Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
கற்பவை கற்றபின்
Question 1.
உங்களுடைய மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தொகுக்க.
Answer:
கொடிவேரி அணை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பெரியார் – அண்ணா நினைவகம், பவானி சங்கமேஸ்வரர் கோயில், ஜவுளிச் சந்தை, அந்தியூர் குருநாத சாமி கோயில், பண்ணாரி அம்மன் கோயில், பவானி சாகர் ஆகியன ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள்.
Question 2.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள் பற்றிய செய்திகளைத் தொகுக்க.
Answer:
திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் , திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு – ஆகியன தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
திருநெல்வேலி ……………….. மன்னர்களோடு தொடர்பு உடையது.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
இ) பாண்டிய
Question 2.
இளங்கோவடிகள் …………………. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
அ) இமய
ஆ) கொல்லி
இ) பொதிகை
ஈ) விந்திய
Answer:
இ) பொதிகை
Question 3.
திருநெல்வேலி ………………. ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை
ஈ) தாமிரபரணி
Answer:
ஈ) தாமிரபரணி
பொருத்துக
1. தண்பொருநை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
2. அக்கசாலை – குற்றாலம்
3. கொற்கை – தாமிரபரணி
4. திரிகூடமலை – முத்துக் குளித்தல்
Answer:
1. தண்பொருநை – தாமிரபரணி.
2. அக்கசாலை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
3. கொற்கை – முத்துக்குளித்தல்
4. திரிகூடமலை – குற்றாலம்
குறு வினா
Question 1.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
Answer:
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.
Question 2.
கொற்கை முத்து பற்றிக் கூறுக.
Answer:
- தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது.
- இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது.
- கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
சிறு வினா
Question 1.
திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.
Answer:
(i) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.
(ii) இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.
(iii) மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
Question 2.
திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Answer:
(i) அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்.
(ii) சங்கப்புலவர்களான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.
(iii) ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரைத் தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு உரியது.
Question 3.
திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக.
Answer:
நெல்லையில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன.
(i) காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறைவைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
(ii) மேல வீதியை அடுத்து கூழைக்கடைத் தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும் கடைத் தெரு ஆகும்.
(iii) முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை.
சிந்தனை வினா
Question 1.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
Answer:
- இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
- அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.
- சாதி மத பேதமின்றி மதநல்லிணக்கத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.
- சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர் …………………
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
அ) பாளையங்கோட்டை
Question 2.
முற்காலத்தில் வேணுவனம் என அழைக்கப்படும் இடம் ……………….
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
ஆ) பேட்டை
Question 3.
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர் …………….
அ) பாளையங்கோட்டை
ஆ) திருநெல்வேலி
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
ஆ) திருநெல்வேலி
Question 4.
இலக்கியங்களில் திரிகூடமலை என்று குறிக்கப்படும் மலை ………………
அ) பொதிகை மலை
ஆ) குற்றால மலை
இ) பொருநை
ஈ) பேட்டை
Answer:
ஆ) குற்றால மலை
Question 5.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு …………….
அ) காவிரி ஆறு
ஆ) தாமிரபரணி ஆறு
இ) நொய்யல் ஆறு
ஈ) வைகை ஆறு
Answer:
ஆ) தாமிரபரணி ஆறு
Question 6.
தண்பொருநை நதி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டநதி …………….
அ) காவிரி ஆறு
ஆ) தாமிரபரணி ஆறு
இ) நொய்யல் ஆறு
ஈ) வைகை ஆறு
Answer:
ஆ) தாமிரபரணி ஆறு
குறுவினா
Question 1.
மூவேந்தர் யாவர்?
Answer:
சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மூவேந்தர் என்று அழைக்கப்பட்டனர்.
Question 2.
திருநெல்வேலி என்னும் பெயர் பெற்ற தன் காரணம் யாது?
Answer:
நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல அமைந்திருந்ததால் திருநெல்வேலி – எனப்பெயர் பெற்றது.
Question 3.
திருநெல்வேலியில் சிறப்புமிக்க பழமையான மலைகள் யாவை?
Answer:
- பொதிகை மலை
- குற்றால மலை
Question 4.
இரட்டை நகரங்கள் யாவை?
Answer:
திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என அழைக்கப் படுகின்றன.
Question 5.
பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுவதன் காரணம் யாது?
Answer:
பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால், பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுகின்றது.
Question 6.
பண்டைய வரலாற்றை நினைவூட்டும் திருநெல்வேலி ஊர்கள் யாவை?
Answer:
- சேரன்மாதேவி
- கங்கைகொண்டான்
- திருமலையப்பபுரம்
- வீரபாண்டியப்பட்டினம்
- குலசேகரன் பட்டனம்
Question 7.
திருநெல்வேலி ஈர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் யாவர்?
Answer:
- ஜி.யு. போப்
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
Question 8.
திருநெல்வேலியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் யாவர்?
Answer:
மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்.
சிறுவினா
Question 1.
திருநெல்வேலி – பெயர்க்காரணம் யாது?
Answer:
- முற்காலத்தில் திருநெல்வேலிக்கு மூங்கில் காடு என்னும் பொருள் கொண்ட ‘வேணுவனம்’ என்னும் பெயர் இருந்தது.
- மூங்கில் நெல் மிகுதியாக விளைந்ததால் அப்பகுதிக்கு ‘நெல்வேலி’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
- நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப்பெயர் பெற்றது.