Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

குறுவினாக்கள்

Question 1.
அயர்ந்து, எழுந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
அயர்ந்து – அயர் + த் (ந்) + த் + உ
அயர் – பகுதி, த-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த்- இறந்தகால இடைநிலை, உ- வினையெச்ச விகுதி.
எழுந்த -ஏழு + த் (ந்) + த் + அ
ஏழு பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

Question 2.
தொடர் அமைத்து எழுதுக.
Answer:
அன்றொருநாள் : அன்றொருநாள் நான் கண்ட அழகிய காட்சியை, மீண்டும் காண ஏங்கினேன்.
நிழலிலிருந்து : வெயில் வேளையில் நிழலிலிருந்து இளைப்பாறினேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
கலைச்சொற்கள் பயன்படும் துறைகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல் முதலான துறைசார்ந்து இன்றைய சூழலுக்கு ஏற்பக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Question 4.
கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து எழுதுக.
Answer:

  • நாள்தோறும், துறைதோறும் கண்டுபிடிப்புகள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
  • இந்தச் சூழலில் அவற்றிற்கெனக் கலைச்சொல்லாக்கங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை ஏட்டளவில் இல்லாமல் பயன்பாட்டிற்கு வருவதே, மாணவர்களின் பங்களிப்பாக அமையும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு பெறலாம்?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள்சார்ந்த கலைச்சொற்களின் தேவை மிகுதி. அதனால் கலைச்சொற்கள் உருவாக்கப் பணியில், எல்லாரும் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

இப்பணிக்கு இதழ்களும் ஊடகங்களும் துணைபுரியும். இதழ்கள், மின் இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளம் போன்றவற்றில் கலைச்சொற்களைப் பெறலாம். பள்ளி இதர்களில்
இவற்றை வெளியிட்டு, மாணவர்களிடம் கலைச்சொல்லாக்க விழிப்புணர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
தாய்மொழிவழிக் கற்றலில் ஜப்பானியர் சிறக்கக் காரணம் என்ன?
Answer:
உலகின் எம் மூலையில், எவ்வகைக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், ஜப்பானியர் உடனுக்குடன் தம் தாய் மொழியில், அதனை ஆக்கம் செய்து விடுகின்றனர். அதனால், தாய்மொழிவழியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்கின்றனர். ஆகையால், ஜப்பானில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

சிறுவினாக்கள்

Question 1.
கலைச்சொல்லாக்கத்திற்கும், அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள் சார்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கும் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழில், இணையான சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கலைச்சொல்லை உருவாக்கும் முறையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும்.

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அசராதி. ஆனால், பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் வழக்கிலுள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்தில் புதிய சொற்களை உருவாக்கியும் தருவது கலைச்சொல்லாக்கம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கலைச்சொல், அதன் சிறப்புக் குறித்து கழுதுக.
Answer:
காலத்திற்கு ஏற்ப, வளரும் துறைசார்ந்த புதுக்கண்டுபிடிப்புக்கென உருவாக்கிப் பயன்படுத்தும் சொல், கலைச்சொல். மொழியின் வேர்ச்சொல் பகுதி) கொண்டு, இதனை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது, மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதோடு, புது வளர்ச்சியும் பெறும். தலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்.

Question 3.
மருத்துவம், கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்களை எழுதுக.
Answer:
மருத்துவத்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Clinic – மருத்துவமனை
Blood Group – குருதிப் பிரிவு
Companser – மருந்தாளுநர்
X – ray – ஊடுகதிர்
Typhas – குடல் காய்ச்சல்
Ointment – களிம்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Note Book – எழுதுசுவடி
Answer Book – விடைச்சுவடி
Rough Note book – பொதுக்குறிப்புச் சுவடி
Prospectus – விளக்கச் சுவடி

Question 4.
கலைச்சொல் அகராதி என்பது யாது?
Answer:
பல்வேறு துறைகள் சார்ந்த கலைச்சொற்களைத் தனித்தனியே தொகுத்து, அகர வரிசைப்படுத்தி வெளியிடப்படுவது, ‘கலைச்சொல் அகராதி’ எனப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை அறிக.
Answer:
Smart phone – திறன்பேசி
Website – இணையம்
Touch screen – தொடுதிரை
Blog – வலைப்பூ
Bug – பிழை
Gazette – அரசிதழ்
Ceiling – உச்சவரம்பு
Despatch – அனுப்புகை
Circular – சுற்றறிக்கை
Subsidy – மானியம்
Sub Junior – மிக இளையோர்
Super Senior – மேல் மூத்தோர்
Customer – வாடிக்கையாளர்
Carrom – நாலாங்குழி ஆட்டம்
Consumer – நுகர்வோர்
Sales Tax – விற்பனை வரி
Account – பற்று வரவுக் கணக்கு
Referee – நடுவர்
Cell phone – கைப்பேசி, அலைபேசி, செல்லிடப்பேசி/

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
உருவாக்கும் சொல் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
ஒரு சொல்லை மொழி பெயர்க்கும்போதோ, புதிய சொற்களை உருவாக்கும்போதோ அச்சொல்லானது, அதே போன்று வேறு பல சொற்கள் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும்.

சான்றாக ‘Library’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘நூலகம்’, ‘நூல் நிலையம்’ என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

இவற்றில் ‘நூலகம்’ என்னும் சொல், ‘நூலகர்’ (Librarian), நூலக அறிவியல் Library Science) என்னும் சொற்கள் உருவாகத் துணை புரிந்துள்ளமை காண்க.

Question 7.
கலைச்சொற்களை ஏன் தரப்படுத்த வேண்டும்?
Answer:
கற்றவர், கல்லாதவர், கைவினைஞர், பயிற்றுநர், மாணவர், மகளிர் எனப் பலரும் இன்றைய சூழலில் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அறிவியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கும்போது, ஒரே பொருளைக் குறிக்கப் பலவேறு சொற்களைக் கையாளுகின்றனர்.

அக்கலைச் சொற்கள், தமிழின் சொல்லாக்க வளர்ச்சியைக் காட்டினாலும், புரிந்து கொள்ளுதல் நிலையில் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தும். இக்குழப்பத்தைத் தவிர்த்துத் தெளிவைப் பெறக் கலைச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்துதல் அவசியமாகும்.

சான்று : ‘ANTIBIOTICS’ என்னும் சொல்லைத் தமிழில் எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நக்கயிர்க் கொல்லிகள் எனப் பலவாறு தமிழில் வழங்குவது, குழப்பத்தை ஏற்படுத்துதல் காண்க.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கமாத் தேர்ச்சி கொள்

Question 1.
கலைச்சொல்லாக்கம் – பொருள் தருக?
Answer:
ஒரு மொழியில் காலத்திற்கேற் துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப் படும் சொற்கள், ‘கலைச்சொற்கள் எனப்படும்.

Question 2.
கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
Answer:

  • புதிதாக உருவாக்கப்பெறும் கலைச்சொல், தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
  • பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
  • வடிவில் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
  • ஓரை யமுடையதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
  • மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாகக் கலைச்சொற்களை உருவாக்கல் வேண்டும்.
  • இவ்விதிமுறைகளைக் கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குமுன், பின்பற்ற வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக.
Answer:
Personality – ஆளுமை, வேறுபட்ட பண்பு.
Plastic – நெகிழி
Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.
Escalator – நகரும் மின்படி
Straw – நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல்.
Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
Horticulture – தோட்டக்கலை
Average – நடுத்தரம், சராசரி அளவு.
Apartment – அடுக்குமாடி, அடுக்ககம், தொகுப்புமனை.

Question 4.
Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.
Answer:
நாவாய், கலம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்?
Answer:
உலக அளவில் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும்போது, பழந்தமிழிலக்கியச் சொல்லைத் தேர்ந்து பயன்படுத்துதல். (எ-கா: வலவன் Pilot)

பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் . (எ-கா : அம்மை)
பிறமொழிச் சொற்களைக் கடன் பெறுதல். (எ-கா : தசம முறை / Decimal)
புதுச்சொல் படைத்தல். (எ-கா : மூலக்கூறு / Molecule)
உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல். (எ-கா : எக்ஸ் கதிர் / Xray)
பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல். (ஒளிச்சேர்க்கை / Photo anthesis)
ஒலிபெயர்த்துப் பயன்படுத்துதல். (எ-கா : மீட்டர் / Meter) (ஓம் / Om)
உலக அளவிலான குறியீடுகள் – சூத்திரங்களை R√A = r,r2 H2O, Ca
அப்படியே ஏற்றல் என்னும் நெறிமுறையைக் கையாள வேண்டுமென்று, வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முலா ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் …………
அ) மூதூர்
ஆ) வெற்றிடம்
இ) நல்லாடை
ஈ) பைந்தளிர்
Answer:
இ) நல்லாடை

கூடுதல் வினாக்கள்

Question 2.
பொருள் தெரியாத சொற்களுக்கும் பொருள் கூறுதல் ……………… நோக்கம்.
அ) கலைச் சொல்லின்
ஆ, இணையத்தின்
இ) அகராதியின்
ஈ) வலைப்பூவின்
Answer:
இ) அகராதியின்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
மக்கள் பயன்பாற் றடுக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை……………
அ) பொதுமக்களும் இதழ்களும்
ஆ) பள்ளிகளும் இதழ்களும்
இ) மாணவர்களும் ஊடகங்களும்
ஈ) இதழ்களும் ஊடகங்களும்
Answer:
ஈ) இதழ்களும் ஊடகங்களும்

Question 4.
மாயர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவது………………….
அ) செய்தித்தாள்
ஆ) வார மாத இதழ்
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
ஈ) வானொலி
Answer:
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
‘தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் கட்டுரை எழுதியவர்……………….
அ) பாரதிதாசன்
ஆ) திரு. வி. கலியாணசுந்தரனார்
இ) காந்தியடிகள்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

குறுவினா

Question 1.
முக்காற் புள்ளி இடம்பெற வேண்டிய இடத்தினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
சிறுதலைப்பு, நூற்பகுதி, எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற் புள்ளி இடவேண்டும்.
எ – கா : i. சார்பெழுத்து :
ii. பத்துப்பாட்டு 2 : 246
iii. எட்டுத்தொகை என்பன வருமாறு:

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
காற்புள்ளி இடம்பெற வேண்டிய இடங்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
பொருள்களைத் தனித்தனியே குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், ஆணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி இடம்பெற வேண்டும்.

எ – கா : i. அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப் பேறுகள் நான்கு
ii. நாம் எழுதும்போது, பிழையற எழுதவேண்டும்.
iii. இனியன் நன்கு படித்ததனால், தேர்ச்சி பெற்றான்.
iv. ஐயா, / அம்மையீர்,
V. சிறியவன், பெரியவன், செல்வன், ஏழை.

Question 3.
அரைப்புள்ளி இடம்பெறும் இடங்களைக் கூறுக.
Answer:
தொடர்நிலைத் தொடர்களிலும், ஒரு சொல்லுக்குப் பலபொருவு கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

எ – கா : i. வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
ii. அளி – அன்பு; அருள்; குளிர்ச்சி, பயண்டு; இரக்கம்; எளிமை.

Question 4.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில்,
முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

எ – கா : i. மரபியல்.
ii. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
iii. தலைமையாசிரிய அரசு மேனிலைப்பள்ளி.
iv. தொல். சொல். 58.
v. 12 / 12 /2018

Question 5.
வினாக்குறி இடவேண்டிய இடம் குறித்து விளக்கு.
Answer:
ஒரு வினாத்தொடர் முற்றுத் தொடராகவும்), நேர்க்கூற்றுத் தொடராகவும் இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

எ – கா : i. அது என்ன? (வினா – முற்று)
ii. “நீ வருகிறாயா?” என்று கேட்டான். (நேர்க்கூற்று)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
விளிக்குறி இடம்பெறும் இடத்தை எழுதுக.
Answer:
அண்மையில் இருப்பவரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கும் விளிக்குறி இடுதல் வேண்டும். (வியப்புக் குறிக்கும் விளிக்குறிக்கும் அடையாளம் ஒன்றே)
எ – கா : i. அவையீர் ! ii. அவைத் தலைவீர்!

Question 7.
வியப்புக்குறி இடம்பெறும் இடம் விளக்குக.
Answer:
வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்று, வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி இடுதல் வேண்டும்.

எ – கா : i. எவ்வளவு உயரமானது!
ii. “என்னே தமிழின் பெருமை!” என்றார் கவிஞர்.
iii. வா! வா! போ! போ! போ!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 8.
மேற்கோள் குறி இடும் இடங்கள் யாவை?
Answer:

  • இரட்டை மேற்கோள்குறி, ஒற்றை மேற்கோள்குறி என, மேற்கோள் குறிகள் இரண்டு வகைப்படும்.
  • இரட்டை மேற்கோள்குறி : நேர்க்கூற்றுகளில் இரட்டை மேற்கோள்குறி இடம்பெறும். எ – கா :“நான் படிக்கிறேன்” என்றான்.
  • ஒற்றை மேற்கோள்குறி : ஓர் எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ தனியே குறிக்கும் இடம், கட்டுரைப் பெயர், நூற் பெயர், பிறர் கூற்று இடம்பெறும் வேறு கூற்று ஆகியவற்றைக் குறிக்க, ஒற்றை மேற்கோள்குறி இடல் வேண்டும்.

எ – கா : i. ‘ஏ’ என்று ஏளனம் செய்தான்.
ii. பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
iii. ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல், சிறந்த ஒப்பீட்டு நூல்.
iv. ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்’ என்பர்.

தெரிந்து கொள்வோம்
நிறுத்தக்குறிகள்

சிறுவினா

Question 1.
நிறுத்தற் குறிகளின் வகைகளையும், அவை எங்கெங்கு இடம் பெறுதல் வேண்டும் என்பதையும் தொகுத்து எழுதுக.
Answer:
காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்படவிளிக்குறி, மேற்கோள்குறி என்பன நிறுத்தற்குறிகளாகும்.
(விடை : குறுவினா 1முதல் 8வரை உள்ளவற்றைத் தொகுத்துப் படிக்க)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க
அ) மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான்.
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
இ) மலரவன் தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
ஈ) மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான்.
Answer:
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.

கூடுதல் வினா

Question 2.
சரியான நிறுத்தற்குறியுடைய சொற்றொடலாக் காண்க.
அ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
ஆ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை, என்னும் ‘சிறுகதை’ எழுதினார்.
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
ஈ) ‘பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
Answer:
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
நிறுத்தற் குறிகளின் பயன்களைக் கூறுக.
Answer:
நிறுத்தற் குறிகள், வெறும் அடையாளங்கள் அல்ல. அவை பொருள் பொதிந்தவை. மக்களது உணர்வின் இயக்கமாக விளங்குவது மொழி. மொழியின் தெளிவை உணர்த்த, நிறுத்தல்களும் குறியீடுகளும் அடையாளங்களாகும். நிறுத்தற்குறிகள், ஒரு தொடரிலுள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும்.

பெயயைத் தெளிவாகப் பேசவும் எழுதவும் நிறுத்தற்குறிகள் துணை நிற்கின்றன. நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது, தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும், கேட்பவர்களும் பயன்பெறுவர்.

Question 2.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தொடரின் இறுதி, முகவரி இறுதிகளில் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
எ-கா: i. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
ii. தலைமை ஆசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, சென்னை – 600 002.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
விளிக்குறி, வியப்புக்குறி வரும் இடங்களை வேறுபடுத்துக.
Answer:
விளிக்குறிக்கும், வியப்புக்குறிக்கும் இடப்படும் அடையாளம் ஒன்றே. விளிக்குறி, அண்மையில் இருப்பவரையோ, தொலைவில் இருப்பவரையோ அழைப்பதற்கு இடப்படும்.

வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்றின் வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச்சொற்களுக்குப் பின்பும் வியப்புக்குறி இடப்படும்.

Question 4.
சிலப்பதிகாரத்தைப் படித்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் – இத்தொடர்க்குரிய நிறுத்தற்குறிகளைத் தகுந்த இடங்களில் இட்டெழுதுக.
Answer:
“சிலப்பதிகாரத்தைப் படித்தேன். வியந்தேன்! மகிழ்ந்தேன்!”.

மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
(சங்கரதாசு சுவாமிகள்)

நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.

இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர், தம்முடைய 16ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று, வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.

இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் ‘சந்தக் குழிப்புகளின்’ சொற்சிலம்புகளைக் கண்டு, அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

சங்கரதாசு சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா, நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ட்டினார். நாடக மேடை, நாகரிகம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், ‘தத்துவ ம.

லோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கி, ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி. கே. எஸ். சகோதரர்கள். நாடகத்தின்மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

Question 1.
தமிழ்ச் சொல்லாக்குக – சன்மார்க்கம், வித்துவ பால சபை.
Answer:
சன்மார்க்கம் – ஆன்மநெறி
வித்துவ பால சபை – இளங்கலைஞர் மன்றம்

Question 2.
நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் – அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக.
Answer:
சங்கரதாசு சுவாமிகள், நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தார்.

Question 3.
ஈட்டினார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
ஈட்டு + இன் + ஆர்
ஈட்டு – பகுதி, இன் – இறந்ததால் இடைநிலை, ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 4.
தன்னன தானன தன்னனனே, இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக.
Answer:
எ – கா : இந்திய நாட்டினில் வாழ்வதையே
இன்பமாய்க் கொண்டிடல் வேண்டுமப்பா……
இங்குமம் கையராய் வந்ததையே
பற்றதாம் என்றிடல் வேண்டுமையா.

Question 5.
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் – சிறப்புப் பெயருக்கான காரணத்தை அளிக்க.
Answer:
நாட்டத்தின்வழித்தமது சுவைமிகுந்த பாடல்கள், உரையாடல்கள் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார். எனவே, நாடகத்துறைக் கலைஞர்கள், சங்கரதாசு சுவாமிகளைத் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றிச் சிறப்பித்தனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பெரும்புலவர்கள், சங்கரதாசு சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.
வினா : பெரும்புலவர்கள் எவற்றை உணர்ந்து, சங்கரதாசு சுவாமிகளை எவ்வாறு பாராட்டியுள்ளனர்?

2. சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போன்றுகின்றனர்.
வினா : நாடகத்துறைக் கலைஞர்கள் உளமகிழ்ந்து யாரை என்னவென்று போன்றுகின்றனர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. தம் நாடகத்தின்மூலம் சங்கரதாசு சுவாமிகள், மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார்.
வினா : சங்கரதாசு சுவாமிகள், தம் நாடகத்தின்மூலம் மக்களுக்கு எவற்றை உணர்த்தினார்?

தமிழாக்கம் தருக

The oldest documented forms of art are visual arts, which include creation of images or objects in fields including today painting, sculpture, printmaking, photography and other visual media. Music, theatre, film, dance, and other performing arts, as well as literature and other media such as interactive media, are included in a broader definition of art or the arts. Until the 17th century, art referred to any skill or mastery and was not differentiated from crafts or sciences. Art has had a great number of different functions throughout its history, making its purpose difficult to abstract or quantiy to any single concept. This does not imply that the purpose of Art is “vague” abu unat it has had many unique, different reasons for being created.
Answer:
மிகவும் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட கலை வடிவங்கள் எல்லாம், காட்சி முகக் கலைகளாக உள்ளன. அவை, பல்வேறு துறைகளில் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. இன்றைய ஓவியம், சிற்பம், அச்சுப் படங்கள், நிழற்படங்கள் மற்றும் காட்சிப்படங்கள் போன்றவையும் அவற்றுள் அடங்கியனவேயாகும்.

இசை, நாடகம், திரைப்படம், நடனம், கலை நிகழ்ச்சிகள், இலக்கியங்கள் மற்றும் வடிகங்களில் காணப்படும் கலைகள் எல்லாமும், ஒரு பரந்த வரையறைக்குள் சேர்க்கப்பட்டவையே ஆகும். பதினேழாம் நூற்றாண்டுவரை கலை என்பது ஏதோ ஒரு திறமை, நிபுணத்துவமாகக் கருதப்பட்டது. கைவினைத் தொழில் அறிவியலோடு வேறுபட்டதாக இருந்தது. கலை மற்றும் அதன் வரலாறு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கலைகளின் நோக்கம் எந்த ஒரு கருத்தையும் சுருக்கமாக அல்லது அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துவதாக இருக்காது. வெவ்வேறு தனித்தனிக் காரணங்களால், தனித்துவமான தன்மைகளால் உருவாக்கப்பட்டனவாகவே உள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

தொடர் நாற்றம்

Question 1.
மூன்று நாள்கள், கல்லூரிக்கு விடுமுறை மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச்
சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். (கலவைத் தொடராக மாற்றுக)
Answer:
மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறையாதலால் மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

Question 2.
தஞ்சைக் கோவில், எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். (வினாத் தொடராக்குக)
Answer:
தஞ்சைக் கோவில் கட்டப்பட்ட கலைப்பாணி யாது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை. (செய்தித் தொடராக்குக)
Answer:
மதுரை வீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை மிக அழகானது.

Question 4.
நான், வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன். (பொருள்மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)
Answer:
நான் வாரத்தின் இறுதிநாள்களிலன்றிப் பிற நாள்களில் நூலகத்திற்குச் செல்லேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மெய்ப்பத் திருத்துநர் பணிவேண்டி, நாளிதழ் முதன்மையாசிரியருக்குக் கீழ்க்காணும் விவரங்களுடன் தன்விலக்குறிப்பு ஒன்று எழுதுக.
Answer:
பெயர், வயது, பாலினம், பிறந்தநாள், பெற்றோர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி,
அறிந்த மொழிகள், எடை, உயரம், குருதிவகை, கல்வித்தகுதி)

அனுப்புநர்
க. அன்புச்செல்வன்,
8, 82ஆவது தெரு,
கலைஞர் நகர்,
சென்னை – 600078.

பெறுநர்
ஆசிரியர்,
‘தினமலர்’ நாளிதழ்,
சென்னை – 600002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : மெய்ப்புத் திருத்துநர் பணிவேண்டி விண்ணப்பம்.

வணக்கம். நான், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழில் தட்டச்சுச் செய்வேன். பத்திரிகைகளின் மெய்ப்புத் திருத்தும் பணியையும் செய்த அனுபவம் உண்டு. பணி அளித்தால், சிறப்பாகச் செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

நன்றி.

உங்கள்,
உண்மையுள்ள,
க. அன்புச்செல்வன்.

தன்விவரக் குறிப்பு

பெயர் : க. அன்புச்செல்வன்
தந்தை : கோ. கந்தசாமி
தாயார் : சாரதாதேவி
பிறந்தநாள் : 15.07. 1999
கல்வித்தகுதி : பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி
தொழில் பயிற்சித் தகுதி : தமிழ்த் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு.
கணினி : அடிப்படைக் கணினித் தேர்வு
பட்டறிவு : இரண்டு ஆண்டுகள் சிறுபத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்தல்
முகவரி : 8, 82 ஆவது தெரு, கலைஞர் நக சென்னை – 600078.
அலைபேசி எண் : 9677074899
மின்ன ஞ்சல் முகவரி : anbuselvan08@gmailcom
அறிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு.
உயரம் : 6′
எடை : 68 கிலோ
குருதிவகை : O+

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கியநயம் பாராட்டுக

தண்டலை மயில்கள் ஆட, தாமன் விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் எங்கள் தவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பால மருதம்வீற் றிருக்கும் மாதோ. – கம்பர்

ஆசிரியர் குறிப்பு : ‘கல்வியில் பெரியவர் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் வழக்குகள், கம்பரின் கல்விப் பெருமையை விளக்கும். வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத் தேத் தழுவித் தமிழ் மரபுக்கு ஏற்ப, இக்காப்பியத்தைப் பாடியுள்ளது சிறப்பாகும். இங்குக் கம்பரின் பாட்லொன்று, நயம் பாராட்டக் கொடுக்கப்பட்டுள்ளது. இது, கம்பராமாயணத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

நயம் : மருதநிலம் தலைவன்போல் கொலுவீற்றிருக்க, மயில் ஆடுமகளாகவும், தாமரை அரும்பு விளக்காகவும், மேகமுழக்கம் மத்தள ஓசையாகவும், குவளைமலர்கள் கண்விழித்து நோக்கும் மக்களாகவும், வண்டுகளின் ரீங்காரம் மகர யாழிசையாகவும், தெளிந்த நீர்ப்பரப்பு எழினியாகவும் உருவகம் செய்துள்ளார். கம்பரின் கற்பனை வளத்திற்கு இது மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

எதுகை நயம் :
அடிதோறும் முதல்சீரில் முதலெழுத்து அளவு ஒத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து – தண்டலை, கொண்டல்கண், தெண்திரை, வண்டுகள் – அடி எதுகைத் தொடை அமைந்துள்ளது.

பாடல் அடியின் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவந்து – தண்டலை, தாமரை, தாங்க – கொண்டல், குவளை, கண் – தெண்டிரை, தேம்பிழி – சீர்மோனை அமைந்துள்ளது.

ஆட, தாங்க, ஏங்க, நோக்க, காட்ட, பாட என இனிய ஓசை தரும் சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

அணிநயம் : மருதநிலக் காட்சி, இயல்பாக உள்ளது உள்ளபடி வருணித்துக் கூறப்பட்டிருந்தாலும், புலவரின் கற்பனை இணைந்து, தற்குறிப்பேற்ற அணியை உள்ளடக்கியதாகவும் செய்யுள் திகழ்கிறது. உவமை, உருவகம், கற்பனை எனப் பலவும் நிறைந்த பாடலாக உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1
Answer:
மீனைச் சமைத்து
உண்ணக் கொடுக்காதே!
மீனைப் பிடித்துச்
சமைத்துண்ணக் கற்றுக்கொடு!
உழைத்துப் பிழைக்க வழிகாட்டியவும்
கூறிய நன்மொழி!
பிழைத்துக் கொள்வானிவன்
தூண்டிலில் சிக்கியது மீன்தானே!

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. தனிமொழி – அறிவு; …………………. – வண்ண மயில்; பொது பொழு – ………………….
Answer:
தொடர்மொழி, பலகை (பலகை / பல கை)

2. கார்காலம் – …………………. ; குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை; …………………. – மார்கழி, தை
Answer:
ஆவணி, புரட்டாசி; முன்பனிக்காலம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. எழுத்து, சொல் …………………. , யாப்பு, ………………….
Answer:
பொருள், அணி

4. எழுத்து, …………………. , சீர், தளை, …………………. , தொடை.
Answer:
அசை, அடி

5. சேரன் – வில், சோழன் – …………………. , …………………. – மீன்.
Answer:
புலி, பாண்டியன்

நிற்க அதற்குத் தக

நம் நாட்டின் பெருமைகளில் ஒன்று தொன்மைச் சின்னங்கள். அவை நம் வரலாற்றைப் பறைசாற்றுபவை. கோயில்களிலும், தொன்மையான இடங்களிலும், கல்வெட்டுகளிலும் சிலர் கிறுக்குவதை, சிதைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்முடைய பெருமையை நாமே சிதைக்கலாமா? அவற்றை அழியாமல் பாதுகாக்க, டும் என்ன செய்யப் போகிறோம்? பட்டியலிடுக.

செல்லும் இடம் கோவிலோ, தொல்லியல் சார்ந்த இடடோ, இன்றளவும் இருப்பதனால் வழிபடவும் கண்டு மகிழவும் செல்கிறோம். எனவே, அவற்றைப் பழமை சிதையாமல், நம் பிற்காலச் சந்ததியினர் காணவும் பாதுகாக்கவும் வேண்டும். சுவர்களைக் கண்டால், கீறலோ) கிறுக்கவோ கூடாது. நம் உறைவிடத்தைச் சிதைப்போமா? குப்பைகளையும் நெகிழிப்பைகளையும் போடக்கூடாது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

வீட்டை மட்டுமன்று நாம் சார்ந்துள்ள பகுதிகளையும் தூய்மையோடு வைக்கவேண்டும். நம் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் சின்னங்கள் அவை. அவற்றை அழிக்கவோ, சேதப்படுத்தவோ, நமக்கோ மற்றவர்களுக்கோ உரிமை கிடையாது. நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை! எனவே, நாம் அவற்றைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கலைச்சொல் அறிவோம்

நுண்க லைகள் – Fine Arts
தானியக் கிடங்கு – Grain Warehouse
ஆவணப்படம் – Documentary
பேரழிவு – Disaster
கல்வெட்டு – Inscription / Epigraph
தொன்மம் – Myth