Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 2.1 மூதுரை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 2.1 மூதுரை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
என்றெண்ணி என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது ……………………
அ) என் + றெண்ணி
ஆ) என்று + எண்ணி
இ) என்றெ + எண்ணி
ஈ) என்று + றெண்ணி
Answer:
ஆ) என்று + எண்ணி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 2.
மடை + தலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) மடைதலை
ஆ) மடைத்தலை
இ) மடத்தலை
ஈ) மடதலை
Answer:
ஆ) மடைத்தலை

Question 3.
வரும் + அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) வருமளவும்
ஆ) வருஅளவும்
இ) வரும்மளவும்
ஈ) வரும் அளவும்
Answer:
அ) வருமளவும்

Question 4.
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல் ………………….
அ) அறிவில்லாதவர்
ஆ) அறிவுடையார்
இ) அறியாதார்
ஈ) படிக்காதவர்
Answer:
ஆ) அறிவுடையார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 5.
எண்ணுதல் – இச்சொல்லுக்குரிய பொருள் ………..
அ) வாடுதல்
ஆ) வருந்துதல்
இ) நனைத்தல்
ஈ) நினைத்தல்
Answer:
ஈ) நினைத்தல்

ஆ. இப்பாடலில் இரண்டாம் எழுத்து (எதுகை) ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
…………………. , ……………………..
…………………. , ……………………..
…………………. , ……………………..
Answer:
அடக்கம்
உடையார்
வருமளவும்
கடக்கக்
மடைத்தலையில்
இருக்குமாம்
Answer:
க்கம்
டையார்
ருமளவும்
க்கக்
டைத்தலையில்
ருக்குமாம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

இ. மடைத்தலை’ இச்சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
…………, ……………, ………………. , ………………….
Answer:
மடை, தலை, மலை, தடை, மதலை.

ஈ. பொருத்துக.
1. உறுமீன் – நீர் பாயும் வழி
2. கருதவும் – பணிவு
3. அறிவிலர் – நினைக்கவும்
4. மடைத்தலை – பெரிய மீன்
5. அடக்கம் – அறிவு இல்லாதவர்
Answer:
1. உறுமீன் – பெரிய மீன்
2. கருதவும் – நினைக்கவும்
3. அறிவிலர் – அறிவு இல்லாதவர்
4. மடைத்தலை – நீர் பாயும் வழி
5. அடக்கம் – பணிவு

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?
Answer:
கொக்கு தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கின்றது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 2.
யாரை அறிவில்லாதவர் என எண்ணிவிடக் கூடாது என ஔவையார் குறிப்பிடுகிறார்?
Answer:
தமக்குரிய காலம் வரும் வரை சிலர் அடங்கி இருப்பர். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணிவிடக்கூடாது.

ஊ. சிந்தனை வினா.

அடக்கமாக இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக்கூடாது. ஏன்? கலந்துரையாடுக.

மாணவன் 1 : வணக்கம்! அடக்கம் இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக் கூடாது.
மாணவன் 2 : ஆம். சரியாக கூறினாய். அடக்கமாக இருப்பவர்கள் தனக்கு தகுந்த நேரம் வரும் வரை பொறுமையாக இருப்பர்.
மாணவன் 3 : தனக்கு ஏற்ற நேரம் வந்தவுடன் விரைவாகச் செயலை முடித்து வெற்றி பெற்று விடுவார்கள். ஆதலால் அடக்கமானவரை அறிவில்லாதவராக எண்ணுதல் கூடாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்து மகிழ்க.
Answer:
இப்பாடலைச் சரியான உச்சரிப்புடன் பாடிப் பழக வேண்டும்.

Question 2.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் வேறு பாடல்களை அறிந்து வந்து பாடுக.
Answer:
நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
-கா.ப. செய்குதம்பிப் பாவலர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 3.
மூதுரைப் பாடலுடன் தொடர்புடைய திருக்குறள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்து கொள்க.
Answer:
கொக்ககொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

குறளின் பொருள் :
ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறிதும் அசைவில்லாமல் வாடியிருப்பது போல இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று பெரிய மீன் வந்தவுடன் கொத்திக் கொள்வது போல செயல்களை முடித்துக் கொள்ள வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
மூதுரை நூலின் ஆசிரியர் ………….
அ) பாரதிதாசன்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) ஔவையார்
Answer:
ஈ) ஔவையார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 2.
மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்றவை …………..
அ) கொக்கு
ஆ) பெரியமீன்கள்
இ) சிறுமீன்கள்
ஈ) அறிவில்லாதவர்
Answer:
இ) சிறுமீன்கள்)

Question 3.
‘வாக்குண்டாம்’ என்ற பெயரும் கொண்ட நூல் …………
அ) மூதுரை
ஆ) நல்வழி
இ) ஆத்திச்சூடி
ஈ) கொன்றைவேந்தன்
Answer:
அ) மூதுரை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

விடையளி :

Question 1.
ஔவையார் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  • மூதுரை
  • ஆத்திசூடி
  • கொன்றை வேந்தன்
  • நல்வழி

Question 2.
மூதுரை குறிப்பு வரைக.
Answer:
முதுமையான அறிவுரைகளைக் கொண்ட நூல். இந்நூலை இயற்றியவர் ஒளவையார். இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் உண்டு.

பாடல் பொருள்

மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக் கொண்டிருக்க, கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும். அதுபோலக் தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டா.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

நூல் குறிப்பு

முழுமையான அறிவுரைகளைக் கொண்டது மூதுரை. இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் வழங்குகிறது. இந்நூலில் நீதிக்கருத்துகள் எளிமையான நடையில் கூறப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றியவர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய பிற நீதிநூல்களையும் – இயற்றியுள்ளார்.

சொல்பொருள்

1. அடக்கம் – பணிவு
2. அறிவிலர் – அறிவு இல்லாதவர்
3. கடக்க – வெல்ல
4. கருதவும் – நினைக்கவும்
5. மடைத்தலை – நீர் பாயும் வழி
6. உறுமீன் – பெரிய மீன்