Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 2.3 வறுமையிலும் நேர்மை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பசியால் வாடிய ஊர்மக்களுக்குப் பணக்காரர் எவ்வாறு உதவினார்?
Answer:
பஞ்சம் காரணமாக ஊரில் உள்ளவர்கள் நல்ல உள்ளம் படைத்த ஒருவரிடம் பசியால் வாடும் தங்கள் குழந்தைகளுக்கு உதவும்படி வேண்டினர். ஊரில் பசியால் குழந்தைகள் யாரும் வாடக்கூடாது என்பதற்காகப் பணக்காரர், ஆளுக்கு ஒரு கொழுக்கட்டை கிடைக்குமாறு தன் வீட்டிற்கு வெளியே தினமும் கூடையில் தேவையான அளவு கொழுக்கட்டைகள் வைத்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

Question 2.
சிறுமியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு யாது?
Answer:
கொழுக்கட்டைக் கூடையில் இருந்து இறுதியாக என்ன கிடைக்கின்றதோ அதைத்தான் தினமும் சிறுமி இளவேனில் எடுப்பாள். ஆறாம் நாள் வழக்கமான கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

அம்மா அவளிடம் கொழுக்கட்டை கொடுத்தவர்களிடம் கொண்டுபோய் பொற்காசைக் கொடுத்தாள். உனது பொறுமைக்கும் நற்பண்புக்கும் நான் கொடுக்கும் பரிசு இது, எடுத்துச் செல் என்றார்.

சிந்தனை வினா.

Question 1.
‘வறுமையிலும் நேர்மை’ என்னும் கதையில், சிறுமியின் இடத்தில் நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?
Answer:
‘வறுமையிலும் நேர்மை’ என்னும் இடத்தில் நான் இருந்தால், சிறுமி இளவேனில் போல தங்கக்காசைப் பணக்காரரிடமே கொடுத்திருப்பேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

கற்பவை கற்றபின்

Question 1.
நாம் என்னென்ன நற்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்? பட்டியலிடுக.
Answer:
அன்பு, பண்பு, இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, மனிதநேயம், புறங்கூறாமை, உண்மை பேசுதல், இன்னாசெய்யாமை, களவாமை, சினம்கொள்ளாமை, தன்னம்பிக்கை, தன்முனைப்பு, விட்டுக் கொடுத்தல், உயிரிரக்கம் போன்ற நற்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

Question 2.
நேர்மையானவர் என்று நீயாரை நினைக்கின்றாய்? அவரைப்பற்றி ஐந்து மணித்துளிகள். பேசுக.
Answer:
காமராஜரை நான் நேர்மையானவராக நினைக்கின்றேன். இந்நாளில் எல்லோரும் தலைவர்கள். ஆனால், நாட்டு மக்களின் துயர் துடைத்து உயர் வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் மிகக்குறைவு. 14 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் தீட்டினார். இத்திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை என்று கூறி, எதிர்ப்புகள் வரவே இத்திட்டத்தை நிறைவேற்ற வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறிய தலைவனை இனிமேல் பார்க்க முடியுமா?

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த இவருடைய காலம் தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியின் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையானவராகவே வாழ்ந்தார். அதனால் அவரை மட்டுமே நேர்மையானவராகக் கருதுகின்றேன்.