Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 1.
சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 2

Question 2.
எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலை விபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.
Answer:

பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு.

ராமு : எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இருசக்கர வாகனம் இதுடா!
சோமு : நல்லா இருக்குடா, பல்சரா?
ராமு : பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில் போய் வருவோமா?
சோமு : நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா?
பீமு : நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.
ராமு : என்னன்னு சொல்லு.
பீமு : மூவரும் வண்டியில் போகனும்னா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
ராமு : மூன்று இருக்குடா. போகலாம் வா.

(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்துவிட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

பீமு : தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால்தான் தலையில் அடி படல.
ராமு : பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று பேரு உயிரையும் நீ காப்பித்திட்ட.
சோமு : ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கும்.
பீமு : நான் காப்பத்தலடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு.
மூவரும் : தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்!

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும் :

  • பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
  • தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
  • இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
  • கைபேசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருந்தல் வேண்டும்.
  • காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.

வாகன ஓட்டிகளின் அலட்சியம் :
அவசரம் என்ற ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் :

  • வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
  • பயிற்சியில்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
  • தவறான தட்பவெப்பநிலையும், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
  • இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை சரக்குகளை ஏற்றிச் செல்வது.
  • தொடர் வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
  • மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
    விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

விபத்துகளைத் தவிர்க்க :
(i) பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளைக் கொடுத்தல் வேண்டும்.

(ii) சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

(iii) வேகமாகச் செல்லும் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

(iv) பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.

(v) பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிந்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.

(vi) இவ்வாறு வாகனம் ஓட்டும் போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் : – பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோம் என்றால், சாலை விபத்தில்லாத தமிழ்நாடு’ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை?
அ) 17
ஆ) 21
இ) 18
ஈ) 25
Answer:
இ) 18

Question 2.
சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
அ) 1312
ஆ) 1317
இ) 1315
ஈ) 1318
Answer:
ஆ) 1317

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 3.
சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
அ) 413
ஆ) 613
இ) 418
ஈ) 618
Answer:
அ) 413

Question 4.
தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
அ) 38
ஆ) 33
இ) 37
ஈ) 35
Answer:
ஈ) 35

Question 5.
சாலைப் போக்குவரத்து உதவிக்கு உரிய தொலைபேசி எண்
அ) 108
ஆ) 101
இ) 103
ஈ) 109
Answer:
இ) 103

Question 6.
உரிய வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திய இயக்கினாலோ விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
அ) 3
ஆ) 5
இ) 2
ஈ) 1
Answer:
அ) 3

Question 7.
ஊர்திகளுக்கு உரிய காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் வசூலிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹2,000
ஆ) ₹3,000
இ) ₹450
ஈ) ₹800
Answer:
அ) ₹2,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 8.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் விதிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹1,000
ஆ) ₹ 10,000
இ) ₹5,000
ஈ) ₹2,000
Answer:
ஆ) ₹ 10,000

Question 9.
கூற்று 1 : சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
கூற்று 2 : இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 10.
கூற்று 1 : சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 109-ஐ தொடர்பு கொள்ளலாம்.
கூற்று 2 : எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 11.
கூற்று : 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்குவது சட்டப்படித் தவறு.
காரணம் : இச்சட்டத்தை மீறி ஊர்தி இயக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை .

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 12.
கூற்று 1 : சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.
கூற்று 2 : சாலையின் வகைகள் மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சாலையில் உத்தரவு குறியீடுகள் இடம் பெறாது.
ஆ) சாலைச் சந்திப்புகளில் பாதுகாப்பற்ற அணுகுமுறை தேவை.
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.
ஈ) 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கலாம்.
Answer:
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.

Question 14.
சரியானதைத் தேர்க.
அ) காப்பீடு இல்லாமல் இயக்கினால் – ₹3,000 தண்டத்தொகை
ஆ) தலைகவசம் அணியாமல் பயணித்தால் – ₹2,000 தண்டத்தொகை
இ) மதுகுடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் – ₹1,000 தண்டத்தொகை
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை
Answer:
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் 10,000 தண்டத்தொகை
ஆ) காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் 2000 தண்டத்தொகை
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஈ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் 15,000 தண்டத்தொகை.
Answer:
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

Question 16.
பொருந்தாததைத் தேர்க.
அ) பாரிஸ் நகரில் 1909-ஆம் ஆண்டு ‘பன்னாட்டுச் சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆ) இதர சாலைப் பயனணிகளை நண்பராக எண்ண வேண்டும்.
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.
ஈ) மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும்.
Answer:
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.

Question 17.
பொருத்துக.
அ) மது குடித்துவிட்டு – 1. ₹1,000
ஆ) இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் – 2. ₹2,000
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் – 3. ₹5,000
ஈ) தலைகவசம் அணியாமல் – 4. ₹10,000

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 1, 2, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 18.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பாகிஸ்தான்
ஈ) அமெரிக்கா
Answer:
அ) இந்தியா

Question 19.
ஏறக்குறைய …………. இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன.
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ) 55
Answer:
ஈ) 55

Question 20.
நம் நாட்டில் ……. கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன.
அ) 11
ஆ) 21
இ) 31
ஈ) 51
Answer:
ஆ) 21

Question 21.
நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய …………. இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
அ) 1
ஆ) 10
இ) 5
ஈ) 20
Answer:
இ) 5

Question 22.
நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் உயிரிழப்போர்
அ) மூன்றில் ஒரு பங்கினர்
ஆ) நான்கில் ஒரு பங்கினர்
இ) ஐந்தில் ஒரு பங்கினர்
ஈ) ஆறில் ஒரு பங்கினர்
Answer:
அ) மூன்றில் ஒரு பங்கினர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 23.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம்
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) மத்திய பிரதேசம்
Answer:
ஆ) தமிழ்நாடு

Question 24.
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகள் ……………. விழுக்காடு.
அ) 15
ஆ) 25
இ) 35
ஈ) 55
Answer:
இ) 35

Question 25.
பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது
அ) சட்டப்படி சரியாகும்
ஆ) சட்டப்படி குற்றமாகும்
இ) சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சட்டப்படி குற்றமாகும்

Question 26.
முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு
அ) பாரிஸ், 1909
ஆ) ரியோடி ஜெனிரோ, 1908
இ) ஹாமில்டன், 1907
ஈ) டர்பன், 1915
Answer:
அ) பாரிஸ், 1909

Question 27.
18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திகள் இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம்
அ) மோட்டார் வாகனச் சட்டம், 1988
ஆ) மோட்டார் வாகனச் சட்டம் 1965
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017
ஈ) மோட்டார் வாகனச் சட்டம், 2016
Answer:
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 28.
பொருத்திக் காட்டுக.
அ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் தண்டனைத் தொகை – 1.₹ 10,000
ஆ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் தண்டனைத்தொகை – 2. ₹ 5,000
இ) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் தண்டனைத் தொகை – 3. ₹ 2, 000
ஈ) ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் தண்டனைத் தொகை – 4. ₹ 1,000

அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 2,1
இ) 4, 3, 2, 1
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 29.
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள்
i) உத்தரவுக் குறியீடுகள்
ii) எச்சரிக்கைக் குறியீடுகள்
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) தகவல் குறியீடுகள்

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) ili மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 30.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் கிடைக்கும் தண்டனைகள்
i) ரூ. 5,000
ii) மூன்று மாதச் சிறைத்தண்டனை
iii) அல்லது இரண்டும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

அ) i சரி
ஆ) ii சரி
இ) ii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி