Students can Download 8th Tamil Chapter 9.2 இளைய தோழனுக்கு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.2 இளைய தோழனுக்கு
கற்பவை கற்றபின்
Question 1.
‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க.
Answer:
தன்னம்பிக்கை :
மனிதனின் வெற்றிக்கு
மூலதனம் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை இல்லையேல்
தடம்புரள்வான் மனிதனே!
மூடனையும் அறிவாளியாக்கி
முன்னேறச் செய்யும்.
கோழையையும் வீரனாக்கி
கோபுரத்தில் அமர்த்தும்.
Question 2.
‘நம்பிக்கையே வெற்றி’ – என்பதை உணர்த்தும் கதை ஒன்றனைத் தேடி எழுதி வருக.
Answer:
ஓர் ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். வயதான கழுதை ஒன்று இருந்தது. அக்கழுதை ஒருநாள் தோட்டத்தில் இருந்த கிணற்றில் தெரியாமல் விழுந்துவிட்டது. விவசாயிக்கு எப்படி கழுதையை வெளியே கொண்டு வருவது எனத் தெரியவில்லை.
அக்கழுதையை வெளியே கொண்டு வருவதற்குச் செலவு அதிகமாகும் என்றனர் ஊர் மக்கள். அக்கழுதைக்கோ வயதாகிவிட்டது. அதனை விற்றால் கூட சிறுதொகைதான் கிடைக்கும். அதனால் பணத்தை வீணாகச் செலவு செய்ய வேண்டாம் என எண்ணினான். ஊர் மக்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தான். அது என்னவெனில் ‘ஆளுக்குக் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கிணற்றில் போட வேண்டும். அப்போது கிணற்றில் விழுந்த கழுதை மண் மூடி இறந்துவிடும்’ என்பதுதான் அவன் எடுத்த முடிவு.
எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை எடுத்துப் போட்டனர். கொஞ்ச நேரம் கழுதையின் அலறல் சத்தம் கேட்டது. அதற்குப் பின் அலறல் சத்தம் கேட்கவில்லை . விவசாயி எட்டிப் பார்த்தான். கழுதை ஊரார் கொட்டிய மண்ணைத் தனக்குச் சாதகமாய் மாற்றிக் கொண்டது. ஒவ்வொருமுறை மண் அதன்மேல் விழும் போதும் அதனை உதறி விட்டுவிட்டு மேலே வந்தது. இதனைக் கண்ட விவசாயி மீண்டும் மீண்டும் மண்ணைக் கொட்டி கழுதையை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.
கழுதை எப்படியும் உயிர் பிழைப்போம் என்று நம்பிக்கையுடன் முயற்சி செய்ததால் காப்பாற்றப்பட்டது. இக்கதை மூலம் நாம் உணர்வது கழுதையின் நம்பிக்கை நிறைந்த செயல் ஆகும்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
உன்னுடன் நீயே ………………… கொள்.
அ) சேர்ந்து
ஆ) பகை
இ) கைகுலுக்கிக்
ஈ) நட்பு
Answer:
இ) கைகுலுக்கிக்
Question 2.
கவலைகள் …………………. அல்ல.
அ) சுமைகள்
ஆ) சுவைகள்
இ) துன்பங்கள்
ஈ) கைக்குழந்தைகள்
Answer:
ஈ) கைக்குழந்தைகள்!
Question 3.
‘விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) விழி + எழும்
ஆ) விழித்து + எழும்
இ) விழி + தெழும்
ஈ) விழித் + தெழும்
Answer:
ஆ) விழித்து + எழும்
Question 4.
போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) போவது + இல்லை
ஆ) போ + இல்லை
இ) போவது + தில்லை
ஈ) போவது + தில்லை
Answer:
அ) போவது + இல்லை
Question 5.
‘படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) படுக்கை + யாகிறது
ஆ) படுக்கையா + ஆகிறது
இ) படுக்கையா + கிறது
ஈ) படுக்கை + ஆகிறது
Answer:
ஈ) படுக்கை + ஆகிறது
Question 6.
தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) தூக்கிகொண்டு
ஆ) தூக்குக்கொண்டு
இ) தூக்கிக்கொண்டு
ஈ) தூக்குகொண்டு
Answer:
இ) தூக்கிக்கொண்டு
Question 7.
விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) விழியெழும்
ஆ) விழித்தெழும்
இ) விழித்தழும்
ஈ) விழித்து எழும்
Answer:
ஆ) விழித்தெழும்
குறுவினா
Question 1.
கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
Answer:
கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளோடு உருவகப் படுத்துகிறார்.
Question 2.
தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?
Answer:
உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் நம்மையே மாற்றினால் தோல்வி நம் உயர்விற்குத் தூண்டுகோலாகும்.
சிறுவினா
Question 1.
பூமி எப்போது பாதையாகும்?
Answer:
(i) நாளை மட்டுமல்ல; இன்றும் நமது நாள்தான். அதனால் உடனே செயல்படத் தொடங்க வேண்டும். நாம் செல்லும் பாதைகள் நம்மை எதிர்க்கப்போவதில்லை.
(ii) உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் நம்மையே நாம் மாற்றினால் தோல்வியும் நம் உயர்விற்குத் தூண்டுகோலாகும். வெற்றி நம் அங்கமாகி வாழ்வில் ஒளியேற்றும்.
(iii) கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். நம்மைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தக்கூடாது. நம்மைவிட ஒருவரும் நம்மைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.
(iv) நாம் சோர்ந்து தளர்ந்தால் பூமி நம் நோய்ப்படுக்கையாகிவிடும். நாம் கிளர்ந்து எழவேண்டும். அப்போது நமக்குப் பூமி பாதையாகும்.
சிந்தனை வினா
Question 1.
வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு பண்புகள் :
1. இடைவிடா முயற்சி
2. திட்டமிட்ட உழைப்பு
3. காலமறிந்து செயல்படுதல்
4. கடின உழைப்பு
5. சோர்வில்லாப் பண்பு
6. தோல்வியைக் கண்டு மனம் தளராமை
7. பதற்றமின்றி செயல்களைச் செய்தல்
8. மிகுதியான தன்னம்பிக்கை
9. பிறரை எதிர்பார்க்காமல் செயல்களை மேற்கொள்ளுதல்
10. விட்டுக்கொடுத்து வாழும் பண்பு
11. சினமின்மை
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. மனிதனின் உள்ளத்தில் இருக்கவேண்டிய கை’ …………………..
2. நாம் நடக்கத் தயாராய் இருந்தால் பாதைகள் ……………. சொல்லாது.
3. தூக்கிக் கொண்டு திரியக்கூடாதது …………………….
4. தூங்கும் போது பூமி …………………. விழித்து நடக்கும்போது …………………
5. மு.மேத்தா …………….. இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
6. மு.மேத்தாவின் படைப்புகளுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் …………………..
Answer:
1. நம்பிக்கை
2. மறுப்புச்
3. கவலையை
4. படுக்கையாகும், பாதையாகும்
5. வானம்பாடி
6. ஆகாயத்துக்கு அடுத்தவீடு
விடையளி :
Question 1.
மு.மேத்தா இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
மு.மேத்தா இயற்றிய நூல்கள் :
கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுட நிலா, ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூல் உள்ளிட்ட பல நூல்கள்.
Question 2.
எப்போது நம் விரல்களில் கதிரவன் ஒளிவீசும்?
Answer:
நாம் செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு . கதிரவன் நம் விரல்களில் விளக்காக ஒளிவீசும்.
Question 3.
எப்போது பாதைகள் எதிர்க்காது?
Answer:
நமது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால் நாம் செல்லும் பாதைகள் நம்மை எதிர்க்கப் போவதில்லை .
Question 4.
மு.மேத்தா பற்றி எழுதுக.
Answer:
(i) மு.மேத்தா வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
(ii) புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
(iii) கண்ணீ ர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
(iv) இவர் எழுதிய ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
பாடல்
பாடலின் பொருள்
செயல்படத் தொடங்கு நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான். உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை.
உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி உன் அங்கமாகி, வாழ்வில் ஒளியேற்றும்.
கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே! உன்னைவிட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.
நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும்.
நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு. கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான்.
ஆசிரியர் குறிப்பு
வானம்பாடி இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்; கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்; கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.