Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.2 ஏதிலிக்குருவிகள் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்
குறுவினா
Question 1.
ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?
Answer:
- மரங்கள் வெட்டப்பட்டதால், காடுகள் அழிந்து போயின.
- மழை பெய்யவில்லை. மண்வளம் குன்றியது.
- இயற்கைச்சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால், வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன.
கூடுதல் வினாக்கள்
Question 2.
‘அழகிய பெரியவன்’ – குறிப்பு வரைக.
Answer:
- அழகிய பெரியவன், வேலூர் மாவட்டம் பேரணாம்பட் சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன்.
- அரசுப் பள்ளி ஆசிரியர்; நாவல், சிறுகதை, கவிதை கட்டுரை படைப்பவர்.
- ‘தகப்பன் கொடி’ புதினத்திற்குத் தமிழக அரசின் விருது பெற்றவர்.
- குறடு, நெரிக்கட்டு, உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை ஆகியன, இவர் படைப்புகள்.
Question 3.
‘ஏதிலிக்குருவிகள்’ காட்சிப்படுத்தும் அவலம் யாது?
Answer:
- இயற்கைச் சூழலே உயிர்களின் இருப்பை முடிவு செய்கிறது.
- இயற்கைக்கும் மனிதர்க்குமான தொப்புள்கொடி மழைத்துளிகள்.
- முதல்துளி விழுகையில், உயர்கள் மலர்கின்றன.
- ‘ஏதிலிக்குருவிகள்’ கவிதை, சூழலியல் மாற்றத்தால் நிகழ்கிற அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது.
சிறுவினா
Question 4.
காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?
Answer:
- சிற்றூர்களால் கூரை வேய்ந்த வீடுகள் இருந்த காலத்தில், நீர்வளம் கரைபுரண்டது; மரங்கள் நிறைந் திருந்தன; அவற்றில் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன.
- தூக்கணாங் குருவிகள் கட்டிய கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் அசைந்தன; அவை, தூக்கணாங் குருவிகளின் வீடுகளாகும்.
- இன்று மண்வளம் குறைந்தது; தாய்மடி சுரக்காததால், அதில் வாழ்ந்த உயிரினங்கள் மறைந்து போயின என்பதை, அழகிய பெரியவன் ஒப்பீடு செய்கிறார்.
கூடுதல் வினா
Question 1.
‘ஏதிலிக்குருவிகள்’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:
- ஊரில், இன்று குருவிகளையும் கூடுகளையும் பார்க்க இயலவில்லை. முன்பு அடைமழை என்றால் ஆற்றில் நீர் புரளும். கரைகளில் நின்ற நெடுமரங்களில் பறவைகள் குரலெழுப்பும்.
- நடந்து போகும் வழிகளில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் ஆடும். சிட்டுக் குருவிகள் மூங்கில் கிளைகளில் அமர்ந்து, சுழித்தோடும் நீருடன் பாடிக்கொண்டிருக்கும்.
- இன்றோ, மரங்கள் வெட்டுண்டன; வானமோ பொய்த்தது; மண்ணோ மறுகிவிட்டது. குருவிகள் வாழ வழியின்றி அகதிகளாய் எங்கோ போய்விட்டன என்பதே கவிதைச் செய்தியாகும்.
இலக்கணக்குறிப்பு
பார்க்க – வினையெச்சம்
மழைக்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
நெடுமரம் – பண்புத்தொகை
உறுப்பிலக்கணம்
1. பார்க்க – பார் + க் + க் + அ
பார் – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, அ – வினையெச்ச விகுதி.
2. சுரந்த – சுர + த் (ந்) + த் + அ
சுர – பகுதி, த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.
3. பொய்த்தது – பொய் + த் + த் + அ + து
பொய் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – சாரியை,
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.
4. மறுகியது – மறுகு + இ (ன்) + ய் + து
மறுகு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன’ கரம் புணர்ந்து கெட்டது,
ய் – உடம்படுமெய் சந்தி, து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதிகள்
1. மழைக்காலம் – மழை + காலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிரம் (பழைக்காலம்)
2. கரையெல்லாம் – கரை + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (கரை + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (கரையெல்லாம்)
3. நெடுமரம் – நெடுமை + மரம்
“ஈறுபோதல்” (நெடுமரம்)
4. வழியெல்லாம் – வழி + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (வழி + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்று பது இயல்பே” (வழியெல்லாம்)
5. காலமது – காலம் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலமது)
பலவுள் தெரிக
Question 1.
பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
அ) ஏதிலிக் குருவிகள் – மரபுக் கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
இ) பானை டாக்டர் – குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு – புதுக்கவிதை
Answer:
இ) யானை டாக்டர் – குறும் புதினம்
கூடுதல் வினா
Question 2.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) ஏதிலிக்குருவிகள் – 1. பேயனார்
ஆ) திருமலை முருகன் பள்ளு 2. ஜெயமோகன்
இ) ஐங்குறு நூறு – 3. அழகிய பெரியவன்
ஈ) யானை டாக்டர் – 4. பெரியவன் கவிராயர்
i) 1 3 4 2
ii) 1 2 4 3
iii) 3 4 1 2
iv) 3 2 1 4
Answer:
iii) 3 4 1 2
Question 3.
அழகிய பெரியவன் இயற்பெயர்……………..
அ) ராசேந்திரன்
ஆ) ராசகோபாலன்
இ) அரவிந்தன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
இ) அரவிந்தன்
Question 4.
அழகிய பெரியவன் ஊர் ……………
அ) யாழ்ப்பாணம் கொக்குவில்
ஆ) ஈரோடு மாவட்ட மேட்டுப் புதூர்
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு
ஈ) சென்னிகுளம் கழுகுமலை
Answer:
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு
Question 5.
அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் …………………
அ) குறடு
ஆ) நெறிக்கட்டு
இ) வடக்குவீதி
ஈ) தகப்பன் கொடி
Answer:
ஈ) தகப்பன் கொடி