Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.3 என்ன சத்தம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.3 என்ன சத்தம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
செழியன் ஆடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்லக் காரணம் என்ன?
Answer:
ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு ஓட்டிச் சென்றான்.

Question 2.
செழியன் செய்தவற்றை உமது சொந்த நடையில் எழுதுக.
Answer:
காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டு இருந்தான். திடீரென ஆடுகள் கத்தத் தொடங்கின. செழியன் எழுந்து சென்று பார்த்தான்.

புதர் அருகே நரி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது. செழியன் அருகில் இருந்த குச்சியை வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான். அம்பு பட்டுக் காயமடைந்த நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

சிந்தனை வினா.

Question 1.
நம்மைப்போல் விலங்குகளுக்கும் பேசும் திறன் கிடைத்தால் எப்படி இருக்கும்? காட்டில்
வாழும் விலங்குகள் பேசுவதுபோல் ஓர் உரையாடல் எழுதிக்காட்டுக.
Answer:
மான் : சிங்கம் வருது. எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.
முயல் : என்ன மான் அக்கா சொல்றீங்க?
மான் : அடடா! உண்மையைத்தான் சொல்றேன். ஒளிஞ்சுக்கோ!
முயல் : சரி மான் அக்கா.
சிங்கம் : எல்லாரும் எங்க ஓடுறீங்க? நில்லுங்க, ஏய்! நில்லுங்க.
மான் : நிக்க மாட்டோம்! நீ எங்களை தின்னுடுவ.
சிங்கம் : அட நில்லுமா, உங்கள் எதுவும் பண்ணமாட்டேன்.
மான் : அய்யோ! நீ இப்படி எத்தனை முறை சொல்லி எங்க இனத்தையே அழிச்சுட்டே (என்று சொல்லி ஓடியது).
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 2.
நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் ஏதேனும் ஆபத்து நேர்வதற்கு முன்பு ஒலியெழுப்புகிறது என எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
Answer:
சிந்தித்தது உண்டு. ஒருநாள் எங்கள் வீட்டு நாய் நடு இரவில் மிகவும் குரைத்தது. அப்போது தான் திருடன் வந்ததை அறிந்தோம்.

கற்பவை கற்றபின்

Question 1.
செழியனின் செயல்கள் பற்றி உங்களுடைய கருத்து என்ன? குழுவில் பகிர்ந்து கொள்க.
Answer:
செழியனின் வீரமும், கருணை உள்ளமும் பாராட்டுக்குரியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 2.
ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
ஞாயிறு விடுமுறையில் எங்கள் தாத்தாவின் கிராமத்திற்குச் சென்றோம். அங்கு வயலில் நாற்று நட்டேன். களை பறித்தேன்.

Question 3.
உமக்குத் தெரிந்த கதை ஒன்றை வகுப்பறையில் கூறுக.
Answer:

நேரம் தவறாமை

சந்திரன் ஒரு பள்ளி பருவ மாணவன் ஒருநாள் கா… கா…. என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது. அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சந்திரன் அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது.

அடுத்த நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சந்திரன் தன்னிடம் இருந்த நிலக்கடலையைக் காகத்தின் முன் வீசினான்.

காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சந்திரன் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சந்திரனும் காகமும் நண்பர்களானார்கள். சந்திரன் சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சந்திரன் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை , பேசத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சந்திரன் வியந்தான்.

தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சந்திரனை அனைவரும் பாராட்டினார்கள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 4.
ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க
Answer:
மாணவன் 1 : இப்பாடப் பகுதிக்கு ஓசை என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 2 : இப்பாடப் பகுதிக்கு விலங்கு உலகம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 3 : இப்பாடப் பகுதிக்குச் செழியனின் வீரம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.