விளக்குக. (அல்லது) தன்மை நவிற்சி அணியைச் சான்றுடன் விளக்கு.
Answer:
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனை தன்மை நவிற்சியணி என்றும் கூறுவர்.
சான்று: “மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன்
உண்டளவே தோற்றான் உயிர்.”
பாடலின் பொருள்: உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை பாயும் நகரத்து அரசன் பாண்டியன் தோற்றான். அவளது சொல் கேட்டு உயிர் நீத்தான்.
அணிப்பொருத்தம் : கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாடு உரிய சொற்களின் மூலம் கூறியமையால் தன்மை நவிற்சியணி எனப்படும்.