Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.1 புலி தங்கிய குகை Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.1 புலி தங்கிய குகை
கற்பவை கற்றபின்
Question 1.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
Answer:
Question 2.
பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றின் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘யாண்டு’ என்ற சொல்லின் பொருள் ………………..
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது
Answer:
ஆ) எங்கு
Question 2.
‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ ?
இ) யா + உளனோ ?
ஈ) யாண்டு + உனோ?
Answer:
அ) யாண்டு + உளனோ?
Question 3.
‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது. ………………….
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை
Answer:
அ) கல்லளை
குறு வினா
Question 1.
தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
Answer:
தம் வயிற்றுக்குத் தாய் ‘புலி தங்கிய குகை’யை உவமையாகக் கூறுகிறார்.
சிறு வினா
Question 1.
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு , எதுவும் தெரியாதவள் போல நீ’உன் மகன் எங்கே?’ என்று என்னைக் கேட்கின்றாய்.
(ii) அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ‘புலி தங்கிய குகை’ போன்று அவனைப் பெற்ற வயிறு என்னிடம் உள்ளது.
(iii) அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க் காண்பாயாக! – என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள்.
சிந்தனை வினா
Question 1.
தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
Answer:
(i) புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது.
(ii) அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.
(iii) இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான்.
(iv) புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான்.
(v) அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவா …………………
அ) ஔவையார்
ஆ) ஒக்கூர் மாசாத்தியார்
இ) காவற்பெண்டு
ஈ) வெண்ணிக்குயத்தியார்
Answer:
இ) காவற்பெண்டு
Question 2.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று …………………
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) திருக்குறள்
ஈ) திருமுருகாற்றுப்படை
Answer:
அ) புறநானூறு
Question 3.
தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பதிற்றுப்பத்து
ஈ) குறுந்தொகை
Answer:
அ) புறநானூறு
Question 4.
கோப்பெரு நற்கிள்ளி ……………….. மன்னன்.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
ஆ) சோழ
Question 5.
காவற்பெண்டு பாடிய பாடல் அமைந்த நூல் …………………
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பதிற்றுப்பத்து
ஈ) குறுந்தொகை
Answer:
அ) புறநானூறு
Question 6.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காவற்பெண்டு – பெண்பாற் புலவர்
ஆ) காவற்பெண்டு – சங்ககாலப் புலவர்
இ) காவற்பெண்டு – புறநானூற்றில் பாடல் பாடினார்
ஈ) காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்
Answer:
ஈ) காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்
Question 7.
பொருத்துக.
1. சிற்றில் – அ. கற்குகை
2. கல் அளை – ஆ. சிறு வீடு
3. யாண்டு – இ. பெற்றெடுத்த
4. ஈன்ற வயிறு – ஈ. எங்கே
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
Question 8.
‘புலிசேர்ந்து போகிய கல்அளை போல’ – இதில் ‘குகை’ என்னும் பொருள்
அ) சேர்ந்து
ஆ) போகிய
இ) அளை
ஈ) போல
Answer:
இ) அளை
Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) இல் – வீடு
ஆ) அளை – குகை
இ) ஈன்ற – பெற்ற
ஈ) யாண்டு – இங்கே
Answer:
ஈ) யாண்டு – இங்கே
Question 10.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
அ) அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?
ஆ) உன் மகன் எங்கு உள்ளான்? அன்னையே!
இ) எங்கு அன்னையே உன் மகன் உள்ளான்?
ஈ) உன் மகன் எங்கு அன்னையே உள்ளான்?
Answer:
அ) அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ‘புலி தங்கிய குகை’ என்னும் தலைப்பில் அமைந்தப் பாடலை எழுதியவர் ………………..
2. தமிழர்கள் பழங்காலம் தொட்டே ……, ………….. சிறந்து விளங்கினர்.
3. நாட்டைக்காக்க ………….. செல்வது முதற்கடமை.
4. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க புலவர் …………….
5. ‘புலி தங்கிய குகை’ என்னும் தலைப்பில் அமைந்தப் பாடல் புறநானூற்றில் …………. பாடல்.
Answer:
1. காவற்பெண்டு
2. கல்வியிலும், வீரத்திலும்
3. போர்க்களம்
4. காவற்பெண்டு
5. 86
குறு வினா
Question 1.
காவற்பெண்டு – குறிப்பு வரைக.
Answer:
- சங்ககாலப் பெண்பாற் புலவர்.
- கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்.
- படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்.
- கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க புலவர் இவர்.
Question 2.
புறநானூறு குறிப்பு வரைக.
Answer:
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று : புறநானூறு
- இது பண்டைத் தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம். முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்
Question 3.
புலவரிடம் பெண் வினவியது யாது?
Answer:
அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்? என்று புலவரிடம் பெண் வினவினாள்.
Question 4.
‘புலிசேர்ந்து போகிய கல்அளை போல’ தொடர் பொருள் யாது?
Answer:
பொருள் : புலி தங்கிச் சென்ற குகை போல்
Question 5.
தன் மகன் எங்கு இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்?
Answer:
தன் மகன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்.
காவற்பெண்டு :
- சங்ககாலப் பெண்பாற் புலவர்
- கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்
- படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்
சொல்லும் பொருளும்
1. சிற்றில் – சிறு வீடு
2. கல் அளை – கற்குகை
3. யாண்டு – எங்கே வயிறு.
4. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த
5. குடில் – வீடு