Students can Download 8th Tamil Chapter 4.5 வேற்றுமை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை
கற்பவை கற்றபின்
Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.
Answer:
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும். மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும். அறிவோம்பலுக்குக் கல்வி தேவை. அக்கல்விப்பயிற்சிக்கு உரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டியதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும்.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) பயனிலை
ஈ) வேற்றுமை
Answer:
ஈ) வேற்றுமை
Question 2.
எட்டாம் வேற்றுமை …………………… வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) விளி
ஈ) பயனிலை
Answer:
இ) விளி
Question 3.
உடனிகழ்ச்சிப் பொருளில் ……………….. வேற்றுமை வரும்.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
அ) மூன்றாம்
Question 4.
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ……………………… வேற்றுமை பயின்று வந்துள்ளது.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) ஆறாம்
ஈ) ‘ஏழாம்
Answer:
ஆ) மூன்றாம்
Question 5.
‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ……………….. பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல்
ஆ) அழித்தல்
இ) கொடை
ஈ) அடைதல்
Answer:
அ) ஆக்கல்
பொருத்துக
1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.
3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
Answer:
1. மூன்றாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
2. நான்காம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
3. ஐந்தாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
4. ஆறாம் வேற்றுமை – பாரியினது தேர்
சிறுவினா
Question 1.
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
Answer:
எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை எனப்படும். எ.கா: பாவை வந்தாள்.
Question 2.
நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
Answer:
(i) நான்காம் வேற்றுமை உருபு – ‘கு’
(ii) இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை என்ற பொருள்களில் வரும்.
Question 3.
உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
Answer:
(i) ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
எ.கா. தாயொடு குழந்தை சென்றது,
அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
(ii) இருவர் சேர்ந்து செய்கின்ற செயலைக் குறிப்பிடும் போது ஒடு, ஓடு என்ற சொற்களைப் பயன்படுத்துவர். இதுவே உடனிகழ்ச்சிப் பொருள் ஆகும்.
மொழியை ஆள்வோம்
கேட்க
Question 1.
கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக.
Question 1.
கல்வியே அழியாச் செல்வம்
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
நான் கல்வியே அழியாச் செல்வம் என்ற தலைப்பில் பேசவிருக்கிறேன். கல்வி இன்றைய மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அத்தகைய கல்வியைக் கற்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற நிலையில் உள்ளது.
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று பாரதிதாசன் பெண்களின் கல்வி பற்றிக் கூறுகிறார்.
‘கற்றவரைக் கண்ணுடையார்’ என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடையவர்’ என்றும் இடித்துரைக்கிறார் வள்ளுவர். கற்றோர்க்கு அணிகலன் கல்வியே; கற்றோரே கண்ணுடையவர். ‘கற்றோரே தேவர் எனப் போற்றப்படத்தக்கவர்; கற்றோரே மேலானவர் என்பதை உணர வேண்டும்
கல்வி கற்றவன் நல்ல ஆளுமையைப் பெறுகிறான். எல்லா நாட்டுக்கும் சொந்தக்காரன் ஆகிறான். எல்லா மக்களுக்கும் உறவினராகிறான். அறியாமை இருளைப் போக்கி தெளிவுபெறுகிறான். உலகே போற்றும் உயர்வு பெறுகிறான். இக்கூற்றுகளுக்கே எத்தனையோ சான்றோர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
கல்வியைக் கள்வரால் திருட இயலாது, வெந்தணலில் வேகாது, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லாது, அள்ள அள்ளக் குறையாது.
மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு’ என்று கூறப்படுகிறது.
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு”
மணற்பாங்கான நிலத்தில் இறைக்க இறைக்க நீர் சுரக்கும். அதுபோல அறிவானது கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். இக்கல்வியை இளமையில் கற்றுத் தெளிய வேண்டும். இளமைப் பருவம் படிப்பதற்கே உரியது. இளவயதில் கற்கும் கல்வியானது பசு மரத்தணி போலவும்’, ‘கல்மேல் எழுத்து போலவும் அழியாமல் இருக்கும்.
சொல்லக் கேட்டு எழுதுக
தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு நூல்; தமிழுக்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன் தோற்றத்தால் தமிழ்நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறள் பற்றிப் பேசாத புலவர் இலர்; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இலர். பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப்படுகின்றது. பருவம் வளரவளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. திருக்குறளுக்குரிய சிறப்பே அதுதான். அஃது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல். எனவே திருக்குறளில்லாத வீடும் இருக்கக்கூடாது. திருக்குறள் படிக்காத தமிழரும் இருக்கக் கூடாது.
கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
Answer:
அறிந்து பயன்படுத்துவோம்
நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி(,) :
1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) அன்புள்ள நண்பா ,
3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
(எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
4. மேற்கொள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து, “நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
அரைப்புள்ளி (;):
1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான் ; கனக விசயருடன் போரிட்டான்.
2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) நல்லவன் வாழ்வான் ; தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி ( :’):
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற் புள்ளி வரும். (எ.கா.) முத்தமிழ் : இயல், இசை , நாடகம்.
முற்றுப்புள்ளி (.):
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) திரு. வி. க., மா.க.அ., ஊ.ஒ.ந.நி. பள்ளி
3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) நெ. து. சுந்தரவடிவேலு
வினாக்குறி ( ? ) :
வினாப் பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக் குறி இட வேண்டும். (எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி (!):
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா.) தமிழின் இனிமை தான் என்னே ! வியப்பு
பாம்பு! பாம்பு! – அச்சம்
அந்தோ ! இயற்கை அழிகிறதே! – அவலம்
ஒற்றை மேற்கோள் குறி (‘ ‘):
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும் போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.) ‘நல்ல ‘ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.
இரட்டை மேற்கோள் குறி (” “) :
நேர் கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கால திரு.வி.க. மாணவர்களிடம், “தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார் .
பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
Question 1.
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
Answer:
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
Question 2.
திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
Answer:
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
Question 3.
தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
Answer:
தமிழ்மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது.
Question 4.
கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
Answer:
கபிலன் தன் தந்தையிடம், “இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.
Question 5.
திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
Answer:
திரு.வி.க., எழுதிய பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.
பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
Question 1.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
Answer:
நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும்.
நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். “எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்” என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்; அறிவு வளம் பெறுவோம்.
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
Question 1.
எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி மாபெரும் புத்தகக் கா நடத்தப்படுகிறது?
Answer:
உலகப் புத்தக நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
Question 2.
புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
Answer:
இராயப்பேட்டை, YMCA மைதானம்.
Question 3.
புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
Answer:
ஏப்ரல் 13 முதல் 23 முடிய 11 நாள்கள் நடைபெறுகிறது.
Question 4.
புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
Answer:
நுழைவுக் கட்டணம் இல்லை . அனுமதி இலவசம்.
Question 5.
புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
Answer:
நூல்களுக்கான விலையில் 10 சதவீத கழிவு.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
நூலகம்
முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை.
முன்னுரை:
கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ என்பர் சான்றோர். கற்க கசடற என்று வள்ளுவரும் கூறியுள்ளார். அவ்வாறு கற்பதற்குத் துணைபுரிபவை நூல்கள். அந்நூல்கள் உள்ள இடம் நூலகம். சான்றோர்கள் பலரையும், பேச்சாளர்கள் பலரையும் உருவாக்கிய நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நூலகத்தின் தேவை :
பாடப் புத்தகத்தை மட்டும் படித்து அறிவு பெற்றால் போதும் என்றில்லாமல் உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். வாழ்வியலுக்கான நற்பண்புகளை நூல்களின் கருத்து வழியே வலுப்படுத்திக் கொள்ளலாம். பலதுறை சார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிவு பெறலாம்.
பேச்சாளர்கள் பலரின் கருத்துகளையும், சாதனையாளர்களின் சாதனைகளையும் படித்து அறியலாம். அவற்றை நமக்கு முன்மாதிரியாக நினைத்து நாமும் நம்மைப் பண்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இக்காரணங்களுக்காக நூலகம் தேவைப்படுகிறது.
நூலகத்தின் வகைகள் :
பள்ளி நூலகம், பொது நூலகம், ஆராய்ச்சி நூலகம், சிறப்பு நூலகம், தேசிய நூலகம் எனப் பல வகைகளில் நூலகம் உள்ளது. இவை மட்டுமன்றி பொது நூலகத்தின் கீழ் மாநில மைய நூலகம், மாவட்ட நூலகம், வட்டார நூலகம், பகுதி நேர நூலகம், நடமாடும் நூலகம் போன்றவையும் மக்களுக்கு உதவுகின்றன.
நூலகத்திலுள்ளவை :
நூலகத்தில் கதை, கட்டுரை போன்ற இயல்களில் நூல்கள் நிரம்பியிருக்கும். சிறுகதை, நாவல், கவிதை, கல்வி, பொருளியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம், உளவியல், பொறியியல், பயன்படு கலைகள் போன்ற தலைப்புகளில் துறைசார்ந்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலும், நாளேடுகள், பருவ இதழ்கள் நூலகத்தில் படிக்கக் கிடைக்கும்.
படிக்கும் முறை :
நூலகத்தில் சத்தம் போட்டுப் படிக்கக்கூடாது. நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நூல்களில் எவ்விதக் குறிப்பையும், கிறுக்குதலையும் செய்யக்கூடாது. படிக்க விரும்பும் நூல்களை நூல்களின் அனுமதி பெற்று எடுத்துப் படிக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு நூலகரிடம் கொடுக்க வேண்டும். நூல்களைச் சேதப்படுத்தாமல் படிக்க வேண்டும். நூலக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முடிவுரை :
நம் சான்றோர்கள் கூறியபடி வீட்டிற்கொரு நூலகம் அமைத்து பயன்பெறுவோம். நல்ல நூல்களை நாளும் கற்று, நல்லறிவு பெறுவோம். வருங்கால சமுதாயம் அறியாமை என்ற இருள் நீங்கி கல்வி என்ற ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற முயல்வோம்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.
1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்
2. கேடில் விழுச்செல்வம் ……………..
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று
4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.
5. ஏட்டுக்கல்வியுடன் …………….. கல்வியும் பயில வேண்டும்.
6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.
7. மா + பழம் என்பது ……………. விவகாரம்.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்….
1. நாள்தோறும் ஒரு திருக்குறள் கற்பேன்.
2. அனைவரிடமும் அன்பு கொண்டு வாழ்வேன்.
கலைச்சொல் அறிவோம்
1. நிறுத்தக்குறி – Punctuation
2. அணிகலன் – Ornament
3. திறமை – Talent
4. மொழிபெயர்ப்பு – Translation
5. விழிப்புணர்வு – Awareness
6. சீர்திருத்தம் – Reform
கூடுதல் வினாக்கள்
நீரப்புக.
1. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் ……………….. ஆகும்.
2. வேற்றுமை ……………….. வகைப்படும்.
3. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் …………….. இல்லை.
4. முதல் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
5. எட்டாம் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
6. இரண்டாம் வேற்றுமையைச் ……………………. வேற்றுமை என்றும் கூறுவர்.
7. கருவிப் பொருள், கருத்தாப்பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும் வேற்றுமை …………………
8. ஆக’ என்னும் அசை சேர்ந்து வரும் வேற்றுமை …………………… வேற்றுமை.
9. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் ……………….
10. கிழமைப்பொருளில் வரும் வேற்றுமை ………………… வேற்றுமை.
11. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பது ……………….. எனப்படும்.
12. ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் வரும் வேற்றுமை உருபு ………………
13. ‘செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ’ – இத்தொடரில் உள்ள வேற்றுமை …………………
14. ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இத்தொடரில் உள்ள வேற்றுமை உருபு – ……………….
Answer:
1. வேற்றுமை உருபுகள்
2. எட்டு
3. உருபுகள்
4. எழுவாய் வேற்றுமை
5. விளிவேற்றுமை
6. செயப்படுபொருள்
7. மூன்றாம் வேற்றுமை
8. நான்காம்
9. ஒடு, ஓடு
10. ஆறாம்
11. விளிவேற்றுமை
12. இல்
13. கு – நான்காம் வேற்றுமை
14. கொண்டு
விடையளி :
Question 1.
வேற்றுமை என்பது யாது?
Answer:
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை வேற்றுமை எனப்படும்.
Question 2.
வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை.
Question 3.
முதல் வேற்றுமை – விளக்குக.
Answer:
(i) எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
(ii) முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்றும் அழைக்கப்படும்.
(iii) எ.கா. பாவை வந்தாள்.
Question 4.
இரண்டாம் வேற்றுமை உருபு யாது? இரண்டாம் வேற்றுமையை விளக்குக.
Answer:
(i) இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’.
(ii) இது ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டும். அதனால் இதனைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
(iii) எ.கா. – கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.
Question 5.
இரண்டாம் வேற்றுமை எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறுவகையான பொருள்களில் வரும்.
Question 6.
இரண்டாம் வேற்றுமை உருபு – சான்றுகள் தருக.
Answer:
(i) ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
(ii) அழித்தல் – பெரியார் மூட நம்பிக்கைகளை ஒழித்தார்.
(iii) அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்.
(iv) நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்.
(v) ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது.
(vi) உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்.
Question 7.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?
Answer:
மூன்றாம் வேற்றுமை உருபுகள் : ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை.
Question 8.
கருத்தாப் பொருள் விளக்குக.
Answer:
(i) கருத்தாப் பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.
(ii) ஏவுதல் கருத்தா – பிறரைச் செய்ய வைப்பது.
எ.கா. கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
(iii) இயற்றுதல் கருத்தா – தானே செய்வது.
எ.கா. சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது.
Question 9.
மூன்றாம் வேற்றுமை உருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள் தருக. .
Answer:
(i) ஆல் – மரத்தால் சிலை செய்தான்.
(ii) ஆன் – புறந்தூய்மை நீரான் அமையும்.
(iii) ஒடு – தாயொடு குழந்தை சென்றது.
(iv) ஓடு – அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
Question 10.
நான்காம் வேற்றுமை உருபு யாது? அது எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
(i) நான்காம் வேற்றுமை உருபு – கு.
(ii). இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவதால், பொருட்டு, முறை, எல்லை ஆகிய பொருள்களில் வரும்.
Question 11.
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் யாவை? அவை எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
(i) ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இன், இல்.
(ii) அவை நீங்கல், ஒப்பு, எல்லை , எது ஆகிய பொருள்களில் வரும்.
Question 12.
ஆறாம் வேற்றுமை உருபுகள் யாவை?
Answer:
(i) ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன. இவ்வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்.
(ii) எ.கா. இராமனது வில், நண்ப னது கை.
Question 13.
ஏழாம் வேற்றுமை உருபு யாது?
Answer:
ஏழாம் வேற்றுமை உருபு – கண்.
Question 14.
ஏழாம் வேற்றுமை சான்றுடன் விளக்குக.
Answer:
(i) ஏழாம் வேற்றுமை உருபு – கண்
(ii) மேல், கீழ், கால், இல், இடம் போன்ற உருபுகளும் உண்டு .
(iii) ஏழாம் வேற்றுமை உருபு இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் இடம்பெறும். எ.கா. எங்கள் ஊரின்கண் மழை பெய்தது, இரவின்கண் மழை பெய்தது.
Question 15.
எட்டாம் வேற்றுமை சான்றுடன் விளக்குக.
Answer:
(i) விளிப் பொருளில் வரும்.
(ii) படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதால் விளி வேற்றுமை’ எனப்படுகிறது.
(iii) இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது.
எ.கா. அண்ணா வா!