Students can Download 8th Tamil Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் மாவட்டம் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக.
Answer:
எங்கள் மாவட்டம் தூத்துக்குடி. அதன் சிறப்புகள் :
தூத்துக்குடி பல நூற்றாண்டுகளாகக் கடல் வணிகத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தது. முத்துக்குளிப்புச் சிறந்து விளங்குவதால் முத்துநகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் காலத்தில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. வ.உ.சி. இத்துறைமுகத்தில்தான் சுதேசி கப்பலை இயக்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்ற சிறந்த தலைவர்கள் பலரை நாட்டுக்கு அளித்துள்ளது.
இங்கிருந்து உப்பு, பருத்திநூல், பனை பொருள்கள், நார், கருவாடு போன்றவையும் உள்நாட்டு மருந்துகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் நிலக்கரி, கொப்பரை, பருப்பு வகைகள், தானிய வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
புகழ்பெற்ற முருகர் கோயில் அமைந்துள்ள திருச்செந்தூர் இங்குதான் உள்ளது. எட்டயபுரம், கழுகுமலை, ஒட்டபிடாரம், ஆதிச்சநல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங் குறிச்சி, நவதிருப்பதி, சமணர் படுகை போன்றவை புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
துறைமுகக் கடற்கரை, ராஜாஜி பூங்கா, கக்கன் பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா, முயல் தீவு, தெப்பக்குளம் போன்றவை பொழுதுபோக்கு இடங்களாகும்.
திருச்செந்தூரில் சூரசம்காரத் திருவிழா, வெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா, தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, பாரதியார் விழா, கைலாசநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் ஆகியவை எங்கள் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்களாகும்.
உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு, பாய் பின்னுதல், மட்பாண்டங்கள் செய்தல், முத்துக் குளித்தல், சங்கு எடுத்தல் ஆகியவை இங்கு வழிவழியாக நடந்து வரும் தொழில்கள் ஆகும்.
ஜிப்சம், அல்லனைட், கார்னர்டு மணல், கிராபைட், மோனசைட், சுண்ணாம்புக்கல், நுரைக்கல், பாஸ்டேட், கெட்டி மண் போன்ற கனிமங்கள் நிறைந்தது தூத்துக்குடி மாவட்டம்.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்றுள்ள தூத்துக்குடி அனைவராலும் விரும்பப்படும் மாவட்டமாக விளங்குகின்றது என்பதைக் கூறுவதில் பெருமிதமடைகிறேன்.
Question 2.
பல்வகைத் தொழில்கள் என்னும் தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் ………………
அ) தொல்காப்பியம்
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) தொல்காப்பியம்
Question 2.
சேரர்களின் தலைநகரம் …………….
அ) காஞ்சி
ஆ) வஞ்சி
இ) தொண்டி
ஈ) முசிறி
Answer:
ஆ) வஞ்சி
Question 3.
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது …………
அ) புல்
நெல்
இ) உப்பு
ஈ) மிளகு
Answer:
ஆ) நெல்
Question 4.
ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ……………..
அ)’ காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
Answer:
ஈ) அமராவதி
Question 5.
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ………………..
அ) நீலகிரி
ஆ) கரூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) திண்டுக்கல்
Answer:
இ) கோயம்புத்தூர்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம்.
2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………
3. சேரர்களின் நாடு …………… எனப்பட்டது.
4. பின்ன லாடை நகரமாக ………… விளங்குகிறது.
Answer:
1. சேலம்
2. சின்னாளபட்டி
3. குடகு
4. திருப்பூர்
குறுவினா
Question 1.
மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.
Answer:
மூவேந்தர்களின் காலம்:
(i) தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன.
(ii) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
(iii) மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை .
(iv) வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளதனால் இவர்கள் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.
Question 2.
கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
Answer:
கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் :
(i) காவிரி
(ii) பவானி
(iii) நொய்யல்
(iv) அமராவதி (ஆன்பொருநை)
Question 3.
‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
Answer:
தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல்.
காரணம் : இங்கு நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
சிறுவினா
Question 1.
கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
Answer:
கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் :
(i) கொங்கு மண்டலச் சதகம், கார்மேகக் கவிஞரால் இயற்றப்பட்டது.
(ii) அந்நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்கு மண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.
(iii) இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்கு மண்டலம் விளங்கியது என்பர்.
இங்கு பாயும் ஆறுகள் : காவிரி, பவானி, நொய்யல், அமராவதி
Question 2.
கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.
Answer:
கரூர் மாவட்டச் செய்திகள் :
(i) கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு ‘வஞ்சி மாநகரம்’ என்னும் பெயரும் உண்டு.
(ii) கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
(iii) நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.
(iv) கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
(v) தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.
(vi) பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.
நெடுவினா
Question 1.
கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.
Answer:
கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் :
உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர். உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர்.
வெளிநாட்டு வணிகம் :
(i) கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
(ii) முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது.
(iii) இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
(iv) பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
இச்செய்தியை,
மீனோடு நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
…………..
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து (புறநானூறு)
என்னும் பாடல் விளக்குகிறது.
உள்நாட்டு வணிகம் :
சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்
என்னும் அகப்பாடல் மூலம் அறியலாம்.
கொங்கு மண்டலப் பகுதியில் இன்றைய வணிகம் :
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு தொழில்களும் வணிகமும் சிறப்பாக நடைபெறுகின்றன.
சிந்தனை வினா
Question 1.
நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு உதவி செய்வன :
(i) வேளாண்மை முன்னேற்றம்
(ii) அறிவியல் வளர்ச்சி
(iii) தொழில் வளர்ச்சி
(iv) தொலைதொடர்பு வசதி
(v) சமூக ஒற்றுமை
(vi) நாட்டின் உற்பத்தியைப் பெருக்குதல்
(vii) கல்வி முன்னேற்றம்
(viii) போக்குவரத்து வசதிகள்
(ix) பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்தல் போன்றவை நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு உதவி புரிகின்றன.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. மூவேந்தர்களின் பழமையானவர்கள் ………………..
2. சேரர்களின் நாடு ………………… எனப்பட்டது.
3. சேரர்களின் தலைநகரம் …………….
4. வஞ்சி நகர் …………………. தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் ………………….. இருந்தது.
5. பேரியாறு …………….. கடலில் கலக்கிறது.
6. வஞ்சி நகரைக் ………………. என்றும் அழைப்பர்.
7. சேரர்களின் கொடி …………………..
8. சேரர்களின் பூ ……………… .
9. சேலம் கோவைப் பகுதிகள் ……………… எனப் பெயர் பெற்றன.
10. சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்த பகுதி ……………….
11. கொங்கு மண்டலச் சதகம் இயற்றியவர் …………………
12. சேரமன்னர்களால் அடக்கப்பட்ட கடற்கொள்ளையர்கள் ………………
13. செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் …………………. என்று அழைக்கப்பட்டான்.
14. சேரர்களின் துறைமுகம் ……………
15. விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது ……………
16. நீலகிரி மாவட்டம் ………………… தொழிற்சாலைகள் நிறைந்தது.
17. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் ஊர் …………………….,
18. அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ……………….
19. திண்டுக்கல்லில் புகழ்பெற்ற சேலையின் பெயர் ………………………
20. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் …………….
21. தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் …………………. சந்தை நடைபெறுகின்றது.
22. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா …………………. அமைந்துள்ள மாவட்டம் ……………………
23. தேசிய அளவில் புகழ்பெற்ற காளைகள் …………………..
24. நாமக்கல் …………………. வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கின்றது.
25. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் …………….
26. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஊர் ………………
27. கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டவர் …………………..
28. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது …………………
Answer:
1. சேரர்கள்
2. குடநாடு
3. வஞ்சி
4. மேற்குமலைத், பேரியாற்றங்கரையில்
5. அரபிக்
6. கருவூர்
7. விற்கொடி
8. பனம்பூ
9. கொங்குநாடு
10. கொங்குநாடு
11. கார்மேகக் கவிஞர்
12. கடம்பர்
13. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
14. முசிறி
15. நெல்
16. தேயிலைத்
17. திண்டுக்கல்
18. திண்டுக்கல்
19. சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள்
20. ஈரோடு
21. மஞ்சள்
22. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, திருப்பூர்
23. காங்கேயம்
24. முட்டைக்கோழி
25. சேலம்
26. ஏற்காடு
27. கிரேக்க அறிஞர் தாலமி
28. கரூர்
குறுவினா :
Question 1.
மூவேந்தர்கள் பற்றிய தொன்மையான சான்றுகள் யாவை?
Answer:
(i) தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு -‘, உரியதாகக் கூறுகின்றன.
(ii) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
(iii) வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.
Question 2.
சேரர்கள் பற்றியும், சேரநாடு பற்றியும் எழுதுக.
Answer:
(i) மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள்.
(ii) சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடர் இதுக்குச் சான்றாகும்.
(iii) தொல்காப்பியமும் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனச் சேரரை முன் வைக்கின்றது.
(iv) சேரர்களின் நாடு குட நாடு. தலைநகர் வஞ்சி.
(v) இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்தது. இதனைக் கருவூர் என்றழைப்பர்.
(vi) துறைமுகப் பட்டினங்கள் – தொண்டி, முசிறி, காந்தளூர்.
(vii) கொடி – விற்கொடி, பூ – பனம்பூ.
Question 3.
சேர நாட்டின் எல்லைகள் யாவை?
Answer:
(i) பண்டைய சேரநாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது என்பர்.
(ii) சேலம், கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர்பெற்றன. இப்பகுதிகளைச் சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
Question 4.
நீலகிரி மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி மாவட்டம்.
(ii) இம்மாவட்டம் முழுவதும் மலைப் பகுதியாலானது.
(iii) தோட்டப்பயிர்கள் – காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோசு.
(iv) தைலமரம் வளர்க்க ப்படுகிறது.
(v) தொழிற்சாலை – புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் எண்ணெய்த் தொழிற்சாலை.
Question 5.
கோயம்புத்தூர் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
(ii) பயிர்கள் – நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்.
(iii) தொழிற்சாலைகள் – பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
Question 6.
ஈரோடு மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
(ii) பயிர்கள் – நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள்.
(iii) தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில்தான் நடைபெறுகின்றது.
(iv) ஆலைகள் – துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள்
(v) தொழில்கள் – நூல்நூற்பு, துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல் பதனிடுதல்.
Question 7.
திருப்பூர் மாவட்டம் பற்றிய செய்திகள் யாவை?
Answer:
(i) மிகச்சிறந்த பின்னலாடை நகரம்.
(ii) பயிர்கள் – நெல், கரும்பு, பருத்தி, வாழை.
(iii) இம்மாவட்டம் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித் தருகிறது.
(iv) இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
(v) தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.
Question 8.
நாமக்கல் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) இங்குள்ள மலைகள் – பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை.
(ii) பயிர்க ள் – நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி.
(iii) மலைப்பயிர்கள் – திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம்.
(iv) முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றது.
(v) தொழில்கள்- சிமெண்ட், காகிதத் தொழிற்சாலை.
(vi) தொழில் – கைத்தறி நெசவு, வெண்கலப்பொருள்கள் செய்தல்.
(vii) சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது.
Question 9.
சேலம் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்டது.
(ii) பயிர்கள் – நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு.
(iii) இந்தியாவிலேயே இங்குதான் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
(iv) தொழில் – பால் பண்ணைத் தொழில், முலாம் பூசும் தொழில்.
(v) ஆலைகள் – இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் உள்ளன
(vi) ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
(vii) தமிழ்நாட்டில் இம்மாவட்டத்தில்தான் கைத்தறி நெசவு அதிகமாக நடைபெறுகிறது.