Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 8.1 புதுமை விளக்கு Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 8.1 புதுமை விளக்கு
கற்பவை கற்றபின்
Question 1.
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:
- பொய்கை ஆழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார்
- நம்மாழ்வார்
- மதுரக்கி ஆழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- திருமங்கை ஆழ்வார்
- தொண்டரடிப் பொடியாழ்வார்
- திருப்பாணாழ்வார்
- குலசேகர ஆழ்வார்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
“இடர் ஆழி நீங்குகவே” – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ………………..
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
Answer:
அ) துன்பம்
Question 2.
‘ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ………………….
அ) ஞான + சுடர்
ஆ) ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
Answer:
இ) ஞானம் + சுடர்
Question 3.
இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) இன்பு உருகு
ஆ) இன்பும் உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
Answer:
இ) இன்புருகு
பொருத்துக.
1. அன்பு – நெய்
2. ஆர்வம் – தகளி
3. சிந்தை – விளக்கு
4. ஞானம் – இடுதிரி
Answer:
1. அன்பு – தகளி
2. ஆர்வம் – நெய்
3. சிந்தை – இடுதிரி
4. ஞானம் – விளக்கு
குறு வினா
Question 1.
பொய்கையாழ்வாரும்பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
Answer:
பொய்கையாழ்வார் அகல்விளக்காகப் பூமியையும், பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பையும் உருவகப்படுத்துகின்றனர்.
Question 2.
பொய்கைஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டினார்?
Answer:
பொய்கை ஆழ்வார் தன் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினார்.
சிறுவினா
Question 1.
பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
Answer:
ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர்விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.
சிந்தனை வினா
Question 1.
பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?
Answer:
நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு, ஊக்கம், கல்வி, உயிர், உண்மை ஆகியற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவேன்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பூமியைப் பொய்கை ஆழ்வார் உருவகப்படுத்துவது ………………..
அ) அகல் விளக்கு
ஆ) கடல்
இ) பாமாலை
ஈ) அன்பு
Answer:
அ) அகல் விளக்கு
Question 2.
துன்பத்தைப் பொய்கை ஆழ்வார் உருவகப்படுத்துவது ……………….
அ) அகல் விளக்கு
ஆ) கடல்
இ) பாமாலை
ஈ) அன்பு
Answer:
ஆ) கடல்
Question 3.
சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடையவர் ……………..
அ) திருமால்
ஆ) பொய்கை ஆழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
Answer:
அ) திருமால்
Question 4.
அந்தாதி என்பது ………………… வகைகளுள் ஒன்று.
அ) காப்பிய
ஆ) புதின
இ) சிற்றிலக்கிய
ஈ) பேரிலக்கிய
Answer:
இ) சிற்றிலக்கிய
Question 5.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடலைத் தொகுத்தவர் …………….
அ) நாதமுனி
ஆ) பொய்கை ஆழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
Answer:
அ) நாதமுனி
குறு வினா
Question 1.
அந்தாதி என்றால் என்ன?
Answer:
ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது அந்தாதி ஆகும்.
Question 2.
முதலாழ்வார் மூவர் யாவர்?
Answer:
- பொய்கை ஆழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
Question 3.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – குறிப்பு வரைக.
Answer:
- திருமாலைப் போற்றிப் பாடிவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
- அவர்கள் பாடிய பாடல்கள் தொகுப்பே நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்’ ஆகும்.
- இதனைத் தொகுத்தவர் : நாதமுனி.
பொய்கையாழ்வார்:
- பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
- நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.
பூதத்தாழ்வார்:
- பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
- நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி இவர் பாடியதாகும்.
சொல்லும் பொருளும்
பாடல் – 1
வையம் – உலகம்
வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
சுடர் ஆழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
இடர் ஆழி – துன்பக்கடல்
சொல்மாலை – பாமாலை
பாடல் – 2
தகளி – அகல்விளக்கு
ஞானம் – அறிவு
ஆர்வம் – விருப்பம்
சுடர் – ஒளி
நாரணன் – திருமால்