Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 8.5 அணி இலக்கணம் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 8.5 அணி இலக்கணம்
கற்பவை கற்றபின்
Question 1.
உவமைத்தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றுக.
Answer:
பாடநூல் மதிப்பீட்டு வினா
குறுவினா:
Question 1.
உருவக அணியை விளக்குக.
Answer:
உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்றில்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.
சான்று : “வையகம் தகழியாக வார்கடல் நெய்யாக”
பூமி அகல் விளக்காகவும் , கடல் நெய்யாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளதால், உருவக அணி ஆயிற்று.
Question 2.
உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
மொழியை ஆள்வோம்
பேசுக.
Question 1.
நீதிக் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக.
Answer:
ஓர் ஊரில் செல்வன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அளவுக்கதிகமாகச் செல்வம் இருந்தது. வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர். ஆனால் அவனால் மனம் நிறைவுடன் வாழ முடியவில்லை . ஒரு நாள் அந்த ஊருக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார்.
அவரிடம் செல்வந்தன் தனக்கு மனநிறைவுக்கு வழி சொல் வேண்டினான். துறவி மூன்று கல்லைச் செல்வந்தனைத் தூக்கத் செய்து மலை மீது அவனால் ஏறமுடியவில்லை . மிகவும் கனமாக உள்ளது ,என்னால் தூக்க முடியவில்லை என்றான். துறவி ஒருகல்லைத் தூக்கிப் போடச் சொன்னார். இதே போலவே ஒவ்வொரு முறையும் கூற ஒவ்வொரு கல்லாய் தூக்கிப் போடச் சொன்னார்.
இறுதியில் துறவி இப்போது பாரம் குறைந்ததா? என்றார். செல்வந்தரும், ஆம்! என்றார். உன்னிடம் உள்ள அளவில்லாத செல்வம் தான் பாரம். அதனை ஏழைகளுக்கு கொடுத்துவிட பாரம் குறைந்து உன்மனம் நிறைவடையும் என்றார். அவனும் அப்படியே செய்து மன நிறைவு அடைந்தேன்.
சொல்லக் கேட்டு எழுதுக.
1. பொய்கையாழ்வார் திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.
2. இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும்.
3. வாழ்க்கை குறிக்கோள் உடையது.
4. செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை .
5. உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி.
அறிந்து பயன்படுத்துவோம்.
ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும் வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.
‘எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை , எதற்கு, ஏன், யார், யாது, யாவை போன்றன வினாச் சொற்கள் ஆகும்.
சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.
1. நெல்லையப்பர் கோவில் ……………. உள்ளது?
2. முதல் ஆழ்வார்கள் ……………… பேர்?
3. ………………. சொற்களைப் பேச வேண்டும்?
4. அறநெறிச் சாரம் பாடலை …………….. ?
5. அறநெறிச் சாரம் என்பதன் பொருள் ……………… ?
Answer:
1. எங்கு
2. மூன்று
3. எப்படிப்பட்ட
4. யார்
5. யாது
பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.
(எ.கா.) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள் ?
1. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?
2. பூங்கொடிஎப்பொழுது பள்ளிக்குச் சென்றாள்?
3. பூங்கொடி தோழியுடன் எங்கு சென்றாள்?
தலைப்புச்சொற்களை முழு சொற்றொடர்களாக எழுதுக.
(எ.கா) தலைப்புச்செய்தி : தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடக்கம் – வானிலை மையம் அறிவிப்பு.
Answer:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
Question 1.
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
Answer:
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
Question 2.
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – மக்கள் ஆர்வத்துடன் வருகை.
Answer:
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கியதை அடுத்து, அதைக் காண மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.
Question 3.
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி – தமிழக அணி வெற்றி.
Answer:
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.
Question 4.
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி – ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்.
Answer:
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
Question 5.
மாநில அளவிலான பேச்சுப் போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்.
Answer:
மாநில அளவிலான பேச்சுப் போட்டியானது சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
கட்டுரை எழுதுக.
ஒற்றுமையே உயர்வு
முன்னுரை
தனி மரம் தோப்பாகாது. அதுபோல தனித்திருந்தால் வெற்றி கிடைக்காது. ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உயர்வு கிடைக்கும்.
சான்றோர் பொன்மொழி
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார் திருமூலர் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவர். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்றார் பாரதியார். இப்படிப்பட்ட சான்றோரின் பொன்மொழிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஒற்றுமையின் உயர்வு
வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இந்தக் குடும்பம் உயர்வடையும். அந்தக்குடும்பம் உயர்ந்தால், அந்த ஊர்உயரும், அந்த ஊர் உயர்ந்தால் அந்த நகரமே உயரும். ஒற்றுமையால் அந்த நகரம் உயர்ந்தால் நம் நாடே உயரும். நம் மக்கள் காந்தியடிகளுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டதால் தான் நமக்கு விடுதலையும் கிடைத்தது.
ஒற்றுமையின் விளைவு
புயல், சுனாமி, வெள்ளப் பெருக்கு, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது எல்லாம் பல சமூக சேவை அமைப்புகள் ஒன்று கூடி ஒற்றுமையுடன் ஓடோடி மக்களைக் காப்பற்றினர். அதுமட்டும் அல்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்விடங்களை மீண்டும் கட்டமைத்துக் கொடுத்தனர்.
ஒருமையுணர்வு
அல்லா, இயேசு, சிவன் ஆகிய மும்மதக் கடவுள்களும் மூன்றெழுத்தில் ஒன்றுபட்டு நிற்பதைப் பார்க்கும் போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு மதநல்லிணக்கத்தோடு வாழவேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
முடிவுரை
மதம், சாதி, இனம் ஆகிய வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அப்பொழுது தான் நாட்டில் ஒற்றுமை நிலவும் என்பதை அறிந்து செயல்படுவோம்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.
படம் – 1
(எ.கா) கரும்பலகை, வகுப்பறை, பாடப் புத்தகம், மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள்.
படம் – 2
(எ.கா.) மரம், நடைபாதை, ஊஞ்சல், சருக்கு மரம், செடிகள்.
கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் தொடர்கள் உருவாக்குக. (விதை , கட்டு, படி , நிலவு , நாடு , ஆடு)
நிற்க அதற்குத் தக..
கலைச் சொல் அறிவோம்
1. குறிக்கோள் – Objective
2. லட்சியம் – Ambition
3. கடமை – Responsibility
4. வறுமை – Poverty
5. நற்பண்பு – Courtesy
6. செல்வம் – Wealth
7. பொதுவுடைமை – Communism
8. அயலவர் – Neighbour
9. ஒப்புரவு நெறி – Recipropcity
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
Question 1.
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது ……………
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
Answer:
அ) உவமை அணி
Question 2.
“வையகம் தகழியாக வார்கடல் நெய்யாக” எனத் தொடங்கும் பாடலில் இடம்பெறும் அணி …………….
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
Answer:
ஆ) உருவக அணி
Question 3.
இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது ………………
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
Answer:
இ) ஏகதேச உருவக அணி
குறுவினா
Question 1.
உவமை, உருவகம் – விளக்குக.
Answer:
Question 2.
ஏகதேச உருவக அணி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது, ஏகதேச உருவக அணி ஆகும்.
சான்று : பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமே கட்டளைக் கல். – திருக்குறள்