Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்
Question 1.
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகளைச் சுவை குன்றாமல் தொகுத்து எழுதுக.
Answer:
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகள் :
அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களை முதன்மைப்படுத்தி, ‘இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
மொத்த மக்கள் தொகையில், சரிபாதியாக உள்ள இளைஞர்களின் துணையின்றி நாடு வளர்ச்சி பெற முடியாது என்பதை எடுத்துரைத்த நடுவர், ‘இளைஞர்தம் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது டே’ எனப் பேச எழிலை அழைத்தார்.
இளையோர் முன்னேற்றத்தில் பெரிதும் உதவுவது வீடே :
இளையோர் முன்னேற்றத்தில் முதல்படி வீடு. பிறக்கும் குழந்தைக்கு உலகை அறிமுகப்படுத்துவது வீடு. அன்பையும், அறிவையும் உணர்த்தி அடித்தளமிட்டு, வெற்றிகளைக் கட்டி எழுத உதவுவது வீடு.
“எத்தனை உயரம் இமயமலை! அதில் இன்னொரு சிகரம் உனது தலை” என த வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உணர வைப்பது வீடே! எனவே, இளையோர் முன்னேற்றத்தின் முதமும் அகமுமாக அமைவது வீடே எனத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக்கொண்டு, எழில், தன் உரையை முன்வைத்தாள்.
வீடு அன்று நாடே :
நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்து மறுத்துப் பேசவந்த அபதுல்லா, “வீடு ஒரு சிறிய கூடு! வீடு என்னும் சிறுவட்டத்தைத் தாண்டி, நாட்டில் கால் பதிக்கும் போதுதான் நல்வாழ்வு துளிர்க்கிறது.
பாரதி, வீதிக்கு வந்தே உலகைப் படித்தார்; பலதிக்க அறிமுகம் கிடைத்தது. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகளில் ஐரோப்பிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொடுக்கச் சொன்னார்.
புத்தகங்கள் வழி கல்விச்சாலைகள் உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை, நாடுதான் நமக்கு அறிமுகம் செய்கிறது’ என, தம் உரைவீச்சை முன்வைத்தார்.
நாடு அன்று வீடே! :
நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்ததாகத் தன் கருத்தோட்டத்தைக் கூறவந்த எலிசபெத், தனக்கு வீட்டினுள்ளே உலகை அறிமுகப்படுத்திய பெற்றோரைப் போற்றி உரையைத் தொடங்கினார்.
சிறு கூடு அன்று வீடு நம் பண்பாட்டையும் மரபையும் காத்து நிற்கும் கருவூலம்! எத்தேடலுக்கும் தலைவாசல்! அறிவின் நறங்கால்!
வீட்டில் கேட்ட தாலாட்டும், நுங்கு தின்றது, பனையோலைக் காற்றாடி செய்யப் பழகியது எனப் பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள், வரமான பல நெறிகளைக் கற்பித்தது வீடே என்பதை நினைவில் கொண்டு, தீர்ப்பு வழங்குமாறு எலிசபெத் தன் உரையை முடித்தாள்.
பெண்கள்க்கு விடியலைத் தந்தது பள்ளி :
விய பலுக்கான வெளிச்சமாக உரையாற்ற வருமாறு அமுதாவை நடுவர் அழைத்தார். நாட்டு நலனைப் புதிய படத்தில் வழிநடத்தக் கற்றுக்கொடுத்த முண்டாசுக் கவிஞனை வணங்கி, அமுதா தன் உரையைத் தொடங்கினாள்.
வீடு, பெண்களுக்குத் தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட கூடுதான். பள்ளிக்கு வந்தபின்தான், ‘பெண்மை வெல்க’ எனக் கூத்திட முடிந்தது. இன்று விஞ்ஞானிகளாக, கல்வியாளர்களாக, கவிஞர்களாகப் பெண்கள் கம்பீரமாக நடைபோட நாடே காரணம். நாடே இளையோரை நம்பிக்கையோடு வழிநடத்துகிறது. எதிர்காலம் வளமாகத் துணைபுரிகிறது எனத் தன் வாதங்களை முன்வைத்தாள்.
இருபக்க வாதங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்த நடுவர், “ஆண் பெண் சமத்துவச் சிந்தனை, பேதங்களைக் கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர்ந்த கருத்துகள் என, எல்லாவற்றையும் வழங்கி, முழுமையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவது நாடே!” என்று தீர்ப்பு வழங்கினார்.
கற்பவை கற்றபின்
“மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை – பணமே, கல்வியே” என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.
Answer:
ஆசிரியர் : இன்று வகுப்பறையில் எழிலன், முகிலன், நறுமுகை ஆகிய மூவரும் மனித வாழ்வை உயர்த்து வதற்குப் பெரிதும் தேவை பணமே’ என்னும் தலைப்பிலும், வேலன், முருகன், தேன்மொழி ஆகிய மூவரும் ‘மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை கல்வியே’ என்னும் தலைப்பிலும் ஒருவர் மாற்றி மற்றொருவராக வந்து சொற்போர் நிகழ்த்துவார்கள். அனைவரும் கவனமாக உற்று நோக்கி, நற்கருத்துகளை அறிய முயற்சி செய்யுங்கள்.
எழிலன் : அனைவருக்கும் வணக்கம். இன்று சொற்போருக்கான தலைப்பு அனைவரும் அறிந்ததே! நான் எதையும் சொல்லவில்லை. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று திருவள்ளுவரே சொல்லியுள்ளார். அதுமட்டுமா? “ஒரு பொருட்டாக மதிக்கத்தக்க சிறப்பு இல்லாதவனையும் பெருமதிப்பு உடையவராகச் செய்வது செல்வமே” எனவும் கூறியுள்ளார். பொருள் இல்லாமல் எவரும் உலகில் எச்செயலையும் செய்ய முடியாது. ஆகையால், வாழ்வை உயர்த்தவல்லது பொருள் செல்வமே எனக் கூறி, விடைபெறுகமறன். நன்றி.
வேலன் : எல்லாரையும் வணங்கி, என் உரையைத் தொடங்குகிறேன். காலத்தால் அழயாதது கல்விச் செல்வம். உலகில் எத்தனை எத்தனையோ செல்வர்கள், மன்னர்கள், பெருவேந்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்ந்தவரைதான், அவர்கள் செல்வத்திற்கு மதிப்பு இருந்திருக்கிறது. திருவள்ளுவரும் இளங்கோவும் செல்வம் காரணமாகவா இன்றளவும் போற்றப்படுகிறார்கள்? அவர்கள் காலத்தில் செல்வமுடையோர் வாழவே இல்லையா? அவர்கள் எங்கே? இன்றளவும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் உலகம் போற்றுகிறதல்லவா? அதனால், மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை கல்வியே’ எனக் கூறி, என் உரையை முடிக்கிறேன்.
முகிலன் : நண்பர்களே! இன்றைக்கு உலகில் பொருள் இல்லை என்றால் வாழ்வே கிடையாது என்பது, அனைவரும் அறிந்ததே. ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்பது உலக வழக்கு. ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்பதும் அனைவரும் அறிந்ததே.
நாம் உண்மைலேயே மதிப்புப் பெறவேண்டுமானால், கையில் பெரும்பொருள் இருக்க வேண்டும். பணம் பந்தியிலே’ என்பதே உண்மை எனக்கூறி, உரையை முடிக்கிறேன்.
முருகன் : உங்கள் அனைவரையும் வணங்கி என் உரையைத் தொடங்குமுகமாக ஒன்றை நினைவு படுத்துகிறேன். சில ஆண்டுகளுக்குமுன் பெரு ழை பெய்தது. எதிர்பாராத வெள்ளம், எண்ணற்ற உயிர்களைச் சூறையாடியது. உயிர் பிழைத்தவர்களில் பலர், தம் வீடுவாசல்களை இழந்தனர்; வாகனங்களைப் பறிகொடுத்தனர்; பொன்னையும் பொருளையும் வெள்ளம் கொள்ளை கொண்டது. கல்வி அறிவைப் பெறாதவர்கள், பிறரிடம் கை ஏந்தினர்.
கற்றறிந்தவர்கள், தம் கல்வியால் கௌரவமாக வாழ்வை மீட்டு எடுத்தனர். அதனால், கல்வியே மனித வாழ்வை உயர்த்த உதவும் எனக் கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.
நறுமுகை : நல்லதையே நனைப்போம் எனக் கூறி அனைவரையும் வணங்கி, என் உரையைத் தொடங்கு கிறேன். எனக்கு முன் பேயவர் வெள்ளச்சேதம் பற்றிக் கூறினார். அப்போது எத்தனையோ செல்வர்கள் பொருளுதவி செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றியதை மறக்க முடியுமா? செல்வம் என்ற ஒன்று வந்து குவிந்தால்தான் மனித வாழ்வு மதிப்புப் பெறுகிறது என்பதே உண்மை . எனவே, பொருளே மனித வாழ்வுக்கு உயர்வைத் தேடித் தரும் எனக் கூறி, என் உரையை முடிக்கிறேன். நன்றி; வணக்கம்.
தேன்மொழிய: தோழமைக்குரிய அனைவருக்கும் வணக்கம். செல்வம் தேவைதான். ஆனால் அது நிரந்தரமாக இருக்காது. கல்வி அப்படி அன்று. கற்றவரை விட்டு அதைப் பிரிக்க முடியாது. செல்வம் அப்படியா? தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் சொல்ல நாணும்’ என்பார்கள். கல்வி கற்றவர், வறுடையிலும் வளமாக வாழ்வர். அவரைத் தேடி, வளம் தானேவரும். செல்வர்களுக்குத் தம் தேசத்தில் மட்டுமே சிறப்பு உண்டு. கற்றவருக்கோ சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கும். எனவே, கல்வியாலேயே மனித வாழ்வை உயர்த்த முடியும் என்று கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.
ஆசிரியர் : இருதரப்பு வாதங்களையும் நான் கேட்டு மகிழ்ந்தேன். உங்கள் கல்வி அறிவு ஆழ்ந்து அகன்றதாக உள்ளது; மகிழ்ச்சி. தலைப்புக்கு வருவோம். செல்வமோ கல்வியோ, இரண்டுமே மனித வாழ்வுக்கு இன்றியமையாதன. அளவு அறிந்து வாழ்தல் என்பதைக் கற்றவரும் செல்வரும் கடைப்பிடிக்க வேண்டும். அளவு அறியாது செயல்பட்டால், இருவருக்குமே தீமை விளையும். நீங்கள் அனைவரும் நன்றாகக் கற்பன கற்க வேண்டும். செல்வத்தைத் தேடிச் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் எனக் கூறி முடிக்கிறேன்.
பலவுள் தெரிக
Question 1.
சரியான விடையைத் தேர்க.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” எனப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கவிஞர் வாலி
Answer:
ஆ) பாரதிதாசன்
Question 2.
“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என …………………. குறிப்பிடுகிறது.
அ) நற்றிணை
ஆ) பதிற்றுப்பத்து
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
ஈ) மணிமேகலை
Question 3.
“வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டைமதில்!
நடமாடும் கொடிமரம்நீ!” எனப் பாடியவர் ……………
அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) கம்பதாசன்
காராபாரதி
Answer:
ஈ) தாராபாரதி
Question 4.
“எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை” – இவ்வரிகளுக்கு சொந்தக்காரர் …………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) தாராபாரதி
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) தாராபாரதி
Question 5.
கல்விக் கூடங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தும் வரிகள் …………..
அ) “சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிடாய்
ஆ) “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”
இ) “தேடுகல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக்கு இரையலடுத்தல்”
ஈ) விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சாத்திரம் நானென்று கூவு
Answer:
இ, “தேதிகல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்”
Question 6.
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!” – எனப் பாடியவர்……….
அபாரதிதாசன்
ஆ) தாராபாரதி
இ) அண்ணா
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்
Question 7.
வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” எனக் கட்டளையிட்டவர் …………..
அ) பாரதியார்
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) தாராபாரதி
ஈ) அறிஞர் அண்ணா
Answer:
அ) பாரதியார்
Question 8.
“வல்லமை தாராயோ – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என, நாட்டு நலத்திற்குப் புதிய வழித்தடம் அமைத்தவர்
அ) பாரதிதாசன்
ஆ) அறிஞர் அண்ணா
இ) முண்டாசுக் கவிஞன்
ஈ) தாராபாரதி
Answer:
இ) முண்டாசுக் கவிஞன்
Question 9.
“பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்” என்று பாடியவர் ………………
அ) தாராபாரதி
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) அறிஞர் அண்ணா
ஈ) சுப்பிரமணிய பாரதி
Answer:
ஈ) சுப்பிரமணிய பாரதி
Question 10.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”
– இப்பாடலுக்குச் சொந்தக்காரர் ……………….
அ) தேசியக்கவி
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) தமிழ்த்தென்றல்
ஈ) பேரறிஞர்
Answer:
ஆ) புரட்சிக்கவிஞர்
Question 11.
“நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” எனக் கூறியவர்……………….
அ) நாவேந்தர்
ஆ) சொல்வேந்தர்
இ) பாவேந்தர்
ஈ) நாவலர்
Answer:
இ) பாவேந்தர்
Question 12.
“வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” என்று கூறியவர்……………….
அ) பாரதியார்
ஆ) பாவேந்தர்
இ) பேரறிஞர்
ஈ) நாவலா
Answer:
இ) பேரறிஞர்
Question 13.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் மேன்மையான பார்வைக்கு வழி கறியவர் ……………
அ) தொல்காப்பியர்
ஆ) திருவள்ளுவர்
இ) திருமூலர்
ஈ) கணியன் பூங்குன்றன்
Answer:
ஈ) கணியன் பூங்குன்றன்
Question 14.
“விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து பொதுவில் நடத்து”
எனக் கூறி உலகத்தை வீடாகக் காட்டியவர் …………
அ) பாரதியார்
ஆ) கண்ணதாசன் இதாராபாரதி
ஈ) புரட்சிக்கவிஞர்
Answer:
ஈ) புரட்சிக்கவிஞர்