Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்
12th History Guide இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப் போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை ?
அ) ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நீதியற்ற தன்மை
ஆ)பன்னாட்டு சங்கத்தின் தோல்வி
இ) 1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்
ஈ) காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்
Answer:
ஈ) காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்
Question 2.
கெல்லாக்- பிரையாண்ட் ஒப்பந்தம் …………. ஆண்டில் கையெழுத்தானது.
அ) 1927
ஆ) 1928
இ) 1929
ஈ) 1930
Answer:
ஆ) 1928
Question 3.
கூற்று : ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
காரணம் : பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.
அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
Question 4.
சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த ஆண்டு படையெடுத்து கைப்பற்றியது?
அ) 1931
ஆ) 1932
இ) 1933
ஈ) 1934
Answer:
அ) 1931
Question 5.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ………….. நாடு உருவாகியிருந்தது.
அ) பிரான்ஸ்
ஆ) ஸ்பெயின்
இ) ஜெர்மனி
ஈ) ஆஸ்திரியா
Answer:
இ) ஜெர்மனி
Question 6.
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் சரத்துகளின் படி ஜனவரி 1935இல் ……….. பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று முடிவானது.
அ) சூடட்டன்லாந்து
ஆ) ரைன்லாந்து
இ) சார்
ஈ) அல்சேஸ்
Answer:
இ) சார்
Question 7.
கூற்று : இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர்முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன.
காரணம் : அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி,
Answer:
ஆ) கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
Question 8.
ஜெர்மனி 1939இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ……. நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது.
அ) ஆஸ்திரியா
ஆ) இத்தாலி
இ) ரஷ்யா
ஈ) பிரிட்டன்
Answer:
இ) ரஷ்யா
Question 9.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் ………….. ஆவார்.
அ) யாமமோடோ
ஆ) ஸ்கூஸ்னிக்
இ) இரண்டாம் கெய்சர் வில்லியம்
ஈ) ஹிரோஹிடோ
Answer:
அ) யாமமோடோ
Question 10.
குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்திய கடன்-குத்தகை முறை ………… வகையில் உதவி புரிந்தது.
அ) பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்
ஆ) யூதர்களை ஹிட்லரின் படைகள் கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்
இ) தோழமை நாடுகளின் வளங்களைப் பெருக்கி, அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் வழங்குதல்
ஈ) இரண்டாம் உலகப்போரில் காயமடைந்தோருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல்
Answer:
அ) பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்
Question 11.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் …………. ஆவார்.
அ) மெக்ஆர்தர்
ஆ) ஐசன்ஹோவர்
இ) ஜெனரல் டி கால்
ஈ) ஜார்ஜ் மார்ஷல்
Answer:
இ) ஜெனரல் டி கால்
Question 12.
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை ………. போரிலாகும்.
அ) பிரிட்டன்
ஆ) குவாடல்கனல்
இ) எல் அலாமின்
ஈ) மிட்வே
Answer:
ஈ) மிட்வே
Question 13.
ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடவைச் சந்தித்தது …………. என்னுமிடத்தில் ஆகும்.
அ) போட்ஸ்டாம்
ஆ) எல் அலாமின்
இ) ஸ்டாலின்கிராட்
ஈ) மிட்வே
Answer:
இ) ஸ்டாலின்கிராட்
Question 14.
கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின் அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?
அ) கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்: அதில் வடக்குப் பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி போலந்தையும் சென்று சேரும்.
ஆ) முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்க்கப்படும்.
இ) ஜெர்மனி நான்கு தொழில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் முறையே சோவியத் நாடு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.
ஈ) ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.
Answer:
ஈ) ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.
Question 15.
கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளில் சேராத ஒன்று எது?
Answer:
அ) இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவிலிருந்த பல முடியரசுகளுக்கு மரண அடி கொடுத்தது.
ஆ) பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஒரு பொதுநல அடிப்படை கொண்ட நாட்டை உருவாக்கியது.
இ) பாசிச வாதத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை வழங்கியது.
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
Answer:
இ) பாசிச வாதத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை வழங்கியது.
Question 16.
கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?
(1) ஜெனரல் டி கால்- பிரான்ஸ்
(2) ஹேல் செலாஸி- எத்தியோப்பியா
(3) ஜெனரல் படோக்லியோ- ஜப்பான்
(4) அட்மிரல் யாம்மோடோ- இத்தாலி
அ) (1) மற்றும் (2)
ஆ) (2) மற்றும் (3)
இ) (3) மற்றும் (4)
ஈ) அனைத்தும்
Answer:
அ) (1) மற்றும் (2)
Question 17.
பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில் பங்கெடுத்தது
அ) பிரிட்டனுக்கு உதவி புரிவதற்காக
ஆ) பிரான்சுக்கென தனி செல்வாக்கின் கோளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக
இ) சமய செயல்பாடுகளுக்கு அனுமதி கோரும் பொருட்டு
ஈ) ஓபிய வணிகத்தில் ஈடுபடும் உரிமையை பிரான்ஸ் நாட்டினர் நிலைநாட்டுவதற்காக
Answer:
இ) சமய செயல்பாடுகளுக்கு அனுமதி கோரும் பொருட்டு
Question 18.
மஞ்சு வம்சத்தின் காலம் …………. ஆண்டு வரை நீடித்தது.
அ) 1908
ஆ) 1911
இ) 1912
ஈ) 1916
Answer:
ஆ) 1911
Question 19.
ஸ்பானிய-அமெரிக்கப் போர்…………. சர்ச்சையை முன்னிறுத்தி 1898ஆம் ஆண்டில் நடைபெற்றது.
அ) கியூபா
ஆ) பிலிப்பைன்ஸ்
இ) போர்டோ ரிக்கோ
ஈ) படாவியா
Answer:
ஆ) பிலிப்பைன்ஸ்
Question 20.
கூற்று : பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைந்தது.
காரணம் : அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ). கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
கெல்லாக்-பிரையாண்ட் உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புக.
Answer:
- 1928ல் கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. .
- பன்னாட்டுச் சங்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு உறுப்பினராகவில்லை என்றாலும் கூட்டத்தில் கலந்து கொண்டது.
- இவ்வுடன்படிக்கையின்படி “போரை கைவிடுவது” என்பதை தங்களின் தேசிய கொள்கையாக ஏற்க உறுதிமொழி எடுத்துக்கொண்டது.
Question 2.
பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933ஆம் ஆண்டில் ஜெர்மனி ஏன் வெளியேறியது? மார்ச் 2020
Answer:
- ஹிட்லர் பதவியேற்ற 1933ம் ஆண்டு ஜெனிவாவில் பன்னாட்டு சங்கம் ஆயுதக் குறைப்பு மாநாடு ஒன்றை நடத்தியது.
- பிரான்சிற்கு இணையாக ஜெர்மனியும் மறுஆயுதமாக்குதல் கோரிக்கை விடுத்தது.
- பிரெஞ்சுக்காரர்கள் இந்த கோரிக்கைக்கு உடன்பட மறுத்துவிட்டனர்.
- பிரான்சின் மறுப்பிற்கு பதிலடியாக ஹிட்லர் அம்மாநாட்டிலிருந்தும் பன்னாட்டு சங்கத்திலிருந்தும் ஜெர்மனியை விலக்கிக் கொண்டார்.
Question 3.
ரோம்-பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப் பின்புலமாக அமையப்பெற்றது எது?
Answer:
- முசோலினியின் எத்தியோப்பியப் படையெடுப்பை பிரிட்டனும் பிரான்சும் கண்டித்தன.
- ஹிட்லருக்கு இத்தாலியோடு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
- இதுவே ரோம்-பெர்லின் அச்சின் துவக்கமாக அமைந்தது.
Question 4.
மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
Answer:
- மூனிச் மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதம அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
- சூடட்டன்லாந்தை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம்.
- செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை போலந்திற்கும், ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
Question 5.
டங்கிர்க் வெளியேற்றம் குறித்து நீவீர் அறிவது யாது?
Answer:
- பிரெஞ்சு துருப்புகள் டங்கிர்க் கடற்கரைக்கு கடும் துப்பாக்கி முழக்கங்களுக்கிடையே விரட்டப்பட்டனர்.
- டங்கிர்க்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களே பாசிசவாதிகளுக்கு எதிராக பிரெஞ்சு அரசை நடத்திக் கொண்டிருந்த இராணுவ ஜெனரல் டி காலின் தலைமையிலான சுதந்திர பிரெஞ்சுப் படையின் கருவாக செயல்பட்டார்கள்.
- டங்கிரிக் வெளியேற்ற சம்பவம் நிகழ்ந்திருக்காவிட்டால் பிரிட்டனால் ஜெர்மனியின் நாசவேலையால் பாதிப்புகளுக்குட்பட்ட நாடுகளை மீண்டும் ஒன்று திரட்ட முடியாமலே போயிருக்கும்.
Question 6.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.
Answer:
- ஜப்பான் போல் துறைமுகம் மீது நிகழ்த்திய தாக்குதலால் அமெரிக்க மக்களின் நெஞ்சுரத்தை மார்ச் செய்வதற்கு மாறாக அவர்களை செயலில் இறங்கத் தூண்டியது.
- அதுவரை பொதுக்கருத்தின்படி போரில் தலையிடாமல் இருந்த அமெரிக்கா, ஜப்பானின் மீது போர்ப் பிரகடனம் செய்தது.
- இது முழுமையான உலகப்போருக்கு வழிவகுத்தது.
- பிரிட்டனும், சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கைகோர்த்தன.
Question 7.
அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுக.
Answer:
அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்பு கூறுகள்
- மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரதேச சீரமைப்புகள் ஏற்படுத்தலாகாது.
- அரசைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை கொண்டவர்கள் குடிமக்களே.
- அனைத்து நாடுகளுக்கும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், உலகின் பிறபகுதிகளில் – கிடைக்கும் மூலப்பொருட்களைப் பெறுவதிலும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
- தடையில்லாமல் கடல் கடந்து செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்.
- ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளை ஆயுதக்குறைப்பிற்கு உட்படுத்துதல்.
Question 8.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க. (மார்ச் 2020 )
Answer:
- முதலாம் அபினிப் போரின் இறுதியில் நான்கிங் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. பிரிட்டனுக்கு சீனாவின் கதவுகளைத் திறந்துவிட்டது.
- சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது.
Question 9.
போய்டி ஒடோமா பற்றிய குறிப்பு வரைந்து அதன் தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக.
Answer:
- கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தை வெளிப்படுத்திய முதல் நிகழ்வென்பது 1908ஆம் ஆண்டு உள்ளூர் அரசியல் சங்கமான போய்டி ஓடோமா.
- உள்ளூர் அறிஞர் பெருமக்களே நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கான வழிகாட்டும் தலைவர்களாக திகழ வேண்டும் என்பதை பறைசாற்றுவதே இச்சங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும்.
- ஜாவாவின் குடிமைப் பணியாளர்களையும் மாணவர்களையும் உள்ளடக்கிய அமைப்பான இது ஒரு கலாச்சார அமைப்பாக மாறியது.
- சற்று காலத்தில் போய்டி ஓடோமா செயலிழந்த நிலை ஏற்படவே, சரேகத் இஸ்லாம் என்ற செல்வாக்குப் பெற்ற அரசியல் சமூக அமைப்பு தோன்றியது. ஆதலால் இது தோல்வியுற்றது.
Question 10.
பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள் யாவை?
Answer:
- அமெரிக்க ஆட்சியின் ஆரம்பத்தில் முதன்மையான காலனிய நிறுவனங்கள் யாவும் தோற்றுவிக்கப்பட்டன.
- ஆங்கில வழி கல்வி முறை, தேர்வுகள் அடிப்படையில் குடிமைப்பணி, மாகாண நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறையை உருவாக்குதல்.
- தேர்தல் மூலம் நகராட்சி மற்றும் மாகாண அரசுகளை நிறுவுதல் ஆகியவையாகும்.
Question 11.
டச்சு-இந்தோனேஷிய உடன்படிக்கையின் பின் நேர்ந்த முன்னேற்றங்களை விவாதத்திற்கு விவாதிக்க.
Answer:
டச்சு இந்தோனேஷிய ஒப்பந்தம்:
- ஜாவா மற்றும் சுமத்ராவை விடுதலை பெற்ற குடியரசாக டச்சுக்காரர்கள் ஏற்றுக்கொண்டனர்.
- பிற தீவுகளை கூட்டாட்சி முறையில் இணைத்து இந்தோனேஷிய ஐக்கிய நாடு உருவாக்கப்பட்டது.
- டச்சுக்காரர்கள் இருமுறை இந்தோனேஷியாவின் அமைதியைத் தகர்க்க முயன்றனர்,
Question 12.
கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
Answer:
- கவைட் ஆயுதக்கிடங்கில் 200 பிலிப்பினோ துருப்புகள் மற்றும் ஊழியர்கள் கவைட் கிளர்ச்சியை நடத்தினர்.
- ஸ்பானியர்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கையாண்ட செயலானது தேசியவுணர்வை வளர்த்தெடுக்க பெரிதும் உதவியது.
- பிலிப்பைன்ஸ் நாட்டின் அறிவார்ந்த மக்கள் கைது செய்யப்பட்டு குறுகியகால விசாரணைக்குப் பின்னர் மூன்று குருக்கள் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டு தியாகிகளானார்கள்.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
ஸ்டாலின் கிராடை ஆக்கிரமிப்பதற்கு ஹிட்லர் ஏன் அதிக அக்கறை கொண்டார்? அது அவரின்
“வாட்டர்லூவாக” மாறிப்போனது எவ்வாறு என்பதனை சுட்டுக.
Answer:
- ஜெர்மனியின் மின்னல் வேக தாக்குதல் உலக வரலாற்றில் கடுமையான போராக இரத்தம் கொட்டிய ஸ்டாலின்கிராடில் எதிர்கொண்டது.
- ஆயுதங்களையும், டிராக்டர் வகை இழுவை எந்திரங்களையும் அதிக அளவில் தயார் செய்து
கொண்டிருந்த மிகப்பெரும் தொழில் நகரம் ஸ்டாலின்கிராட். - எண்ணெய் வளம் மிக்க காகசஸ் பகுதியையும் கைப்பற்ற எண்ணினார்.
- செல்வாக்கு கொண்ட சோவியத் தலைவரான ஜோசப் ஸ்டாலினின் பெயர் கொண்ட நகரை ஆக்கிரமிப்பது தனது பெருமையை உயர்த்தும் என்று ஹிட்லர் கருதினார்.
- ஜெர்மானிய இராணுவத்தால் நீண்ட காலத்திற்கு ஸ்டாலின்கிராடை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும், ஹிட்லர் பின்வாங்க மறுத்தார்.
- தேசிய உணர்வால் உத்வேகம் பெற்று ஓய்வில்லாமல் தாக்குதலைத் தொடுத்த ரஷ்ய படைகளின் முன் கடுங்குளிருக்கும் பசிக்கும் மரணத்துக்கும் தனது வீரர்களை ஹிட்லர் கொடுத்தார். இது இவரின் வாட்டர்லூவாக மாறிப்போனது.
Question 2.
நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டு வீசி தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு அடையாளமாக அமைந்தது – விளக்குக.
Answer:
- நேச நாடுகளின் குண்டு வீச்சு (1945 பிப்ரவரி 13-15) ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரை முற்றிலுமாக அழித்தது.
- இக்காலக்கட்ட தாக்குதல்கள் ஜெர்மனிக்கு எதிரான ‘திகிலூட்டும் குண்டுவீச்சுக்களாகவே’ அடையாளப் படுத்தப்பட்டன. இச்சமயத்தில் 6,00,000 ஜெர்மன் குடிமக்கள் கொல்லப்பட்டார்கள்.
- படிப்படியாக ஜெர்மானியப் படைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
Question 3.
ஒரு ஏகாதிபத்திய சக்தியாக ஜப்பானின் திட்டங்கள் யாவை?
Answer:
- ஜெர்மனியின் அணுகுமுறையை கிழக்கு ஆசியாவில் ஜப்பான் பின்பற்றியது.
- ஏற்கனவே தைவானையும், கொரியாவையும் காலனிகளாக உருவாக்கிக் கொண்டதோடு மஞ்சூரியாவையும் கட்டுப்படுத்தியது.
- இராணுவம் ஆட்சியை கவிழ்த்து அரசை கைப்பற்றிய 1936க்குப்பின் அதன் பேராசை நிறைந்த பார்வை டச்சு கிழக்கிந்தியப் பகுதிகள் மீதும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழிருந்த மலேயா, சிங்கப்பூர் போன்ற பகுதிகள் மீதும், இந்தோ-சீனாவில் அமையப்பெற்ற பிரெஞ்சு காலனிகள் மீதும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வசமிருந்த பிலிப்பைன்ஸ் பகுதி மீதும் விழுந்தது.
Question 4.
ஹக் கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?
Answer:
- ஹக் என்றழைக்கப்பட்ட பொதுவுடைமைவாத விவசாயிகளையும் அவர்கள் போர்க்காலத்தில் தோழர்கள் என கருதியவர்களே தாக்கினார்கள்.
- அரசின் படைகளால் ஹக்குகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதால் பர்திதோ கொமுனிஸ்டாங்க் பிலிப்பினாஸ் கொரில்லா போர் முறையை கையாண்டது.
- ஆரம்பத்தில் அதை தற்காப்பு அடிப்படையில் மட்டுமே கைக்கொண்டார்கள்.
- 1950 முதல் அக்கட்சி அதிகாரத்தை பெறும் உத்தியாக அதைப் பயன்படுத்திக் கொண்டது.
- எனினும் 1950களின் மத்தியில் பிலிப்பைன்ஸ் அரசு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவைப் பெற்று “ஹக் கிளர்ச்சியை ஒடுக்கியது.
Question 5.
இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக. (மார்ச் 2020)
Answer:
- இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவு குடியேற்றங்களின் விடுதலை ஆகும்.
- ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான குடியேற்றங்கள் விடுதலையடைந்தன.
- பல துருவ உலகம் என்ற கோட்பாடு மறைந்து இரு அணிகளாக உலக நாடுகள் பிரிந்தன.
- அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வல்லரசுகளாயின.
- இதனால் கெடுபிடிப் போர் என்ற கோட்பாட்டுப் போர் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையே தொடங்கியது.
Question 6.
சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக.
Answer:
- பாக்ஸர்கள் பெரும்பாலும் ஷாண்டுங் மாகாண விவசாயிகள்.
- ஐரோப்பியர்களின் செயல்பாடுகளும் உள்ளூர் நிர்வாகத்தில் அவர்களது குறுக்கீடுகளும் சீனர்களுக்கு வெறுப்பை தந்தது.
- 1900 ஆம் ஆண்டு இரு விளைச்சல் தோல்வியும் மஞ்சள் ஆற்றின் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை அடுத்து பாக்ஸர் கிளர்ச்சி வெடித்தது.
- இவர்களது முக்கியக் குறிக்கோள்கள் மஞ்சு வம்சத்தை முடிவிற்கு கொண்டு வருவதும் முறைகேடாக சலுகைகளை பெற்றுவந்த மேற்கத்தியர்களை சீனாவை விட்டு அப்புறப்படுத்துவதேயாகும்.
- பாக்ஸர்கள் தேவாலாயங்களையும், அயல்நாட்டினரின் வீடுகளையும் தீக்கிரையாக்கினர்.
- கிறித்துவ சமயத்தை தழுவிய சீனர்களைப் பார்த்த இடத்திலேயே கொன்று குவித்தார்கள்.
- பன்னாட்டுப் படை தாக்குதலில் ஏராளமாக பொதுமக்களும் கிறித்துவர்களும் கொல்லப்பட்டனர்.
- பாக்ஸர் கிளர்ச்சி 1901 செப்டம்பர் 7ல் பாக்ஸர் முதன்மை குறிப்போடு முடிவிற்கு வந்தது.
Question 7.
சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துகள்
Answer:
- சீனாவின் விடிவெள்ளி என போற்றப்பட்ட டாக்டர். சன்-யாட்-சென் என்பவர் கோமிங்டாங் கட்சியை ஆரம்பித்தார்.
- சீனாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
- ரஷ்யாவின் உதவியுடன் சீனாவில் சீர்திருத்தங்களை கொண்டுவர விரும்பினார்.
- 1924ல் சன்யாட் சென் மறைந்ததும் கோமின்டாங் கட்சியின் தலைமைப் பொறுப்பை சியாங்-கே ஷேக் ஏற்றார்.
- தொடக்கத்தில் கோமின்டாங் கட்சிக்கும் – கம்யூனிஸ்டுகளுக்கும் நல்லுறவு இருந்தது. ஆனால் விரைவில் எதிரிகளாயினர்.
- 1945ல் கோமிங்டாங் கட்சியினருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் ஏற்பட்டது.
- போரின் முடிவில் மாசே துங் வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசு ஏற்பட்டது.
- சியாங் கே ஷேக் தைவானுக்கு தப்பி சென்று அங்கு தேசிய சீனாவை அமைத்தார். அமெரிக்கா இதனை ஆதரித்தது.
Question 8.
இந்தோனேஷிய விடுதலைக்கு சுகர்னோ ஆற்றியப் பங்கை மதிப்பிடுக.(மார்ச் 2020)
Answer:
- சுகர்னோ இந்தோனேஷிய தேசிய கட்சியை நிறுவினார். இது மதச்சார்பற்ற வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்டது.
- ஆனால் 1931ல் இவரது தலைமை அலுவலகம் சோதனை செய்யப்பட்டது. சுகர்னோ கைது செய்யப்பட்டார்.
- டச்சுக்காரர்கள் சுகர்னோவின் ஆட்சியை அங்கீகரிக்க மறுத்தனர். அவரோ குடியரசுத் தலைவர் பதவியைத் துறக்க முன்வரவில்லை .
- டச்சு – இந்தோனேஷிய ஒப்பந்தப்படி ஜாவா, சுமத்ரா மற்றும் பிற தீவுகளை இணைத்து இந்தோனேஷிய ஐக்கிய நாடு உருவாக்கப்பட்டது.
- 1949 டிசம்பரில் இந்தோனேஷியா விடுதலை பெற்ற நாடானது.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக.
Answer:
- முதல் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது.
- பாரிஸ் அமைதி மாநாட்டுக்கு அது அழைக்கப்படவில்லை.
- கடுமையான மற்றும் அவமானகரமான உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி அதுவற்புறுத்தப்பட்டது.
- ஜெர்மனிய நிலப்பகுதிகள் பல அதனிடமிருந்து பறிக்கப்பட்டன.
- அதன் குடியேற்றங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- கடற்படை முற்றிலும் கலைக்கப்பட்டது. இராணுவ வலிமை பெரிதும் குறைக்கப்பட்டது.
- ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த வெய்மர் குடியரசு போருக்குப்பின் தோன்றிய பிரச்சனைகள் எதையும் சமாளிக்க இயலாமல் தடுமாறியது.
- ஜெர்மனிக்கு நேர்ந்த அவமானத்தை துடைத்தெறிய அதன் மக்கள் துடித்தனர்.
- எனவே இரண்டாம் உலகப்போரை பழிவாங்குவதற்கான போர் என்றே கூறலாம்.
- இரண்டாம் உலகப் போருக்கான விதைகள் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையில் ஊன்றப்பட்டிருந்தன.
Question 2.
இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.
Answer:
சார் பகுதி:
- 1935ல் சார் பகுதியில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் ஜெர்மனியுடன் இணைவதை விரும்பினர்.
- இது ஹிட்லருக்கு மனவலிமையை தந்தது.
ரைன்லாந்து:
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை மீறி 1936ல் ஹிட்லர் இப்பகுதியில் ராணுவத்தை குவித்தார்.
ஆஸ்திரியா ஜெர்மனி இணைப்பு:
- ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அதை ஜெர்மனியுடன் இணைக்க விரும்பினர்.
- 1938ல் ஆஸ்திரியா பிரதமர்ஸ்கூஸ்னிக்கை அழைத்து நாஜி கட்சியை அங்கீகரிக்க கட்டாயப்படுத்தினார்.
- வேறுவழியேதும் இல்லாத ஸ்கூஸ்னிக் உடன்படவே ஜெர்மானிய படைகள் அந்நாட்டின் மீது கட்டுப்பாட்டை நிறுவின.
சூட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:
1936ல் ஹிட்லர் செகோஸ்லாவேகியாவின் சூட்டன்லாந்தில் வசிக்கும் ஜெர்மானியர் ஒடுக்கப்படுவதாக கூறி அதை ஆக்கிரமிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
முனிச் ஒப்பந்தம்:
- பிரிட்டன் பிரான்ஸ் உடன் ஜெர்மனி செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஹிட்லர் செகோஸ்லாவேகியாவை ஆக்கிரமிக்கக் கூடாது.
- ஸ்லோவாக் மற்றும் செக் இன மக்கள் இடையே ஏற்பட்ட முரண்போக்கால் ஒப்பந்தத்தை மீறி ராணுவத்தை அங்கு அனுப்பி ஆக்கிரமித்தார்.
போலந்து படையெடுப்பு:
- 1939 செப்டம்பர் 1ல் போலந்து நாட்டில் வாழும் ஜெர்மானியரை அந்நாடு ஒடுக்குவதாக கூறி அதன் மீது படையெடுத்தார்.
- இரண்டு நாளில் போலந்தை விட்டு வெளியேறாவிட்டால் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர் . தொடுக்கும் என்ற எச்சரிக்கையை புறந்தள்ளியதால் இரண்டாம் உலகப்போர் மூண்டது.
Question 3.
சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மாசே-துங்கின் பங்களிப்பை விவரித்து எழுதுக.
Answer:
- 1918ல் பீகிங் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராக மாவோ பணி புரிந்தார். அடுத்த ஆண்டு செயல்பாட்டாளராக மாறிய மாவோ தீவிர பொதுவுடைமைவாதியாகவும் உருப்பெற்றார்.
- ஊழல் வன்முறை மலிந்த கோமிண்டாங் கட்சியினர் நகர்புறத்தில் இறுக்கமாக இருப்பதை உணர்ந்த மாவோ விவசாயகுடிகளை ஒன்று திரட்டினார்.
- காடுகளால் சூழப்பட்ட மலைப்பாங்கான பகுதிகளில் மாவோவும் தோழர்களும் 7 ஆண்டுகள் கழித்தனர்.
- கோமிண்டாங் கட்சி இவர்களை அழிக்கும் நோக்குடன் 5 படையெடுப்புகளை நிகழ்த்திடினும் அவர்களால் அம்மலைப்பகுதியை ஊடுருவ முடியவில்லை.
- மாவோவின் பலம் நாளுக்கு நாள் அதிகமானதால் பொதுவுடைமையாளர்களுக்கு யாங்கை ஷேக்கின்
தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது. - பாதுகாப்பு கருதி மாவோ ஹீனானை விட்டு அகல முடிவு செய்தார். 1934ல் பொதுவுடைமை ராணுவ நீண்ட பயணம் 1 லட்சம் பேருடன் கிளம்பியது.
- கோமிண்டாங் தாக்குதலை சமாளித்து 6000 மைல்களை கடந்து ஹேன்ஷியை அடைந்த போது – 20000 பேராக குறைந்தனர்.
- அங்கு மேலும் பொதுவுடைமை ராணுவம் இணைந்ததில் 10 மில்லியன் மக்களின் ஆட்சியாளரானார்.
Question 4.
இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டாய்ந்து எழுதுக.
Answer:
பொதுவான கூறுகள்:
- இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் இரண்டுமே ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி நாடுகளாகும்.
- இரண்டாம் உலகப்போருக்குப் பின் இந்நாடுகள் விடுதலை பெற்றன.
- இந்நாடுகளில் தேசியவாத பொதுவுடைமை கட்சிகள் தோன்றி பரவின.
- இரு நாடுகளிலும் மேலை நாட்டு கல்வி, ஐரோப்பிய கலாச்சாரம் பரவின. ஆங்கில மொழியும், ஆங்கில வழி கல்விமுறையும் புகுத்தப்பட்டது.
வேறுபட்ட கூறுகள்:
- இந்தோனேஷிய டச்சு காலனி நாடாகவும், பிலிப்பைன்ஸ் ஸ்பானிய காலனி நாடாகவும் இருந்தன.
- இரண்டாம் உலகப்போரின் போது இந்தோனேஷியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்தது. பிலிப்பைன்ஸ் அமெரிக்கா கட்டுப்பாட்டில் வந்தது.
- ஐ.நா. சபையின் நடவடிக்கையால் இந்தோனேஷியா 1948ல் விடுதலை அடைந்தது.
- அமெரிக்க வாக்குறுதியின்படி தேர்தல் நடத்தப்பட்டு பிலிப்பைன்ஸ் விடுதலை அடைந்தது.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. பேர்ல் ஹார்பர் (Pearl Harbour) மற்றும் ப்ரம் ஹியர்டு எடர்னிட்டி (From Here to Eternity) போன்ற திரைப்படங்களை மாணவர்கள் காண ஏற்பாடு செய்யலாம்.
2. ”அமெரிக்க ஐக்கிய நாடு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் மீது அணுகுண்டை வீசித்
தாக்குவது நியாயமானதுதான் என நினைத்ததா?” மாணவர்கள் விவாதிக்கலாம்.
3. உலகபுற எல்லை (World outline Map) வரைபடத்தில் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த நாடுகள், போர்
நடைபெற்ற முக்கியமான பகுதிகள் போன்றவற்றை குறிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டலாம்.
4. தளபதிகளான யுவான்ஷி காய், மெக்ஆர்தர், ஜார்ஜ் மார்ஷல், படோக்லியோ போன்றவர்களின் வரலாற்றை
மட்டுமல்லாது புரட்சிகர / தேசியவாத தலைவர்களான ஹங்க்ஹ ஸ்யு – சுவான், அகுயினால்டோ போன்றவர்களின் சரிதையையும் மாணவர்கள் அறிய முனையலாம்.
பகுதி 2 – கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
இந்தோனேஷியாவிற்கு விடுதலை அறிவிக்கப்பட்ட ஆண்டு ………..
அ) 1946
ஆ) 1947
இ) 1948
ஈ) 1949
Answer:
ஈ) 1949
Question 2.
முதல் உலகப்போரின் முடிவில் அமைதி உடன்படிக்கையின் மூலம் ஜெர்மனியிடம் கோரப்பட்ட இழப்பீட்டு தொகை……………………
அ) 7600 மில்லியன் பவுண்டுகள்
ஆ) 6000 மில்லியன் பவுண்டுகள்
இ) 6600 மில்லியன் பவுண்டுகள்
ஈ) 7000 மில்லியன் பவுண்டுகள்
Answer:
இ) 6600 மில்லியன் பவுண்டுகள்
Question 3.
கூற்று : 1918 முதல் 1933 வரையிலான காலத்தில் போரை தவிர்க்கும் எண்ணத்தோடு தொடர் மாநாடுகள் நடத்தப்பட்டது.
காரணம் : உலக நாடுகள் அனைத்தும் “போரைக் கைவிடுவது” என்பதை தங்களின் தேசிய கொள்கையாக ஏற்க உறுதிமொழி எடுத்துக் கொண்டன.
அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ)கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
Answer:
அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
Question 4.
பலவகையிலும் பாராட்டப்பட்ட 1928ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் …………
அ) வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம்
ஆ) நாஜி-சோவியத் உடன்படிக்கை
இ) கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம்
ஈ) மூனிச் ஒப்பந்தம்
Answer:
இ) கெல்லாக் – பிரையாண்ட் ஒப்பந்தம்
Question 5.
ஹிட்ல ர் பிறந்த நாடு ………….
அ) ஜெர்மனி
ஆ) ஆஸ்திரியா
இ) போலந்து
ஈ) ஹாலந்து
Answer:
ஆ) ஆஸ்திரியா
Question 6.
பிலிட்ஸ் கிரீக் என்பது ……..
அ) கடல்வழி வேக தாக்குதல்
ஆ) மின்னல் வேக வான்வழி தாக்குதல்
இ) அதிவேக தரைவழி தாக்குதல்
ஈ) இதில் எதும் இல்லை
Answer:
ஆ) மின்னல் வேக வான்வழி தாக்குதல்
Question 7.
அமெரிக்க கடற்படை தளமான பேர்ல் துறைமுகம் ஜப்பானியரால் குண்டு வீசி தாக்கிய நாள் …………………
அ) 1941 ஜூன் 22
ஆ) 1941 நவம்பர் 7
இ) 1941 டிசம்பர் 7
ஈ) 1941 டிசம்பர் 22
Answer:
இ) 1941 டிசம்பர் 7
Question 8.
ஸ்டாலின் கிராட் போர் நடைபெற்ற ஆண்டு ………..
அ) 1940
ஆ) 1942
இ) 1944
ஈ) 1946
Answer:
ஆ) 1942
Question 9.
ஜெர்மானிய படைகளிடமிருந்து பாரிஸ் விடுவிக்கப்பட்ட நாள் ……………
அ) 1942 ஆகஸ்ட் 25
ஆ) 1942 ஆகஸ்ட் 22
இ) 1944 ஆகஸ்ட் 25
ஈ) 1944 ஆகஸ்ட் 22
Answer:
இ) 1944 ஆகஸ்ட் 25
Question 10.
அமெரிக்க ஐக்கிய நாடு ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய நாள் ………
அ) 1945 ஆகஸ்ட் 6
ஆ) 1945 ஆகஸ்ட் 9
இ) 1945 ஆகஸ்ட் 16
ஈ) 1945 ஆகஸ்ட் 19
Answer:
அ) 1945 ஆகஸ்ட் 6
Question 11.
1944 ஜூன் 6ல் பிரான்சின் மீது தாக்குதல் தொடுப்பது என திட்டமிட்ட படைகள்
அ) ஜெர்மனி – இத்தாலிய கூட்டுப்படைகள்
ஆ) ஜெர்மனி – ஜப்பானிய கூட்டுப்படைகள்
இ) ஆங்கிலேய – அமெரிக்க கூட்டுப்படைகள்
ஈ) ஆங்கிலேய – பிரெஞ்சு கூட்டுப்படைகள்
Answer:
இ) ஆங்கிலேய – அமெரிக்க கூட்டுப்படைகள்
Question 12.
1949ல் ஜெர்மனிய கூட்டாட்சி குடியரசை அங்கீகரிக்க முன்வந்தது.
அ) SEATO
ஆ) GDR
இ) GATT
ஈ) NATO
Answer:
ஈ) NATO
Question 13.
தைப்பிங் கிளர்ச்சி நடைபெற்ற காலம்
அ) 1840 – 1854
ஆ) 1850 – 1864
இ) 1844 – 1852
ஈ) 1854 – 1864
Answer:
ஆ) 1850 – 1864
Question 14.
முதலாம் அபினிப் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை ……………….
அ) பெய்ஜிங் உடன்படிக்கை
ஆ) யாண்டபூ உடன்படிக்கை
இ) நான்கிங் உடன்படிக்கை
ஈ) பாரிஸ் உடன்படிக்கை
Answer:
இ) நான்கிங் உடன்படிக்கை
Question 15.
சரியான குறிப்பை எடுத்து எழுதுக
அ) சன்-யாட்-சென்னும், மா-சே-துங்கும் மஞ்சு வம்ச ஆட்சிக்கு ஆதரவாக மக்களை திரட்டினர்.
ஆ)மாவோவின் நீண்டபயணமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் சீனாவில் பொதுவுடைமை அரசு ஏற்பட வழிவகுத்தது.
இ) சீன-ஜப்பானிய போரில் சீனா வெற்றி பெற்றது.
ஈ) சீனா அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை தாக்கியது.
Answer:
ஆ) மாவோவின் நீண்டபயணமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் சீனாவில் பொதுவுடைமை அரசு ஏற்பட வழிவகுத்தது.
Question 16.
கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?
(1) மின்னல் வேக தாக்குதல் – இத்தாலி
(2) காகஸஸ் – எண்ணெய் வளம் மிக்கப்பகுதி
(3) நேச நாட்டு படைகளின் உச்ச தளபதி – அமெரிக்க ஜெனரல் ஐசன் ஹோவர்
(4) நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு – 1945 ஆகஸ்ட் 6
அ) (1) மற்றும் (2)
ஆ) (2) மற்றும் (3)
இ) (3) மற்றும் (4)
ஈ) அனைத்தும்
Answer:
ஆ) (2) மற்றும் (3)
Question 17.
பிலிப்பைன்ஸ் புரட்சியாளர்கள்
அ) கொரில்லா போர்முறையை பின்பற்றினார்கள்
ஆ) மின்னல் வேக தாக்குதல் நடத்தினார்கள்
இ) அமைதியான வழியில் போராடினார்கள்
ஈ) அமெரிக்க வழிகாட்டுதலின்படி செயல்பட்டார்கள்
Answer:
அ) கொரில்லா போர்முறையை பின்பற்றினார்கள்
Question 18.
இந்தோனேஷிய தேசிய கட்சியை நிறுவியவர் ………….
அ) கியூ சோன்
ஆ) சுகர்னோ
இ) மாவோ
ஈ) யுவான்-ஷி-காய்
Answer:
ஆ) சுகர்னோ
Question 19.
கோமின்டாங் கட்சியை உருவாக்கியவர் ……………
அ) சன்-யாட்-சென்
ஆ) மா-சே-துங்
இ) யுவான்-ஷி-காய்
ஈ) சியாங்கே-ஷேக்
Answer:
அ) சன்-யாட்- சென்
Question 20.
பிலிப்பைன்ஸ் விடுதலைப் பெற்ற நாள்
அ) 1947 ஆகஸ்ட் 15
ஆ) 1947 ஜூலை 4
இ) 1946 ஆகஸ்ட் 15
ஈ) 1946 ஜூலை 4
Answer:
ஈ) 1946 ஜூலை 4
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம் பற்றி கூறுக.
Answer:
- 1928ல் கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. *
- இவ்வுடன்படிக்கையின்படி “உலக நாடுகள் அனைத்தும் போரை கைவிடுவது” என்பதை தங்களின் தேசிய கொள்கையாக ஏற்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Question 2.
இரண்டாம் உலகப்போருக்கு உடனடி காரணம் யாது?
Answer:
- ஜெர்மனி 1933ல் பன்னாட்டுச் சங்கத்திலிருந்து விலகியது.
- முதல் உலகப்போர் இழப்பீடாக ஜெர்மன் தர வேண்டிய மிகப்பெரும் தொகையை ஹிட்லர் தர மறுத்தார்.
- 1934ல் போலந்துடன் செய்து கொண்ட ஆக்கிரமிபின்மை ஒப்பந்தத்தை மீறி ஜெர்மனி 1939 செப்டம்பர் 1ல் போலந்தை தாக்கியது.
- இதுவே இரண்டாம் உலகப்போருக்கு உடனடி காரணமாயிற்று.
Question 3.
பிளிட்ஸ் கிரீச் – குறிப்பு வரைக.
Answer:
- இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி “பிளீட்ஸ் கிரீச்” என்ற மின்னல் வேக தாக்குதல் போர் முறையை பின்பற்றி வெற்றிகளை குவித்தது.
- இப்போர் ஐரோப்பாக் கண்டத்தில் ஜெர்மனியை மிக உச்ச நிலைக்கு கொண்டு சென்றது.
Question 4.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைய காரணங்கள் யாவை?
Answer:
- இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் நேச நாடுகள் இணைந்த படைகள் பிரான்சை ஜெர்மனியிடமிருந்து விடுவித்தது.
- ஆஸ்திரியா, ருமேனியா மற்றும் ஜெர்மன் பிடியிலிருந்த நாடுகள் விடுவிக்கப்பட்டன.
- ரஷ்யாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் ஜெர்மனிப்படைகள் தோல்வியைத் தழுவின.
- 1945ம் ஆண்டிற்குள் இங்கிலாந்தும், மற்ற நேச நாடுகளும் வெற்றிக் கொடியை நாட்டின.
- 1945ம் ஆண்டு மே திங்கள் 7ம் நாள் ஜெர்மனி சரணடைந்தது.
Question 5.
ஐக்கிய நாடுகள் நிறுவனம் எப்பொழுது ஏன் தொடங்கப்பட்டது?
Answer:
- இரண்டாம் உலகப் போரினால் எண்ணற்ற ஆள் சேதம். பொருள் சேதம் ஏற்பட்டிருந்தன.
- உலக அமைதியை தொடர்ந்து நிலை நாட்டவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட பன்னாட்டுச் சங்கத்தின் குறைபாடுகளை நீக்கி செவ்வனே செயல்படவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் நாள் தொடங்கப்பட்டது.
Question 6.
தைப்பிங் கிளர்ச்சியைப் பற்றி அறிவது யாது?
Answer:
தைப்பிங் கிளர்ச்சி:
- இது ஒரு விவசாய கிளர்ச்சியாக மட்டுமே துவங்கியது.
- ஹங்ஹிஸியு-சுவான் என்பவர் இதனை புரட்சி இயக்கமாக மாற்றினார்.
- மக்களிடையே சமத்துவம், நிலத்தை சமமாக பகிர்தல், பழைய சமூக வேற்றுமைகளுக்கு முடிவுகட்டல் போன்ற கருத்துக்களை எடுத்துச் சென்றார்.
- ஆனால் தைபிங்கின் தலைமை விவசாய குடிகளின் ஏற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்தது.
- மறுசீரமைக்கப்பட்ட சீனப்பேரரசின் படைகள், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான மேஜர் கோர்டன் தலைமையில் கிளர்ச்சி ஒடுக்கியது.
Question 7.
ஆப்பிரிக்க போரில் “தளபதி ரோமனின்” பங்கு யாது?
Answer:
- 1942 – 43 ஆம் ஆண்டுகளில் தளபதி வேவல் தலைமையில் இங்கிலாந்து இத்தாலியின் பிடியிலிருந்த ஆப்பிரிக்க நாடுகளான லிபியா, சோமாலிலாந்து மற்றும் எத்தியோப்பியாவை மீட்டது.
- ஆனால் இத்தாலியின் சார்பில் போரிட்ட பாலைவன நரியான தளபதி ரோமல் ஆங்கிலப்படைகளை முறியடித்தார்.
- ஆனால் ஆங்கிலப்படைகள் மீண்டும் வேவல் தலைமையில் பதில் தாக்குதல் நடத்தி ஜெர்மனியைத் தோற்கடித்தன.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் மீறப்பட்ட முதல் செயல் எது?
Answer:
- பொது வாக்கெடுப்பின் போது ஹிட்லருக்கு சாதகமாக ஜெர்மானிய மக்களின் பெரும் ஆதரவு குவிந்தது.
- இதனால் ஊக்கமடைந்த ஹிட்லர் மார்ச், 1935இல் கட்டாய இராணுவ சேவையை வலியுறுத்தி அதன் வாயிலாக 5 லட்சம் என்ற பெரும் அளவிலான எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட இராணுவத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.
- இந்நிகழ்வே வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் மீறப்பட்ட முதல் செயலாக அமைந்தது.
Question 2.
சன்யாட் சென்கின் சித்தாந்தங்களை கூறுக.
Answer:
சன் யாட்-சென் மூன்று சித்தாந்தங்களை வலியுறுத்தினார்:
- தேசியவாதம், ஜனநாயகம், மற்றும் சோஷலிஸம்.
- சன் யாட்-சென் 1894ஆம் ஆண்டு சீன மறுமலர்ச்சி சங்கத்தை உருவாக்கி அதில் அவர்களின் பெருமைக்கு விதிவிலக்காக சீனா மீது அயல்நாடுகளால் திணிக்கப்பட்ட “சமநிலை மீறிய இரு ஒப்பந்தங்களை” சுட்டிக் காட்டினார்.
- இச்சங்கம் அதிவேகத்தில் வளர்ந்ததோடு அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தது.
- 1912ஆம் ஆண்டு தனது பெயரை கோ-மின்-டாங் என்று மாற்றிக் கொண்டது.
- இவ்வமைப்பின் உந்து சக்தியாக விளங்கிய சன் யாட்-சென் ஒரு குடியரசை விரும்பினாரேயன்றி அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட மன்னராட்சியை அல்ல.
Question 3.
மா-சே-துங்-கின் ஆரம்ப கால வாழ்க்கை முறையை கூறுக.
Answer:
- தென்-கிழக்கு சீனாவில் அமைந்த ஹுனான் பகுதியில் மாவோ பிறந்தார்.
- அவரது தந்தையார் ஒரு வசதியான விவசாயி என்பதோடு அவர் மஞ்சு அரச வழியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
- மாவோ புரட்சி நடந்த ஆண்டில் சாங்ஷாவில் இருந்த இளையோர் கல்லூரியில் சேர்ந்தார்.
- அவர் புரட்சிப் படையில் சேர்ந்தாலும் சாங்ஷாவில் அமையப் பெற்ற ஆசிரியப்பயிற்சி கல்லூரியில் சேரும் பொருட்டு அதிலிருந்து வெளியேறினார்.
- அங்கே 1918 வரை இருந்த மாவோ நூலகத்தில் நீண்ட நேரத்தினை செலவிட்டார்.
- பின்னர் பீகிங்கிற்குப் பயணப்பட்ட அவர் பீகிங் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பொறுப்பு வகித்தார்.
- அதற்கு அடுத்த ஆண்டு முழுமையான அரசியல் செயல்பாட்டாளராக மாறிய மாவோ, ஹுனானில் அமைப்பாளராக பொறுப்பேற்றதோடு தீவிர பொதுவுடைமை வாதியாகவும் உருப்பெற்றார்.
Question 4.
மாவோவின் நீண்ட பயணம் பற்றி குறிப்பு தருக.
Answer:
- 1934இல் பொதுவுடைமை இராணுவம் மேற்கொண்டதே ‘நீண்ட பயணம்’ என்றழைக்கப்படுகிறது.
- அணிவகுத்து சென்றோர் வழிநெடுகிலும் கோமின்டாங் இராணுவத்தாலும், போர்க்கிழார்களின் படைகளாலும். தோழமையற்ற பழங்குடியினர்களாலும் தொடர் துயரங்களுக்கு ஆளானார்கள்.
- கோமின்டாங் படையினரின் எந்திர துப்பாக்கியின் உக்கிரமும், காதுகளை செவிடாக்கும் ஆற்றின் சீற்றங் கொண்ட ஓசையும் நகர்ந்து கொண்டிருந்தோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
- கிளம்பி சென்ற 1,00,000 நபர்களில் 1935ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏறக்குறைய 6,000 மைல்கள் என்ற தூரத்தை கடந்து 20,000 நபர்களே வடக்கு ஷேன்ஸியை வந்தடைந்தார்கள்.
- அங்கு மேலும் பல பொதுவுடைமைவாத இராணுவங்கள் அவர்களோடு இணைந்ததில் 1937ஆம் ஆண்டு வாக்கில். மாசே-துங் 10 மில்லியன் மக்களின் ஆட்சியாளரானார்.
- ஷேன்ஸி மற்றும் கன்ஸூவில் அமைந்த கிராமங்களில் மாவோ தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குழுக்களை அமைத்து பொதுவுடைமைவாதிகள் சீனாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான
அடித்தளத்தை ஏற்படுத்தினார். –
Question 5.
அமைதி உடன்படிக்கையின் நியாயமற்ற தன்மையை ஆராய்க.
Answer:
அமைதி உடன்படிக்கையின் நியாயமற்ற தன்மை :
- முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனியின் மீது பல கடுமையான விதிமுறைகள் சுமக்கப்பட்டன.
- அதன் கட்டுப்பாட்டில் இருந்த காலனிய நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டதால் அதன் படையளவ III சுருங்கியது.
- அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் விட்டுக் கொடுக்கவும். சார் பள்ளத்த” “சிவா தற்காலிகமாகப் படைகளை நிறுத்திக் கொள்ளவும் ஜெர்மனி ஒப்புதல் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது
- தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான சைலேசியாவை போலந்திடம் ஒப்படைக்கபட்ட 12ம் கட்டாயப்படுத்தப்பட்டது.
- மேலும் செலுத்தவே இயலாத ஒரு தொகையை போர் இழப்பீடாகவும் ஜெர்மனியிடம் கோபப்பட
- இத்தகைய கூறுகள் தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக ஜெர்மனிக்குள் எண்ண அலை ஏற்படவும் அதன் பின் தொடர்ச்சியாக நாஜி கட்சியின் அரசியல் வெற்றிக்கும் வழிவகுத்தது.
- இத்தாலியும் இத்தாலிய மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட பகுதியாக கருதப்பட்ட டால்மேஷியாவை அதனிடமிருந்து பிரித்தெடுத்து புதிதாக உருவான யுகோஸ்லோவியாவிடம் ஒப்படைத்ததால் பாதிக்கப்பட்டிருந்தது.
- சிறு குடியரசாக மாற்றப்பட்ட ஆஸ்திரியா, ஜெர்மனியோடு இணைந்தால் பிரான்சு நாட்டிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அது ஜெர்மனியிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டது.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள் பற்றிய வரலாற்று ஆசிரியர்களின் பல்வேறு கருத்துக்களை ஆராய்க.
Answer:
போரின் காரணங்களை விளக்கும் வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை கூறுவதில் வேறுபட்டு நிற்கிறார்கள். முரட்டுத்தனமானதாகவும் பழிவாங்கும் நோக்குள்ளதாகவும் இருந்த வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை சிலர் சுட்டுகிறார்கள்.
அத்தகையோர் ஜெர்மனி அவ்வொப்பந்தத்தின் சரத்துகளை மாற்ற முனைந்ததனைக் கொண்டு அந்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தை கோடிட்டுக் காட்டுகிறார்கள். மற்றும் சிலர் பிரான்சும், பிரிட்டனும் கடைப்பிடித்த சமரசப் போக்கைச் சாடுகிறார்கள். வேறு சிலர் பிரிட்டனும் பிரான்சும் சோவியத் நாட்டோடு ஒப்பந்தம் ஏற்படுத்த முடியாமல் போனதைக் குறை கூறுகிறார்கள்.
இந்நாடு சோவியத் நாட்டை நம்பத் தயங்கியதோடு 1934 முதல் கூட்டுப்பாதுகாப்பை முன்னிறுத்தி அது கொடுத்த முன்மொழிவுகளுக்கு பதிலளிக்காமலும் இழுத்தடித்தன.
எனினும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் ஜெர்மனியையும் ஹிட்லரையுமே போர் ஏற்படப் பொறுப்பாகக் கருதுகிறார்கள்.
நாடு பிடிக்கும் ஆசையையும், பேரினவாத தூய்மைக் கருத்தியலையும் அடித்தளமாக அமைத்து; நேர்மையும் இரக்கமுமற்ற ஆக்கிரமிப்புக் கொள்கையை கூறுகளாக கொண்ட தேசியவாதம், 6 ஆண்டுகளுக்கு உலகப் பேரிழப்பை ஈன்ற போரை நோக்கி வழிநடத்தி சென்றதாகவும் அவர்கள்
கருதுகிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் ஹிட்லரின் போரே. அவரே திட்டமிட்டார், துவங்கினார், இறுதியாக இழக்கவும் செய்தார்’.
Question 2.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஆஸ்திரியாவின் செயல்பாடு எப்படிப்பட்டதாக இருந்தது?
Answer:
ஆஸ்திரியா:
ஆஸ்திரியாவின் தென் கரிந்தியப் பிராந்தியத்தில் ஒரு பகுதியின் மீது யுகோஸ்லோவியா உரிமை கோரியதால் சர்ச்சைகள் கிளம்பின.
இழப்பீடாக யுகோஸ்லோவியா $ 150,000,000யும் கோரியது.
ஜெர்மனியின் சொத்துக்களின் மதிப்பீடு குறித்த சர்ச்சை அதனை கணிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தால் 85 முறை கூடியும் அப்பணியை செய்து முடிக்க முடியவில்லை என்ற நிலையில் தொடர்ந்தது.
ரஷ்யாவிற்குத் தரப்பட வேண்டிய இழப்பீட்டிற்காக ஆஸ்திரியாவின் எண்ணெய் வளங்களையும், கப்பல் போக்குவரத்து வசதியையும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்து கொடுத்ததோடு, இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்ட $ 150,000,000 தொகையை ஆறு வருடங்களில் படிப்படியாக கொடுத்து முடிக்கும் வரை அதற்கு ஈடான ஜெர்மனியின் சொத்துக்களை அந்நாடு பயன்படுத்திக் கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.
ஆஸ்திரியா ஒரு சுதந்திர, இறையாண்மை கொண்ட, மக்களாட்சியைப் பின்பற்றும் நாடாக்கப்பட்டு 1938இல் ஜெர்மனியோடு வலுக்கட்டாயமாக இணைக்கப்படுவதற்கு முன்பிருந்த அதே எல்லைகளோடு மறுநிர்ணயம் செய்யப்பட்டது. தன் பங்கிற்கு ஆஸ்திரியா ஜெர்மனியோடு அரசியல் ரீதியாகவோ, பொருளாதார அடிப்படையிலோ எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என்பதற்கு உடன்பட்டது.
Question 3.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமைதி மாநாட்டின் ஜெர்மனி மீதான செயல்பாட்டினை கூறுக.
Answer:
ஜெர்மனி :
பெர்லினுக்கு அருகாமையில் அமைந்திருந்த போட்ஸ்டாமில் நடைபெற்ற மாநாட்டில் வழங்கப்பட்ட அறிவிப்பின்படி அறியப்படுவதாவது:
- கிழக்குப் பிரஷ்யாவை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தல்: வடபகுதி சோவியத்தையும், தென்பகுதி போலந்தையும் சேருவது.
- முன்பு சுதந்திரப் பகுதியாக இருந்த டாகரை போலந்து பெற்றது.
- ஜெர்மனியின் இராணுவ சக்தி முழுமையாக ஒழிக்கப்பட்டு அதனை 4 தொழில் மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றும் சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸ்
ஆகியவற்றின் கட்டுப்பாடுகளுக்குள் விட முடிவுசெய்யப்பட்டது. - இவ்வாறு போருக்கு முன்பாக இருந்த ஜெர்மனியின் பெரும் பகுதிகள் ரஷ்யாவிற்கும் போலந்திற்கும் பிரித்து வழங்கப்பட்டன.
- ரஷ்ய மண்டலத்தின் இதயமாக பெர்லின் விளங்கினாலும் நாட்டின் பிற பகுதிகள் 4 ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.
- ஜெர்மன் ஜனநாயக குடியரசு 1949 ஏப்ரலில் சோவியத் மண்டலத்தைச் சேருவதாக அறிவிக்கப்பட்டது.
- நேட்டோ ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசை அங்கீகரிக்க முன்வந்தது.
- செப்டம்பர் மாதத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசில் செயல்பாட்டுக்கு வந்தது.