Students can Download 8th Tamil Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
கற்பவை கற்றபின்
Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிந்து தனித்தனியே தொகுக்க.
Answer:
தொகைநிலைத் தொடர் :
(i) ஆற்றல் உடையது – வேற்றுமைத்தொகை
(ii) சுடுமண் – வினைத்தொகை
(iii) சிற்றூர் – பண்புத்தொகை
(iv) வெற்றிலை பாக்கு – உம்மைத்தொகை
(v) மலர்விழி – உவமைத்தொகை
(vi) மலர்விழி வந்தாள் – அன்மொழித்தொகை
தொகாநிலைத் தொடர் :
(i) கல்லூரி மாணவி மலர்விழி – எழுவாய்த் தொடர்
(ii) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! – விளித்தொடர்
(iii) என்கிறார் அடியார்க்கு நல்லார் – வினைமுற்றுத் தொடர்
(iv) கட்டிய – பெயரெச்சத் தொடர்
(v) தோன்றிக் கிளைத்தன – வினையெச்சத் தொடர்
(vi) தொடர்பைக் காட்டும் – வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(vii) மற்றொன்று – இடைச்சொல் தொடர்
(viii) மாநிலம் – உரிச்சொல் தொடர்
(ix) ஓடி ஓடி – அடுக்குத் தொடர்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ………………….
அ) வேற்றுமைத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) அன்மொழித்தொகை
Answer:
அ) வேற்றுமைத்தொகை
Question 2.
‘செம்மரம்’ என்னும் சொல் …………….. த்தொகை.
அ) வினை
ஆ) பண்பு
இ) அன்மொழி
ஈ) உம்மை
Answer:
ஆ) பண்பு
Question 3.
‘கண்ணா வா!’ – என்பது ………………….த் தொடர்.
அ) எழுவாய்
ஆ) விளி
இ) வினைமுற்று
ஈ) வேற்றுமை
Answer:
ஆ) விளி
பொருத்துக
1. பெயரெச்சத் தொடர் – கார்குழலி படித்தாள்.
2. வினையெச்சத் தொடர் – புலவரே வருக.
3. வினைமுற்றுத் தொடர் – பாடி முடித்தான்.
4. எழுவாய்த் தொடர் – எழுதிய பாடல்.
5. விளித் தொடர் – வென்றான் சோழன்.
Answer:
1. பெயரெச்சத் தொடர் – எழுதிய பாடல்.
2. வினையெச்சத் தொடர் – பாடி முடித்தான்.
3. வினைமுற்றுத் தொடர் – வென்றான் சோழன்.
4. எழுவாய்த் தொடர் – கார்குழலி படித்தாள்.
5. விளித் தொடர் – புலவரே வருக.
சிறுவினா
Question 1.
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகைநிலைத் தொடர் ஆறுவகைப்படும். அவை
(i) வேற்றுமைத்தொகை
(ii) வினைத்தொகை
(iii) பண்புத்தொகை
(iv) உவமைத்தொகை .
(v) உம்மைத்தொகை
(vi) அன்மொழித்தொகை
Question 2.
இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.
Answer:
(i) இரவுபகல் – உம்மைத்தொகை
(ii) இத்தொடர் இரவும் பகலும் என விரிந்து பொருள் தருகின்றது.
(iii) இதில் சொற்களின் இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதால் உம்மைத்தொகை ஆயிற்று.
Question 3.
அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
அன்மொழித்தொகை :
(i) வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.
எ.கா. பொற்றொடி வந்தாள் பொற்றொடி – பொன்னாலான வளையல் என்பது பொருள்.
(ii) வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்கும் போது ‘பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண்’ என்னும் பொருளைத் தருகிறது.
(iii) இதில் ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ஆகிய’ என்னும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது.
(iv) ஆதலால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
மொழியை ஆள்வோம்
கேட்க
Question 1.
கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக.
Question 1.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
மனிதன் அறிவைப் பெற்றபோது உண்டான தொழில்தான் கைத்தொழில். மனிதத் தேவைகளை முதன் முதலில் நிறைவு செய்த தொழில் கைத்தொழிலே ஆகும். அத்தகைய சிறப்புடைய கைத்தொழிலைப் பற்றிப் பேசுவதற்கு வந்துள்ளேன்.
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.”
என்று நாமக்கல் கவிஞர் பாடியுள்ளார்..
இவ்வரிகள் எவ்வளவு ஆழம் பொருந்தியவை. இன்றைய இளைஞர்கள் ஏட்டுக் கல்வியை மட்டுமே பெற்றுவிட்டு, அதற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று அரசாங்கத்தையும் சமூகத்தையும் வெறுக்கிறார்கள். இவர்கள் ஏட்டுக் கல்வியோடு ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டிருந்தால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.
வாழ்க்கை என்று வருகிறபோது கண்முன் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதனைத் தீர்க்க அடிப்படைத் தேவை பெரும்பாலும் பணமாகவே இருக்கும். அப்பணத்தை ஈட்டுவதற்கு நாம் வேலையைத் தேடி அலைகிறோம். குறைந்த வருவாய்க்கு அதிகமான உடல் உழைப்பை இழக்கிறோம். ஆனால் கைத்தொழில் ஒன்றினை அறிந்திருந்தால், நாம் பலருக்கு கொடுக்கும் நிலையினைப் பெறலாம்.
நமது இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஆகும். இத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல வேலைகளை நாம் செய்யலாம்.
நெசவு நெய்தல், செக்காட்டுதல், தீப்பெட்டி செய்தல், காகிதம் தயாரித்தல், கூடை முடைதல், பாய் பின்னுதல், பொம்மை செய்தல், கயிறு திரித்தல், மரவேலை செய்தல், ஓவியங்கள் வரைதல், சிற்பங்கள் செதுக்குதல் போன்ற தொழில்கள் கைத்தொழில்கள் ஆகும். இவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்.
இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு வகையான வேலைக்குச் சென்றாலும் கைத்தொழில் மூலம் சிறு வருவாய் ஈட்டினாலும் நமக்கு இலாபம்தான். இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு ஜப்பான். ஆனால் இன்று உலக அரங்கில் பணக்கார நாடுகள் பட்டியலில் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறது.
இதற்குக் காரணம் அந்நாட்டு மக்களின் கடும் உழைப்புதான். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரியதாய் வளங்கள் இல்லையென்றாலும் அவர்களுடைய கைத்தொழிலினால் நாட்டை முன்னிலையில் வைத்துள்ளனர் ஜப்பானியர். ஒவ்வொருவரும் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ அவரவர் அறிந்த கைத்தொழிலைச் செய்து நாட்டை முன்னேற்றலாம்.
கைத்தொழில் என்றதும் நான் நூலகத்தில் படித்த ஒரு கதை என் நினைவில் வருகிறது. ஒரு மன்னர் தன் மகன் அதாவது இளவரசன் முகவாட்டத்துடன் இருப்பதைப் பார்த்தார். இளவரசனை அழைத்து முகவாட்டத்திற்கான காரணத்தைக் கேட்டார். இளவரசனும் முதலில் தயங்கினார். பிறகு, தான் மாடு மேய்க்கும் பெண்ணொருத்தியை விரும்புவதாகவும், அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மன்னன் “நாமோ நாட்டிற்கே அரசர், போயும் போயும் ஓர் ஏழைக் குடும்பத்து பெண்ணை எப்படி திருமணம் செய்வது?” என்று கேட்டார். இளவரசர் அவருடைய எண்ணத்தில் உறுதியாக இருந்ததால் அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டார். அப்பெண்ணின் தந்தை சம்மதித்தார். ஆனால் பெண் சம்மதிக்கவில்லை . காரணம் கேட்டார்.
அதற்கு அப்பெண் “இளவரசருக்கு என்ன வேலை தெரியும்? வேலை செய்யத் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறி விட்டாள். இதனையறிந்த இளவரசர் பாய் பின்னும் தொழிலைக் கற்றுக் கொண்டார். திருமணமும் நடந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு இளவரசர் வேட்டையாடச் சென்றார். காட்டுவாசிகளிடம் சிறைபட்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை. தப்பிக்க வழி தேடினார். பிறகு காட்டுவாசிகளிடம் “கோரைப் புல் கொண்டு வந்து கொடுங்கள். நான் பாய் பின்னிக் கொடுக்கிறேன். நகரத்தில் கொண்டு போய் மன்னரிடம் விற்றுவிடுங்கள். உங்களுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்குப் பணம் கிடைக்கும் என்றார்.
அவர்களும் அதேபோல் செய்தனர். இளவரசர் பின்னிக் கொடுத்த பாயில், தான் காட்டுவாசிகளின் சிறையில் இருப்பதைப் படமாக வரைந்திருந்தார். படத்தின் குறிப்பை அறிந்து மன்னர் தங்கள் படையுடன் சென்று இளவரசரை மீட்டார். இளவரசர் அரண்மனைக்கு வந்ததும் தன் மனைவிக்கு நன்றி கூறினார்.
இக்கதையில் இளவரசன் தன்னைக் காப்பாற்றி கொள்வதற்கு உதவியது அவரறிந்த கைத்தொழில்தான். எனவே, கைத்தொழில் நம்மை வளப்படுத்தும்; முன்னேற்றும் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
Question 2.
இதயம் கவரும் இசை
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
நான் இதயம் கவரும் இசை என்ற தலைப்பில் பேசவிருக்கின்றேன். இசைக்கு மயங்காதவர் உண்டோ ? ஏன்? பாம்புகூட மகுடி இசைக்கு ஆடும் அல்லவா? அப்படி இருக்க நாம் மட்டும் விதிவிலக்கா?
இசை என்றாலே இசைய வைப்பது என்பது பொருள். அதனால்தான் நாம் அனைவருக்கும் இசைக்கு இசைந்து விட்டோம். இசை பல்வேறு பயன்களைத் தருகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் இசையானது அனைவரையும் சென்றடைகின்றது. வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், செல்பேசி என அனைத்து ஊடகங்களின் வாயிலாக இசை நம்மை மகிழ்விக்கிறது.
தாய், குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுப் பாடிய காலம் போய் செல்பேசியில் அதற்கென்று ஒரு செயலி. அதனைப் போட்டுவிட்டால் குழந்தை தூங்கும். பல வீட்டில் குழந்தைகளை உண்ணச் செய்வதற்கே செல்பேசி பாட்டுதான் பயன்படுகிறது. அப்பாடலில் இசையோ, குரலொலியோ குழந்தைகளை மயங்கச் செய்கிறது.
இசையானது நோய் தீர்க்கும் ஒரு மருந்து என்று கூறினால் அது மிகையாகாது. ஓர் ஆராய்ச்சியாளர் தனது ஆராய்ச்சியின் முடிவாக – இசை உறவுகளை மேம்படுத்தும், மகிழ்ச்சியைத் தரும், நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றலை ஊக்குவிக்கும், உடலுக்கு வலிமையையும் ஆற்றலையும் தரும் என்று விவரித்துள்ளார்.
வாழ்க்கைச் சுழற்சியில் நாம் அனைவரும் மன அழுத்தம் மிக்கவர்களாக இருக்கிறோம். இதனைப் போக்க நமக்கு இசை உதவும். இந்த இசைக்கு மொழி தேவையில்லை. இசையை நாம் உணர்ந்தால் அது நமக்கு இன்பத்தைத் தரும். ‘இசை கேட்பது நல்லது. அதனை வாசிப்பது அதைவிட நல்லது’ என்பது உளவியல் நிபுணர்களின் கூற்று.
இசை மனிதனின் ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இசையால் கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, நகைச்சுவை போன்ற உணர்வுகளை உருவாக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மனமும் உடலும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். இந்நிலை பாதிக்கப்படும் போதுதான் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசை கேட்பவரின் மனதை ஈர்ந்து அவரை – தன்வயப்படுத்துகிறது. இதுவே இசையின் இயல்பாகும்.
இசைக்கு வசமாகாத இதயம் இல்லை. இசை, மனத்தொய்வு ஏற்படும்போது நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மென்மையான இசைநம்மனதுக்கு அமைதியைத் தருகிறது. – இசை மனக்கட்டுப்பாட்டைத் தரவல்லது. விலங்குகளும் பறவைகளும் கூட இசையால் கவரப்படுகின்றன. கிருஷ்ண பரமாத்மாவின் குழலோசைக்குப் பறவைகளும் பசுக்களும் கட்டுண்டு கிடந்ததைப் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் இசை நம் அனைவரின் இதயங்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை என்று கூறி விடை பெறுகிறேன்.
சொல்லக் கேட்டு எழுதுக
முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தில் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளங்குகிறது. திருவண்ணாமலைச் சாரலில் ஆயர் ஒருவர் ஆநிரைகளையும் எருமையினங்களையும் மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் அவற்றையெல்லாம் ஒன்று திரட்டினார்.
அப்போது எருமை ஒன்று காணாமல் ‘ போனதை அறிந்தார். தம் கையிலிருந்த குழலை எடுத்து இனிய இசையை எழுப்பினார். இன்னிசை கேட்ட எருமை அவரை வந்தடைந்தது. இவ்வாறு ஆயர்களின் இசைத் திறத்தைத் திருப்பதிகம் விளக்குகிறது.
கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக
(கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு)
1. இடி ………….. மழை வந்தது.
2. மலர்விழி தேர்வின் …………….. ஆயத்தமானாள்.
3. அருவி மலையில் …………… வீழ்ந்தது.
4. தமிழைக் ……………. சுவையான மொழியுண்டோ!
5. யாழ், தமிழர் …………….. இசைக் கருவிகளுள் ஒன்று.
Answer:
1. உடன்
2. பொருட்டு
3. இருந்து
4. காட்டிலும்
5. உடைய
பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை , பிடில், நாகசுரம், மகுடி.
அகரவரிசை :
1. உடுக்கை
2. உறுமி
3. கணப்பாறை
4. தவண்டை
5. தவில்
6. நாகசுரம் .
7. படகம்
8. பிடில்
9. பேரியாழ்
10. மகுடி
அறிந்து பயன்படுத்துவோம்
இணைச்சொற்கள்
தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.
(எ.கா.) தாய் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள்.
இணைச் சொற்கள் மூன்று வகைப்படும். அவை,
1. நேரிணை, 2. எதிரிணை, 3. செறியிணை
அ) ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்.
(எ.கா.) சீரும் சிறப்பும், பேரும் புகழும்.
ஆ) எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும்.
(எ.கா.) இரவுபகல், உயர்வுதாழ்வு
இ) பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்.
(எ.கா.) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்.
பின்வரும் இணைச் சொற்களை வகைப்படுத்துக.
சரியான இணைச் சொற்களை இட்டு நிரப்புக
(மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடி அசைந்து)
1. சான்றோர் எனப்படுபவர் …………….. களில் சிறந்தவர் ஆவர்.
2. ஆற்று வெள்ளம் ……………… பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் ……………… வேண்டியவர்கள்.
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ………………. இல்லை.
5.. திருவிழாவில் யானை வந்தது.
Answer:
1. கல்விகேள்வி
2. மேடுபள்ளம்
3. போற்றிப்புகழப்பட
4. வாழ்வுதாழ்வு
5. ஆடி அசைந்து
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
விடுநர் :
கவிதா ம.
எண். 15, முத்தம்மன் கோவில் தெரு,
சாய்நாதபுரம்,
வேலூர்.
பெறுநர் :
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : இருப்பிடச் சான்று வேண்டி.
வணக்கம். நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் இருக்கிறேன். நான் படிக்கும் பள்ளியில் என் இருப்பிடம் பற்றிய விவரத்தைக் கேட்கின்றனர். ஆதலால் நான் இம்முகவரியில்தான் வசிக்கிறேன் என்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
இணைப்பு :
1. ‘குடும்ப அட்டை நகல்
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
கவிதா ம.
உறைமேல் முகவரி
அஞ்சல் தலை
பெறுநர்
உயர்திரு வட்டாட்சியர் அலுவலகம்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்.
இடமிருந்து வலம்
1. முதற்கருவி எனப் பெயர் பெற்றது.
2. யாழிலிருந்து உருவான பிற்காலக் கருவி
7. இயற்கைக் கருவி
12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட
வலமிருந்து இடம்
4. வட்டமான மணி போன்ற கருவி
8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி
9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர்
மேலிருந்து கீழ்
1. 19 நரம்புகளைக் கொண்ட யாழ்
3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை …………க் கருவி
5. சிறியவகை உடுக்கை.
6. பறை ஒரு ……………. கருவி
கீழிருந்து மேல்
8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக் கருவி
10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை.
11. திருமணத்தின் போது கொட்டும் முரசு.
விடைகள்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. கைவினைக்கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.
2. இசைக் கலையை வளர்த்த சான்றார்களைப் பற்றி அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. கைவினைப் பொருள்கள் – Crafts
2. புல்லாங்குழல் Flute
3. முரசு – Drum
4. கூடைமுடைதல் – Basketry
5. பின்னுதல் – Knitting
6. கொம்பு – Horn
7. கைவினைஞர் – Artisan
8. சடங்கு – Rite
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ……………….. அல்லது …………….. எனப்படும்.
2. தொகைநிலைத் தொடர் ………………. வகைப்படும்.
3. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தருவது …………………..
4. காலம் கரந்த பெயரெச்சம் …………………….
5. உவம உருபு மறைந்து வருவது …………………
6. தொகாநிலைத் தொடர் ……………….. வகைப்படும்.
7. இடைச்சொல் வெளிப்படையாக வருவது …………… தொடர்.
8. ‘நனி நின்று’ என்பது ……………… தொடர்.
9. ‘நன்று நன்று நன்று’ ……………… தொடர்.
10. வந்த மாணவன் ……………….. தொடர்.
11. ‘புழு பூச்சி’ ……………………..
Answer:
1. சொற்றொடர், தொடர்
2. ஆறு
3. வேற்றுமைத்தொகை
4. வினைத்தொகை
5. உவமைத்தொகை
6. ஒன்பது
7. இடைச்சொல்
8. உரிச்சொல்
9. அடுக்குத்
10. பெயரெச்சத்
11. உம்மைத்தொகை
விடையளி :
Question 1.
சொற்றொடர் என்றால் என்ன?
Answer:
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.
Question 2.
வேற்றுமைத்தொகை – விளக்குக.
Answer:
இரு சொற்களுக்கிடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தருவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
எ.கா. திருவாசகம் படித்தான் – (ஐ) இரண்டாம் வேற்றுமைத் தொகை.
Question 3.
வினைத்தொகையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.
எ.கா. ஆடுகொடி (ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி)
Question 4.
பண்புத்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
எ.கா. வெண்ணிலவு (வெண்மையான நிலவு)
Question 5.
இரு பெயரொட்டுப் பண்புத் தொகை – விளக்குக.
Answer:
சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்றும் பண்புருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
எ.கா. பனை மரம் (மரம் – பொதுப் பெயர், பனை – சிறப்புப் பெயர்)
Question 6.
உவமைத்தொகை – விளக்குக.
Answer:
உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா. மலர்விழி (மலர் போன்ற விழி)
Question 7.
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை
(i) எழுவாய்த் தொடர்
(ii) விளித் தொடர்
(iii) வினைமுற்றுத் தொடர்
(iv) பெயரெச்சத் தொடர்
(v) வினையெச்சத் தொடர்
(vi) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(vii) இடைச்சொல் தொடர்
(viii) உரிச்சொல் தொடர்
(ix) அடுக்குத் தொடர்
Question 8.
எழுவாய்த் தொடர் விளக்குக.
Answer:
எழுவாயைத் தொடர்ந்து பயனிலை அமைந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது எழுவாய்த் தொடர் ஆகும். எ.கா, மல்லிகை மலர்ந்தது.
Question 9.
வினையெச்சத் தொடர் – விளக்குக.
Answer:
வினையெச்சச் சொல் வினைமுற்றுச் சொல் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது வினையெச்சத் தொடர் ஆகும். எ.கா. தேடிப் பார்த்தேன்.