Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.6 திருக்குறள்
கற்பவை கற்றபின்
Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
இ) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.
Answer:
இ) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.
Question 2.
கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
இ) திணையளவு செய்த உதவி
Answer:
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
Question 3.
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்.
Answer:
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
Question 4.
கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் தேர்ந்தெடுக்க.
உயர் அலுவலரின் வருகை
அலுவலகமே அல்லாடும்
அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே
கோப்புகளை விரைந்து முடிக்க
ஒழுங்கு செய்ய
நேரத்தில் இருக்க வேண்டும்
விரைகிறது மனம்
பரபரப்பும் மனவழுத்தமுமாய்
வண்டியை எடுக்கிறேன்
காலைக் கட்டிக் கொள்கிறது குழந்தை
‘போ அந்தப் பக்கம்’
உதறிச் செல்கிறேன் குழந்தையை.
Answer:
செல் இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
Question 5.
இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
அன்பும் அறமும் – எண்ணும்மை
நன்கலம் – பண்புத் தொகை
மறத்தல் – தொழிற் பெயர்
உலகு – இடவாகு பெயர்
Question 6.
பொருள் கூறுக.
Answer:
வெகுளி – கோபம்
புணை – தெப்பம்
ஏமம் – பாதுகாப்பு
திரு – செல்வம்
Question 7.
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) செய்ந்நன்றி
Answer:
அ) செய்யாமல் செய்த உதவி
Question 8.
பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.
Answer:
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.
Question 9.
செல்லிடத்து – புணர்ச்சி விதி கூறுக.
Answer:
செல்லிடத்து = செல் + இடத்து
- ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி, செல் + ல் + இடத்து என்றாகியது.
- உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவதே இயல்பு என்ற விதிப்படி, ல் + இ = L = செல்லிடத்து என்று புணர்ந்தது.
Question 10.
பொருத்திக் காட்டுக.
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த நன்றி – 4. நன்மை கடலின் பெரிது
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஆ) 3, 4, 1, 2
குறுவினா
Question 1.
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Answer:
அறத்தின் வழியாக இல்லற வாழ்க்கை வாழ்பவர் முயல்வருள் எல்லாம் தலையானவர்.
Question 2.
ஞாலத்தின் பெரியது எது?
Answer:
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அஃது உலகைவிடப் பெரியதாகும்.
Question 3.
மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை ?
Answer:
- ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.
- ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.
- மறக்க கூடாதது – நன்மை ; மறக்கக்கூடியது – தீமை.
Question 4.
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
Answer:
ஒருவரிடம் இருக்கும் செல்வம் குறையாமலிருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.
Question 5.
சினத்தை ஏன் காக்க வேண்டும் ?
Answer:
சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.
சிறுவினா
Question 1.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல்நிறை அணியாகும்.
அணி இலக்கணம் :
ஒரு செய்யுளின் முதலில் சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறையாகும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல் நிறை அணியாகும்.
பொருள் :
இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.
அணிப்பொருத்தம் :
இக்குறட்பாவில் அன்பு, அறன் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இக்திருக்குறள் ‘நிரல் நிறை அணிக்குப் பொருத்தமாயிற்று.
அன்பு – பண்பு ; அறன் – பயன் என்று நிரல்பட உள்ளது.
Question 2.
இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
Answer:
(i) ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியும், அறச்செயல்கள் செய்தும் வாழும் இல்லற வாழ்வைப் பெறுவான் என்றால், அவன் இல்வாழ்க்கை அன்பினால் உருவான நல்ல பண் பையும், அறச் செயலினால் உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும் அடைவான்.
(ii) அறத்தின் இயல்போடு இல்லற வாழ்க்கையை வாழ்பவன் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலைசிறந்தவன் ஆவான்.
(iii) உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் வானுலகத்தில் உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார்.
Question 3.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள் வழி விளக்குக.
Answer:
- இந்நில உலகம், வானகம், கடல், பனை இவைகளை விடவும் நன்றி உயர்ந்தது.
- நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
- ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகை விடப் பெரியதாகும்.
- மறுபலனை எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.
- ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியை பனையளவாகக் கொள்வர்.
Question 4.
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
Answer:
- நமக்கு ஏற்படும் தீமையான விளைவுகள் அனைத்தும் நாம் கொள்ளும் சினத்தால் வரும். அதனால், நாம் யாரிடமும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும்.
- சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தில் அருளைக் கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொள்ளும்.
- சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.
- சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவருடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும்.
Question 5.
கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
Answer:
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகின்றது.
அணி இலக்கணம் :
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாகும்.
விளக்கம் :
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனைச் சேர்ந்த சுற்றத்தாரையும் சேர்த்து அழிந்துவிடும். தன்னைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம், நம்மை மட்டுமில்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இனமென்னும் தெப்பத்தை அழித்துவிடும்.
அணிப்பொருத்தம் :
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.
நெடுவினா
Question 1.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக.
Answer:
விண் மண் :
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது”
நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
உலகம் :
“காலத்தி னால்செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அது உலகத்தின் அளவை விடப் பெரியதாகும்.
கடல் :
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”
எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
பனை :
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”
ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியைப் பனையளவாகக் கொள்வர்.
வாழ வழி :
“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். தப்பிக்க முடியாது.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கும் வழியே கிடையாது.
எனவே, செய்ந்நன்றியறிதலே சிறந்த அறம் என்பதனை வள்ளும் உணர்த்துகின்றது.
Question 2.
சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும். இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
Answer:
சினமானது அருள் உள்ளத்தை அழித்து மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். சினத்தைக் காத்தால் வாழ்வு மேன்மையடையும் சினத்தைக் காப்பான்.
சினம் செல்லுமிடம் :
“செல் இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?”
தன் சினம் செல்லுபடியாகும் தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாவான்.
மறத்தல் நன்று :
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்”
ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிடுவது நன்மையாகும்.
சினம் எனும் பகை :
“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோப் பிற?”
சினம் எனும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.
தன்னைக்காக்க சினம் தவிர் :
“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்”
சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும். எனவே, தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.
சுற்றம் பேண சினத்தைத் தவிர் :
“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையச் சுடும்”
சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவனுடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும். எனவே, சினத்தைக் காத்தோமென்றால், எளியவரோடு பகை மேற்கொள்ளமாட்டோம்; யாரிடத்தும் சினம் கொள்ள மாட்டோம்; முகமலர்ச்சியும், அகமகிழ்ச்சியும் அதிகமாகும்; தன்னையே காத்துக் கொள்வோம்; சுற்றத்தையும் காப்பாற்றுவோம். இதனால் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது.
இலக்கணக் குறிப்பு
பண்பும் பயனும் – எண்ணும்மை
வாழ்பவன் – வினையாலணையும் பெயர்
அரிது, பெரிது – ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
தூக்கின் – எதிர்கால வினையெச்சம்
தூக்காச் – முற்றெச்சம்
கொள்வர், தெரிவர் – வினையாலணையும் பெயர்
கொன்ற – பெயரெச்சம்
பிறத்தல் – தொழிற்பெயர்
புணர்ச்சி விதி
1. தினைத்துணை = தினை + துணை
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி, தினைத்துணை என்று புணர்ந்தது.
2. நன்றல்லது + நன்று + அல்லது
- ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி. நன்ற் + அல்லது என்றானது
- உடல்மேல் உயர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ற் + அ = ற) நன்றல்லது’ என்று புணர்ந்தது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
திருக்குறள் என்பது
அ) ஆகுபெயர்
ஆ) கருவியாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்
Answer:
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்
Question 2.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) ஜி.யு.போப்
இ) கால்டுவெல்
ஈ) சார்லஸ் வில்கினிஸ்
Answer:
அ) வீரமாமுனிவர்
Question 3.
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
அ) 1912
ஆ) 1712
இ) 1612
ஈ) 1812
Answer:
ஈ) 1812
Question 4.
அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 380
ஆ) 700
இ) 250
ஈ) 133
Answer:
அ) 380
Question 5.
இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 9
Answer:
இ) 2
Question 6.
திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள்
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 9
Answer:
ஈ) 9
Question 7.
அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் அமைந்துள்ள பிரிவு
அ) இன்பத்துப்பால்
ஆ) பொருள் பால்
இ) அறத்துப்பால்
ஈ) காமத்துப்பால்
Answer:
ஆ) பொருள் பால்
Question 8.
இல்லறவியலில் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 130
ஆ) 200
இ) 133
ஈ) 250
Answer:
ஆ) 200
Question 9.
கற்பியல், களவியல் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 18, 07
ஆ) 07, 18
இ) 09, 16
ஈ) 16, 09
Answer:
ஆ) 07, 18
Question 10.
ஊழியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 08
ஆ) 13
இ) 01
ஈ) 04
Answer:
இ) 01
Question 11.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை ‘ – ‘அன்பும் அறனும்’ இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) எண்ணும்மை
இ) உவமைத்தொகை
ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Answer:
ஆ) எண்ணும்மை
Question 12.
‘செய்த’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) செய்து + அ
ஆ) செய்+த்(ந்)+த்+அ
இ) செய் + து
ஈ) செய் + த் + அ
Answer:
ஈ) செய் + த் + அ
Question 13.
‘நன்றல்லது’ இச்சொல்லிற்கு உரிய சரியான புணர்ச்சி விதிகள்
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ) ஈறுபோதல், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Answer:
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Question 14.
‘மறத்தல் வெகுளியை யார்மாட்டும்’ – ‘மறத்தல்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உவமையாகு பெயர்
ஆ) வினைமுற்று
இ) தொழிற்பெயர்
ஈ) பண்புப்பெயர்
Answer:
இ) தொழிற்பெயர்
Question 15.
‘கொன்ற’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கொன் + ற் + அ
ஆ) கொன்று + அ
இ) கொன் + ற் + உ
ஈ) கொல்(ன்) + ற் + அ
Answer:
ஈ) கொல்(ன்) + ற் + அ
Question 16.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்
அ) உலகத்தார்
ஆ) பனைத்துணை
இ) கொல்லாது
ஈ) காப்பால்
Answer:
ஆ) பனைத்துணை
Question 17.
‘நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது’ – ‘நன்றி மறப்பது’ – இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம்
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
இ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
ஈ) பெயரெச்சம்
Answer:
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
Question 18.
கூற்று 1 : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லது.
கூற்று 2 : ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வு இல்லை.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Question 19.
கூற்று : சினத்தை விட நமக்கு வேறு பகை இல்லை.
காரணம் : அது நம் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொன்றுவிடும்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி காரணம் சரி
Question 20.
கூற்று 1 : மெலியவரிடத்தில் சினம் கொள்ளாமல் காப்பவரே சினம் காப்பவர்.
கூற்று 2 : புலால் உண்ணவில்லை என்றால் வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்கமாட்டார்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி
Question 21.
கூற்று 1 : ஒருவர் செய்த தீமையை அப்பொழுது மறந்துவிடுவது நல்லதன்று.
கூற்று 2 : உரிய காலத்தில் செய்யும் சிறிய உதவி உலகத்தைவிடப் பெரியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
Question 22.
கூற்று : ஒருவன் தன்னைக் காக்க சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டாம்.
காரணம் : சினம் காக்கவிட்டால் தன்னையே அழித்துவிடும்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று சரி, காரணம் சரி.
ஈ) கூற்று வறு, காரணம் தவறு.
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
Question 23.
சரியானதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த தீமையை மறக்கக் கூடாது.
ஆ) உரிய காலத்தில் செய்த உதவி பனையளவு பெரியது.
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
ஈ) இயல்பான அறிவு எப்போதும் வெளிப்படாது.
Answer:
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
Question 24.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
அ) இல்வாழ்க்கை – 26-ஆம் அதிகாரம்
ஆ) புலால் மறுத்தல் – 38-ஆம் அதிகாரம்
இ) ஊழ் – 05-ஆம் அதிகாரம்
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்
Answer:
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்
Question 25.
சரியானதைத் தேர்க.
அ) பாயிரவியல் – 20 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 01 அதிகாரம்
இ) துறவறவியல் – 13 அதிகாரம்
ஈ) ஊழியல் – 04 அதிகாரம்
Answer:
இ) துறவறவியல் – 13 அதிகாரம்
Question 26.
பொருந்தாதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வே இல்லை.
ஆ) ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறந்துவிடுவது நல்லது அன்று.
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
ஈ) அறத்தின் இயல்புடன் வாழ்பவர் முயற்சி உடையவரை விட மேம்பட்டவர்.
Answer:
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
Question 27.
பொருத்துக.
அ) அரசவியல் – 1) 13 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 25 அதிகாரம்
இ) ஒழிபியல் – 3) 20 அதிகாரம்
ஈ) கற்பியல் – 4) 18 அதிகாரம்
அ) 2, 4, 3, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 1, 4
Question 28.
பொருத்துக.
அ) 11-ஆம் அதிகாரம் – 1. வெகுளாமை
ஆ) 31-ஆம் அதிகாரம் – 2. வெஃகாமை
இ) 18-ஆம் அதிகாரம் – 3. புலால் மறுத்தல்
ஈ) 26-ஆம் அதிகாரம் – 4. செய்ந்நன்றி அறிதல்
அ) 4, 1, 3, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
ஈ) 4, 1, 2, 3
Question 29.
பொருத்திக் காட்டுக.
அ) அறத்துப்பால் – 1) 70
ஆ) பொருட்பால் – – 2) 38
இ) இன்பத்துப்பால் – 3) 25
அ) 2, 1, 3
ஆ) 3, 2, 1
இ) 1, 2, 3
ஈ) 2, 3,1
Answer:
அ) 2, 1, 3
Question 30.
பொருத்திக் காட்டுக.
அ) அறத்துப்பால் – 1) 3 இயல்கள்
ஆ) பொருட்பால் – 2) 4 இயல்கள்
இ) இன்பத்துப்பால் – 3) 2 இயல்கள்
அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 1, 3
Question 31.
அறத்துப்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) பாயிரவியல்
ஆ) இல்லறவியல்
இ) துறவறவியல்
ஈ) ஒழிபியல்
Answer:
ஈ) ஒழிபியல்
Question 32.
பொருட்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) அரசு இயல்
ஆ) அமைச்சு இயல்
இ) ஒழிபியல்
ஈ) ஊழியல்
Answer:
ஈ) ஊழியல்
Question 33.
இன்பத்துப்பாலில் இடம்பெறும் இயல்களைக் கண்டறிக
அ) களவியல், கற்பியல்
ஆ) அரசியல், அமைச்சியல்
இ) ஊழியல், ஒழிபியல்
ஈ) பாயிரவியல், இல்லறவியல்
Answer:
அ) களவியல், கற்பியல்
Question 34.
பொருத்திக் காட்டுக (இயல்களும் அதிகாரங்களின் எண்ணிக்கையும்).
அ) பாயிரவியல் – 1) 1 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) துறவறவியல் – 3) 20 அதிகாரங்கள்
ஈ) ஊழியல் – 4) 4 அதிகாரங்கள்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1
Question 35.
பொருத்திக் காட்டுக.
அ) அரசியல் – 1) 18 அதிகாரங்கள்
ஆ) அமைச்சியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) ஒழிபியல் – 3) 32 அதிகாரங்கள்
ஈ) கற்பியல் – 4) 25 அதிகாரங்கள்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1
Question 36.
திருக்குறளின் களவியலில் உள்ள அதிகாரங்கள்
அ) 07
ஆ) 18
இ) 13
ஈ) 04
Answer:
அ) 07
Question 37.
திருக்குறள் ……………… ஆன நூல்.
அ) குறள் வெண்பாக்களால்
ஆ) சிந்தியல் வெண்பாக்களால்
இ) ஆசிரியப்பாவால்
ஈ) கலிப்பாவால்
Answer:
அ) குறள் வெண்பாக்களால்
Question 38.
திருக்குறள் ……………. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு
Question 39.
திருக்குறள் என்பது ………………. ஆகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) எண்ணலளவையாகுபெயர்
Answer:
இ) அடையடுத்த ஆகுபெயர்
Question 40.
திருக்குறள் என்பது
அ) இரண்டடி வெண்பா
ஆ) நான்கடி வெண்பா
இ) மூவடி வெண்பா
ஈ) ஓரடி வெண்பா
Answer:
அ) இரண்டடி வெண்பா
Question 41.
உலகப் பொதுமறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுக்குரிய நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நான்மணிக்கடிகை
ஈ) இன்னாநாற்பது
Answer:
அ) திருக்குறள்
Question 42.
மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக்காட்டிய நூல்
அ) இலியட்ஸ்
ஆ) மெயின்காம்ப்
இ) திருக்குறள்
ஈ) சாகுந்தலம்
Answer:
இ) திருக்குறள்
Question 43.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இவற்றால் ‘நாலும்’ என்பது …………… ‘இரண்டு’ என்பது ………………. குறிக்கும்.
அ) நாலடியார், திருக்குறள்
ஆ) நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது
இ) நானிலம், இருதிணை
ஈ) நாற்படை, இருசுடர்
Answer:
அ) நாலடியார், திருக்குறள்
Question 44.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களாகப் பழம்பாடலால் குறிப்பிடப்படுபவர்கள்
அ) இருவர்
ஆ) நால்வர்
இ) அறுவர்
ஈ) பதின்மர்
Answer:
ஈ) பதின்மர்
Question 45.
திருக்குறளுக்கு உரை எழுதாதவரைக் கண்டறிக.
அ) தருமர்
ஆ) மணக்குடவர்
இ) பரிமேலழகர்
ஈ) அடியார்க்கு நல்லார்
Answer:
ஈ) அடியார்க்கு நல்லார்
Question 46.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – எனப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ. ராமலிங்கனார்
ஈ) இராமலிங்க அடிகள்
Answer:
அ) பாரதியார்
Question 47.
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே – எனப் பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) இராமலிங்க அடிகள்
ஈ) வெ. இராமலிகனார்
Answer:
அ) பாரதிதாசன்
Question 48.
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ள இடம்
அ) சென்னை
ஆ) நாகர்கோவில்
இ) கன்னியாகுமரி
ஈ) சேலம்
Answer:
இ) கன்னியாகுமரி
Question 49.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
அ) வேலூர்
ஆ) சென்னை
இ) மேலூர்
ஈ) திருத்தணி
Answer:
அ) வேலூர்
Question 50.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) நிரல்நிறை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
அ) நிரல்நிறை அணி
Question 51.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையச் சுடும் – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) நிரல்நிறை அணி
ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
ஆ) ஏகதேச உருவக அணி
குறுவினா
Question 1.
வானுலகத் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுபவர் யார் ?
Answer:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியின்படி வாழ்கின்றவர்கள் வானுலகத் தெய்வத்திற்கு இணையானவர்கள்.
Question 2.
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
Answer:
நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
Question 3.
கடலின் பெரிது எது என்று வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
Question 4.
யார் தப்பிப்பிழைக்கும் வாய்ப்பில்லாதவர் என்று குறள் கூறுகின்றார்?
Answer:
எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்குத் : தப்பிப் பிழைக்க வழியே கிடையாது.
Question 5.
பிறர் பொருளைக் கவரும் பழியான செயலைச் செய்யாதவர் யார்?
Answer:
நீதி இல்லாதவற்றைக் கண்டு வெட்கம் அடைந்து ஒதுங்கும் பண்பாளர்கள் பெரும் பயன் கிடைப்பினும் பிறர் பொருள்மேல் ஆசைப்படும் பழியான செயலைச் செய்யமாட்டார்கள்.
Question 6.
உண்மையிலே சினத்தைக் காப்பவர் யாரென்று குறள் கூறுகிறது?
Answer:
தன் சினம் செல்லுபடியாகும், தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாகும்.
Question 7.
திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்களில் ஏதேனும் நான்கினை எழுதுக.
Answer:
உலகப்பொதுமறை, தமிழர் திருமறை, வாயுறைவாழ்த்து, முப்பால்.
Question 8.
திருக்குறளின் பெருமையை விளக்கும் பழமொழிகள் யாவை?
Answer:
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்.
Question 9.
பழம்பாடல்பாடித் திருக்குறளுக்கு உரை செய்தவர்களை கூறுக.
Answer:
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள் காளிங்கர்.
Question 10.
பாரதியார் வள்ளுவரை எவ்வாறு புகழ்கின்றார்?
Answer:
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – எனப் புகழ்கின்றார்.
Question 11.
வள்ளுவரைப் பாரதிதாசன் புகழ்ந்து கூறும் கூற்று யாது?
Answer:
“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே” எனப் புகழ்ந்து கூறுகின்றார்.
Question 12.
திருவள்ளுவரைப் புகழும் விதமாகத் தமிழக அரசு செய்துள்ளவை யாவை ?
Answer:
- கன்னியாகுமரியில் கி.பி.2000-இல் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ளது.
- வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளது.
Question 13.
‘திருக்குறள்’ – பெயர்க்காரணம் தருக.
Answer:
- திரு + குறள் = திருக்குறள்.
- சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல். ஆதலால் திருக்குறள் எனப் பெயர் பெற்றது.
- குறள் என்பது இரண்டடி வெண்பா , ‘திரு’ என்பது சிறப்பு அடைமொழி.
- திருக்குறள் என்பது அடையெடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.
Question 14.
பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? அவையாவை ?
Answer:
பொருட்பாலில் உள்ள இயல்கள் மூன்று ஆகும். அவை, அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்பதாகும்.
Question 15.
சினம் என்னும் பகை நம்மிடமிருந்து எவற்றையெல்லாம் கொல்லும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.
Question 16.
உலக இயல்பின் இருவேறு ஊழ் நிலையாகக் குறள் கூறுவது யாது?
Answer:
- உலக இயல்பு இருவேறு வகைப்படும்.
- செல்வம் உடையார் அறிவுடையராக இருப்பதில்லை.
- தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.
சிறுவினா
Question 1.
புலால் மறுத்தல் சாத்தியமாகும் என்பதைக் குறள் வழி நிறுவுக.
Answer:
- புலால் உணவை உண்ணுகிறவர்கள் இன்று உலகில் வாழ்கின்றனர்.
- புலால் உணவைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தவர்கள் கொல்லாதிருத்தல் வேண்டும்.
- புலால் உண்பவர்கள் தங்கள் உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்வதால் தான், அதனை விலைக்கு விற்பனை செய்யும் பொருட்டு ஊன் விற்பவர்கள் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.
- புலால் மறுத்தலை உலகில் வாழும் நபர்கள் கடைபிடித்தால் எந்த ஒரு உயிானமும் உணவிற்காகவும், வருவாய்க்காவும் கொல்லப்படாமல் உயிர்வாழும்.
- இதனையே வள்ளுவர் பிற உயிர்களை உணவிற்காகக் கொல்லாதாதிருந்தாலே புலால் உணவை நிறுத்திவிடலாம் என்கிறார்.