Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.1 பெருமழைக்காலம் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.1 பெருமழைக்காலம்
கற்பவை கற்றபின்
Question 1.
வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ்ச் செய்திகளைத் தொகுக்க.
Answer:
கடலூர்.
2015இல் உலகையே உலுக்கிய வெள்ளம் கடலூரில். எங்குப் பார்த்தாலும் ஆடு, மாடுகள் இறந்துக்கிடக்கும் காட்சி கடலூர், தாழங்குடா, திருவந்திபுரம், நத்தம், ஞானமேடு போன்ற பகுதிகளில் குடிசை வீடுகள் தண்ணீரில் தத்தளித்தன. மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, நீர் தேங்கியதால் தொற்று நோய்கள். சிறுவர் முதியவர் இறப்பு எண்ணற்ற குடும்பங்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
2004ஆம் ஆண்டு இதே கடலூர், தேவனாம்பட்டினம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் சுனாமி ஊருக்குள் புகுந்தது. வீடுகள், மரங்கள், மீன் பிடித்தொழில் செய்வோரின் பொருள்கள், படகுகள் எல்லாம் கடலில் மூழ்கி நிலைகுலைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தை, கணவனை இழந்த மனைவி என்று அரைகுறை வாழ்க்கையை ஏற்படுத்தியது.
Question 2.
ஜூன் 5, உலகச் சுற்றுச்சூழல் நாள். இந்நாளில் பள்ளியின் கூட்டத்தில் ஏற்க வேண்டிய உறுதிமொழியை உருவாக்குக.
Answer:
- மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!! - நெகிழியைத் தவிர்ப்போம்!
மண் வளம் பாதுகாப்போம்!! - வாகனப்புகை குறைப்போம்!
வளமான வாழ்வு வாழ்வோம்!! - மழைநீர் தேங்காமல் பாதுகாப்பாகச் சேகரிப்போம்!
கொசுவை ஒழிப்போம்!! - மக்கும், மக்காக் குப்பை எனப் பிரிப்போம்!
மானிட சமுதாயம் காப்போம்!! - துணிப்பையைத் தூக்குவோம்!
துக்கமின்றி வாழ்வோம்!!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக.
Question 1.
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
அ) பருவநிலை மாற்றம்
ஆ) மணல் அள்ளுதல்
இ) பாறைகள் இல்லாமை
ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
Answer:
ஆ) மணல் அள்ளுதல்
Question 2.
“உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுபடுத்த முடியும்” – இத்தொடர் உணர்த்துவது
அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
இ) காலநிலை மாறுபடுகிறது
ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது
Answer:
அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
குறுவினா
Question 1.
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத் தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
Answer:
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற முழக்கத் தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்.
- மழைக்கு ஆதாரம் மரம்.
- உயிர்வளிக்கு உதவுவது மரம்.
- மண் அரிப்பைத் தடுக்கும் மரம்.
- மரம் தரும் நிழல் குளிர்ச்சி என்று கூறுவேன்.
Question 2.
மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான் – இரு தொடர்களாக்குக.
Answer:
- மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்.
- மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான்.
சிறுவினா
Question 1.
மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answer:
- வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும்.
- வடிகால் வசதியை மேற்கொள்ள வேண்டும்.
- இயல்பாகவே பெருமழையைத்தாங்கக்கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகளைச் சேதப்படுத்தாமல் தூர் வார்தல் வேண்டும்.
- சூறாவளி, புயல், வெள்ளம் குறித்த போதிய விழிப்புணர்வை அனைத்துப் பொதுமக்களும் பெறும் விதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.
Question 2.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.
Answer:
(i) பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23.12.2005இல் தொடங்கப்பட்டது.
(ii) புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ விபத்து. பனிப்புயல், வேறு விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும் போது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.
(iii) இக்குழுக்கள் மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி அனைத்து நிலைகளிலும் பேரிடர்க் காலங்களில் இவ்வாணையம் செயல்பட வழிவகை செய்துள்ளது.
(iv) அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
நெடுவினா
Question 1.
‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
பெருமழைக்காலம்
அயோத்திதாசர் : வணக்கம் ஐயா! நான் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பசுமைதாசர் : வணக்கம். மிக்க மகிழ்ச்சி.
அயோத்திதாசர் : நெகிழி என்றால் என்னங்க ஐயா!
பசுமைதாசர் : நெகிழி என்பது திடப்பொருள். இச்சொல்லை பிளாஸ்டிக் என்றும்
அழைப்பர். பிளாஸ்டிக்கோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் உருவானது.
அயோத்திதாசர் : நெகிழி தோன்றியதின் வரலாறு கூறமுடியுமா ஐயா.
பசுமைதாசர் : நெகிழி செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது. 1862இல் இலண்டனைச் 10. சேர்ந்த அலெக்சாண்டர் பாக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அயோத்திதாசர் : நெகிழியின் பயன்பாடுகள் பற்றிச் சில கூறுங்கள் ஐயா.
பசுமைதாசர் : பொதுவாக நெகிழி பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் தீமைகளே அதிகம்.
இன்றும் நாம் கையாளும் பொருள்கள் அனைத்திலும் நெகிழி உதவி இல்லாமல் இல்லை. காலை கண் விழித்து பல்துலக்கப் பயன்படுத்தும் பொருள் முதல், இரவு படுக்கைக்கு செல்லும் போது படுக்கும் பாய் வரை ஒவ்வொன்றும் நெகிழியால் உருவாக்கப்பட்டது.
அயோத்திதாசர் : நல்லது ஐயா! அப்ப நெகிழி இல்லாமல் நாம் இல்லை.
பசுமைதாசர் : அப்படிச் சொல்லக்கூடாது. நம்முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் நெகிழி இல்லையே!
அயோத்திதாசர் : சரிங்க ஐயா! நெகிழியால் ஏற்படும் தீமைகள் பற்றி எனக்கு விரிவாக விளக்குங்கள் ஐயா!
பசுமைதாசர் : நெகிழியைப் பயன்படுத்துவதால் மண் வளம் குன்றி தாவர இனம் அழிகிறது. தாவர இனம் அழிவதால் மழை வளம் குறைகிறது. மழை இல்லை என்றால் மனிதர் இல்லையே.
அயோத்திதாசர் : மேலும் அறிந்து கொள்ள விழைகிறேன் ஐயா!
பசுமைதாசர் : உறுதியாகச் சொல்கிறேன்!
நீர் செல்லும் கால்வாய்களில் நெகிழி அடைக்கப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நெகிழியை எரிப்பதால் டையாசீன் என்ற நச்சு வெளிப்பட்டு பல்வேறு நோய்கள் உருவாகிறது. சூடான பொருள்கள் நெகிழிப் பைகளில் வாங்கி உண்பதால் புற்றுநோய் உருவாகிறது. அவற்றைச் சில விலங்குகள் உண்ணுவதால் அவைகளும் மடிகின்றன.
அயோத்திதாசர் : நன்றிங்க ஐயா!
பசுமைதாசர் : துணிப்பை எளிதானது
தூர எறிந்தால் எருவாகும்…..
நெகிழிப் பை அழகானது.
தூர எறிந்தால் விட(ஷ)மாகும்…..
என்பதற்கு ஏற்ப நாம் நெகிழியைப் பயன்படுத்துவதைச் சிறிது சிறிதாக குறைப்போம்.
மண் வளம் காப்போம்!
மரம் நடுவோம்!
வாழ்க வளமுடன்! நன்றி!
மழை வளம் பெருக்குவோம்!
மனித குலம் தழைப்போம்!
அயோத்திதாசர் : நன்றி!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்தன் விளவுை எதற்குக் காரணமாயிற்று
அ) பருவநிலை மாற்றம்
ஆ) உடல்நிலை மாற்றம்
இ) மண்ணின் மாற்றம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) பருவநிலை மாற்றம்
Question 2.
உலகப்புவி நாள்
அ) ஏப்ரல் 21
ஆ) ஏப்ரல் 22
இ) ஜூன் 21
ஈ) ஜூலை 22
Answer:
ஆ) ஏப்ரல் 22
Question 3.
‘மாமழை போற்றுதும்’ – என்ற பாடல் வரியைக் கூறியவர்
அ) திருவள்ளுவர்
ஆ) கம்ப ர்
இ) ஒளவையார்
ஈ) இளங்கோவடிகள்
Answer:
ஈ) இளங்கோவடிகள்
Question 4.
‘நீரின்றி அமையாது உலகு’ – என்னும் பாடல் வரியைப் பாடியவர்
அ) கம்பர்
ஆ) திருவள்ளுவர்
இ) நக்கீரர்
ஈ) ஔவையார்
Answer:
ஆ) திருவள்ளுவர்
Question 5.
நம் நாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது?
அ) 4
ஆ) 6
இ) 3
ஈ) 5
Answer:
ஈ) 5
Question 6.
2005-ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் பெய்த மழையளவு
அ) 994 செ.மீ
ஆ) 994 மி.மீ
இ) 995 மி.மீ
ஈ) 995 செ.மீ.
Answer:
ஆ) 994 மி.மீ
Question 7.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ‘லே’ பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பெய்த ஆண்டு
அ) 2010
ஆ) 2008
இ) 2005
ஈ) 2011
Answer:
அ) 2010
Question 8.
‘ஒக்கி’ என்பதன் தமிழ்ச்சொல்
அ) வாயு
ஆ) காற்று
இ) கண்
ஈ) வாய்
Answer:
இ) கண்
Question 9.
புயலைக் குறித்த பெயர்களைப் பரிந்துரைச் செய்துள்ள ‘சார்க்’ அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை
அ) 8
ஆ) 4
இ) 64
ஈ) 7
Answer:
அ) 8
Question 10.
“புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே” – என்றவர்
அ) டேவிட் கிங்
ஆ) ஜான் டேவிட்
இ) ஜான் மார்ஷல்
ஈ) ஹென்றி
Answer:
அ) டேவிட் கிங்
Question 11.
ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை ஐக்கிய நாடுகள் உருவாக்கிய ஆண்டு
அ) 1972
ஆ) 1892
இ) 2002
ஈ) 1992
Answer:
ஈ) 1992
Question 12.
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் அறிவித்த ஆண்டு
அ) 2008
ஆ) 2009
இ) 2007
ஈ) 2018
Answer:
ஆ) 2009
Question 13.
உலகில் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்?
அ) 40.5
ஆ) 40.9
இ) 40
ஈ) 40.8
Answer:
இ) 40
Question 14.
நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைப்பதில் இதன் பங்கு இன்றியமையாதது
அ) கிணறு
ஆ) ஊற்று
இ) மணல்
ஈ) பாறை
Answer:
இ) மணல்
Question 15.
நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு
அ) 2005 டிசம்பர் 24
ஆ) 2005 டிசம்பர் 23
இ) 2005 நவம்பர் 23
ஈ) 2005 ஜூலை 23
Answer:
ஆ) 2005 டிசம்பர் 23
Question 16.
ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
அ) டெல்லி
ஆ) குஜராத்
இ) மும்பை
ஈ) கொல்கத்தா
Answer:
ஆ) குஜராத்
Question 17.
உலகச் சுற்றுச்சூழல் நாள்
அ) ஜுன் 5
ஆ) ஜுலை 5
இ) ஏப்ரல் 14
ஈ) மே 5
Answer:
அ) ஜுன் 5
Question 18.
கூற்று 1 : இயற்கையானது சமநிலையோடு இருந்தால்தான், அந்தந்தப் பருவநிலைக்கேற்ற நிகழ்வுகள் நடக்கும்.
கூற்று 2 : உபரிநீர் கால்வாய்களும் வெள்ளச்சமவெளிகளும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அற்றவை.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு
Question 19.
கூற்று 1 : வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளை அழித்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களை மனிதன் அமைத்துள்ளான்.
கூற்று 2 : மணல் அள்ளியதன் விளைவாக வெள்ளச் சமவெளிகள் அழிகின்றன.
அ) கூற்று 1 தவறு, 2 சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி
Question 20.
கூற்று 1 : வெள்ளப்பெருக்குக் காலங்களில் மட்டுமே நம் நாட்டில் மாற்று ஏற்பாடுகளைச் செய்கிறோம்.
கூற்று 2 : வெள்ளம் வடிந்த பிறகு வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைத் திட்டமிடவும் தவறுகின்றோம்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று இரண்டும் சரி
Question 21.
சரியானதைத் தேர்க.
அ) மாமழை போற்றதும் – திருவள்ளுவர்
ஆ) மாரியல்லது காரியமில்லை – முன்னோர் மொழி
இ) நீரின்றி அமையாது உலகு – பழமொழி
ஈ) மும்பை – வறட்சி
Answer:
ஆ) மாரியல்லது காரியமில்லை – முன்னோர் மொழி
Question 22.
சரியானதைத் தேர்க.
அ) மும்பை – 994 செ.மீ. மழை
ஆ) ‘லே’ – 250 செ.மீ. மழை
இ) மீத்தேன் – பசுமைக்குடில் வாயு
ஈ) 2009ஆம் ஆண்டு – மிக வெப்ப ஆண்டு
Answer:
இ) மீத்தேன் – பசுமைக்குடில் வாயு
Question 23.
சரியானதைத் தேர்க.
அ) நாற்பது விழுக்காடு – மணல் பற்றாக்குறை
ஆ) எண்பத்து ஐந்து விழுக்காடு – வெள்ளப்பெருக்கால் பேரிடர்
இ) ஜுன் 5 – உலக வன உயிரின நாள்
ஈ) உலகப் புவி நாள் – ஏப்ரல் 22
Answer:
ஆ) எண்பத்து ஐந்து விழுக்காடு – வெள்ளப்பெருக்கால் பேரிடர்
Question 24.
பொருத்துக.
அ) ஹைட்ரஜன் ஆண்டு – 1. மிகவும் வெப்பமான ஆண்டு
ஆ) ரஷ்யா – – 2. கார்பன் அற்ற ஆற்றல்
இ) 2009ஆம் ஆண்டு – 3. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஈ) 2005 டிசம்பர் 23 – – 4. பசுமைக்குடில் வாயு
அ) 2, 3, 4, 1
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3
Question 25.
உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, ……………. இன்றியமையாதது.
அ) நெசவுக்கும்
ஆ) உழவுக்கும்
இ) கடலுக்கும்
ஈ) மலைக்கும்
Answer:
ஆ) உழவுக்கும்
Question 26.
வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் எட்டு நாடுகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) இலங்கை
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) நேபாளம்
Answer:
ஈ) நேபாளம்
Question 27.
வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க எட்டு நாடுகள் வழங்கியுள்ள பட்டியலில் உள்ள பெயர்களின் எண்ணிக்கை
அ) 36
ஆ) 64
இ) 96
ஈ) 180
Answer:
ஆ) 64
Question 28.
கதிரவனைச் சுற்றியுள்ள கோள்களில் ………….. மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
அ) சந்திரனில்
ஆ) வியாழனில்
இ) புதனில்
ஈ) புவியில்
Answer:
ஈ) புவியில்
Question 29.
புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல் என்று கூறிய இங்கிலாந்தின் அறிவியல் கருத்தாளர்
அ) டேவிட் ஷெப்பர்டு
ஆ) டேவிட் கிங்
இ) நைட் ஜான்
ஈ) வில்லியம் ஹென்றி
Answer:
ஆ) டேவிட் கிங்
Question 30.
ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளது?
அ) 2
ஆ) 4
இ) 20
ஈ) 40
Answer:
ஆ) 4
Question 31.
பசுமைக்குடில் வாயுக்களில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) கார்பன் டை ஆக்ஸைடு
ஆ) மீத்தேன்
இ) நைட்ரஸ் ஆக்ஸைடு
ஈ) ஹைட்ரஜன்
Answer:
ஈ) ஹைட்ரஜன்
Question 32.
மாற்று ஆற்றல்களாக விளங்கக்கூடியவற்றைக் கண்டறிக.
i) சூரிய ஆற்றல்
ii) காற்று ஆற்றல்
iii) ஹைட்ரஜன் ஆற்றல்
iv) தாவர ஆற்றல்
அ) i), ii) சரி
ஆ) ii), iv) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி
Question 33.
ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய இடம்
அ) நியூயார்க்
ஆ) ஹைத்தீ
இ) ரியோடிஜெனிரோ
ஈ) ஹாமில்டன்
Answer:
இ) ரியோடிஜெனிரோ
Question 34.
சரியான விடையைக் கண்டறிக.
i) ஐ.நா. அவை 1992ஆம் ஆண்டு உருவாக்கிய காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியபோது தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
ii) பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி
Question 35.
பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நாடுகளைக் கண்ட றிக.
i) சீனா
iii) இரஷ்யா
iii) அமெரிக்கா
iv) ஜப்பான்
அ) i), ii) சரி
ஆ) iii), iv) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி
Question 36.
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வுத் துறையினர் அறிவித்த ஆண்டு
அ) 2006
ஆ) 2008
இ) 2009
ஈ) 2011
Answer:
இ) 2009
Question 37.
………….. ஆம் ஆண்டிற்குப் பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகிறது.
அ) 2000
ஆ) 2001
இ) 2004
ஈ) 2006
Answer:
ஆ) 2001
Question 38.
புவியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் ………….. கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்.
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 250
Answer:
ஆ) 200
Question 39.
உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் ………….. விழுக்காடு மக்கள் தண்ணீ ர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள்.
அ) 30
ஆ) 40
இ) 45
ஈ) 50
Answer:
ஆ) 40
Question 40.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% …………. ஏற்பட்டவையே.
அ) வெள்ளப்பெருக்கினால்
ஆ) நிலநடுக்கத்தால்
இ) போரினால்
ஈ) கவனக்குறைவால்
Answer:
அ) வெள்ளப்பெருக்கினால்
Question 41.
சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.
i) தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, ஏறத்தாழ ஐம்பதாயிரம் நீர்நிலைகள் இருந்தன.
ii) தற்போது தமிழகத்தில் நீர்நிலைகள் இருபதாயிரமாகக் குறைந்துள்ளன.
iii) சென்னை , மதுரை ஆகிய மாநகரங்களைச் சுற்றி மட்டுமே ஏறத்தாழ ஐந்நூறு ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன.
அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி
Question 42.
நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் …………. பங்கு இன்றியமையாதது.
அ) வண்டல் மண்ணின்
ஆ) கரிசல் மண்ணின்
இ) செம்மண்ணின்
ஈ) மணலின்
Answer:
ஈ) மணலின்
குறுவினா
Question 1.
இயற்கைச் சமநிலை என்றால் என்ன?
Answer:
மழைப்பொழிவு மூலமாக மண்பரப்பில் நீர் நிறைந்து தாவர உயிரினங்களும், விலங்கினங்களும் தோன்றின. இவ்வாறு சார்ந்து வாழும் இந்த உயிரினங்கள் அனைத்தும் ஒருகுழுவாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இவற்றிற்கான உணவுச் சங்கிலியே இயற்கைச் சமநிலை எனப்படும்.
Question 2.
சார்க் அமைப்பில் இருக்கும் நாடுகள் யாவை?
Answer:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து.
Question 3.
கார்பன் அற்ற ஆற்றல்கள் யாவை?
Answer:
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல், தாவர ஆற்றல் போன்றவை கார்பன் அற்ற ஆற்றல்கள் எனப்படும்.
Question 4.
பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகள் யாவை?
Answer:
குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால், வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகள் போன்றவையே பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகளாகும்.
Question 5.
தேசிய பேரிடர் ஆணையம் எந்தெந்த நிலைகளில் குழுக்களை அமைத்துள்ளன?
Answer:
மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குழுக்களை அமைத்துள்ளன.
Question 6.
குஜராத் விஞ்ஞானிகளின் மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கார்மேகங்கள் சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர்ப்புயல், காற்றின்திசை, இடி, மின்னல், பலமான காற்று, வானவில், முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள், பறக்கும் பருந்து, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம், வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம் முதலியவைகளே மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குஜராத் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
Question 7.
எவற்றையெல்லாம் பசுமைக்குடில் வாயுக்கள் என்கின்றோம்?
Answer:
கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், நீர்வாயு போன்றவைகளைப் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறோம்.
Question 8.
மழையின் சிறப்பினை எடுத்துரைக்கும் இலக்கியத் தொடர்கள் முதுமொழிகள் சிலவற்றைச் சான்றாகத் தருக.
Answer:
- மாமழை போற்றுதும்
- நீரின்றி அமையாது உலகு
- மாரியல்லது காரியமில்லை
Question 9.
ஆற்றில் மணல் அள்ளுவதால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் யாது?
Answer:
கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டவையே ஆகும். இதற்கு முதன்மையாகக் காரணமாக அமைவது ஆற்றல் மணல் அள்ளுவதே ஆகும்.
சிறுவினா
Question 1.
வெள்ளச் சமவெளி என்றால் என்ன? அதன் பயன் யாது?
Answer:
வெள்ளச்சமவெளி : வெள்ளச்சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரணாகும்.
வெள்ளச்சமவெளியின் பயன் :
- ஆற்றின் ஓரங்களில் படியும் பொருள்களை ஆற்றங்கரைப் படிவு என்பர்.
- படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
- அப்படிவம் வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும்.
- நீர் மாசடைவதைத் தடுக்கும்; வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிட்டால் பாதுகாக்கும்.
- உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் பயன் அடையும்.
Question 2.
பேரிடர் வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டியவை யாவை ?
Answer:
- பதற்றமடைதலை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
- வானிலை ஆராய்ச்சி மையங்கள் வெளியிடும் புயல், மழை தொடர்பான காலங்களின் அடிப்படையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
- வதந்திகளை நம்பவோ, பிறரிடம் பரப்பவோ கூடாது,
- தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றின் உதவியுடன் : மீட்புப் பணியை மேற்கொள்ளுதல் வேண்டும்.
- பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக ஈடுபட வேண்டும்.
- பாதுகாப்பு மையங்கள், மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றை மிக அருகிலே வைத்திருத்தல் வேண்டும்.