Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.2 அழியாச் செல்வம் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.2 அழியாச் செல்வம்
கற்பவை கற்றபின்
Question 1.
கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
Answer:
- ஓதுவது ஒழியேல்! – ஔவையார்
- கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன்
- உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார். – நன்னெறி
- கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. – திருக்குறள்
Question 2.
கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றினை அறிந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.
அதைக் குடிக்காமல் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும் இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது என்றார். இந்த நீரைக்குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றார். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் …………………..
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
Answer:
ஆ) கல்வி
Question 2.
கல்வியைப் போல் ……………… செல்லாத செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
Answer:
அ) விலையில்லாத
Question 3.
‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
அ) வாய்த்து + ஈயின்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
Answer:
அ) வாய்த்து + ஈயின்
Question 4.
‘கேடில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) கேடி + இல்லை
ஆ) கே + இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
Answer:
ஈ) கேடு + இல்லை
Question 5.
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) எவன் ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
Answer:
இ) எவனொருவன்
குறுவினா
Question 1.
கல்விச் செல்வத்தின் இயல்புகளாகி நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் பிறரால் கொள்ளப்படாது. கொடுத்தாலும் குறையாது, அரசரால் கவர முடியாது.
சிறுவினா
Question 1.
கல்விச்செல்வம் குறித்த நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.
சிந்தனை வினா
Question 1.
கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்? – சிந்தித்து எழுதுக.
Answer:
- நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
- திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.
- கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.
– எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ………………
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்
Question 2.
நாலடியார் …………….. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேல்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு
Question 3.
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் ……………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்
Question 4.
திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் …………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்
Question 5.
விச்சை என்பதன் பொருள் ……………
அ) கல்வி
ஆ) பொருள்
இ) களவு
ஈ) அரசர்
Answer:
அ) கல்வி
சிறுவினா
Question 1.
நாலடியார் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:
- சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார்.
- நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- 400 வெண்பாக்களால் ஆனது.
- அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்பு கொண்டது.
- இது நாலடி நானூறு, வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படும் நூல்.
- திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் ஆகும்.
சொல்லும் பொருளும்
1. வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
2. கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
3. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
4. விச்சை – கல்வி