Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 9.5 ஆகுபெயர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 9.5 ஆகுபெயர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 1.
பள்ளி நூலகத்திலிருந்து நூல் ஒன்றை எடுத்து வந்து அந்நூலில் ஆகுபெயர்களாக இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்களைத் தொகுக்க.
Answer:
நூல் : பெரியாரின் பெண்ணியக் கனவுகள்
ஆசிரியர் : ச.சேட்டு மதார்சா
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 1

Question 2.
அன்றாடப் பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 8

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகிவருவது …………………
அ) பொருளாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) இடவாகுபெயர்
Answer:
அ) பொருளாகுபெயர்

Question 2.
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ………………
அ) முதலாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ) தொழிலாகுபெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer:
ஆ) சினையாகுபெயர்

Question 3.
மழை சடசடவெனப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ……………..
அ) அடுக்குத்தொடர்
ஆ) இரட்டைக்கிளவி
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer:
ஆ) இரட்டைக்கிளவி

Question 4.
அடுக்குத்தொடரில் ஒரே சொல் ………………. முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

குறுவினா:

Question 1.
ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
Answer:
ஒரு பெயர்ச்சொல் அதன் பொருளைக் குறிக்காமல் , அதனோடு தொடர்பு உடைய வேறு ஒன்றிற்கு வரும் போது அது ஆகுபெயர் ஆக மாறும்.
சான்று : வெள்ளை – வெண்மை நிறம், வெள்ளை அடித்தான் – வெள்ளை நிறமுடைய சுண்ணாம்பிற்குரியது.

Question 2.
இரட்டைக்கிளவி என்பது யாது ? சான்று தருக.
Answer:
இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி ஆகும்.
சான்று : விறுவிறு, மளமள.

சிறுவினா

Question 1.
பொருளாகுபெயரையும் சினையாகுபெயரையும் வேறுபடுத்துக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 3

Question 2.
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் ஒப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 4

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

உண்மை
வணக்கம். உண்மை என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். வாய்மையே வெல்லும் என்பது நம் நீதித் துறையின் அடிப்படைக் கொள்கை. உண்மையை மட்டுமே இந்த உலகம் ஏற்கும். உண்மை பேசுபவனுக்குத் தான் நாளை சொர்க்கம் கிடைக்கும். வள்ளுவர் கூட உண்மைக்கு என்றே வாய்மை என்ற அதிகாரத்தையே வகுத்துள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

பத்துக் குறளில் உண்மையை அழகாக வள்ளுவர் விளக்குவின்றார். உண்மை பேசி உயர்ந்தவன் மன்னன் அரிச்சந்திரன். உண்மை பேசி உலக உத்தமர் ஆனார் காந்தியடிகள். எனவே நாமும் உண்மை பேசுவோம்! வாழ்வில் உயர்வோம்! நன்றி.

சொல்லக் கேட்டு எழுதுக.
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.
2. குயில் குளிரில் நடுங்கியது , மழையில் ஒடுங்கியது, வெயிலில் காய்ந்தது.
3. இரக்கம் உடையோர் அருள் பெற்றவர் ஆவர்.
4. காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் “சமுதாய வழிகாட்டி” என்று பொருள்.
5. விடியும் போது குளிரத் தொடங்கியது.

கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கவிதை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 5

சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

(எனவே , ஏனெனில், அதனால், ஆகையால், அது போல, இல்லையென்றால், மேலும் )
(எ.கா.) காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்ய விரும்பாதவர். ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர்.

1. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். ……………….. துன்பப்பட நேரிடும்.
2. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. ………………. காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
3. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ……………. மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
4. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். ……………. பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
5. தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது. ……………. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
Answer:
1. இல்லையென்றால்
2. ஆகையால்
3. ஏனெனில்
4. எனவே
5. மேலும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

கடிதம் எழுதுக.

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

54, குறிஞ்சி வீதி,
தமிழ்நகர்,
மதுரை – 2.
03.6.2019.

அன்புள்ள அத்தைக்கு,
உங்கள் அன்பு அண்ணன் மகன் எழுதும் கடிதம். நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம் முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது. ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும்.

ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல், காப்புக்கட்டல் ,பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள். அன்புடன் முடிக்கின்றேன். உடன் பதில் எழுதுங்கள்.

இப்படிக்கு,
அன்புள்ள அண்ணன் மகன்,
அ. முரளி.

உறைமேல் முகவரி
ச. தமிழரசி,
12,திரு.வி.க. நகர்,
சென்னை – 5.

மொழியோடு விளையாடு

குறிப்புகளைக் கொண்டு இடமிருந்து வலமாகக் கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 6

1. நூலகத்தில் இருப்பவை ………………… நூல்கள் நிறைந்துள்ள இடம் ………………….
2. உலகப்பொது மறை ………………..  புரட்சிக்கவிஞர் …………………
3. முனைப்பாடியார் இயற்றியது ………………… நீதி நெறி விளக்கம் பாடியவர் …………………
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் …………………….. சுரதா என்பதன் விரிவாக்கம் …………………..
5. குற்றாலக்குறவஞ்சியைப் பாடியவர் …………………….

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Answer:
1. நூல்கள், நூலகம்
2. திருக்குறள், பாரதிதாசன்
3. அறநெறிச்சாரம், குமரகுருபரர்
4. குற்றாலக்குறவஞ்சி, சுப்புரத்தினதாசன்
5. திரிகூடராசப்பக்கவிராயர்

கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக் கிளவி அமையுமாறு தொடர் உருவாக்குக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர் 7
(எ.கா.) மழை சடசட வெனப் பெய்தது.
பறவை படபட வெனப் பறந்தது.
புகைவண்டி சடசட வெனச் சென்றது.
மரக் கிளை சடசட வென முரிந்தது.

கீழ்க்காணும் அறிவிப்பைப் படித்து அதன்பின் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.

தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும்

வினாக்கள் மற்றும் விடைகள்
Question 1.
தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
Answer:
வீடு மற்றும் பொது இடங்களில் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.சமையல் செய்யும் போது இருக்கமான உடைகளை அணிய வேண்டும். பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். பணியாளார்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.

Question 2.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
Answer:
தீயணைப்புத் துறைக்குத் தகவல் சொல்ல வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மின் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும். தீ அணைப்பான்கள் கொண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். ஆடையில் தீப்பிடித்தால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.

Question 3.
பொது இடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.
Answer:
தீ விபத்து ஏற்பட்டால் அவசர கால வழியில் செல்ல வேண்டும். அருகில் உள்ள கட்டிடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 4.
தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை யாவை?
Answer:
மின் தூக்கியைப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய்த் தீயில் நீரை ஊற்றக் கூடாது. தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை ஆகியவற்றைத் தடவக் கூடாது.

Question 5.
உடலில் தீப்பற்றினால் செய்ய வேண்டிய முதலுதவி யாது?
Answer:
உடலில் தீப்பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.

நிற்க அதற்குத் தக….

கலைச்சொல் அறிவோம்

1. சமயம் – Religion
2. ஈகை – Charity
3. கொள்கை – Doctrine
4. நேர்மை – Integrity
5. உபதேசம் – Preaching
6. எளிமை – Simplicity
7. கண்ணியம் – Dignity
8.. தத்துவம் – Philosophy
9. வாய்மை – Sincerity
10. வானியல் – Astronomy

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது …………………. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
அ) இடவாகுபெயர்

திரிகூடராசப்பக்கவிராயர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 2.
திசம்பர் சூடினாள் என்பது ………………. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
ஆ) காலவாகுபெயர்

Question 3.
இனிப்பு தின்றான் என்பது ………………….. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
இ) பண்பாகுபெயர்

Question 4.
பொங்கல் உண்டான் என்பது ……………….. குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
ஈ) தொழிலாகுபெயர்

குறுவினா

Question 1.
இடவாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“சடுகுடு போட்டியில் இந்தியா வென்றது ” – என்பதில் தமிழ்நாடு என்னும் பெயர் இவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இடவாகுபெயர் ஆகும்.

Question 2.
காலவாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“திசம்பர் சூடினாள் ” – என்பதில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் காலவாகுபெயர் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.5 ஆகுபெயர்

Question 3.
பண்பாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“இனிப்பு தின்றான்” – என்பதில் இனிப்பு என்னும் பண்புப்பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் பண்பாகுபெயர் ஆகும்.

Question 4.
தொழிலாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
“பொங்கல் உண்டான் ” – என்பதில் பொங்கல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் தொழிலாகுபெயர் ஆகும்.