Students can Download 8th Tamil Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்
கற்பவை கற்றபின்
Question 1.
சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:
சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்டவர்கள் :
1. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
2. எஸ். தர்மாம்பாள்
3. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
4. ஈ.வே.ரா. பெரியார்
5. பாரதியார்
6. நிவேதிதா தேவி
7. பாரதிதாசன்.
8. அம்பேத்கர்
தெரிந்து தெளிவோம்
(i) அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் : போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்.
(ii) என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள். – தந்தை பெரியார்
(iii) அயோத்திதாசர் எழுதிய நூல்கள்: புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன. திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
(iv) சென்னைதாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சிமையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
அ) தமிழக
ஆ) இந்திய
இ) தென்னிந்திய
ஈ) ஆசிய
Answer:
இ) தென்னிந்திய
Question 2.
அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..
அ) ஒருபைசாத் தமிழன்
ஆ) காலணாத் தமிழன்
இ) அரைப்பைசாத் தமிழன்
ஈ) அரையணாத் தமிழன்
Answer:
அ) ஒருபைசாத் தமிழன்
Question 3.
கல்வியோடு …………. கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
அ) சிலம்பமும்
ஆ) கைத்தொழிலும்
இ) கணிப்பொறியும்
ஈ) போர்த்தொழிலும்
Answer:
ஆ) கைத்தொழிலும்
Question 4.
அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது …………
அ) ஆழ்ந்த படிப்பு
ஆ) வெளிநாட்டுப்பயணம்
இ) இதழியல் பட்டறிவு
ஈ) மொழிப்புலமை
Answer:
அ) ஆழ்ந்த படிப்பு
Question 5.
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது …………….
அ) வானம்
ஆ) கடல்
இ) மழை
ஈ) கதிரவன்
Answer:
இ) மழை
குறுவினா
Question 1.
அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?
Answer:
அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் :
(i) நல்ல சிந்தனை
(ii) சிறப்பான செயல்
(iii) உயர்வான பேச்சு
(iv) உவப்பான எழுத்து
(v) பாராட்டத்தக்க உழைப்பு
Question 2.
ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?
Answer:
ஒரு சிறந்த வழிகாட்டி :
‘ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்’ என்று அயோத்திதாசர் கூறுகிறார்.
Question 3.
திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?
Answer:
திராவிட மகாஜன சங்கம் சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் பராமரித்தல், குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல், பொது மருத்துவமனைகள் அமைத்தல், சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காகப் போராடியது.
சிறுவினா
Question 1.
அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.
Answer:
அயோத்திதாசரின் இதழ்ப்பணி :
(i) அயோத்திதாசர் 1907ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
(ii) ஓர் ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் “தமிழன்” என மாற்றினார்.
(iii) உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.
(iv) இவர் ‘தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.
(v) இவர் தமது நூல்கள் மூலமாகவும் தமது சீர்திருத்தச் சிந்தனைகளை வெளியிட்டார்.
Question 2.
அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?
Answer:
அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் :
(i) விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று.
(ii) அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
(iii) “சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது;
(iv) மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்.
(v) மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது” என்று ஆணித்தரமாகக் கூறினார் அயோத்திதாசர்.
நெடுவினா
Question 1.
வாழும்முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
வாழும் முறை :
(i) மக்கள் வாழவேண்டிய முறை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் சிறப்பானவையாகும்.
(ii) மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும்; கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழவேண்டும்.
(iii) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது. மேலும் மதியை அழிக்கும் போதைப் பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது.
(iv) ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால் அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்.
(v) ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்.
(vi) இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள் ஆகும்.
சமத்துவம் :
(i) அயோத்திதாசர், மக்கள் அனைவரும் சம உரிமை பெற்றுச் சமத்துவமாக வாழ வேண்டும் என்று விரும்பினார்.
(ii) கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.
(iii) ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
(iv) இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர், இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் அயோத்திதாசர்.
சிந்தனை வினா
Question 1.
ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?
Answer:
ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள்:
(i) அரசாங்கம் கூறும் சட்டத்திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல்.
(ii) சண்டை சச்சரவுகள் இன்றி வாழ்தல், ஒற்றுமையைப் பேணுதல்.
(iii) பொது இடங்களைச் சரியான முறையில் பயன்படுத்துதல்.
(iv) சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்களான மரங்களை வெட்டுதல், நெகிழியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்தல்.
(v) நமது தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு அறிவுறுத்தல் .
(vi) பெரியோரை மதித்தல், இறை வழிபாடு போன்றவற்றை கடைப்பிடித்தல் ஆகிய உயர்பண்புகள் அடிப்படைப் பண்புகளாகும்.
கூடுதல் வினாக்கள்
நீரப்புக
1. தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ……………………
2. அயோத்திதாசரைத் …………………. என்று போற்றுவர்.
3. அயோத்திதாசரின் இயற்பெயர் ………………
4. அயோத்திதாசர் பிறந்த ஊர் …………………..
5. அயோத்திதாசர் பிறந்த நாள் …………………
6. அயோத்திதாசர் அறிந்த மொழிகள் …………………
7. அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ள இடம் சென்னையில் உள்ள ……………….
8. திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………..
Answer:
1. அயோத்திதாசர்
2. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை
3. காத்தவராயன்
4. சென்னை
5. 20-05-1845
6. தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம்
7. தாம்பரம்
8. 1892
விடையளி :
Question 1.
அயோத்திதாசரின் சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது எது?
Answer:
(i) அயோத்திதாசர் தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
(ii) இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்துவம் உள்ளிட்ட பல்துறை நூல்களையும் ஆழ்ந்து கற்றார். இத்தகைய ஆழ்ந்த படிப்பே அயோத்திதாசரது புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
Question 2.
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் யாவை?
Answer:
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் :
(i) போகர் எழுநூறு
(ii) அகத்தியர் இருநூறு
(iii) சிமிட்டு இரத்தினச் சுருக்கம்
(iv) பாலவாகடம்.
Question 3.
அயோத்திதாசர் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
அயோத்திதாசர் எழுதிய நூல்கள் :
(i) புத்தரது ஆதிவேதம்
(ii) இந்திரர் தேச சரித்திரம்
(iii) விவாக விளக்கம்
(iv) திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
Question 4.
தனக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் என்று தந்தை பெரியார் யார் யாரைக் குறிப்பிட்டுள்ளார்?
Answer:
“பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
Question 5.
அயோத்திதாசரின் கல்விச் சிந்தனைகள் யாவை?
Answer:
அயோத்திதாசரின் கல்விச் சிந்தனைகள் :
(i) ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று அயோத்திதாசர் கருதினார்.
(ii) நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாகி ஒளி வீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
(iii) கல்வியோடுகைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் போன்றவற்றையும் கற்க வேண்டும்.
(iv) சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்வி கற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெற வேண்டும். இவ்வாறு தம் கல்விச் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.
Question 6.
அயோத்திதாசரின் வாழ்க்கை பற்றி எழுதுக.
Answer:
(i) அயோத்திதாசர் 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும். இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானார்.
(ii) அயோத்திதாசப் பண்டிதர் என்பவரிடம் இவர் கல்வியும் சித்த மருத்துவமும் பயின்றார். தம்மீது அன்பு காட்டிய அந்த ஆசிரியரது பெயரையே தமது பெயராக வைத்துக் கொண்டார்.
(iii) நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர் திருமணத்திற்குப்பிறகு பர்மாவுக்குச் சென்றார். அங்குக் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த தமிழர்களின் உரிமைகளுக்காக இவர் பாடுபட்டார்.
(iv) பின்னர் இவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பி ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார்.
(v) திராவிட மகாஜன சங்கம் அமைத்து அதன் மூலம் பல நல்ல செயல்களைச் செய்தார். இவருடைய சிந்தனைகள் சமுதாயத்தில் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.
Question 7.
மக்களையும் மழையையும் தொடர்புப்படுத்தி அயோத்திதாசர் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:
மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கதாகும்.
‘வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும். அறிவாளிகள் இல்லாமைக்குக் காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே.
அத்தகைய அரசர்கள் இல்லாமைக்குக் காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிகள் இல்லாமையே என்று கூறுவதன் மூலம் நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது’ என்கிறார் அயோத்திதாசர்.
Question 8.
அயோத்திதாசரின் தனித்தன்மைகள் யாவை?
Answer:
(i) அயோத்திதாசர் காலத்தில் பண்டிதர், புலவர், நாவலர், பேச்சாளர், எழுத்தாளர் எனப் பலர் இருந்தனர். ஆயினும், பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசரே. எனவே, அவரை அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளராக மதித்தனர்.
(ii) அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒரு தனிமனிதனின் சிந்தனைகளாக மட்டும் அமையாமல் அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாக விளங்கின.