Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

குறுவினா

Question 1.
உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் – இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
Answer:

  • உயிரெழுத்து (த் + உ), பன்னிரண்டு (ட் உ); உயிர் எழுத்து (குற்றியலுகர) ஈறு.
  • திருக்குறள், நாலடியார் – மெய்எழுத்து ஈறு.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
புணர்ச்சி என்பது யாது?
Answer:
நிலைமொழியும் வருமொழி மான் இருசொற்கள் இணைவது புணர்ச்சி எனப்படும்.

Question 3.
சொல்லுக்கு இறுதியில் வாராத எழுத்துகள் எவை?
Answer:
க், ச், ட், த், ப், ம் என்னும் வல்லின மெய்களும், ‘ங்’ என்னும் மெல்லின மெய்யும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

Question 4.
இலக்கணவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • இலக்கணவகைச் சொற்கள், நான்கு வகைப்படும்.
  • அவை வயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.

Question 5.
பெயரையும் வினையையும் சார்ந்துவரும் சொற்கள் எவை?
Answer:

  • இகடைச்சொற்களும் உரிச்சொற்களும் தனித்து வாரா;
  • பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் சார்ந்து வரும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 6.
குற்றியலுகர எழுத்துகள் யாவை?
Answer:
வல்லின மெய்களின்மேல் ஊர்ந்த கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு எழுத்துகளும் குற்றியலுகர எழுத்துகள் எனப்படும்.

Question 7.
குற்றியலுகர நிலைமொழி என்பதை விளக்குக.
Answer:
குற்றியலுகரத்தை ஈற்றில் பெற்ற சொல், வருமொழியோடு புணரும்போது, ‘குற்றியலுகர நிலைமொழி’ எனப்படும்.
எ – கா : பாக்கு + இல்லை – பாக்கில்லை. இதில் ‘பாக்கு’ என்பது குற்றியலுகர நிலைமொழி.

சிறுவினா

Question 1.
மொழிமுதல், மொழியிறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

மொழிமுதல் வரும் எழுத்துகள் : பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளோடு சேர்ந்தும் மொழிக்கு முதலில் வரும்.

எ – கா : அன்பு (அ), ஆடு (ஆ), இலை (இ) ஈகை (ஈ) உரல் (உ), ஊசி (ஊ) எருது (எ), ஏணி (ஏ) ஐந்து (ஐ) ஒன்று (ஒ) ஓணான் (ஓ) ஔவை (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

(க்+அ) கலம், (ங்+அ) ஙனம், (ச்+அ) சங்கு , (ஞ்+அ) ஞமலி, (த்+அ) தமிழ், (ந்+அ) நலம்,
(ப்+அ) பழம், (ம்+அ) மலர், (ய் +அ) யவனம், (வ்+அ) வளம் என, மெய் எழுத்துகள் பத்தும் மொழிக்கு முதலில் வரும்.

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ், ண், நாம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு மெய்யெழுத்துகளும், (கு, சு, டு, து, ன் என்னும் ) குற்றியலுகரம் ஒன்றும் ஆக இருபத்து நான்கு எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும்.

எ – கா : பல (அ), பலா (ஆ), கிளி (இ), தேனீ (ஈ), தரு (உ), பூ (ஊ) (எ. ஒரே (ஏ), தளை (ஐ), (ஒ), பலவோ (ஓ), கௌ (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.

உரிஞ் (ஞ்), மண் (ண்), வெரிந் (ந்), பழம் (ம்), அறன் (ன்), மெய் (ய), அவர் (ர்), அவல் (ல்), அவ் (வ்), தமிழ் (ழ்), அவள் (ள்) என, மெய்யெழுத்துகள் பதினொன்று மொழிக்கு இறுதியில் வரும்.

பாக்கு (கு), பஞ்சு (சு), எட்டு (டு), பந்து (து), சால்பு (பு), கயிறு (று) எனக் குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பலவுள் தெரிகள்

Question 1.
மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முலையா னதைக் கண்டுபிடிக்க.
அ) அன்னம், கிண்ண ம்
ஆ டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய், இலட்சாதிபதி
ஈ) றெக்கை, அங்ஙனம்
Answer:
அ) அன்னம், கிண்ணம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Answer:
ஈ) இருபத்து இரண்டு

Question 3.
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Answer:
இ) இருபத்து நான்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
பெரம முதலில் வரும் மெய்யெழுத்துகள்………………
அ) க ச் ட் த் ற்
ஆ) ங் ஞ் ண் ந் ம் ன்
இ) யர் ல் வ் ழ் ள்
ஈ) க் ங் ச் ஞ் த் ம் ய் வ்
Answer:
ஈ) க் ங் ச் ஞ் த்ம்ய்வ்

Question 5.
மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் ……………
அ) ய் ர் ல் வ் ழ் ள்
ஆ) க் ச் ட் த் ப் ற்
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
ஈ) க் ச் த் ம் ய் ஞ் ங்
Answer:
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்

Question 6.
தவறான இணையைத் தெரிவு செய்க.
அ) கயல் + விழி – பெயர் + பெயர்
ஆ) தமிழ் + கற்றாள் – பெயர் + வினை
இ) வந்தாள் +மகாலட்சுமி – வினை +வினை
ஈ) தொழுதனர் +மக்கள் – வினை + பெயர்
Answer:
இ) வந்தாள் +மகாலட்சுமி – வினை+வினை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
தவறான இணையைத் தேர்வு செய்க.
அ) மொழி + ஆளுமை – உயிர் + உயிர்
ஆ) கடல் + அலை – உயிர் + மெய்
இ) தமிழ் + உணர்வு – மெய் + உயிர்
ஈ) மண் + வளம் – மெய் + மெய்
Answer:
ஆ) கடல் + அலை – உயிர் + மெய்

Question 2.
கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 1

அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)
Answer:
அறிஞர் அண்ணா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10)
Answer:
திரு. வி. கலியாணசுந்தரனார்

இ) “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவா (6)
Answer:
பாரதிதாசன்

ஈ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளில் ஒருவர் (6)
Answer:
ஜீவானந்தம்

Question 3.
பேச்சுவழக்கை எழுத்துவழக்காக மாற்றுக.
அ) காலங்காத்தால எந்திரிச்சு படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
Answer:
அதிகாலையில் எழுந்திருந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பயன் வராம போவாது..
Answer:
முயற்சி செய்தால் அதற்கேற்ற பயன் வராமல் போகாது

இ) காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த பாத்தனும்
Answer:.
காலத்திற்கேற்ற மாதிரி புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்.

ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய வைக்கனும்.
Answer:
ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, எல்லாவற்றையும் கவனமாகப் பதியவைக்க வேண்டும்.

உ) தேர்வெழுத வேகமாப் போங்க, தெரங்கழிச்சி போனா பதட்டமாயிரும்.
Answer:
தேர்வெழுத வேகமாகப் போர்கள், நேரம் கழித்துப் போனால் பதற்றமாகிவிடும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
வினாக்கள்

அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
Answer:
மொழிக்கு முதல் வரும் எழுத்துகள் இருபத்திரண்டு. அவை உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து ஆக இருபத்திரண்டு.
எ – டு :

i) அன்பு, ஆடு, இலை, ஈகை, உரல், ஊசி, எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓணாண், ஔவை – இவை
உய முதல் எழுத்துகளாக அமைந்தன.

ii) கலம், ஙனம், சங்கு, ஞமலி, தமிழ், நலம், பழம், மலர், யவனம், வளம் – இச்சொற்களில் மெய்கள்
முதலில் நிற்பதால் மெய்முதலாகும்.
“பன்னீ ருயிரும் கசதந பமவய
ஞங ஈரைந்து உயிர்மெய் மொழிமுதல்” என்பது நன்னூல் நூற்பா (102)].

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் இருபத்து நான்கு. அவை, உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொன்று, குற்றியலுகரம் ஒன்று ஆக இருபத்து நான்கு ஆகும்
எ – டு : i) தமிழ் – ஈற்றெழுத்து ‘ழ்’ மெய்யீறு.
ii) கிளி – ஈற்றெழுத்து ‘ளி’ (ள் + இ); எனவே, உயிரீறு.
iii) ஆறு – ஈற்றெழுத்து ‘று’, குற்றியலுகரம்; எனவே, குற்றியலுகர ஈறு.

“ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயும் உகரம் நாலாறும் ஈறே” என்பது நன்னூல் நூற்பா (107)].
(ஆவி – உயிரெழுத்து. சாயும் உகரம் – குற்றியலுகரம்.)

இ) உயிரீறு, மெய்யீறு – விளக்குக.
Asnwer:
உயிரீறு : சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு.
எ-கா : அருவி (வ்+இ), மழை (ழ்+ஐ) – இ, ஐ என்னும் உயிர் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.
மெய்யீறு : சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய் எழுத்து அமைவது மெய்யீறு.
எ – கா : தேன் (ன்), தமிழ் (ழ்) – ன், ழ் என்னும் மெய் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஈ) உயிர்முதல், மெய்ம்முதல் – எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
உயிர்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் உயிர் எழுத்து வருவது கார் முதல் ஆகும். எ – கா : அம்மா (அ), ஆடு (ஆ), ஐவர் (ஐ), ஔவையார் (ஔ) – முதலில் உயிர் எழுத்துகள் வந்ததால் உயிர் முதலாகும்.

மெய்ம்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து எழுத்துகளில் ஒன்று, முதலில் வருவது மெய்ம்முதலாகும்.
எ – கா : கதவு (க் + அ = க), சங்கு (ச் + அ = ச), பந்து ( + அ = ப) – என, மெய்யெழுத்துகள் முதலில் வந்தன.

உ) குரங்குக்குட்டி – குற்றியலுகரப் புணர்ச்சியை விளக்குக.
Answer:
குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி. ‘குரங்கு என்னும் நிலைமொழியின் இறுதியில் ‘கு’ குற்றியலுகரமாக அமைந்தது. ‘குட்டி’ என்னும் வருமொழியில் ‘க்’ வல்லினமெய் வந்தது. இப்புணர்ச்சியில், ‘இருபெயரொட்டுப் பண்டுத்தொகையில் வல்லினம் மிகும்’ என்னும் விதிப்படி, ‘குரங்குக்குட்டி’ எனப் புணர்ந்தது. (“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்”
என்னும் விதிப்படி புணர்ந்ததாகவும் கொள்ளலாம்.)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஊ) ‘ங்’ என்னும் மெய் எவ்வாறு சொல்லுக்கு முதலில் வரும்?
Answer:
‘ங்’ என்னும் மெய், அகரத்துடன் சேர்ந்து (ங் + அ ) ‘ங’ எனச் சொல்லுக்கு முதலில் ‘ஙனம்’ (விதம்) என வரும்.
இச்சொல்லும், சுட்டெழுத்துகள், வினா எழுத்துகளுடன் இணைந்தே வரும்.
எ – கா : அங்கனம். இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

“தமிழ் இலக்கிய வரலாற்றில், கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின், வாராது வந்துதிக்க புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தென்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.

‘மீனாட்சிசுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள் தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல், அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர், இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் அவர்களின் புகழ், தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் – இத்தொடரில் புலமைக் கதிரவன் என்பதற்கு இலக்கணக்குறிப்புத் தருக.
Answer:
புலமைக் கதிரவன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

Question 2.
மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக.
Answer:
புலமைக் கதிரவன் – உருவகத் தொடர்.
(பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும்) வண்டுபோல் – உவமைத்தொடர்.

Question 3.
மீனாட்சிசுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் – விடைக்கேற்ற வினாவை அமைக்க.
Answer:
மீனாட்சிசுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
பத்தியில் மொழிமுதல் எழுத்துகளைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக.
Answer:
மகாவித்துவான், தலபுராணம், தேசிகர், யமகம், அந்தாதி, கலம்பகம்.

Question 5.
விளங்கினார் – பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.
Answer:
விளங்கினார் – விளங்கு + இன் + ஆர்
விளங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் விலை மாற்று விகுதி.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மீனாட்சி சுந்தரனார், பூக்கள் தோறும் சென்று தேனுண்ணும் வண்டு போலப் பாடம் கற்றார்.
வினா : மீனாட்சி சுந்தரனார் எவ்வாறு பாடம் கற்றார்?

2. மீனாட்சி சுந்தரனார், தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்
வினா : மீனாட்சி சுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

தமிழாக்கம் தருக

1. The Pen is mightier than the Sword.
Answer:
எழுதுகோலின் முனை, வாளின் முனையைவு வலிமையானது.

2. Winners don’t do different things, wey do things differently.
Answer:
வென்றோர், வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வேறுவிதமாகச்
செய்வார்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

3. A picture is worth a thousand words.
Answer:
ஒரு படம் என்பது, ஆயில் வார்த்தைகளைவிட மதிப்புள்ளது.

4. Work while you work and play while you play.
Answer:
உழைக்க வேண்டிய நேரத்தில் உழை! விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு!

5. Knowledge rules the world.
Answer:
அறிவே உலகை ஆளுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துக:

வாடகை – குடிக்கூலி
மாதம் – திங்கள்
போலீஸ் – காவலர்
ரிச்சயம் – உறுதி
உத்திரவாதம் – உறுதி
சந்தோஷம் – மகிழ்ச்சி
சம்பளம் – ஊதியம்
ஞாபகம் – நினைவு
வருடம் – ஆண்டு
தேசம் – நாடு

வித்தியாசம் – வேறுபாடு
உற்சாகம் – பூரிப்பு
விசா – நுழைவு இசைவு
பாஸ்போர்ட் – கடவுச்சீட்டு
கம்பெனி – நிறுவனம்
பத்திரிகை – நாளிதழ்
கோரிக்கை – வேண்டுதல்
யுகம் – ஊழி
ராச்சியம் – மாநிலம், நாடு
சரித்திரம் – வரலாறு

முக்கியத்துவம் – முதன்மை
சொந்தம் – உறவு
சமீபம் – அருகில்
தருணம் – உரியவேளை
பந்து – உறவினர்
அலங்காரம் – ஒப்பனை
இலட்சணம் – அழகு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

அனுபவம் – பட்டறிவு
நட்சத்திரம் – விண்மீன்
ஜனங்கள் – மக்கள்
பௌத்திரன் – பெயரன்
நமஸ்காரம் – வணக்கம்
கும்பாபிஷேகம் – குடமுழுக்கு
ஆசீர்வதித்தல் – வாழ்த்துதல்
சம்பிரதாயம் – மரபு
ஜாஸ்தி – மிகுதி
விஷயம் – செய்தி

நாஷ்டா – சிற்றுண்டி
அங்கத்தினர் – உறுப்பினர்
அபூர்வம் – புதுமை
ஆராதனை – வழிபாடு
உபயோகம் – பயன்
அபிஷேகம் – திருமுழுக்கு
ஜென்ம நட்சத்திரம் – பிறந்தநாள்
சிரஞ்சீவி – திருநிறை செல்வன்

கீழ்க்காணும் நிகழ்ச்சிநிரலினைப் படித்து நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 2

அனுப்புநர் :
மாணவர் இலக்கிய மன்றத் தலைவர்
அரசு மேல்நிலைப் பள்ளி,
சென்னை – 600 001.

பெறுநர் :
முதன்மை ஆசிரியர்,
தினமணி நாளிதில்
சென்னை – 600 002.

ஐயா, எம் பள்ளியில் டைபெற இருக்கும் திங்கள் கூடுகை நிகழ்வு குறித்த செய்தி அனுப்பியுள்ளேன். அதனை வெளியிட்டு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

உங்கள்
வேலன்
(மாணவர் தலைவர்)

கைலத் திங்கள் வார இறுதி வெள்ளிக்கிழமை அன்று, அரசு மேனிலைப் பள்ளியில் பிற்பகல் 2. மணிக்கு ‘அரியன கேள் புதியன செய்’ என்னும் அமைப்பின் திங்கள் கூடுகை நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. மாணவர் இலக்கியச்செல்வன், 2.35 மணிக்கு வரவேற்புரை நிகழ்த்துகிறார். தலைமை ஆசிரியர் திரு. எழிலன் அவர்கள், ‘புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை ‘ என்னும் தலைப்பில், 2.50 மணிக்குச் சிறப்புரை நிகழ்த்துவார். 3.45 மணிக்கு மாணவர் ஏஞ்சலின் நன்றியுரை கூறிமுடித்தவுடன், 4.00 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் கூடுகை நிகழ்வு நிறைவு பெறும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பத்தியினைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

‘தமிழ்’ என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. இனிமையும் நீர்மையும் தமிழெனல்’ ஆகும் என்று, பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ‘தமிழ்’ என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற புறநானூற்றுப் பாடலடியில், ‘தமிழ்’ எனும் சொல், மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் “பல்கலைப் புலமை” என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. “தமிழ்கெழு கூடல்” என்றவிடத்திலும், “கலைப்புலமை ” என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன், “தமிழ் தழீஇய சாயலவர்” என்னும் இடத்து, ‘தமிழ்’ என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில், ‘தமிழ்’, பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன ‘தமிழ் இவை பத்துமே’, ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுகளாலான திருப்பாவையை ஆண்டாள், ‘தமிழ்மாலை’ என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். (‘பண்பாட்டு அசைவுகள்’ – தொ. பரமசிவன்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை?
Answer:
இனிமை, பண்பாடு, அகப்பொருள் அழகு, மென்மை, பாட்டு என்பன, தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள்.

Question 2.
பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக.
Answer:
அதூஉம் – செய்யுளிசை அளபெடை, தழீஇய – சொல்லிசையளபெடை.

Question 3.
தமிழ் என்றவுடன் உங்கள் மனத்தில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக.
Answer:
“தமிழுக்கு அமுதென்று பேர்”

Question 4.
திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது?
Answer:
தமிழ்மாலை.

Question 5.
பத்தியின் மையக்கருத்திற்கேற்ப ஒரு தலைப்பிடுக.
Answer:
காலந்தோறும் தமிழ்.

மொழியோடு விளையாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
எண்ணங்களை எழுத்தாக்குக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 3

வானத்தில் பறந்தென்ன
வண்ணத்தில் சிறந்தென
சொட்டும் நீரின்றி
சொகுசாக வாழ முடியுமா?

Question 2.
தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக.
எ – கா : ஓர் பயிர் பறவை வள வேண்டும் அழகான தண்ணீர் மயில்
அ) மயில் ஓர் அழகான பறகை ஆ) பயிர் வளரத் தண்ணீர் வேண்டும்.
i) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி
Answer:
ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போகவேண்டும்.
கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

ii) நிலவு வீசுவுதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனத்தை.
Answer:
மாலை நிலவு மனத்தை மகிழ்விக்கும்.
தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

iii) நேர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.
Answer:
பிறர் செய்த உதவியை, நன்மையை மறக்கக்கூடாது.
நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.

iv) நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா?
Answer:
நேற்று வந்த பையன் யார் தெரியுமா?
ஏன் பக்கத்தில் இருக்கவில்லை?

v) கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்த நாடு வந்தனர்.
Answer:
கோசல நாடு ஒரு சிறந்த நாடு.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வாந்தனர்.

Question 3.
வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக.
அ) வா ஆ) பேசு இ) தா ஈ) ஓடு உ) பாடு
Answer:
எ – கா : அ. வா – வேர்ச்சொல்.
அருணா, வீட்டுக்கு வந்தாள். (வினைமுற்று)
அங்கு வந்த பேருந்தில், அனைவரும் ஏறினர். (பெயரெச்சம்)
கருணாகரன், மேடையில் வந்து நின்றார். (வினையெச்சம்)
என்னைப் பார்க்க வந்தவர், என் தந்தையின் நண்பர். (வினையாலணையும் பெயர்)

ஆ) பேசு – வேர்ச்சொல்
அவள் பேசினாள். (வினைமுற்று)
அவள் பேசிய மொழி இனிமையாக இருந்தது. (பெயரெச்சம்)
அவள் பேசி முடித்தாள். (வினையெச்சம்)
மேடையில் பேசியவளைப் பார்த்தேன். (வினையாலணையும் பெயர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

இ) தா – வேர்ச்சொல்
அண்ணன் தந்தான். (வினைமுற்று)
அண்ண ன் தந்த பரிசு. (பெயரெச்சம்)
அண்ணன் தந்து சென்றான். (வினையெச்சம்)
அண்ண னிடம் தந்தவன் யாவன்? (வினையாலணையும் பெயர்)

ஈ) ஓடு – வேர்ச்சொல்
நான் வேகமாக ஓடினேன். (வினைமுற்று)
வேகமாக ஓடிய பையன் யார்? (பெயரெச்சம் )
அவன் ஓடிக் களைத்தான். (வினையெச்சம்)
அங்கே ஓடியவனைப் பார்த்தாயா? (வினையாலணையும் பெயர்)

உ. பாடு – வேர்ச்சொல்
சீதை பாடுகிறாள். (வினைமுற்று)
சீதை பாடிய பாட்டு. (பெயரெச்சம்)
சீதை பாடி முடித்தாள் (வினையெச்சம்)
மேடையில் பாடியவள் எள் (வினையாலணையும் பெயர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 4

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

கலைச்சொல் அறிவோம்

அழகியல் – Aesthetics
புத்தக மதிப்புரை – Book Review
இதழாளர் – Journalist
புலம் பெயர்தல் – Migration
கலை விமர்சகர் – Art Critic
மெய்யியலாளர் – Philosopher