Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 15 மராத்தியர்கள் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 15 மராத்தியர்கள்
11th History Guide மராத்தியர்கள் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர் ……………………
அ) மராத்தியர்
ஆ) முகலாயர்
இ ஆங்கிலேயர்
ஈ) நாயக்கர்
Answer:
அ) மராத்தியர்
Question 2.
சிவாஜியின் குரு ………………….. ஆவார்.
அ) தாதாஜி கொண்டதேவ்
ஆ) ராம்தாஸ்
இ துக்காராம்
ஈ) ஷாஜி போன்ஸ்லே
Answer:
ஆ) ராம்தாஸ்
Question 3.
புரந்தர் உடன்படிக்கை , சிவாஜிக்கும் …………………. க்கும் இடையே கையெழுத்தானது.
அ) அஃப்சல்கான்
ஆ) செயிஷ்டகான்
இ ஜெய்சிங்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ ஜெய்சிங்
Question 4.
சிவாஜியின் ஆலோசனை சபை…………………. என்று அழைக்கப்பட்டது.
அ) அஷ்டபிரதானம்
ஆ) அஷ்டதிக்கஜங்கள்
இ நவரத்தினங்கள்
ஈ) பஞ்சபாண்டவர்கள்
Answer:
அ) அஷ்டபிரதானம்
Question 5.
மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் ………….. செளத் என வசூலிக்கப்பட்டது.
அ) 1/3
ஆ) 1/4
இ) 6
ஈ) 1/10
Answer:
ஆ) 1/4
Question 6.
சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக …………………… இருந்தார்
அ) நாயக்
ஆ) ஹவில்தார்
இ பர்கிர்
ஈ) ஷைலேதார்
Answer:
அ) நாயக்
Question 7.
மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா ……….. ஆவார்.
அ) முதலாம் பாஜி ராவ்
ஆ) பாலாஜி விஷ்வநாத்
இ பாலாஜி பாஜி ராவ்
ஈ) இரண்டாம் பாஜி ராவ்
Answer:
அ) முதலாம் பாஜி ராவ்
Question 8.
………….. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றார்.
அ) அஹமது ஷா அப்தலி
ஆ) நாதிர் ஷா
இ) ஷஜா – உத் – தௌலா
ஈ) நஜீப்-உத்-தௌலா
Answer:
ஆ) நாதிர் ஷா
Question 9.
…………………. உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ – மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அ) மதராஸ் உடன்படிக்கை
ஆ) பூனா உடன்படிக்கை
இ சால்பை உடன்படிக்கை
ஈ) பேசின் உடன்படிக்கை
Answer:
இ சால்பை உடன்படிக்கை
Question 10.
இரண்டாவது ஆங்கிலோ – மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர் – ஜெனரலாக இருந்தவர் ………………….
அ) காரன்வாலிஸ் பிரபு
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) ஹேஸ்டிங்ஸ்பிரபு
ஈ) டல்ஹௌசி பிரபு
Answer:
ஆ) வெல்லெஸ்லி பிரபு
Question 11.
கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ……………… ஏற்றிருந்தனர்.
அ) தேஷ்முக்கு
ஆ) குல்கர்னி
இ) கொத்வால்
ஈ) பட்டேல்
Answer:
ஈ) பட்டேல்
Question 12.
கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர் ………………………. ஆவார்.
அ) பாலாஜி பாஜிராவ்
ஆ) நானா சாகிப்
இ இரண்டாம் பாஜிராவ்
ஈ) பாலாஜிவிஸ்வநாத்
Answer:
ஈ) பாலாஜிவிஸ்வநாத்
Question 13.
நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் …………….
அ) இரண்டாம் சரபோஜி
ஆ) இராஜா தேசிங்கு
இ) கிருஷ்ணதேவராயர்
ஈ) பிரதாப்சிங்
Answer:
இ) கிருஷ்ணதேவராயர்
Question 14.
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க ……………………… இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது.
அ) சரஸ்வதி மஹால்
ஆ) முக்தாம்பாள் சத்திரம்
இ நவ வித்யா
ஈ) தன்வந்திரி மஹால்
Answer:
ஈ) தன்வந்திரி மஹால்
Question 15.
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?
அ) குமாரசம்பவ சம்பு
ஆ) தேவேந்திர குறவஞ்சி
இ) முத்ரராஷ்ஸ்சாயா
ஈ) குமாரசம்பவம்
Answer:
இ) முத்ரராஷ்ஸ்சாயா
II. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு –
அ. 1. சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660ஆம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2. சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது.
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.
4. சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும்.
Answer:
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.
ஆ.
1. ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
2. 1749 இல் ஆற்காட்டு நவாப் தோஸ்து அலியை சாஹு தோற்கடித்துக்கொன்றார்.
3. பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முழுமை பெற்றிருந்தது.
4. தஞ்சை மராத்திய அரசின் போன்ஸ்லே வம்சத்து கடைசி அரசர்வெங்கோஜி ஆவார்.
Answer:
1. ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
III. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
அ. (i) சிவாஜியின் கீழிருந்த நீதி நிர்வாகம் பழமையான ஒன்றாகும்.
(ii) நிலையான நீதிமன்றங்களும் விதிமுறைகளும் இருந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (i) மற்றும் (ii) தவறு
Answer:
அ) (i) சரி
ஆ. (i) வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசு நழுவவிட்டது.
(ii) இது நாதிர் ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரியானவ
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
Answer:
இ) (i) மற்றும் (ii) சரியானவை
இ. கூற்று (கூ) : மூன்றாம் பானிப்பட் போர் ஆங்கிலேயரின் அதிகார எழுச்சிக்கு வழிவகுத்தது.
காரணம் (கா) : இத்தோல்வி மராத்தியருக்கும் முகலாயருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
அ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி ; காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ. கூற்று (கூ) : காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
காரணம் (கா) : மராத்தியர் குதிரைப்படையில் பணியாற்றவிரும்பினர்.
அ) கூற்று தவறு; காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை
Answer:
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை
IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை
1. சிவாஜி – மலை எலி
2. முதலாம் பாஜிராவ் -உத்கிர் போர்
3. தைமுர்ஷா -லாகூரின்வைஸ்ராய்
4. தேசிங்கு – செஞ்சி
Answer:
2) முதலாம் பாஜிராவ் – உத்கிர் போர்
ஆ. பொருத்துக
i) அமத்யா ‘ -1.அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்
ii) சுமந்த் – 2.பொது ஒழுக்க நடைமுறைகள்
iii) பண்டிட் ராவ் -3.போர் மற்றும் அமைதி
iv) வாக்கிய – 4.அரசின் அனைத்து பொது நாவிஸ் கணக்குகள்
1) 4,1,2,3
2) 1,2,4,3
3) 4,3,2,1
4) 1,4,2,3
Answer:
3) 4,3,2,1
இ. சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப்படி எழுதவும். ( மார்ச் 2019 )
1. சாம்பாஜி, சாஹீ, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.
3. ராஜாராம், சாம்பாஜி, சாஹீ, இரண்டாம் சாம்பாஜி. 4. சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹீ.
Answer:
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.
I. கூடுதல் வினாக்கள்
Question 1.
சிவாஜியின் பாதுகாவலர் …………
அ) தாதாஜி கொண்டதேவ்
ஆ) நானாபட்னாவிஸ்
இ) ராம்தாஸ்
ஈ) தாத்தாஜி சிந்தியா
Answer:
அ) தாதாஜி கொண்டதேவ்
Question 2.
சிவாஜி அரசின் தலைநகராக விளங்கியது ………..
அ) ராய்கர்
ஆ) ரெய்ச்சூர்
இ) பூனா
ஈ) தானே
Answer:
அ) ராய்கர்
Question 3.
ஒளரங்கசீப் மாமன்னராக முடிசூட்டி அரியணை ஏறிய ஆண்டு
அ) 1568
ஆ) 1685
இ) 1658
ஈ) 1865
Answer:
இ) 1658
Question 4.
சிவாஜி சத்ரபதி அரியணை ஏறிய ஆண்டு ………………
அ) 1764
ஆ) 1674
இ) 1647
ஈ) 1746
Answer:
ஆ) 1674
Question 5.
சிவாஜிக்கும் ஜெய்சிங்கிற்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு …………
அ) 1665ஜூன் 11
ஆ) 1565 ஜூன் 11
இ) 1656ஜூன் 11
ஈ) 1556ஜூன் 11
Answer:
அ) 1665ஜூன் 11
Question 6.
சிவாஜி காலமான ஆண்டு ……….
அ) 1860
ஆ) 1680
இ 1806
ஈ) 1608
Answer:
ஆ) 1680
Question 7.
பாரம்பரியப்படி ……….. என்பது நிர்வாக நடை முறையின் கடைசி அலகாக இருந்தது.
அ) குடும்பம்
ஆ) கிராமம்
இ) நகரம்
ஈ) மாநகரம்
Answer:
ஆ) கிராமம்
Question 8.
பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள்…………………..
அ) பிரதம மந்திரி
ஆ) நிதி மந்திரி
இ ராணுவ மந்திரி
ஈ) வெளியுறவு செயலாளர்
Answer:
அ) பிரதம மந்திரி
Question 9.
மதிப்புமிகு மயிலாசனத்தை அபகரித்துச் சென்றவர் ……………………..
அ) ஆசப்கான்
ஆ) நாதிர்ஷா
இ) பாமன் ஷா
ஈ) அகமது ஷா
Answer:
ஆ) நாதிர்ஷா
Question 10.
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு…………………..
அ) 1716
ஆ) 1671
இ) 1761
ஈ) 1617
Answer:
இ) 1761
Question 11.
மராத்தியர் வசித்த நிலப்பகுதி
அ) கொங்கணம்
ஆ) பிடார்
இ) மேவார்
ஈ) பெராம்
Answer:
அ) கொங்கணம்
Question 12.
மராத்தியர்களின் மத எழுச்சி பிராமண சமயம் சார்ந்தது இல்லை என கருத்து கூறுபவர்…………………………….
அ) தாமஸ் மன்றோ
ஆ) வெல்லெஸ்லி
இ நீதிபதி ரானடே
ஈ) பானர்ஜி
Answer:
இ நீதிபதி ரானடே
Question 13.
சிவாஜி பீஜப்பூர் சுல்தானிடமிருந்து முதலில் கைப்பற்றிய கோட்டை ………….
அ) ராய்ச்சூர்
ஆ) புரந்தர்
இ) பராமஹால்
ஈ) தோர்னா
Answer:
ஈ) தோர்னா
Question 14.
மலையில் ஒழிந்து கொண்டிருக்கும் எலியை சங்கிலியால் கட்டி இழுத்து வருவேன் என்று சூளுரைத்த வர்…………….
அ) அப்சல்கான்
ஆ) ஆசப்கான்
இ) ஜெயசிங்
ஈ) செயிஸ்டகான்
Answer:
அ) அப்சல்கான்
Question 15.
சிவாஜி கைப்பற்றிய முகலாய முக்கிய துறைமுகம்…………..
அ) சூரத்
ஆ) டாமன்
இ) டையூ
ஈ) மும்பை
Answer:
அ) சூரத்
Question 16.
அமத்யா என்பவர் …………..
அ) வெளியுறவு செயலர்
ஆ) உள்துறை மந்திரி
இ) நிதி அமைச்சர்
ஈ) நீதித்துறை அமைச்சர்
Answer:
இ) நிதி அமைச்சர்
Question 17.
நானாசாகிப் என்று அழைக்கப்பட்ட பேஷ்மா ……………………..
அ முதலாம் பாஜிராவ்
ஆ) பாலாஜி பாஜி ராவ்
இ பாலாஜி விஸ்வநாத்
ஈ) சாம்பாஜி
Answer:
அ முதலாம் பாஜிராவ்
Question 18.
மராத்தியரின் இராணுவ பலத்துக்கு கடைசி கட்டமாக அமைந்தது ……………………
அ) ஹைதராபாத் போர்
ஆ) உத்கிர் போர்
இ) 2 ஆம் பானிபட் போர்
ஈ) 3 ஆம் பானிபட் போர்
Answer:
ஆ) உத்கிர் போர்
Question 19.
தமிழ்நாட்டில் முதல் வன உயிரியல் பூங்காவை அமைத்த வர் …………………
அ) முதலாம் சரபோஜி
ஆ) இரண்டாம் சரபோஜி
இ இராஜ ராஜ சோழன்
ஈ) கரிகால சோழன்
Answer:
ஆ) இரண்டாம் சரபோஜி
Question 20.
நாதிர்ஷா படையெடுத்த ஆண்டு …………………..
அ) 1749
ஆ) 1739
இ) 1759
ஈ) 1839
Answer:
ஆ) 1739
V. சுருக்கமாக விடையளி
Question 1.
சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக?
Answer:
- என்பதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜி மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தார்.
- அப்சல்கான் பெரும்படையுடன் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார். ஆனால் மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தது.
- சூழ்ச்சி மூலமாக சிவாஜியை வீழ்த்த நினைத்தார். ஆனால் அதிலும் தோல்வியே கிடைத்தது.
- பீஜப்பூர் சுல்தான் தாமே இந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். ஆனாலும் இந்தப் பகுதியையும் வெல்ல முடியவில்லை . இறுதியாக பேச்சு வார்த்தைக்குப் பிறகு சிவாஜி ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
Question 2.
புரந்தர், உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answer:
- ரஜபுத்திர தளபதி ராஜா ஜெய்சிங் 1665 ஜூன் மாதம் புரந்தர் கோட்டையைப் படைகள் சுற்றி வளைத்தன.
- சிவாஜியின் தீரமான வீரதீர தற்காப்பு பலன் தரவில்லை .
- இதை உணர்ந்த சிவாஜி பேச்சு வார்த்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.
- 1665 ஜூன் 11 ஆம் தேதி ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.
- மன்சப்தாராச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.
Question 3.
தாராபாய் பற்றி சிறு குறிப்பு – வரைக.
Answer:
- ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு சாம்பாஜீயின் மகன் சாஹீ விடுதலையாகி மராத்தியரின் அரியணையை அலங்கரித்தார். தாராபாய் இதை எதிர்த்தார்.
- கோல்ஹாபூரைத் தலைநகராகக் கொண்டு
தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார். - இரண்டாம் சாம்பாஜி கோல்ஹாபூரில் அரியணை ஏறினார். சாஹீவின் அதிகாரத்தை அவர் ஏற்க வேண்டியிருந்தது.
- சாஹீ 1749 இல் மறைந்த பிறகு இராம ராஜா அரியணை ஏறினார்.
- அவர் பேஷ்வாக்களுடன் ஒப்பந்தத்தை எட்டியதால் தலைமைப் பொறுப்பை அடைந்தார்.
- தாராபாய் இதனால் ஏமாற்றம் அடைந்தார். 1761 இல் தாராப்பாய் மரணமடைந்தார்
Question 4.
சிறு குறிப்பு வரைக.
அ) சௌத்
ஆ) சர்தேஷ்முகி
Answer:
அ) சௌத்
சௌத் சர்தேஷ்முகி என இரண்டு வரிகளைத் தனது சாம்ராஜ்யத்தின் அண்டை பகுதிகளான முகலாய மாகாணங்களிடமிருந்து பீஜப்பூர் சுல்தானிட மிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்தும் சிவாஜி வசூலித்தார். மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு ‘சௌத்’ என வசூலிக்கப்பட்டது.
ஆ) சர்தேஷ்முகி :
சர்தேஷ்முகி என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10% ஐ சர்தேஷ்முகி என்னும் வரிமூலம் பெற்றார்.
Question 5.
பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answer:
இரண்டாம் பாஜிராவு மீது அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு பேஷ்வா மீது துணைப்படைத் திட்டத்தைத் திணித்தார். 1802ல் பேசின் ஒப்பந்தம் கையெழுத்தானது 2.6 மில்லியன் வருமானம் ஈட்டக்கூடிய நிலப்பகுதி கொடுக்கப்பட வேண்டும். முன்னணியிலிருந்த மராத்திய அரசுகள் பல இந்த மோசமான ஒப்பந்தத்தை ஒதுக்கித்தள்ளின.
ஆங்கிலேயருக்கு தோஆப் (ஆற்றிடைப்பகுதி, அகமது நகர், புரோக் மலைப் பகுதிகள் ஆகியன முழுமையாக கிடைத்தன.
Question 6.
மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?’
Answer:
பேஷ்வாக்களின் கீழ் மராத்திய இராணுவ அமைப்பு முகலாய இராணுவ அமைப்பை போன்று அமைக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு, ஊதியம் வழங்குவது, படைவீரர்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது குதிரைப் படைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியன முகலாய இராணுவ அமைப்பைப் போன்று இருந்தது.
மராத்திய பகுதிகளிலிருந்து, சிவாஜி படைவீரர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பேஷ்வாக்கள் நாட்டின் அனைத்து வகுப்புகளிலிருந்தும் படை வீரர்களைச் சேர்த்த னர். அராபியர், அபிசீனியர், ரஜபுத்திரர், சீக்கியர் ஆகியோர் பேஷ்வாவின் இராணுவத்தில் இடம் பெற்றிருந்தனர்.
Question 7.
ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடையே 1817 இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை பற்றி எழுதுக?
Answer:
பூனா ஒப்பந்தம்:
- மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்க ஆங்கிலேயருக்கு எதிராக சிந்தியா, போன்ஸ்லே ஹோல்கர் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டியதாகப் பேஷ்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
- 1817 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆட்சியாளர்களை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.
- அதன்படி, மராத்தியக் கூட்டமைப்பின் தலைமையிலிருந்து பேஷ்வா பதவி விலகினார்.
- கொங்கணப் பகுதியை ஆங்கிலேயருக்கு வழங்கியதோடு கெயிக் வாரின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.
Question 8.
சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:
சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் செறிவூட்டப்பட்டது. மராத்திய அரசவையின் அன்றாட அலுவலகங்கள் 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மராத்தியர் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து ஆகியன மோடி எழுத்து வடிவ ஆவணங்களாக அமைந்துள்ளன. மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டன.
Question 9.
இரண்டாம் சரபோஜி சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத்திகழ்ந்தார்?
Answer:
சரபோஜி சமய பரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803 ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பள்ளிகளை நிறுவினார்.
Question 10.
கனோஜி ஆங்கிரே பற்றி நீ அறிந்தவற்றைப் பற்றி எழுதுக.
Answer:
மேற்குக் கரையோரத்தில் கனோஜி ஆங்கிரே அதிக அதிகாரம் படைத்த கடற்படைத் தளபதியாகத் திகழ்ந்தார். உள்நாட்டுப் போரின் போது கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
V. கூடுதல் வினாக்கள்
Question 1.
பேஷ்வா – குறிப்பு வரைக.
Answer:
- பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள் “முதன்மையான” அல்லது “ பிரதம மந்திரி ” என்பதாகும்.
- அஷ்ட பிரதான் என்ற சிவாஜியின் அமைச்சரவையில் பேஷ்வா” முதன்மையான பதவியாகும்.
- சிவாஜிக்குப் பின் வந்தவர்கள் திறமையற்றவர்கள் ஆதலால் பேஷ்வாக்கள் அதிக அதிகாரம் மிக்கவர்களாக மாறினர்.
- பாலாஜி விஸ்வநாத் என்பவர் முதல் ஆற்றல் மிக்க பேஷ்வா ஆவார்.
Question 2.
“ கொத்வால்” குறிப்பு வரைக.
Answer:
- பேஷ்வாக்கள் ஆட்சிகாலத்தில் நகர மாநகர பராமரிப்பு அதிகாரியாக செயல்பட்டவர் “கொத்வால்” என்று அழைக்கப்பட்டனர்.
- சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், விலைவாசியை
கட்டுப்படுத்துவதும் இவரது முக்கிய பணிகளாகும். - சிவில் வழக்குகளை வைப்பதும் இவரது பணிகளில் முக்கியமானது.
- மாதாந்திர கணக்குகளை அரசுக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளையும் செய்தார்.
VI. சிறு குறிப்பு வரைக.
Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்.(மார்ச் 2019)
Answer:
மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கணம். செங்குத்தான மலைகளும், எளிதில் அணுக முடியாத பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மலைக்கோட்டைகளும் இராணுவப் பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.
போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம் எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். முன்னதாக பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி காலத்தில் எழுச்சிப்பெற்றனர்.
கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது.
பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியரிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது.
மராத்தி மொழியில் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் சமூகத்தில் வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின.
பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகள் கலைந்த சூழலில் மராத்தியர் ஒன்றிணைந்து தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய உந்துதலைப் பெற்றனர்.
தனது தலைமையின் கீழ் ஒன்று திரட்டி சிவாஜி ஒரு வலுவான அரசை நிறுவினார்.
Question 2.
mming
Answer:
- சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார்
- காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
- கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கியப் போதிலும் பாரம்பரியப் போர் முறையில் அவர்கள் பயிற்சிபெற்றனர்.
- ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாட்படை பிரிக்கப்பட்டது.
- சாரிநௌபத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
- இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படைவீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
Question 3.
மூன்றாம் பானிப்பட்போரின் விளைவுகள்
Answer:
- 1761 ஜனவரி 14ஆம் தேதி மூன்றாவது பானிபட் போர் நடந்தது.
- மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ் ராவ், சதாசிவராவ் மற்றும் எண்ணற்ற மராத்திய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
- போர்க்களத்தில் 28,000 பேரின் உடல்கள் கிடந்தன. ஹோல்கர் தப்பியோடினார்.
- இந்தத் துயர செய்தி கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார். இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761 ஜூனில் மரணமடைந்தார்.
Question 4.
1775-1782 இல் நடைபெற்ற போர்
Answer:
நானா பாட்னாவில் ஆட்சியில் மாதவ் ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இருந்ததால் முன்னாள் பேஷ்வாவான முதலாம் மாதவ்ராவின் மாமா ரகுநாத் ராவ் அதிகராத்தைக் கைப்பற்றினார். இது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையைப் பார்க்க கம்பெனி நிர்வாகத்துக்கு வாய்ப்புக் கொடுத்தது. சால்பை உடன்படிக்கையின் படி 1782 இல் ரகுநாத் ராவ் கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டார். இதனை அடுத்து கம்பெனிக்கும் மராத்தியருக்கும் இடையே சுமார் இருபது ஆண்டு காலத்துக்கு அமைதி நிலவியது.
Question 5.
மூன்றாவது மராத்தியப் போரின் விளைவுகள்
Answer:
பேஷ்வா முறையை ரத்து செய்த ஆங்கிலேயர்கள் அனைத்து பேஷ்வா பகுதிகளையும் இணைத்துக் கொண்டனர். உரிமைப்படி ஜாகிர்களைக் கொண்டிருந்தவர்களின் நிலம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.
இரண்டாம் பாஜிவ் ராவ் 1851 இல் மரணமடையும் வரை வருடாந்திர ஓய்வூதியத்தின் கீழ் சிறைக்கைதியாகவே விளங்கினார்.
சிவாஜியின் வழித்தோன்றலான பிரதாப் சிங் சதாராவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அரசாங்கத்துக்கு அரசராக உருவாக்கப்பட்டார்.
முதலாம் பாஜிராவால் உருவாக்கப்பட்ட போன்ஸ்லே, ஹோல்கர், சிந்தியா ஆகியோரின் பகுதிகளை உள்ளடக்கிய மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.)
பூனாவின் அரச பிரதிநிதியாக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் பம்பாய் ஆளுநராக ஆனார்.
Question 6.
நயங்காரா முறை
Answer:
- கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சிக்காலத்தில் (1509-1529) நயங்கார அமைப்பை உருவாக்கினார்.
- என மூன்று மிகப்பெரிய நயங்காரர்களாக பிரிக்கப்பட்டது.
- இந்த புதிய முறைப்படி துணைத் தலைவர்கள்
பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.
Question 7.
ராஜா தேசிங்கின் வீரதீரச் செயல்கள்
Answer:
- 1714 இல் அவர் மறைந்த பிறகு அவரது மகன் தேஜ் சிங் (தேசிங்கு) செஞ்சியின் ஆளுநராக
- முகலாய மன்னருக்கு கப்பம் கட்ட மறுத்ததை அடுத்து நவாத் சதத் – உல் – லா கானின் கோபத்திற்கு ஆளானார்.
- அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 22 வயதே ஆன ராஜா தேசிங்கு கொல்லப்பட்டார்.
- அவரது இளம் வயது மனைவி உடன்கட்டை ஏறினார். ராஜா தேசிங்கு நவாபுக்கு எதிராக வெளிப்படுத்திய வீரம் மக்களிடையே கதைப் பாடல்களாக உருவெடுத்தது.
Question 8.
‘நவ வித்யா முறையை அறிமுகம் செய்தது ஒரு முக்கிய முன்முயற்சியாகும்’ – எவ்வாறு?
Answer:
- அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது நவீனத் திட்டமாக இருந்தது.
- தரங்கம்பாடி சமய பரப்புக் குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
- ஜான் கல்வித்துறையில் புதிய பரிசோதனைகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார்.
- பாடத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளிமுறையை அறிமுகம் செய்தார்.
- சரபோஜி சமயப்பரப்புக்குழு மற்றும் காலணி ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவினார்.
- ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச தொடக்க மற்றும் உயர்நிலை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமாக முன்முயற்சியாகும்.
- பெதிய (அல்லது நவீன கல்வி முறைக்காக ‘நவ வித்யா ‘ முறையை அரசவை நடத்திய இப்பள்ளிகளில் அறிமுகம் செய்தது மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
மராத்திய நாட்டில் மத எழுச்சியைப் பற்றி நீதிபதிரானடே கூறும் கருத்துக்கள் யாவை?
Answer:
- மராத்திய நாட்டில் மத எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை .
- அமைப்புகள், சடங்குகள், வகுப்பு வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தைப் பொறுத்த அளவில் வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறானதாக அது அமைந்தது.
- துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சாராமல் சமூகத்தின் அடி நிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
- மேற்கண்டவாறு மராட்டிய மத எழுச்சியைப் பற்றி நீதிபதிரானடே குறிப்பிடுகிறார்.
Question 2.
சிவாஜியின் நீதி நிர்வாகம் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
- நீதி நிர்வாகம் மரவு வழிபட்டதாக இருந்தது.
- நிரந்தரமான நீதிமன்றங்களோ, வழிமுறைகளோ இல்லை
- விசாரணை முறை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது.
- கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது.
- கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர்.
- சிவில், கிரிமினல் வழக்குகளுக்கான மேல் முறையீடுகளைத் தலைமை நீதிபதி நியாய தேர்வு ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார்.
- ஹாஜிர் மஜ்லிம் இறுதி மேல்முறையீடு நீதிமன்றமாக இருந்தது.
VII. விரிவான விடையளி
Question 1.
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தது?
Answer:
சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகீர்களை வழங்குவதையும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு முறைப்படி ஊதியமும் வழங்கப்பட்டது. காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரியப் போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
ரெஜிமேண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாட்படை பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தனர். ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப்படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்கார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.
சாரிநௌபத் குதிரைப் படையின் தலைமைத்தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் என்றும் தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டார். இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படை வீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
Question 2.
சிவாஜியின் நிலவருவாய் முறையினைப் பேஷ்வாவின் நிலவருவாய் முறையோடு ஒப்பிடுக.
Answer:
நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது. பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. செலுத்த வேண்டிய வரித்தொகை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பஞ்சகாலத்தில் அரசு பணத்தையும் உணவு தானியங்களையும் உழவர்களுக்கு முன்பணம் அல்லது முன்பொருளாகக் கொடுத்தது. நில வருவாய்தான் முக்கிய வருவாயாக இருந்தது. சிவாஜியின் ஆட்சியில் பின்பற்றப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையைப் பேஷ்வாக்கள் கைவிட்டனர்.
நில வரியை வசூலிக்க குத்தகை நடைமுறையைப் பின்பற்றினார்கள். அரசுக்கு ஆண்டுத் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற வகையில் நிலம் வழங்கப்பட்டிருந்தது. நிலத்தின் உற்பத்தித் திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன. 1. தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி. 2. கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி, 3. கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதானவரி.
Question 3.
முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும். (மார்ச் 19 )
Answer:
- பாலாஜி விஸ்நாத்தின் மகன் முதலாம் பாஜிராவ் ஆவார். இவர் பேஷ்வா பதவியை உயர்நிலைக்கு கொண்டுசென்றவர்.
- 1720ல் பாலாஜி விஸ்வநாத் இறந்த பிறகு மராட்டிய மன்னர் சாஹூவால் முதலாம் பாஜிராவ் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். போர்களில் தோல்வியே காணாதவர்.
சாதனைகள் :
- ஹைதராபாத் நிசாமைத் தோற்கடித்தார்.
- மால்வா, குஜராத் ஆளுநர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
- இதனால் பந்தேல்கண்ட் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு மராத்தியருக்கு கிடைத்தது.
- இவரை எதிர்த்த தலைமை தளபதி திரிம்பக்ராவ் தோற்கடிக்கப்பட்டுகொல்லப்பட்டார்.
- பிறகு தலைமை தளபதி பொறுப்பையும் ஏற்றார்.
- 1731ன் வார்னா ஒப்பந்தப்படி கோல்ஹாபுரின் சாம்பாஜி மராத்தியரின் இறையாண்மையை ஏற்றார். 1738ல் நடைபெற்ற போரில் போர்த்துகீசியர் தோற்கடிக்கப்பட்டு கொங்கணப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
Question 4.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
Answer:
- நில வருவாய் முக்கிய வருவாயாக இருந்தது, சௌத் மற்றும் சர்தேஷ்முகி இதர வருவாய் ஆதாரங்களாக விளங்கின. சௌத் என்பது கீழ்கண்ட வகையில் பிரிக்கப்படுகிறது.
- ஆட்சியாளக்கு 25 சதவீதம்.
- மாராத்திய அதிகாரிகள் மற்றும் படைகளைப் பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு 66 சதவீதம்.
- பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சீவுக்கு 6 சதவீதம்.
- வரி வசூல் செய்வோருக்கு 3 சதவீதம்.
- வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன. தேஷ்முக்கு தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
- கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
- கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
- பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டுவரி.
- எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்கான வருடாந்திரக் கட்டணம்.
- விதவைகள் மறுமணத்துக்கானவரி
- செம்மறி ஆடு, எருமை மாடு மீதான வரி.
- மேய்ச்சல் நிலவரி.
- நதிக் கரையோரத்தில் பூசணி விவசாயத்துக்கான வரி.
- வாரிசு உரிமை வரி.
- குதிரைகளை விற்பதற்கானவரி மற்றும் பல.
மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளர்களுக்கு வரி விதித்தது. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது. நீதி பரிபாலனமும் வருவாயை ஈட்டித்தந்தது. பணப் பத்திரங்களின் மீது 25 சதவிகித கட்டணம் வசூலிக்கப்பட்டது. தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அல்லது சந்தேகத்துக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
Question 5.
நவீனக் கல்வி முறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக?
Answer:
- இரண்டாம் சரபோஜி ஒரு தலைசிறந்த அரசர் ஜெர்மானிசமய பரப்புக்குழுவைச் சேர்ந்த ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் மூலமாகக் கல்வி பயின்ற போதிலும் அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும். என்பதுதான் அவரது அதிநவீனத்திட்டமாக இருந்தது.
- தரகம் பாடியை சமய பரப்புக் குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
- ஜான் கல்வித் துறையில் புதிய பரிசோதனைகளையும் சீர்த்திருத்தங்களையும் மேற்கொண்டார்.
- பாடத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப் பள்ளி முறையை அறிமுகம் செய்தார்.
- 1812ல் ஆங்கிலேய காலணி அரசுக்கு அவர் சமர்பித்த முக்கியத் திட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
- சரபோஜி, சமயப்பரப்புக்குழு மற்றும் காலணி அரசுக்கு முன்னோடியாக 1803ம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பணிகளை நிறுவினார்.
- ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமான முன் முயற்சியாகும்.
- அனைத்து நிலைகளிலான பள்ளிகள் நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத உயர் கல்விக்கான பாடசாலைகள் ஆகியன அவற்றில் அடங்கும்.
- அரசவை மேன் மக்கள், வேத அறிஞர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆக அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன.
- புதிய அல்லது நவீனத் கல்வி முறைக்காக நவ வித்யா முறையை அரசவை நடத்திய இந்தப் பள்ளிகளில் அறிமுகம் செய்தது. மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.
- மனிதர்களுக்காகவும், விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரித்த ‘தன்வந்திரி மஹால்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை சரபோஜி நிறுவினார்.
- நவீனக் கல்விமுறை தொடர்பான சரபோஜியின் புதிய முன் முயற்சிகள் தஞ்சாவூர் மேன்மக்களுக்கு அப்போதைய காலணி ஆதிக்கச் சமூக மற்றும் பொருளாதார முறைமைக்குள் நுழையவும் பயன்பெறவும் வழி செய்தன.
கூடுதல் வினாக்கள்
Question 1.
சிவாஜியின் அஷ்ட பிரதான் என்ற அமைச்சரவை பற்றி விளக்குக.
Answer:
- சிவாஜி பெரிய போர் வீரர் மட்டுமல்ல. ஒரு நல்ல நிர்வாகியும் கூட. அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்காக ஆலோசனைகளை கலையை வைத்திருந்தார்.
- அஷ்டப்பிரதான் என்று அழைக்கப்பட்ட இந்த சபையில் எட்டு அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர்.
அமைச்சரவை – பொறுப்புகள் :
- பேஷ்வா – பிரதம மந்திரி ; நாட்டின் பொது நலம் மற்றும் முன்னேற்றம்
- அமத்யா – நிதி அமைச்சர் ; அரசின் பொது கணக்குகளை ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பம் இடுவது.
- வாக்கிய நாவிஸ் – மந்திரி ; அரசரின் நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் – ஆவணங்கள் வடிவில் பராமரித்தல்.
- சுமந்த் – வெளியுறவுச் செயலர் ; மன்னருக்கு போர் அமைதி, அனைத்து வகையிலும் ஆலோசனை வழங்கல், தூதர்களை வரவேற்றல்.
- சச்சிவ் – உள்துறை செயலாளர் ; அரசரின் கடிதப் போக்குவரத்து வரைவுகளை திருத்துதல், பர்கானாக்களின் கணக்குகளை பராமரித்தல்.
- பண்டிட் ராவ் – மதத்தலைவர் ; மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தான தர்மங்களுக்கும் பொறுப்பு. சமூக பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிபடுத்தும் நீதிபதியாக
- நியாய தீஷ் – தலைமை நீதிபதி ; குடிமை மற்றும் ராணுவ நீதிக்கு பொறுப்பேற்றிருந்தார் .
- சாரி நௌபத் – தலைமைத் தளபதி ; ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு, பராமரிப்பு, நிர்வகிப்பது.