Students can Download 8th Tamil Chapter 6.4 காலம் உடன் வரும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

Question 1.
காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
காலம் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
Answer:
(i) லாரி – சரக்குந்து
(ii) போன் – தொலைபேசி
(iii) கார் – மகிழுந்து
(iv) டீ – தேநீர்
(v) டெக்ஸ்ட் – ஜவுளி
(vi) நம்ப ர் – எண்
(vi) ஷிஃப்ட் – பணிவேளை
(viii) பீம் – தூலம்
(ix) டேப் – ஒலி நாடா
(x) டிஸைன் – வடிவமைப்பு
(xi) கார்டு – அட்டை
(xii) பெட்ஷீ ட் – படுக்கை விரிப்பு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

மதிப்பீடு

Question 1.
‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
துணிகளை நெய்து துறைமுகத்தில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனந்திகா நிறுவனம் சிக்கிக் கொண்டது. இச்சிக்கலை சுப்பிரமணி எவ்வாறு தீர்த்து வைத்தான் என்பதனையும் அதற்கு உதவிய நெசவுத் தொழிலாளரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதையைப் பார்க்கலாம்.

சுப்பிரமணியனின் கவலை :
தறியில் பாவு தீர்ந்துவிட்டால், அடுத்த பாவு பிணைக்க ஆளில்லை. ரங்கன் என்பவர் ஊரில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சுப்பிரமணி நண்பன் ரகுவைப் பார்க்கச் சென்றார். அவருடைய தறியில் வேலை செய்கிறவர்களை உதவிக்கு அனுப்புமாறு கேட்டார். அங்கும் ஆள் இல்லை என அறிந்ததும் கவலை அதிகமானது.

ரகுவின் ஆலோசனை :
சுப்பிரமணியின் கவலையை உணர்ந்த ரகு, மாயழகு என்பவரைப் போய்ப் பார்த்து, அவரது மனைவியை அழைத்துப் போகச் சொன்னார். இரவு நேரத்தில் செல்வதற்குத் தி தயங்கியவன் பிறகு வேறுவழியின்றி அப்பெண்மணியை அழைத்துச் சென்றார்.

ஒச்சம்மா :
சுப்பிரமணி பாவு பிணைக்க ஒச்சம்மாவைப் பட்டறைக்குக் காரில் அழைத்துச் சென்றார். குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு பாவு பிணைக்கத் தொடங்கினாள். அவள் உசிலம்பட்டி பக்கமுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சார்ந்தவள். மாயழகு கோம்பைத்தொழுவு என்ற ஊரைச் சார்ந்தவன். எதிர்கால நலன் கருதி வெள்ளக்கோயிலில் குடியேறினர். புதிய இடத்தில் அவளுக்கு உணவு, காற்று, நீர், ஒப்பனை எல்லாமும் மாற வேண்டியிருந்தது.

நெசவுத் தொழிலில் ஓச்சம்மா :
இயந்திர நேர்த்தி அதிகம் கொண்ட தறித்தொழிலில் பாவு பிணைத்தல், ஒடி எடுத்தல், கோன் போடுதல், எல்லாவற்றையும் சில மாதங்களில் கற்றுக்கொண்டாள். தன் குழந்தையின் கல்வியைப் பற்றி சிந்தித்து இடம் விட்டு இடம் எங்கும் மாறக்கூடாது என்று தீர்மானித்தாள்.

பாவு பிணைத்தல் :
மனதில் பலவற்றை எண்ணியபடியே பாவு பிணைந்து கொண்டிருந்தாள். இடையில் அழுத குழந்தைக்குப் பாலூட்டித் தூங்க வைத்தாள். பாவு பிணைப்பின் வேகம் குறைந்ததைப் பார்த்த சுப்பிரமணி தேநீர் வாங்கிவரச் சொல்லிக் கொடுத்தார். தறியில் பணி செய்ய மாணிக்கத்தையும் துரிதப்படுத்தினார் சுப்பிரமணி. ஒச்சம்மாவும் தேநீர் அருந்திவிட்டு சுறுசுறுப்பாக பாவு பிணைந்து முடிந்தாள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

வீட்டிற்குத் திரும்பினாள் ஓச்சம்மா :
வேலை முடிந்ததும் ஒச்சம்மாவிற்கு இரட்டைச் சம்பளம் வழங்கப்பட்டது. அவளது கண்கள் திளைப்பிலும் திகைப்பிலும் ஒரு கணம் ஒளிர்ந்தன. தனது எதிர்காலம் போல் அந்த ரூபாய்த் தாள்களை வலது கையில் இறுக்கிக் கொண்டாள். சுப்பிரமணி அவளை வீட்டில் கொண்டுபோய் விட்டான். மாயழகு வெளியே வந்து பார்த்தான். சுப்பிரமணியைத் தேநீர் குடித்துவிட்டுப் போகுமாறு கூறிவிட்டு, கடையில் வாங்கி வந்த தேநீரைக் கொடுத்தான்.

முடிவுரை :
தேநீர் குடித்துக் கொண்டே “ரொம்ப கஷ்டந்தான் நம் தொழிலு” என்றான். மாயழகு “அப்படித்தாண்ணே இருக்கும் எல்லாமும் …… உங்கள நம்பித்தான் இருக்கோம். இப்படி ஏதும் அவசரம்னா சொல்லுங்கண்ணே …… எங்களால முடிஞ்சதச் செய்யறம்” என்று கூறினான். சுப்பிரமணியும் விடை பெற்றுச் சென்றார்.