Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.5 வழக்கு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.5 வழக்கு

கற்பறை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 1.
மூவகைப் போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

பொருத்துக.
1.பந்தர் – முதற்போலி
2. மைஞ்சு – முற்றுப்போலி
3.அஞ்சு – இடைப்போலி
4.அரையர் – கடைப்போலி
Answer:
1. பந்தர் – கடைப்போலி
2. மைஞ்சு – முதற்போலி
3. அஞ்சு – முற்றுப்போலி
4. அரையர் – இடைப்போலி

குறு வினா

Question 1.
வழக்கு என்றால் என்ன?
Answer:
முன்னோர்கள் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

Question 2.
தகுதி வழக்கு வகைகள் யாவை?
Answer:
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
(i) இடக்கரடக்கல்
(ii) மங்கலம்
(iii) குழூஉக்குறி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 3.
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.
Answer:
இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல் : நஞ்சு, சரியான சொல் : நைந்து.
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது.
வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது.

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுக.

Question 1.
தேசியம் காத்த செம்மல் : முத்துராமலிங்கத்தேவர்
Answer:
வணக்கம். தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்கத்தேவர் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள். முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். இதனால் ,அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது. மேலும், வாய்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது. முத்துராமலிங்கத்தேவர் தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.

சிலம்பம் , குதிரை ஏற்றம் , துப்பாக்கிச் சுடுதல், சோதிடம் , மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார். நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார், அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939ல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.

விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.

அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டணை பெற்றார். உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார். தேசியம் காத்த செம்மல் : முத்துராமலிங்கத்தேவர் போல உழைப்போம். உயர்வோம். நன்றி.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 2.
கப்பலோட்டிய தமிழர் : வ.உ.சிதம்பரனாார்.
Answer:
வணக்கம். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாார். பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள். கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார்.ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார். தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர்.கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர், கப்பல்களில் ஆங்கிலக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர்.இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது. சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத்தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரத நண்பர்களையும் பயமுறுத்தினர்.

அதற்கெல்லாம் கவலைப்படாமல் வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர்.ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது. வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது, உள்ளம் தளரவில்லை . சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவுரை கூற ‘உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன் என்றார்.சிறையில் செக்கிழுத்தார்.

சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார்.செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.அவரைப்போல நாட்டுக்காக உழைப்போம் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

அறிந்து பயன்படுத்துவோம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 2
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 3

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
2. பொதுமக்கள் அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக் கொடி பறந்தது.
4. திருக்குறளை எழுதியவர் யார்?
5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 4

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

1. கண்ண ன் பாடம் படித்தான்.
2. மேரி ஓவியம் வரைந்தாள்.
3. நான் கவிதை எழுதினேன்.
4. விதை விருட்சமாக வளர்ந்தது.
5. ஆசிரியர் செய்யுளைக் கற்பித்தார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

நான் விரும்பும் தலைவர் – பெரியார்

முன்னுரை :
ஏன், எப்படி, எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி? அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும். அதன் தந்தை பெரியார். வெண்தாடி வேந்தர்? பகுத்தறிவு பகலவன்? வைக்கம் வீரர்? ஈரோட்டுச் சிங்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பெரியாரை நான் விரும்பும் தலைவர் ஆவார்.

இளமை :
ஈரோடு நகரில் 1879ல் பெரியார் பிறந்தார். தொடக்கக் கல்வியுடன் தம் படிப்பை நிறுத்திக் கொண்டு தம் தந்தையின் வணிகத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

வைக்கம் வீரர் :
கேரளத்தில் வைக்கம் என்னும் ஊரில் தலை விரித்தாடிய தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதனால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம் :
பெரியார் காங்கிரசிலிருந்து விலகி 1925ல் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். இந்த இயக்கத்தின் வாயிலாக சாதி ஏற்றத்தாழ்வு போக்குதல்? தீண்டாமை ஒழித்தல்? மூ டநம்பிக்கை ஒழித்தல்? பெண்ணுரிமை நிலைநாட்டுதல் ஆகும்.

பெரியார் சீரமைத்த எழுத்துகள் :
‘ஐ’ என்பதை ‘அய்’ எனவும்? ‘ஔ’ என்பதை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.

பெண்ணுரிமை போற்றியவர் :
பெண்ணுரிமை, பெண்கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, மறுமணம் ஆகியவற்றிற்காகப் பெரியார் போராடினார். பெண்கள் மாநாடுகள் பல நடத்தி பெண்களை விழிப்படையச் செய்தார். 13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ராவுக்குப் பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

கவரக் காரணம் :
(i) சிக்கனம் மற்றும் எளிமையான வாழ்கை.
(ii) சுயமரியாதை போற்றல்.
(iii) பெண்ணுரிமை பேசுதல்.
(iv) சாதி, மத ஏற்றத்தாழ்வுகளைக் களைதல்.
(v) கல்வியில் புரட்சி
– ஆகிய காரணங்களால் பெரியாரை விரும்புகின்றேன்.

முடிவுரை :
தொண்டு செய்து பழுத்த பழமான பெரியாரைப் போற்றுவோம். அவரின் வழி நடப்போம்.

மொழியோடு விளையாடு

இடைச்சொல் ‘கு’ சேர்த்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 7

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 5

அகம் என முடியும் சொற்களை எழுதுக.

1. நூலகம்
2. குறளகம்
3. நகலகம்
4. அச்சகம்
5. துறைமுகம்
6. தமிழகம்

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.

1. திருக்குறள் பால்களைக் கொண்டது.
2. எனது வயது கக
3. நான் படிக்கும் வகுப்பு
4. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.
5. திருக்குறளில் கநங அதிகாரங்கள் உள்ளன.
6. இந்தியா க்கூசஎ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 6

1. மூதறிஞர் – இராஜாஜி
2. வீரமங்கை – வேலுநாச்சியார்
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் – கட்டபொம்மன்
4. வெள்ளையரை எதிர்த்வன் – சின்னமலை
5. கொடிகாத்தவர் – திருப்பூர் குமரன்
6. எளிமையின் இலக்கணம் – கக்கன்
7. தில்லையடியின் பெருமை – வள்ளியம்மை
8. கப்பலோட்டிய தமிழர் – சிதம்பரனார்
9. பாட்டுக்கொரு புலவன் – பாரதியார்
10. விருதுப்பட்டி வீரர் – காமராசர்
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி – நாகம்மை
12. மணியாட்சியின் தியாகி – வாஞ்சி நாதன்

கலைச்சொல் அறிவோம்

1. கதைப்பாடல் – Ballad
2. துணிவு – courage
3. தியாகம் – sacrifice
4. அரசியல் மேதை – Political Genius
5. பேச்சாற்றல் – Elocution
6. ஒற்றுமை – Unity
7. முழக்கம் – Slogan
8. சமத்துவம் – Equality

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
வழக்கு ………………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 2.
இயல்பு வழக்கு ………………. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
தகுதி வழக்கு ………………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 4.
முன்பின் தொக்கப் போலி எனக்குறிப்பிடப்படுவது
அ) இலக்கணமுடையது
ஆ) இலக்கணப்போலி
இ) மரூஉ
ஈ) முதற்போலி
Answer:
ஆ) இலக்கணப்போலி

Question 5.
புறநகர், கால்வாய், தசை, கடைக்கண் ஆகிய சான்றுகள் …………………._க்குச் சான்றாகும்.
அ) இலக்கணமுடையது
ஆ) இலக்கணப்போலி
இ) மரூஉ
ஈ) முதற்போலி
Answer:
ஆ) இலக்கணப்போலி

Question 6.
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் ………………….
அ) இலக்கணமுடையது
ஆ) இலக்கணப்போலி
இ) மரூஉ
ஈ) முதற்போலி
Answer:
இ) மரூஉ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 7.
தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது
அ) இயல்பு வழக்கு
ஆ) தகுதி வழக்கு
இ) மரூஉ
ஈ) இலக்கணப்போலி
Answer:
ஆ) தகுதி வழக்கு

Question 8.
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள்
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
அ) குழூஉக்குறி

Question 9.
பொன்னைப் பறி என்பர் – இது எவ்வகைத் தகுதி வழக்கிற்குச் சான்று?
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
அ) குழூஉக்குறி

Question 10.
கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது – இவை எவ்வகைத் தகுதி வழக்கிற்குச் சான்றுகள்?
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
இ) இடக்கரடக்கல்

Question 12.
சுடுகாட்டை நன்காடு என்பது
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
ஆ) மங்கலம்

Question 13.
போலி ………………. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 14.
இடக்கரடக்கல் அல்லாதது. ……………………
அ) கால் கழுவி வந்தான்
ஆ) குழந்தை வெளியே போய்விட்டது
இ) ஒன்றுக்குப் போய் வந்தேன்
ஈ) சுடுகாட்டை நன்காடு
Answer:
ஈ) சுடுகாட்டை நன்காடு

Question 15.
பொருத்துக.
1. ஒன்றுக்குப் போய் வந்தேன் – அ) மங்கலம்
2. கறுப்பு ஆடு என்பதை வெள்ளாடு என்பது – ஆ) இடக்கரடக்கல்
3. பொன்னைப் பறி என்பது – இ) மரூஉ
4. தஞ்சாவூரைத் தங்சை என்பது – ஈ) குழூஉக்குறி

அ) 1-ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1-ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 16.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கால்வாய் – இலக்கணப்போலி
ஆ) மைஞ்சு – முதற்போலி
இ) இலஞ்சி – இடைப்போலி
ஈ) முகன் – முற்றுப்போலி
Answer:
ஈ) முகன் – முற்றுப்போலி

Question 17.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) குழந்தை வெளியே போய்விட்டது – இடக்கரடக்கல்
ஆ) செத்தாரைத் துஞ்சினார் எனல் -மங்கலம்
இ) ஆடையைக் காரை எனல் – மரூஉ
ஈ) தசை – இலக்கணப்போலி
Answer:
இ) ஆடையைக் காரை எனல் – மரூஉ

குறுவினா

Question 1.
வழக்கு எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
Answer:
வழக்கு இரண்டு வகைப்படும். அவையாவன:

  1. இயல்பு வழக்கு
  2. தகுதி வழக்கு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 2.
இயல்பு வழக்கு என்றால் என்ன?
Answer:
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

Question 3.
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?அவை யாவை?
Answer:
இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவையாவன:

  1. இலக்கணமுடையது
  2. இலக்கணப்போலி
  3. மரூஉ

Question 4.
இலக்கணப்போலி என்றால் என்ன?
Answer:
இலக்கண முறைப்படி அமையாவிட்டாலும் ,இலக்கணமுடையதைப் போல ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

Question 5.
இலக்கணப்போலிக்குச் சான்றுகள் தருக.
Answer:

  1. புறநகர்
  2. கால்வாய்
  3. தசை
  4. கடைக்கண்

Question 6.
தஞ்சை , நெல்லை ஆகிய சொற்கள் எவ்வகை வழக்குச் சொற்கள் என்பதைக் குறிப்பிட்டு விளக்குக.
Answer:
தஞ்சை, நெல்லை ஆகிய சொற்கள் இயல்பு வழக்குச் சொற்களில் மரூஉச் சொல்லாகும்.

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும். தஞ்சாவூரைத் ‘தஞ்சை’ என்றும், திருநெல்வேலியை ‘நெல்லை’ என்பதும் மரூஉச் சொற்களாகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 7.
தகுதி வழக்கு என்றால் என்ன?
Answer:
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.

Question 8.
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும் ? அவையாவை?
Answer:
தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவையாவன:

  1. இடக்கரடக்கல்
  2. மங்கலம்
  3. குழூஉக் குறி

Question 9.
இடக்கரடக்கல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொல்லால் குறிப்பிடுவது இடக்கரடக்கல் ஆகும்.
சான்று : கால் கழுவி வந்தான்.
குழந்தை வெளியே போய்விட்டது.

Question 10.
மங்கலம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
மங்கலம் இல்லாத சொற்களை மங்கலமான வேறு சொல்லால் குறிப்பிடுவது மங்கலம் ஆகும்.
சான்று : ஓலை – திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
சுடுகாடு – நன்காடு

Question 11.
குழூஉக்குறி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சாற்கள் குழூஉக்குறி எனப்படும்.
சான்று : பொன்னைப் பறி என்பர் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை என்பர் (யானைப்பாகர் பயன்படுத்தவது)

Question 12.
போலி என்றால் என்ன?
Answer:
ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவது போலி எனப்படும்.

Question 13.
போலி எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
Answer:
போலி மூன்று வகைப்படும். அவையாவன :

  1. முதற்போலி
  2. இடைப்போலி
  3. கடைப்போலி

Question 14.
முதற்போலி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
சொல்லின் முதலில் ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவதுமுதற்போலி எனப்படும்.
சான்று : பசல் – பைசல் , மஞ்சு – மைஞ்சு, மயல் – மையல்

Question 15.
இடைப்போலி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
சொல்லின் இடையில் ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவது இடைப்போலி எனப்படும்.
சான்று : அமச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரசர் – அரைசர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 16.
கடைப்போலி (இறுதிப்போலி) என்றால் என்ன? சான்று தருக.
Answer:
சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவது கடைப்போலி(இறுதிப்போலி) எனப்படும்.
சான்று : அகம் – அகன், முகம் – முகன், பந்தல் – பந்தர்

Question 17.
முற்றுப்போலி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி ஆகும்.
சான்று : ஐந்து – அஞ்சு