Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.4 மரபுச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.4 மரபுச்சொற்கள்
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.
Question 1.
நம் முன்னோர்கள் ஒரு சொல்லைச் சொல்லியவாறே நாமும் சொல்வது …………
அ) பழைமை
ஆ) புதுமை
இ) மரபு
ஈ) சிறப்பு
Answer:
இ) மரபு
Question 2.
யானை …………………….
அ) கத்தும்
ஆ) பிளிறும்
இ) கூவும்
ஈ) அலறும்
Answer:
ஆ) பிளிறும்
Question 3.
‘ஆந்தை அலறும்’ என்பது …………………………….
அ) ஒலி மரபு
ஆ) வினை மரபு
இ) இளமைப்பெயர் மரபு
ஈ) இருப்பிடப் பெயர் மரபு
Answer:
அ) ஒலி மரபு
Question 4.
புலியின் இளமைப் பெயர் ………………….
அ) புலிப்பறழ்
ஆ) புலிக்குட்டி
இ) புலிக்கன்று
ஈ) புலிப்பிள்ளை
Answer:
அ) புலிப்பறழ்
Question 5.
‘பூப்பறித்தாள்’ என்பது ………………….
அ) வினை மரபு
ஆ) பெயர் மரபு
இ) ஒலி மரபு
ஈ) இளமைப்பெயர் மரபு
Answer:
அ) வினை மரபு
ஆ. ஒலி மரபுகளைப் பொருத்துக.
1. சிங்கம் – கூவும்
2. அணில் – அலப்பும்
3. மயில் – முழங்கும்
4. குயில் – கீச்சிடும்
5. குரங்கு – அகவும்
Answers:
1. சிங்கம் – முழங்கும்
2. அணில் – கீச்சிடும்
3. மயில் – அகவும்
4. குயில் – கூவும்
5. குரங்கு – அலப்பும்
இ. உயிரினங்களின் படங்களுக்கு உரிய ஒலிமரபை வட்டமிடுக.
Answer:
ஈ. வினை மரபுகளைப் பொருத்துக.
1. நீர் – பறித்தாள்
2. முறுக்கு – எய்தான்
3. உணவு – குடித்தான்
4. அம்பு – தின்றான்
5. பூ – உண்டான்
Answers:
1. நீர் – குடித்தான்
2. முறுக்கு – தின்றான்
3. உணவு – உண்டான்
4. அம்பு – எய்தான்
5. பூ – பறித்தாள்
உ. ஒலிமரபுச் சொற்களை எழுதுக.
Answer:
ஊ. வினாக்களுக்கு விடையளிக்க.
Question 1.
மரபு என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.
Question 2.
பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச் சொற்களை இடம் பெற்றுள்ளன?
Answer:
பாடப்பகுதியில் ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
Question 3.
ஒலிமரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
- குயில் – கூவும்
- மயில் – – அகவும்
- நாய் – குரைக்கும்
- ஆடு – கத்தும்.
கற்பவை கற்றபின்
Question 1.
மரபுச் சொற்கள் பற்றி நீ அறிந்து கொண்டதை உனது சொந்த நடையில் கூறு.
Answer:
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினை மரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் உள்ளன.
Question 2.
நாம் ஏன் மரபினைப் பின்பற்ற வேண்டும்? பின்பற்றவில்லையெனில் மொழி என்னவாகும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! நம் முன்னோர்கள் நெடுங்காலமாக எப்பொருளை எச்சொல்லால் எப்படிச் சொன்னார்களோ, அச்சொல்லை அப்படியே சொல்வது மரபாகும். நாய் கத்தியது எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. நாய் குரைத்தது என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும்.
மாணவன் 2 : ஆம் சரியாக கூறினாய். இம்மரபுச் சொற்களைப்
பின்பற்றவில்லையெனில் மொழி சிதைந்து விடும்.
கூடுதல் வினாக்கள்
சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.
Question 1.
சிங்கத்தின் இளமைப் பெயர் …………..
அ) பிள்ளை
ஆ) குருளை
இ) கன்று
ஈ) குட்டி
Answer:
ஆ) குருளை
Question 2.
குயில் ………
அ) கூவும்
ஆ) பிளிறும்
இ) அலறும்
ஈ) அகவும்
Answer:
அ) கூவும்
விடையளி :
Question 1.
வினைமரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
- அம்பு எய்தார்.
- சோறு உண்டான்.
- கூடை முடைந்தார்.
- பால் பருகினான்.
Question 2.
விலங்குகளின் இளமைப் பெயர்களை எழுதுக.
Answer:
- கோழிக் குஞ்சு
- குதிரைக் குட்டி
- மான் கன்று
- யானைக் கன்று.
மொழியை ஆள்வோம்
அ. கேட்டல் :
Question 1.
எளிய, இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ வேண்டும்.
Question 2.
தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ வேண்டும்.
ஆ. பேசுதல் :
Question 1.
உமக்குப் பிடித்த தலைப்புகளில் வகுப்பறைப் பட்டிமன்றத்தில பங்கேற்றுப் பேசுக.
Answer:
நடுவர் – சே. சாந்தி :
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழும் காலத்தில் என்று எடுத்துக்கொண்டால் உறவினர்களும் தேவை, நண்பர்களும் தேவை. நண்பர்கள் இல்லாத வாழ்க்கையும் உறவினர்கள் இல்லாத உறவும் ஒரு போதும் எதற்கும் பயன்படாது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உறவினர்களும் நண்பர்களும் இருந்தால்தான் வாழ்க்கையாகும். இப்போது உறவினர்கள் என்ற குழுவிலிருந்து வந்து பேசுமாறு அழைக்கிறேன்.
உறவினர்கள் – வித்யா :
நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானவர்கள் உறவினர்கள்தாம். உறவினர்கள் இல்லாமல் வாழ முடியாது. அப்படி வாழ்பவர்கள் அநாதைகளாகத்தான் இருப்பார்கள். ஒரு மகனைத் தாயும் தந்தையும் சேர்ந்து வளர்த்து ஆளாக்கி, அவன் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என நினைத்து அவன் வளர்ச்சிக்கு மிகவும் பெரிதும் உதவுபவர்கள் . உறவினர்கள்.
நண்பர்கள் – சுந்தர் :
உறவினர்கள் தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என எல்லோரும் இருந்தாலும் அவன் வாழ்க்கையில் தோல்வியுறும்போது, அவனுக்குத் தோள் கொடுப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே. வறுமையால் புத்தகங்கள் கூட வாங்க முடியாத பிள்ளைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நண்பர்களின் புத்தகங்களையும் நோட்டுகளையும் பார்த்தும் படித்தும்தான் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள்தாம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உறவினர்கள் – காயத்ரி :
ஒருமனிதன்வாழ்க்கையில் தோல்வி பெறும்போது தோள்கொடுப்பது உறவினர்கள்தாம் என்பது மிகையாகாது. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என்ற உறவினர்கள் இல்லாமல் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் மதிக்கும் அளவிற்கு உயர்த்த வேண்டும் என நினைப்பவர்கள்தான் உறவினர்கள். எனவே ஒரு மனிதனின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்கள்தாம்.
நண்பர்கள் – பெருமாள் :
உறவினர்கள் இருந்தும் இளைஞர்கள் பலர் இன்று தெருவில் அநாதைகளாக சுற்றுகிறார்கள். காரணம் உறவினர்களிடம் அன்பும் அரவணைப்பும் இல்லை. ஆனால் அன்பையும் அரவணைப்பையும் தரும் ஒரே இடம் நட்பு மட்டுமே. நண்பர்கள் இல்லை என்றால் இன்று 90 சதவீத மக்கள் அநாதைகளாகத்தான் சுற்றுவார்கள்.
நடுவர் – சே. சாந்தி :
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? என்ற விவாதத்தில் இரு தரப்பினரும் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் தங்களுடைய வாதத்தை எடுத்து வைத்தார்கள். மிக அருமை. ஆனால் தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு உறவினர்களும் நண்பர்களும் உதவக் கூடியவர்கள்தான்.
ஆனால் தன்னுடைய வளர்ச்சிக்கு முழுக்க முழுக்கப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள் என்பதே என்னுடைய கருத்து. அவர்கள் எடுத்துரைத்த கருத்துகள் ஏராளம். எனவே ஒரு தனி மனிதன் முன்னேற வேண்டுமென்றால் நண்பர்கள் இல்லாமல் முடியாது. எனவே நண்பர்கள்தாம் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள் என்பதே என்னுடைய இறுதி தீர்ப்பாகும்.
Question 2.
உமக்குப் பிடித்த பறவைகளுள் ஏதேனும் ஒன்று பற்றி ஐந்து மணித்துளி பேசுக.
Answer:
வணக்கம். எனக்குப் பிடித்த பறவை காகம் பற்றிச் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். அதிகாலையில் எழுந்து கரைதல். உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல். உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.
பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல். மாலையிலும் குளித்தல் பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாக்க கொண்டவை. தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்.
ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.அவை கூடிவாழ்பவை. மிகவும் சாதுவான பறவையாகும். நன்றி!
இ. படித்தல் :
Question 1.
இனிய, எளிய தமிழ்ப் பாடல்களைப் படித்து மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தமிழ்ப் பாடல்களைப் படித்து மகிழ்க.
Question 2.
சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஏதேனும் ஒன்றைப் படித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஒன்றைப் படித்துக் காட்டுக.
ஈ. எழுதுதல் :
Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:
1. குளிரிள நீர்
2. யானை பிளிறும்
3. பனிமலர்
4. நற்பண்பு
5. திருவள்ளுவர்
6. பறைசாற்றுதல்
7. ஞாயிற்றுக்கிழமை
8. இறக்கைகள்
9. சீறியது
10. கொக்கரக்கோ
Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. நல்லறிவு – …………………………………………..
2. தென்னைமரம் – …………………………………………..
3. கவியரங்கம் – …………………………………………..
4. நன்றி – …………………………………………..
Answer:
1. நல்லறிவு – திருக்குறளைப் படித்தால் நல்லறிவு பெறுவார்கள்.
2. தென்னைமரம் – தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
3. கவியரங்கம் – கவியரங்கில் நான் கவிதை வாசித்தேன்.
4. நன்றி – இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
3. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.
1. குழந்தை என்ன செய்தது?
Answer:
குழந்தை சிரித்தது
2. மேரி என்ன செய்தாள்?
Answer:
மேரி ஆடினாள்
3. பாட்டி என்ன செய்தார்?
Answer:
பாட்டி தும்மினார்
4. எது பறந்து?
Answer:
ஈ பறந்தது
5. தூங்கியது எது?
Answer:
பூனை தூங்கியது
6. புலி என்ன செய்தது?
Answer:
புலி உறுமியது
4. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு. உலகமே வியந்து பார்க்கும் வளமான சொற்கள் உடையது நம் அன்னைத் தமிழ்மொழி.
Question 1.
தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
Answer:
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்.
Question 2.
உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லைப் பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:
கேளிர்.
Question 3.
தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
Answer:
தமிழ்மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணப் பிரிவுகள் உள்ளன.
Question 4.
தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?
Answer:
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
Question 5.
பிரித்து எழுதுக. தமிழலக்கணம் –
Answer:
தமிழிலக்கணம் – தமிழ் + இலக்கணம்.
Question 5.
எடுத்துக்காட்டில் உள்ளதுபோல் மாற்றி எழுதுக .
எ.கா.
1. ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் பர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது.
Answer:
கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
2. ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது.
Answer:
முதல் பாடவேளை தமிழ் வகுப்பு நடந்தது.
3. நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன்.
Answer:
நான் ஓவிய ஏட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்.
Question 6.
பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.
(உண்மை , பயிற்சி, பொறாமை, கல்லாமை, ஊக்கம், கல்வி, பொறாமை, முயற்சி)
……………………………….. உடையவன் மாணவன்.
……………………………….. கற்பவன் மாணவன்.
………………………………..பெறுபவன் மாணவன்.
………………………………..பேசுபவன் மாணவன்.
……………………………….. அற்றவன் மாணவன்.
……………………………….. தவிர்ப்பவன் மாணவன்.
……………………………….. செய்பவன் மாணவன்.
……………………………….. கொள்பவன் மாணவன்.
Answer:
பொறுமை உடையவன் மாணவன்.
கல்வி கற்பவன் மாணவன்.
பயிற்சி பெறுபவன் மாணவன்.
உண்மை பேசுபவன் மாணவன்.
பொறாமை அற்றவன் மாணவன்.
கல்லாமை தவிர்ப்பவன் மாணவன்.
முயற்சி செய்பவன் மாணவன்.
ஊக்கம் கொள்பவன் மாணவன்.
மொழியோடு விளையாடு
Question 1.
பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
Question 2.
கீழ்வரும் குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடி.
Answer:
கீழிருந்து மேல் :
1. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்………………………….
Answer:
தொல்காப்பியம்
2. பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்திருந்தார்………………………….
Answer:
பாரதியார்
3. புதுவையில் தோன்றிய புதுமைப் பாவலர்………………………….
Answer:
பாரதிதாசன்
மேலிருந்து கீழ் :
1. பாரதிதாசனின் தந்தையின் பெயர்………………………….
Answer:
கனகசபை
2. பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று………………………….
Answer:
பாப்பா பாட்டு
3. முத்தமிழ் என்பது இயல், இசை…………………………..
Answer:
நாடகம்
இடமிருந்து வலம்
1. உடலுக்குக் குளிர்ச்சி தருவது………………………….
Answer:
இளநீர்
2. உலகின் முதன்மொழி மூத்த மொழி………………………….
Answer:
தமிழ்
3. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்………………………….
Answer:
இனிமை
3. குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி,
Answer:
Question 4.
சொல்லிருந்து புதிய சொல் உருவாக்குக.
எ.கா. காஞ்சிபுரம் – கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்
1. புதுக்கவிதை
2. நெல்லிக்கனி
3. கற்குவியல்
Answer:
1. புதுக்கவிதை – புது, புவி, கவி, கவிதை, புதை, தை
2. நெல்லிக்கனி – நெல், நெல்லி, கனி, கல், கலி
3. கற்குவியல் – கயல், கவி, கல், குவியல், குவி, வில்
Question 5.
சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
Answer:
நிற்க அதற்குத் தக
1. நான் பிறமொழிக் கலப்பின்றி பேசுவேன்.
2. தாய்மொழியைப் போற்றுவேன்.
அறிந்து கொள்வோம்
எழுத்துகளை எளிதாக அடையாளம் காண உதவும் பெயர்கள் :
செயல் திட்டம்
Question 1.
மொழி சார்ந்த எளிய பாடல்களைச் சேகரித்து எழுதி வருக.
Answer:
எங்கள் தமிழ்
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்.
– நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
Question 2.
பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற படங்களைச் சேகரித்து ஒட்டி அதற்குரிய வரிகளையும் எழுதி வரவும்.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் வரிக்கு ஏற்ற படங்களைச் சேகரிக்க வேண்டும்.
Question 3.
உனக்குப் பிடித்த கதை ஒன்றினை எழுதி அதில் இடம்பெற்றுள்ள மரபுச் சொற்களை அடிக்கோடிடுக. வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
ஒரு நாள் காட்டில் வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிக்க வலை விரித்து வைத்து விட்டு, பறவை சிலவற்றின் மீது அம்பு எய்து கொண்டிருந்தான். வலையில் புறா ஒன்று மாட்டிகொண்டதால், அந்தப் புறா குனுகியது.
வேடன் வருவதைப் பார்த்த, அங்கிருந்த மயிலும் அகவியது. வேடன் வலையில் விழந்த புறாவைப் பிடிக்க முயன்றான். மரத்தடியில் இருந்த புற்றில் எறும்பு ஒன்று இருந்தது. அது வேடனின் காலைக் கடிக்க, புறா வலையோடு பறந்தது. சில நாட்கள் சென்றன. ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வந்தது.
மரத்தின் அருகே இருந்த எறும்பு வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இதனைப் பார்த்த அந்தப் புறா ஆபத்தில் மாட்டிய தன்னைக் காப்பாற்றிய எறும்பைக் காப்பாற்ற எண்ணியது. பெரிய இலைகளை ஆற்றினுள் போட்டது. எறும்பு அதன் மீது ஏறி உயிர் பிழைத்தது.
Question 4.
இலக்கிய மன்ற விழாவில் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சி நிரல் தயார் செய்க.
Answer:
Question 5.
உலகம் என்னும் பொருள் தரும் சொற்களைப் பாடப் பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:
- புவி
- அகிலம்
- செகம்
- புவனம்
- அண்டம்
- உலகு
Question 6.
உங்கள் ஊரிலுள்ள (அ), பள்ளியிலுள்ள நூலகத்தில் இருந்து பாவேந்தர் பாரதிதாசனின் புத்தங்களைத் தேடிப் படித்து உனக்குப் பிடித்த செய்திகளை எழுதி வருக.
Answer:
பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கைப் படித்தேன். அதில் பின்வரும் செய்திகளை அறிந்தேன். அது மிகவும் பிடித்திருந்தது. கல்வி அறிவில்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அங்கு புல் விளையும். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள். கல்வி அறிவுள்ள பெண்கள் நன்செய் நிலத்தைப் போன்றவாகள். அவர்கள் மூலம் அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
Question 7.
பாரதிதாசனின் படைப்புகளுள் எவையேனும் ஐந்து புத்தகங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
விண்ண ப்பம் எழுதுதல்
அனுப்புநர்
அ.பூங்கொடி
ஐந்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஈரோடு.
பெறுநர்
வகுப்பு ஆசிரியர்,
ஐந்தாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
ஈரோடு.
அம்மா / ஜயா
வணக்கம். நாளை என் அத்தையின் திருமணத்திற்குச் செல்வதால் (00.00.0000) ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் கீழ்ப்படிதலுள்ள
அ.பூங்கொடி
நாள் : 00.00.0000
இடம் : ஈரோடு