Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.5 கோடை மழை Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.5 கோடை மழை
கற்பவை கற்றபின்
Question 1.
பொது இடங்களில் நீவிர் பார்த்த மனிதநேய நிகழ்வை வகுப்பறைச் சூழலில் பகிர்ந்து கொள்க.
Answer:
எங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்தேன். அவ்விடம் அதிகமாக மக்கள் கூடுவார்கள். பேருந்து நிறுத்தத்தின் அருகில், 50 வயதுள்ள ஒருவர் கரித்துண்டால் கோவில், திருச்சபை பள்ளிவாசல் என வரைந்து கொண்டிருந்தார். ஓவியம் அற்புதம். முழுமையாக அவரைப் பார்த்தேன். கால்கள் இரண்டும் இல்லை. இறைவா இது என்ன சோதனை என்று நினைத்துக் கொண்டேன்.
அப்போது பத்து வயது சிறுவன் அவருக்குச் சிற்றுண்டி வாங்கி வந்து ஊட்டுவதைப் பார்த்தேன். விசாரித்ததில் அவர் நல்ல ஓவியர். விபத்தில் கால்கள் இழந்ததால் மனைவியும், உறவினரும் இவரைக் கைவிட்டுவிட்டதாகவும் கொன்னார்கள். இந்தப் பையனும் ஒரு அனாதை. ஆனால், இவருக்குக் கிடைக்கும் பணத்தில் அந்தப் பையன் தானும் சாப்பிட்டுக் கொண்டு இவரையும் கவனித்துக் கொள்கிறான் என்றார்கள். இதுதான் மனித நேயம்.
ஒரு வாரம் கழித்து நானும் இவர்களை ஓர் அனாதை ஆசிரமத்தில் சேர்த்தேன். அவர்கள் சென்றுவர அரசிடம் பரிந்துரை செய்து மூன்று சக்கர வாகனம் பெற்றுக் கொடுத்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரையும் பார்த்தேன். எவ்வளவோ மாற்றம்! நன்றி உணர்ச்சியில் அவர்கள் இருவரின் கண்களில் கண்ணீர்.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1.
கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப்பண்புகளை விளக்குக.
Answer:
கதைமாந்தர்கள் : ஆறுமுகம் (முதியவர்), குழந்தை , பாபு (மருந்தக ஊழியர்), டாக்டர், நர்ஸ்.
முன்னுரை :
சாந்தாதத்தின் ‘கோடைமழை’ எனும் சிறுகதையில் மனைவி இறந்த துக்கம் தாளாது கணவனும் விஷமருந்தி போனதால் பச்சிளம் குழந்தையை முதியவர் ஆறுமுகம் வளர்க்கிறார். தள்ளாத வயதில் தனக்குப் பின் இக்குழந்தையின் நிலை என்ன ஆகுமோ என்று எண்ணி தத்துக் கொடுக்க முடிவு செய்கிறார். அவ்வாறு தத்துக் கொடுக்கும்போது ஏற்படுகின்ற மனித நேயப்பண்புகளை இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.
மருத்துவமனையில் குழந்தை அழுதல்:
விழிகளை அகலவிரித்து எந்தவித இலக்கும் இல்லாமல் அப்படியும் இப்படியும் பார்த்து கண்ணைச் சுழற்றி குழந்தை அழ ஆரம்பித்தது. இது போலவே அரை மணி நேரமாக அவஸ்திப்படும் குழந்தைக்குப் பசியா, காய்ச்சலா, அசதியா தெரியவில்லை என்று ஏங்குகிறார் முதியவர் ஆறுமுகம்.
முதியவரின் புலம்பல் :
குழந்தைக்கு ரெண்டு சொட்டு டீத்தண்ணீர் கொடுக்கனும் தானும் குடித்தால் தொண்டைக்கு இதமா இருக்கும். டீ விற்கும் பையனையும் உள்ளே விடமாட்டார்கள் வெளியே போய்விட்டு வந்தால் இடம் போய்விடும் என்ன செய்றது. பரபரத்து ஓடி வந்தும் பலன் இல்லை என்று தமக்குத் தாமே எண்ணிக் குழந்தையைத் தோளில் சரிசெய்து கொண்டு சமாதானம் ஆனார்.
முதியவரின் பொறுமை :
ஆஸ்பிட்டலில் வரிசை ஆமை வேகத்தில் சென்றதால் முதியவருக்கு அலுப்பு கூடியது. வீட்டுக்குப் போலாமா என்ற எரிச்சல் இரண்டு நாளா குழந்தைக்குக் கை வைத்தியம் பார்த்தும் பிடிபடல, தனியார் ஆஸ்பத்திரிக்கு போக வசதியும் இல்ல, மனுச ஆதரவும் இல்ல இன்னும் என்ன நடக்கப் போகுதோ பொறுமையாய் இருப்போம் காசா பணமா.
முதியவரின் நிலைப்பாடு :
அடப்பாவமே ஆண்டவன் கொடுத்த உசுரு தன்னையும் பார்த்துக் கொள்ள யாரும் இல்ல, தன்னையே தானும் பார்த்துக் கொள்ளவும் முடியல ஆயுசு பூராவும் இந்தக் குழந்தையோடு இந்தக் கிழடு அல்லாட வேண்டியது தான். உனக்கு நான் எனக்கு நீ என்றாகிவிட்ட நாதியற்ற அவஸ்தை, தகப்பனையும் பிள்ளையையும் பாதுகாக்க வேண்டிய வாரிசு நட்டாத்துல விட்டுட்டுப் போய்விட்டான். நாலு நாள் நல்ல காய்ச்சல் கட்டியவள் கண் மூடிய பின் தானும் குழந்தையை அனாதை ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.
முதியவரின் தனிமை :
அனாதை ஆகிவிட்ட குழந்தையை எண்ணி முதியவரின் ஓயாத புலம்பல். ஆனால் தன் பிள்ளையைப் பிரிந்த துயரம் துளியும் இல்லை. அந்த அளவுக்கு வெறுப்பு. என்னையும் குழந்தையும் : தனியாக்கிட்டு போயிட்டானே என்ற கோபம். பாசம் பாசிபோல் மூடிவிட்டது. பிஞ்சுப் பிள்ளைக்கூட நினைக்காமல் பொண்டாட்டி மேல பாசம். எத்தனையோ ஆண்கள் மனைவியை இழந்து வாழல. இவனெல்லாம் ஒரு கோழை.
மருத்துவரிடம் செல்லுதல் :
மீண்டும் குழந்தை சினுங்க ஆரம்பித்துவிட்டது அப்போது உள்ளேயிருந்து ஒரு தாய் உள்ளேயிருந்து தன் தோளில் கோழிக்குஞ்சு போல் தூக்கிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்க்கவும் நினைக்கவும் முடியாமல் மூச்சு விடுவதை தவிர ஏதும் தெரியாமல் உள்ளே சென்றார்.
மருத்துவரின் அறிவுரை :
பெரியவரே! நெஞ்சில் சளி கட்டி இருக்கு அதான் காய்ச்சல் பயப்பட வேண்டாம் பக்குவமாய் பார்த்துக் கொண்டால் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார்.
நர்ஸ் நலம் விசாரித்தல் :
ஏன் பெரியவரே உங்க கை இப்படி நடுங்குது. வீட்ல வேற யாரும் இல்லையா? என்று கேட்க பதில் கூற முடியாமல் ஊசி போட்ட குழந்தை வலியால் அழுவதை அணைத்துக் கொண்டு சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு வெளியேறினார்.
மருந்தகம் செல்லுதல் :
வாங்கய்யா உட்காருங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லையா! ஆமாம் பாபு மூணு நாளா ரொம்ப கஷ்டப்படுது டாக்டர் ஊசி போட்டிருக்கார். மருந்து கொடுத்தா சரியாயிடும்னு சொன்னார். பாபு….. நான் மருந்து மட்டும் வாங்க வரல ரொம்ப நாளா சொல்லணும் நினைச்சேன். இப்பத்தான் நேரம் வந்தது. பாபு நான் ரொம்ப நாள் உசிரோட இருக்கணும்னு தான் ஆசை நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கனுமே? சாவோட மல்லுக்கு நிற்கிற வயசா இது முடியலப்பா. நாளைக்கு நீ அவங்கள கூட்டிட்டு வா.
தாய் பாசம் :
அம்மா என்கிற பாசம் தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது. பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் பாபு புரியுது. என் சுயநலத்துக்காக குழந்தையை அனாதையாக விட்டுட்டு போறது பெரிய பாவம். சரி பாபு கொஞ்சம் தாமதித்தாலும் மனசு மாறிடும் மருந்தும் குழந்தையுமாய் விடவிடுவென நடந்தார்.
முதியவரின் குமுறல்கள் :
பாபுவுடன் வந்தவர்களைப் பார்த்த போது பிள்ளை பாக்கியம், ஏக்கம், தவிப்பு, அத்தனையும் உணர்ந்த போது குழந்தையின் பாதுகாப்பு உறுதியானது. நெடுநாள் தயக்கத்துக்குப் பின் தன் முடிவுக்கு இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்பதுதான் பெரியவருக்கு உறுத்தல்.
பாபுவின் மனித நேயம் :
ஐயா! இனிமேல் உங்களுக்குக் கவலை வேண்டாம். உங்களுடைய வேதனை எங்களால் தாங்க முடியல. நீங்க எங்க வாழ்க்கைக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிங்க. நன்றி சொல்றதுக்கு பதிலா நான் உங்கிட்ட உதவி கேட்கிறேன் நீங்களும் குழந்தையைப் பிரிந்து இருக்காம எங்களோட வந்திருங்க தயங்காதீங்க.
முதியவரின் தடுமாற்றம் :
இறைஞ்சும் பாபுவைக் கண்டு தடுமாறினார். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம் பாபு இப்போதைக்கு எனக்கு சாவு வராது பாபு கூறினார்.
முடிவுரை:
இக்காலக்கட்டத்தில் தன்னைப் பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் ஆண்களைப் போல் இல்லாமல் தாய் தந்தையை இழந்த பச்சிளம் குழந்தையையும், முதியவரையும் அரவணைத்துத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பாபுவின் மனிதநேயப் பண்பு, கோடை மழை – கதை வாயிலாக அறிய முடிகிறது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
சாந்தா தத் …………… சேர்ந்த பெண் படைப்பாளர்.
அ) சென்னையைச்
ஆ) சிதம்பரத்தைச்
இ) காஞ்சிபுரத்தைச்
ஈ) வடலூரைச்
Answer:
இ) காஞ்சிபுரத்தைச்
Question 2.
‘கோடை மழை’ என்னும் சிறுகதை வெளியான இதழ்
அ) கோகுலம்
ஆ) அமுதசுரபி
இ) கணையாழி
ஈ) குங்குமம்
Answer:
ஆ) அமுதசுரபி
Question 3.
‘கோடை மழை’ என்னும் சிறுகதைக்குச் சிறந்த சிறுகதைக்கான விருதையளித்த அமைப்பு
அ) இலக்கியச் சிந்தனை
ஆ) பாரதி மன்றம்
இ) முத்தமிழ் மன்றம்
ஈ) தமிழ் இலக்கியப் பேரவை
Answer:
அ) இலக்கியச் சிந்தனை
Question 4.
சாந்தா தத் தற்போது வசிக்குமிடம்
அ) காஞ்சிபும்
ஆ) ஹைதரபாத்
இ) மைசூர்
ஈ) பெங்களூர்
Answer:
ஆ) ஹைதரபாத்
Question 5.
சாந்தா தத்தின் ‘நிறை’ மாத இதழ் வெளியாகும் இடம்
அ) சென்னை
ஆ) மைசூர்
இ) ஹைதரபாத்
ஈ) மும்பை
Answer:
இ) ஹைதரபாத்
Question 6.
சாந்தா தத் …………… என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
அ) திசை எட்டும்
ஆ) நிறை
இ) நானிலம்
ஈ) வானம்
Answer:
அ) திசை எட்டும்
Question 7.
சாந்தா தாத்தின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது
அ) சாகித்திய அகாதெமி
ஆ) நியூ புக் செஞ்சுரி
இ) கிழக்கு பதிப்பகம்
ஈ) மணிவாசகம் பதிப்பகம்
Answer:
அ) சாகித்திய அகாதெமி
Question 8.
சாந்தா தத்தின் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பு
அ) பெண்ணியம்
ஆ) கல்வி
இ) மனிதநேயம்
ஈ) அரசியல்
Answer:
இ) மனிதநேயம்
Question 9.
‘கோடை மழை’ கதையின் உட்பொருள்
அ) முதியோர்களை அரவணைப்பது
ஆ) இளைஞர்களின் காதல்
இ) வறண்ட நிலத்தின் நிலை
ஈ) ஏழைகளின் கண்ணீ ர்
Answer:
அ) முதியோர்களை அரவணைப்பது