Students can Download 9th Tamil Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம்
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் பெயருக்கான விளக்கம் தெரியுமா? உங்கள் பெயரும் நண்பர் பெயரும் தனித்தமிழில் அமைந்துள்ளதா? கண்டறிக.
Answer:
அன்பரசன் – அன்புக்கு அரசன்
புகழினியன் – புகழுக்கு இனியன்
அருள்செல்வி – அருள் நிறை செல்வி
மங்கையர்க்கரசி – மங்கையர்களில் அரசி
அருள்வளவன் – அருளுடை வளவன்
Question 2.
பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் வடிவமாற்றம் பெறுகின்றன என்பது குறித்துக் கலந்துரையாடுக.
எ.கா:
செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்.
வா – ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
Answer:
- தமிழ் மொழியில் ஒரு சொல் விளைவதற்கு வேராக இருப்பது வேர்ச்சொல் எனப்படும்.
- ஒரு சொல், தோன்றுவதற்கு அடியாக இருப்பது அடிச்சொல் எனப்படும்.
- ஒரு சொல்லின் முதலாக அமைவது முதல் நிலை எனப்படும். அதனை இலக்கண நூலார் பகுதி என்று கூறுவர்.
எ.கா:
செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்.
வா – வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த, வருகிறோம், வருவோம்.
பாடநூல் வினாக்கள்
குறுவினா
Question 1.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
Answer:
நான் பேசும் மொழியான தமிழ், தென் திராவிட மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது.
சிறுவினா
Question 1.
திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
Answer:
- திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளை உடையது.
- மலையாள மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும்.
- தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
Question 2.
மூன்று என்னும் எண்ணுப் பெயர் பிறதிராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
Answer:
திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. மூன்று என்னும் தமிழ் எண்ணுப் பெயர் பிற திராவிட மொழிகளில் பின்வருமாறு அமையும்.
நெடுவினா
Question 1.
திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
முன்னுரை :
திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய காலமாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் :
சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் ஆகும். இதற்கு அடிச்சொல் என்றும் பெயர். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் காணமுடிகிறது.
சான்று :
திராவிட மொழிகளின் எண்ணுப் பெயர்களும் ஒன்று போலவே அமைந்துள்ளன.
சான்று :
திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச் சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளின் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.
நிறைவுரை :
திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத்திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குத் துணையாக அமைந்துள்ளது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
இந்திய மொழிக் குடும்ப வகைகள் …………………
அ) 8
ஆ) 18
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4
Question 2.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ) மூன்று – தமிழ்
ஆ) மூணு – மலையாளம்
இ) மூடு – தெலுங்கு
ஈ) மூரு – துளு
Answer:
ஈ) மூரு – துளு
Question 3.
பொருத்துக.
அ) தெலுங்கு – i) பாரதம்
ஆ) மலையாளம் – ii) கவிராஜ மார்க்கம்
இ) தமிழ் – iii) சங்க இலக்கியம்
ஈ) கன்ன டம் – iv) இராமசரிதம்
1) அ. ii) ஆ. i) இ. iv) ஈ. iii)
2) அ. i) ஆ. iv) இ. iii) ஈ. ii)
3) அ. iv) ஆ. ii) இ. i) ஈ. iii)
4) அ. iii) ஆ. ii) இ. i) ஈ. iv)
Answer:
2) அ.i) ஆ.iv) இ.i) ஈ.ii)
Question 4.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல்
அறிஞர் ………….
அ) மாக்சுமுல்லர்
ஆ) எமினோ
கால்டுவெல்
ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்
Answer:
ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்
Question 5.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ………..க்கும் மேற்பட்டது.
அ) 1200
ஆ) 1300
இ) 800
ஈ) 1000
Answer:
ஆ) 1300
Question 6.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி
முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் ………..
அ) கமில் சுவலபில்
ஆ) கால்டுவெல்
இ) ஹோக்கன்
ஈ) ஆந்திரனோவ்
Answer:
இ) ஹோக்கன்
Question 7.
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
அ) கால்டுவெல்
ஆ) மாக்ஸ்முல்லர்
இ) ஸ்டென்கனோ
ஈ) ஹோக்கன்
Answer:
ஈ) ஹோக்கன்
நிரப்புக
8. மொழிக் குடும்பத்தின் வகைகள் எத்தனை ………?
Answer:
நான்கு
9. ‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
Answer:
அகத்தியலிங்கம்
10. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
Answer:
கால்டுவெல்
11. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ………..
Answer:
குமரிலப்பட்டர்
12. திராவிட மொழிகள் மொத்தம் ……….
Answer:
28
13. தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?
Answer:
தொல்காப்பியம்
14. ‘லீலாதிலகம்’ – எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
Answer:
மலையாளம்
குறுவினா
Question 1.
மொழிக்குடும்பம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
Answer:
உலகத்திலுள்ள மொழிகளின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில்
மொழிக்குடும்பம் பிரிக்கப்படுகிறது.
Question 2.
திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொல் பெற்றிருப்பதை விளக்கு.
Answer:
சொற்களின் இன்றியமையாப் பகுதி அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் எனப்படும். திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொல் பெற்றுள்ளன.
Question 3.
தென்திராவிட மொழிகள் யாவை?
Answer:
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா ஆகியவை தென் திராவிட மொழிகள்.
கூடுதல் வினாக்கள்
சிறுவினா
Question 1.
தமிழின் தனித்தன்மைகள் யாவை?
Answer:
- தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ்மொழி.
- இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் பேசப்படும் பெருமையுடையது தமிழ்மொழி.
- தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழி.
- திராவிட மொழிகளில் பிறமொழித் தாக்கம் குறைந்து காணப்படும் மொழி தமிழ்.
- திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகத் திகழ்கிறது தமிழ்.
- ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழ்.
- இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
- பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணை செய்வது தமிழ்.