Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.5 இசைத்தமிழர் இருவர் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்
Question 1.
‘சிம்பொனி’த் தமிழரும், ‘ஆஸ்கர்’ தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.
Answer:
சாதனை புரிந்த இளையராஜா
சிம்பொனித் தமிழர் :
“ஆசியக் கண்டத்தவர், ‘சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்க முடியாது” என்னும் மேலை இசை வல்லுநர் கருத்தைச் சிதைத்தவர் இளையராஜா. இவர், தமிழ்நாட்டுத் தேனி மாவட்டத்து இராசையா ஆவார். தாலாட்டில் தொடங்கித் தமிழிசைவரை அனைத்தையும் அக் சபோட்ட இசை மேதை.
இசையைச் செவியுணர் கனியாக்கியவர் :
திரையுலகில் கால் பதித்த இளையராஜா, இசையல் சிலம்பம் சுழற்றி, மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தவர். பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி, மெல்லிசையில் புது உயர் தொட்டவர். எழுபது எண்பதுகளில் இவர் இசை, இசை வல்லாரை மட்டுமன்றி, பாமர மக்களையும் கர்த்துத் தன்வசப் படுத்தியது.
இசையில் சாதனைப் படைப்புகள்:
ஐவகை நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தும் இளையராஜாவின் இசை மெட்டுகள், நெடுந்தூரப் பயணங்களுக்கு வழித்துணையாயின. இளையராஜாவின் இசையில், மண்ணின் மணத்தோடு, பண்ணின் மணமும் கலந்திருக்கும். எனவே, இசை மேதைகளால் மதிக்கப்பட்டார்.
‘எப்படிப் பெயரிவேன்?’, ‘காற்றைத் தவிர ஏதுமில்லை!’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள் (இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படப் பின்னணி இசை, மனித உணர்வுகளான மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி என்பவற்றை உணர்த்துவன.
இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜாவின் ‘இரமணமாலை’, ‘கீதகள்கள்’, மூகாம்பிகை பக்தித் தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ் சமுகி) என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.
இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
‘இசைஞானி’ எனப் போற்றப்படும் இளையராஜா, மேற்கத்திய இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். திரை இசைக்கு ஏற்ப உணர்வின் மொழியை மாற்றுவதில் வல்லவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.
அரிய செயல் :
தேசத் தந்தை மகாத்மாகாந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, ‘அஜொய் சக்கரபர்த்தி’யைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் ‘முதல் சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்கினார். இன்று இளையராஜாவின் இசை ஆட்சி, உலகு முழுவதும் பரவியுள்ளமை தமிழராகிய நமக்குப் பெருமை.
பெற்ற விருதுகள் :
இளையராஜா, தமிழக அரசின் கலைமாமணி’ விருதைப் பெற்றார்; சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றார். மத்தியப்பிரதேச அரசு அளித்த ‘லதா மங்கேஷ்கர்’ விருதைப் பெற்றார்; கேரள நாட்டின் ‘நிஷாகந்தி சங்கீத விருதைப் பெற்றார்.
இந்திய அரசு, ‘பத்ம விபூஷண் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. இசையால் உலகளக்கும் இளையராஜாவின் புகழ், காலம் கடந்து நன்று பாராட்டைப் பெறும். வாழ்க இசை! வளர்க இளையராஜாவின் இசைப்பணி!
தமிழ் இசை உலகில் சாதனைபுரிந்த இரஹ்மான்
ஆஸ்கர் விருது வென்ற தமிழர் :
2009ஆம் ஆண்டு அமெரிக்க ‘கோடாக்’ அரங்கில், இசைக்கான ஆஸ்கர் பாந்துக்கு, ஐந்து பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இரஹ்மான் பெயரும் இருந்தது.
ஏனைய நால்வர், பலமுறை பரிந்துரை பெற்றவர்கள். எனினும், முதன்முறை பரிந்துரைக்கப்பட்டவர் அரங்கில் ஏறி, இரு கைகளிலும் ஆஸ்கர் விருதுக்கான சிலைகளை ஏந்தி, இறைவனை வணங்கியபின், தன் தாய்மொழியில் உரை நிகழ்த்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.
இளமையில் இசையும் படிப்பும் :
மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய தம் தந்தை ஆர். கே. சேகரை எண்ணினார். நான்கு வயதில் தந்தையுடன் ஹார்மோனியம் வாசித்துத் திறமைகாட்டியதை எண்ணினார்.
தந்தையை இழந்த சூழலில் பள்ளிப் படிப்புக்கு இடைறு ஏற்படாவகையில், இரவெல்லாம் இசைக்குழுவில் பணி செய்து, காலையில் நேராகப் பள்ளி சென்று, வாயிலில் காத்திருக்கும் தாய் தந்த உணவை உண்டு, பள்ளிச் சீருடை அணிந்த காலத்தை நினைத்தார். பாழ்க்கைப் போராட்டம், பதினோராம் வகுப்போடு படிப்பை முடிக்க வைத்தது.
துள்ளல் இசைக்கு ஆட வைத்தவர்:
1992இல் ‘ரோஜா’ படத்திற்கு இசையமைத்துத் திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார். தம் இசையால் தமிழ்த் திரையுலகில் கதெழுச்சியை ஏற்படுத்தினார். இளைஞர்களிடையே இசை ஆளுமையை வளர்த்தார். இவரது தமிழிசையின் துள்ளல் ஓசைக்கு மயங்காதவர் இலர். இசையின் நுட்பமுணர்ந்து, செம்மையாகக் கையாண்டு இளைஞர்களைத் தம் பாடலுக்கு ஆடவும் பாடவும் வைத்தார்.
இசையில் கணினித் தொழில்நுட்பம் :
கணினித் தொழில் நுட்ப உதவியுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முறைகளைக் கலந்து, உலகத்தரத்தில் இசை அமைத்தார். இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.
இசைப்பா லின் மெட்டை உருவாக்குமுன், தாளத்தைக் கட்டமைத்துப் பாடலுக்கான சூழலை உள்வாங்கி, அதன்பின் பாட்டை வெளிக்கொணர்வது இரஹ்மானின் தனிஆற்றல். பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையை, மக்களை ஈர்க்கும் வகையில் அமைத்துத் தம் வல்லமையை வெளிப்படுத்துவார்.
உலகக் கலாசாரத்தை இசையில் இணைத்தல் :
இவர் இசையமைத்த ‘வந்தே மாதரம்’, ‘ஜனகணமன’ இசைத் தொகுதிகள், நாட்டுப் பற்றைத் தூண்டுவன. தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு, மேலை நாட்டுப் படங்களுக்கும் நாடகங்களுக்கும் இசையமைத்து, இசையுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார். தம் இசையால் வெவ்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைக்கவும் செய்தார்.
பெற்ற விருதுகள் :
ஏ. ஆர். இரஹ்மானுக்குத் தமிழக அரசு, ‘கலைமாமணி’ விருது வழங்கியது. கேரள அரசு, ‘தங்கப்பதக்கம்’ வழங்கிப் பாராட்டியது. உத்தரப்பிரதேச அரசு, ‘ஆவாத் சம்மான்’ விருதும், மத்தியப் பிரதேச அரசு, ‘லதா மங்கேஷ்கர்’ விருதும் வழங்கின.
மொரிஷியஸ் அரசும் மலேசியா அரசும், ‘தேசிய இசை விருது’ வழங்கிச் சிறப்பித்தன. ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம், சர்வதேச இசை விருது’ வழங்கிப் பாராட்டியது.
இந்திய அரசு, பத்மபூஷண்’ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்கு இசையமைத்து, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று, உலகப் புகழ் பெற்றார்.
இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியராக வலம் வரும் இரஹ்மானின் வாழ்க்கை , சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
கூடுதல் வினா
Question 2.
சிம்பொனித் தமிழர் இசைத் தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக.
Answer:
சிம்பொனித் தமிழரின் சாதனைப் படைப்புகள் :
பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி மெல்லிசையில் புது உயரம் தொட்டவர் இளையராஜா.
இந்தியாவின் பஹார், பஹாடி இன மக்கள் தொடங்கி, மதுரைக் கிராமிய இசைவரை அனைத்தையும் தம் கைவண்ணத்தில் வழிந்தோடச் செய்கம் எப்படிப் பெயரிடுவேன்?’, ‘காற்றைத் தவிர எதுவுமில்லை !’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள். இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படத்திற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜவின் ‘இரமண மாலை’, ‘கீதாஞ்சலி’, ‘மூகாம்பிகை பக்தித் தொகுப்பு’, ‘மீனாட்சி ஸ்தோத்திரம்’ என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ்சமுகி’ என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.
இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். மூன்றே சுரங்களோடு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசை அமைத்தது சிப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.
அரிய செயல் :
மகாத்மா காந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் முதல் சிம்பொனி இசைக்கோவையை இளையராஜா உருவாக்கினார். தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் இனிமையான இடமுண்டு. அதில், இளையராஜாவின் புகழ், மகுடமாக அனிர்கின்றது.