Students can Download 8th Tamil Chapter 2.5 வினைமுற்று Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று
கற்பவை கற்றபின்
Question 1.
‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
Answer:
(எ.கா) அவன் வாழ்க. (ஆண்பால்)
(i) அவள் வாழ்க. (பெண்பால்)
(ii) மக்கள் வாழ்க. (பலர்பால்)
(iii) அது வாழ்க. (ஒன்றன்பால்)
(iv) ‘அவை வாழ்க. (பலவின்பால்)
(எ.கா) நாம் வாழ்க. (தன்மை )
(i) நீங்கள் வாழ்க. (முன்னிலை)
(ii) அவர்கள் வாழ்க. (படர்க்கை)
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று ………………..
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்த து
Answer:
ஈ) மேய்ந்தது
Question 2.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ………………….
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
Answer:
அ) படித்தான்
Question 3.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் …………
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
Answer:
அ) செல்க
சிறுவினா
Question 1.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும். (எ.கா.) மலர்விழி எழுதினாள்.
Question 2.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
Answer:
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறனையும் தெரிநிலை வினைமுற்று காட்டும்.
(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
காலம் – இறந்தகாலம்
கருவி – தாளும் எழுதுகோலும்
செய்பொருள் – கட்டுரை
நிலம் – பள்ளி
செயல் – எழுதுதல்
Question 3.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
Answer:
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் : க, இய, இயர், அல்.
Question 4.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
Answer:
மொழியை ஆள்வோம்
கேட்க :
Question 1.
இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக
Question 1.
இயற்கையைப் பாதுகாப்போம்
Answer:
இயற்கை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நம்மைச் சுற்றியுள்ள மலை, காடு, ஆறு, நிலம் என்பனவாகும். ஆதிகால மனிதன் மலை, காடுகளில் வாழ்ந்து வந்தான். அங்கு விளைந்த காய்கறி, பழங்களை உண்டு வந்தான். அங்கிருந்த விலங்கினங்களைத் தங்கள் பணிகளுக்குப் பயன்படுத்தினான். அங்கு வாழ்ந்த மக்கள் அவற்றைத் தங்கள் வீட்டுச் செல்லக்குழந்தைகளாக வளர்த்தனர். இயற்கையைக் கண்டு வியந்தனர். அதனால் இயற்கையைத் தெய்வமாக எண்ணி வணங்கினர். இந்நிலை படிப்படியாய் வளர்ந்து காடு, மலை என்பது மாறி வயல், நாடு நகரம் என உருவாயின.
“நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர்; ஆடவர்
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!”
என்ற ஔவையின் பாடல் மூலம் நாம் அறிவது நிலமானது நாடு, காடு, மேடு, பள்ளம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மண்ணைப் பண்படுத்தி பயன்படுத்திக் கொள்ளும் ஆண்மகன் இருந்தால் அம்மண் வளம் பெறும்; நாடும் நலம் பெறும் என்பதாகும்.
நாம் நாகரிகம் என்ற பெயரில் புதிய புதிய அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தியும், பல தொழிற்சாலைகளை உருவாக்கியும் இயற்கையைப் பல வழிகளில் சீரழிக்கிறோம். நாம் இயற்கையை மறந்து போனதால்தான் வாழ வழியின்றி அழிந்து வருகின்றோம். இயற்கையை நேசிக்க மறந்துவிட்டோம். அதனால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன.
கடல்கள் குப்பைகளின் கூடாரமாகிவிட்டன. அதனால் நீர்வாழ் அரிய உயிரினங்களும் அழிந்து வருகின்றன. கடல் உணவுகள் நஞ்சாகின்றன. சூரியன், சக்தியை மட்டுமே கொடுக்காமல் பல நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. நாம் அன்றாடம் உடுத்தும் உடைகள், பயன்படுத்தும் பொருள்களான பாய், போர்வை, தலையணைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலம் பல ஆபத்தான நோய்க்கிருமிகளை இயற்கையான முறையிலேயே அழித்துவிட முடியும். நாம் விண்வெளியையும் மாசுபடுத்தத் தயங்கவில்லை. அதி நவீன கண்டுபிடிப்புகளால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கை ‘தங்களை அழிக்காதீர்கள்’ என்று கூறுவது போலவும், தங்களுடைய அழிவில் ஏற்படும் விளைவுகள் யாவை என்பதை நமக்கு அறிவுறுத்தும் வகையிலும் அவ்வப்போது நிலநடுக்கம், கனமழை, நிலையற்ற தட்பவெப்பம், புயல்காற்று, கடல் சீற்றம் போன்றவற்றை உருவாக்கி நம்மை நல்வழிப்படுத்த எண்ணுகிறது.
இவற்றையெல்லாம் பார்த்தாவது நாம் சிந்திக்க வேண்டும். நல்லமுறையில் செயலாற்ற வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மைப்படுத்திக் கொள்ள இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை வெட்டிச் சாய்க்கும் நாம், புதியதாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். உடல், உள, சமூக ஆன்மிக நன்னிலையைக் காத்து நிற்கும் மரம் என்ற மருத்துவச் சுடரைத் தாய்நாடெங்கும் ஏற்றி வைப்போம். அச்சுடர்களின் ஒளியில் மிளிர்ந்து ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ வேண்டும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியவை, இயற்கையை நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். எங்கும் தூய்மையைப் போற்ற வேண்டும். காடுகளை அழிக்கக்கூடாது. மலைகளைத் தகர்க்கக் கூடாது. மண்வளத்தைச் சுரண்டக்கூடாது. நெகிழிப்பொருள்களைத் தவிர்க்க வேண்டும். இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமன்று; பொறுப்பும் என்பதை உணர்வோம்.
இயற்கையைக் காப்போம். எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்.
‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்’ என்ற வள்ளுவரின் வாய்மொழியைப் போற்றி வரும் முன் காப்போம். நோயற்ற மக்கள் சமுதாயத்தை உருவாக்குவோம்.
சொல்லக்கேட்டு எழுதுக
இயற்கையை விரும்புவது மட்டுமன்றி, அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்று; பொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டு களித்த இயற்கைச் செல்வங்களை, வரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்க வேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ் எண்கள் அறிவோம்
வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக
1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2.
2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16.
3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3.
4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6.
5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5.
Answer:
1. உ
2. கசு
3. ங
4. சு
5. ரு
அறிந்து பயன்படுத்துவோம்
தொடர் வகைகள்
தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
செய்தித் தொடர் :
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
வினாத் தொடர் :
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.
(எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விழைவுத் தொடர் :
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) இளமையில் கல். (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக (வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக. (வைதல்)
உணர்ச்சித் தொடர் :
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை)
ஆ! புலி வருகிறது! (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே! (வியப்பு)
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ……………………..
2. கடமையைச் செய் ………………………….
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! ………………………
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? …………………..
Answer:
1. செய்தித் தொடர்
2. ஏவல் தொடர்/விழைவுத்தொடர்
3. உணர்ச்சித் தொடர்
4. வினாத்தொடர்
தொடர்களை மாற்றுக.
(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
Question 1.
காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
Answer:
ஆ! காட்டின் அழகுதான் என்னே !
Question 2.
ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.
Question 3.
அதிகாலையில் துயில் எழுதுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
Answer:
அதிகாலையில் துயில் எழு.
Question 4.
முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.
Question 5.
காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
Answer:
காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?
கடிதம் எழுதுக
Question 1.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
Answer:
25, கம்பர் தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி – 2.
19-5-2019.
அன்புள்ள நண்பனுக்கு,
உன் அன்புத் தோழன் ராம் எழுதுவது. நலம். நலமறிய ஆவல். உன் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தம்பியை விசாரித்ததாகக் கூறவும்.
சென்ற வாரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும் அடுத்து மாநில அளவில் நடக்கப் போகும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்தாளில் படித்தேன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்தனர்.
உனக்கு விளையாடுவதில் ஆர்வம் மிகுதி என நானறிவேன். அதன் பயனாய் நீ உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாய். இவ்வெற்றி உன் படிப்பிற்கான முழு செலவையும் அரசாங்கத்தை ஏற்க வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.
உன்னுடைய இப்பயணம் மேலும் மேலும் வெற்றிப் பயணமாய்த் தொடர வேண்டும். முயற்சியைக் கைவிடாதே! வாழ்த்துகள்.
இப்படிக்கு
உன் அன்புத் தோழன்
ராம். அ.
உறைமேல் முகவரி
பெறுநர் அஞ்சல் தலை
ம.மாதேஷ்,
த/பெ. மணி,
எண் – 30, பாரி தெரு,
சென்னை – 20.
மொழியோடு விளையாடு
உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
1. நடக்கிறது – நட
2. போனான் – போ
3. சென்றனர் – செல்
4. உறங்கினாள் – உறங்கு
5. வாழிய – வாழ்
6. பேசினாள் – பேசு
7. வருக – வா
8. தருகின்றனர் – தா
9. பயின்றாள் – பயில்
10. கேட்டார் – கேள்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
கலைச்சொல் அறிவோம்
1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicket
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ………………….
2. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொல் ………………….. என்றும் கூறுவர்.
3. முற்றுவினையை …………………….. என்றும் கூறுவர்.
4. வினைமுற்று ……………….. வினைமுற்று, ………………. வினைமுற்று என இருவகைப்படும்.
5. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று ………………… எனப்படும்.
6. ஏவல் வினைமுற்று …………………… ஆகிய இருவகைகளில் வரும்.
7. வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் …………………..
8. பாடினான் என்பது ………………….. வினைமுற்று.
9. வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று ………………..
Answer:
1. வினைச்சொல்
2. முற்றுவினை
3. வினைமுற்று
4. தெரிநிலை, குறிப்பு
5. ஏவல் வினைமுற்று
6. ஒருமை, பன்மை
7. க, இய, இயர், அல்
8. தெரிநிலை
9. வியங்கோள் வினைமுற்று
விடையளி:
Question 1.
வினைசொல் என்றால் என்ன?
Answer:
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) படித்தான், ஆடுகிறான்.
Question 2.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) எழுதினாள், பாடுகிறாள்.
Question 3.
வினைமுற்று எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பனவாம்.
Question 4.
தெரிநிலை வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையான செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.
(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
கருவி – தாளும் எழுதுகோலும்
நிலம் – பள்ளி
காலம் – இறந்தகாலம்
செய்பொருள் – கட்டுரை
செயல் – எழுதுதல்
Question 5.
குறிப்பு வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு, காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) பொருள் – பொன்னன்
இடம் – தென்னாட்டார்
காலம் – ஆதிரையான்
சினை – கண்ண ன்
பண்பு(குணம்) – கரியன்
தொழில் – எழுத்தன்
Question 6.
தமிழில் உள்ள வினைமுற்றுகள் யாவை?
Answer:
தமிழில் உள்ள வினைமுற்றுகள் :
(i) தெரிநிலை வினைமுற்று
(ii) குறிப்பு வினைமுற்று
(iii) ஏவல் வினைமுற்று
(iv) வியங்கோள் வினைமுற்று
Question 7.
ஏவல் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
(எ.கா) எழுது – ஒருமை
எழுதுமின் – பன்மை
Question 8.
வியங்கோள் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
(எ.கா) வாழ்க, ஒழிக
Question 9.
வியங்கோள் வினைமுற்று எவ்வெவற்றைக் காட்டும்?
Answer:
வியங்கோள் வினைமுற்று இருதிணைகளையும் ஐந்து பால்களையும் மூன்று இடங்களையும் காட்டும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.