Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 4.5 இதழாளர் பாரதி Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 4.5 இதழாளர் பாரதி
நெடுவினா
Question 1.
பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?
Answer:
பாரதியின் பன்முகம் :
பாரதியார், கவிஞர்மட்டும் அல்லர் ! சிறந்த பேச்சாளம் பாடகர்; கட்டுரையாளர்; கதாசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் ஞானி; ஆன்மிகவாதி; அனைத்திற்கும் மேலாகச் சிறந்த இதழாளர்.
இதழாளர் பாரதி :
பாரதி, ‘சுதேசிமித்திரன்’ இதழில் உதவி இதழாசிரியராகச் சேர்ந்தார். அதனால் அவரது உலகளாவிய பார்வை கூர்மைப்பட்டுச் சிறந்த இதழாளரானார். தொடர்ந்து சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, விஜயா, கர்மயோகி எனப் பல இதழ்களில் பணியாற்றித் தம் வாழ்க்கைப் போராட்டத்திற்கு இடையிலேயும் பாரதி, உலகப் பார்வை கொண்டு செயல்பட்டார்.
படைப்பில் புதுமை :
‘தான்’ என்பதை ஒழித்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், விடுதலை வேட்கையைத் தூண்டப் பல புனைபெயர்களில் எழு பேரார். தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துடன் காட்சியும் இடம்பெற வேண்டும் எனக் கருதிக் கருத்துப் படங்களைக் கேலிச் சித்திரங்களாக வெளியிட்டுத் தமிழ் இதழ்களில் ‘கார்ட்டூன்’ என்பதை அறிமுகப்படுத்தினார்.
வழித்தடம் அமைத்தவர்:
இதழியல் துறையா பலர் பாரதியைப் பின்பற்றிச் செயல்பட்டனர். தமிழ் இதழ்களில் ஆண்டு, திங்கள், நாள் என, நல்ல தமிழை முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியே. அவர் மூச்சும் பேச்சும் இளைஞருக்காகவும், பெண்களுக்காகவு மானவையாக இருந்தன. ‘சக்ரவர்த்தினி’ என்னும் தம் இதழில், குறள்வெண்பாவை எழுதிப் பெண் விடுதலைக்குப் பாடுபட்டார். புரட்சியையும், விடுதலையையும் குறிக்க, ‘இந்தியா’ இதழைச் சிவப்பு வக ளணத்தில் வெளியிட்டார்.
புனைபெயர் பயன்படுத்தல் :
தான் மட்டுமன்றித் தம் நண்பர்களும் ஆங்கிலேயர் கெடுபிடிக்கு ஆளாகக் கூடாதென விரும்பி, நண்பர் பெயர்களையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும்கூடப் புனைபெயர்களிலேயே சுட்டி வந்தார். பாரதியார் பயன்படுத்திய புனைபெயர்களில் அவரின் இதழியல் அறத்தைக் காணமுடியும்.
புதுமை விரும்பி பாரதி :
இதழியலில் தேதி குறிப்பிடல், கருத்துப்படம் வெளியிடல், ‘மகுடமிடல்’ என்னும் தலைப்பிடல் ஆகிய பல நிலைகளில் முன்னோடியாக விளங்கினார். ஆங்கிலேயர் அளித்த பல கெடுபிடிகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையிலும், இதழியல் பணியைக் கைவிடாது செயல்படுத்தினார்.