Students can Download 9th Tamil Chapter 9.5 அணியிலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.5 அணியிலக்கணம்
கற்பவை கற்றபின்
Question 1.
கீழ்காணும் குறட்பாக்களில் அமைந்த அணி வகைகளைக் கண்டறிக.
அ) ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
Answer:
அணி : ஏகதேச உருவக அணி
அணி விளக்கம் : தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
பொருத்தம் : சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும் சான்றாண்மையைத் தாங்கிக் கொண்டு நிற்பவரை கடற்கரையாக்கி உருவகப்படுத்தாமையால் ஏகதேச உருவக அணி ஆயிற்று.
ஆ) பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து
Answer:
அணி : சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம் : வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது “சொற்பொருள் பின்வருநிலையணி” ஆகும்
பொருத்தம் : நாண்’ என்னும் சொல் வெட்கம் என்னும் பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளமையால் சொற்பொருள்பின்வருநிலையணியாயிற்று.
இ) தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
Answer:
அணி : சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம் : வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது “சொற்பொருள் பின்வருநிலையணி” ஆகும்.
பொருத்தம் : தீய என்னும் சொல் `தீமை’ என்னும் பொருளில் மீண்டும் மீண்டும்
வந்துள்ளமையால் சொற்பொருள்பின்வருநிலையணியாயிற்று.
Question 2.
உவமையணி அமைந்த பாடல் அடிகளை எழுதுக.
Answer:
குறள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.
பாடல்:
கன்று குரல் கேட்ட பசு போல மாற்றார்
கதறுவதைக்கேட்டவுடன் அன்பு செய்தால்
வென்று வரும் மனித குலம்
Question 3.
கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுக.
விருட்சங்கள்
மண்ணரசி மடக்காமலேயே
பிடித்துக் கொண்டிருக்கும்
பச்சைக் குடைகள்
Answer:
மண்ணரசி மடக்காமலேயே
பிடித்துக் கொண்டிருக்கும்
பச்சைக் குடைகள்
– முற்றுருவகம்.
மொழியை ஆள்வோம்,
மொழி பெயர்க்க.
A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
Answer:
ஒரு மான், ஒரு கடல் ஆமை, ஒரு காகம், ஓர் எலி ஆகியவை நட்பு கொண்டிருந்தன. ஒருநாள் வேடன் வலைவிரித்து மானைப் பிடித்து விட்டான். நண்பர்கள் மானைக் காப்பாற்ற திட்டம் தீட்டின. மானை, நீ இறந்ததுபோல் அசைவின்றி படுத்துக் கொள் என்றன. காகம், இறந்து போன மாதிரி படுத்திருந்த மான் மீது அமர்ந்து கொத்த தொடங்கியது. கடல் ஆமை வேடனின் வழிமறித்தது; அவனை அலைக்கழித்தது. வேடன் வலையில் அகப்பட்ட மான் இறந்து விட்டது என எண்ணி சென்று அதனை விட்டு விடுகிறான். கடல் ஆமை இன்னும் வேடனை அலைக்கழித்தபடியே இருக்கிறது. அதற்குள் எலி வலையைக் கடித்து மானைக் காப்பாற்றத் தொடங்கியது. மானை விடுத்த வேடன் கடலாமையைப் பிடிக்க எண்ணியபோது காகம் ஆமையை கொத்திக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து சென்று சிறிய கடலாமையை வேடனிடம் இருந்து காத்தது. இந்தப் பஞ்சதந்திரக் கதை குழுவாக இணைந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் பல சாதனைகளைப் புரியலாம்
என்பதை உணர்த்துகிறது.
பொருத்தமான நிறுத்தற்குறியிடுக.
ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று என்று கூறினார்.
பிள்ளைத் தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன.
அடடா என்று சிலிப்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
Answer:
ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.
“அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுருபரரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ மிகச்சிறந்ததாகத் திகழ்கிறது.
சொற்றொடர் உருவாக்குக.
Question 1.
செந்தமிழும் சுவையும் போல
Answer:
தவைவன் தலைவியாக நீவிர் இருவரும் செந்தமிழும் சுவையும் போல இணைந்தே மகிழ்வுடன் இனிதாய் வாழுங்கள்.
Question 2.
பசுமரத்தாணிபோல
Answer:
குழந்தைப் பருவத்தில் நான் மனனம் செய்த பாரதியார் பாடல்கள் அனைத்தும் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது.
Question 3.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
Answer:
என் தமிழாசிரியர் நடத்திய அணியிலக்கணம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகப் புரிந்தது.
Question 4.
அத்தி பூத்தாற்போல
Answer:
என் மாமாவின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழ்வதால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
Question 5.
மழைமுகம் காணாப் பயிர் போல
Answer:
தன் குடும்பத்தை விட்டு விடுதிக்குச் சென்ற கமலா, மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வுற்று வாடிக் காணப்பட்டாள்.
வடிவம் மாற்றுக.
பாடலில் காணும் இலக்கிய வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.
வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காள மேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காசு
அலாதொருவர் பகர ஒணாதே.
– பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.
Answer:
நூல் மதிப்புரை:
நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக
மதிப்புரை:
சமீபத்தில் நான் விரும்பிப் படித்த நூல் கவிதாசன் அவர்கள் எழுதிய “சிகரங்களைத் தொடுவோம்” என்னும் நூல் ஆகும்.
இந்நூல் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு மட்டுமல்ல, உழைத்து களைத்து சோர்ந்து போய் என்ன சமுதாயம் இது! என்று சலிப்புறும் மனங்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கின்ற நூலாகத் திகழ்கிறது எனில் மிகையாகாது. “மனிதனின் மனம் ஆற்றலின் அட்சயபாத்திரம்”
“இனிய சொற்கள் இதயங்களின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்”
“சாமானியனும் சாதனையாளனாகலாம்”
“காலையில் எழுந்ததும் உங்கள் திறமையைக் காட்ட புதிதாய் ஒருநாள் பிறந்தது என்று எண்ணுங்கள்” என்பன போன்ற சிந்தனைத் துளிகள் நிறைந்துள்ள இந்நூலைப் படிப்போர் நிச்சயமாய்ச் சிகரங்களைத் தொடுவர்.
படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் தூண்டுகோலாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும்.
படியுங்கள். உங்கள் வாழ்வில் உயருங்கள். சிகரங்களைத் தொட்டுச் சிறப்படையுங்கள்.
நயம் பாராட்டு.
”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உள்ளம்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலே” – வள்ளலார்
Answer:
முன்னுரை:
வள்ளலார் எனப் போற்றப்படும் இராமலிங்க அடிகள் சமத்துவமும், சமதர்மமும் வளரவும், சமயம் என்பது பிறர்நலன் போற்றுவதாக அமையவும் குரல் கொடுத்தவர் ஆவார். இறைவனை எண்ணி இவர் பாடிய பாடல்கள் சிறப்புடன் விலங்குகின்றன. அந்த வகையில் இவரது பாடல் ஒன்றிற்கு அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து:
எந்த ஒரு வேறுபாட்டையும் வெளிப்படுத்தாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி, தன் உள்ளத்துள்ளே ஒத்த அன்புடையவராய் இருப்பவரை இறைவன் உவந்து ஏற்கிறார் அத்தகைய உள்ளம் உடையவர்களே சித்துருவாய்த் திகழும் எம்பெருமான் நடம்புரியும் இடம் ஆகும். எல்லா வல்ல இறைவன் அடிக்கு ஏவல் புரியும் சிந்தைமிக இருந்ததால் எவ்வுயிரிடத்தும் அன்புடன் வாழ விழைந்தேன்.
மையக்கருத்து:
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி உயிர்களுக்கு ஏவல் செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டு. அவர் உள்ளத்துள்ளே இறைவன் உள்ளான் என்ற கருத்தை மையமாக வைத்து வள்ளலார் இப்பாடலைப் புனைந்துள்ளார்.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
சான்று: எத்துணையும் எவ்வுயிரும் உடையவராய் உவக்கின்றார் என மோனை நயம் அமைந்துள்ளது.
எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சான்று:
எத்துணையும், ஒத்துரிமை, சித்துரு, வித்தகர் என எதுகை நயம் மிக்குள்ளது.
சந்த நயம்:
“சந்தம் தமிழுக்குச் சொந்தம்” என்பதை உணர்த்தும் வகையில் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவல் ஓசையுடன் மையம் பொருந்த அமைந்துள்ளது.
அணி நயம்:
“எவ்வுயிரும் தம்முயிர் போல” என்பதில் உவமையணி இடம்பெற்றுள்ளது
முடிவுரை:
பக்தி உணர்வு சொட்ட பாடப்பட்டுள்ள இப்பாடல் பக்திச்சுவையும் இலக்கியச் சுவையையும் ஒருங்கே பெற்றுள்ளது.
மொழியோடு விளையாடு
Question 1.
எழுத்துகளை முறைப்படுத்தி சொற்களைக் கண்டுபிடி.
புன்பமொப்லமைழி
யனிநேம்தம்
கச்வப்ஞ்புசிழ்ச
தைக்விதுகபு
டுசிப்காட்ப
Answer:
- புன்பமொப்லமைழி – பன்மொழிப்புலமை.
- யனிநேம்தம் – மனிதநேயம்.
- கச்வப்ஞ்புசிழ்ச – வஞ்சப்புகழ்ச்சி.
- தைக்விதுகபு – புதுக்கவிதை.
- டுசிப்காட்ப – காஞ்சிப்பட்டு.
Question 2.
அகராதி காண்க.
குரிசில், தலையளி, நயம், உய்த்தல், இருசு
Answer:
- குரிசில் – பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்.
- தலையளி – முகமலர்ந்து கூறுதல், அன்பு, அருள்.
- நயம் – நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுண்மை , அருள்.
- உய்த்தல் – செலுத்துதல், நடத்துதல், நுகர்தல், அனுப்புதல், அறிவித்தல், நீக்குதல்.
- இருசு – நேர்மை, வண்டியச்சு, மூங்கில்.
Question 3.
தொகைக் சொற்களைக் கொண்டு பத்தியைச் சுருக்குக.
சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.
Asnwer:
மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்களின் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.
Question 4.
வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுக.
பூங்கொடி நேற்று பள்ளிக்குச் …………………………. (செல்). தன் தோழிகளைக் ………………………….(காண்)மகிழ்ச்சியுடன் ………………………….(உரை). பின்னர் வங்கிக்குப் ………………………….(போ) தான் கூடுதலாகச் ………………………….(செலுத்து) தொகையை திரும்பப் பெற்று(பெறு)க் ………………………….(கொள்)வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு …………………………. (வேண்டு) பொருள்களை வா)ங்கி (வா). அங்கு ………………………….(நில்) பேருந்தில் ………………………….(ஏறு) வீடு ………………………….(திரும்பு).
Answer:
பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள்(செல்). தன் தோழிகளைக் கண்டு(காண்)மகிழ்ச்சியுடன் உரையாடினாள்(உரை). பின்னர் வங்கிக்குப் போய்(போ) தான் கூடுதலாகச் செலுத்திய(செலுத்து) தொகையை திரும்பப் பெற்று(பெறு)க் கொண்டு (கொள்)வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற நில்) பேருந்தில் ஏறி(ஏறு) வீடு திரும்பினாள்(திரும்பு).
Question 5.
பொருத்தமான தமிழ் எண்களைக் கொண்டு நிரப்புக.
தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் ………………………….
இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்று …………………………. பிரிக்கப்படும். கஉ உயிரெழுத்துகள் …………………………. மெய்யெழுத்துகள் ஆகிய …………………………. எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள்…………………………. வகைப்படும்.
Answer:
தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் உசஎ.
இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்று உ பிரிவாகப் பிரிக்கப்படும். கஉ உயிரெழுத்துகள் கஅ மெய்யெழுத்துகள் ஆகிய நு0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.
Question 6.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:
நிற்க அதற்குத்தக….
Question 7.
நான் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால்..
அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்
இயன்றவரை பிறருக்கு உதவுவேன்.
பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பேன்…………………………………………………………………………………………….
Answer:
- அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்
- இயன்றவரை பிறருக்கு உதவுவேன்.
- பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பேன்
- அனைவரையும் ஈடுபாட்டுடன் பணிபுரியச் செய்வேன்.
- என் கீழ் பணிபுரிவோரின் சுக துக்கங்களில் பங்கு கொள்வேன்.
- அன்பு கலந்த கண்டிப்புடன் கடமையாற்றுவேன்.
கலைச் சொல்லாக்கம்
மனிதம் – (Humane)
ஆளுமை – (Personality)
பண்பாட்டுக் கழகம் – (Cultural academy)
வசனகவிதை – (free verse)
உவமையணி – (Simitee)
உருவக அணி – (Metabhor)
Answer:
மனிதம் – (Humane) மனிதப் பண்புகளாகிய நற்பண்புகளைக் குறிப்பது.
ஆளுமை – (Personality) புறத்தோற்றத்தை மட்டும் குறிப்பது அல்ல நற்பண்புகள் ஆளுமைத் தன்மை, தலைமைப் பண்புகளையும் குறிப்பது.
பண்பாட்டுக் கழகம் – (Cultural academy) பண்பாடு, நாகரிகத்தைப் பறைசாற்றும் அமைப்பு
வசனகவிதை – (free verse) இலக்கணத்துக்குள் கட்டுப்படாது. பேசுவது போல் கருத்தைக் கூறுவது.
உவமையணி – (Simitee) ஒரேதன்மையை உரைப்பது.
உருவக அணி – (Metabhor) உவமை. உவமேயம் ஒன்றே என்று தோன்றக் கூறுவது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
அ) சொல் பின்வருநிலையணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி
Answer:
ஆ) பொருள் பின்வருநிலையணி
குறுவினா
Question 1.
நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன் – இத்தொடரில் அமைந்துள்ள உருவகத்தைக் கண்ட றிக.
Answer:
கவித்தேன், சுவைத்தேன் – உருவகம்
சிறுவினா
Question 1.
உருவக அணியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
ஒரு பொருளின் தன்மையைச் சிறப்பிக்க அதற்கு உவமையாகும் வேறொரு பொருள் மேல் உவமையின் தன்மையை ஏற்றிக் கூறுவது உருவகம் ஆகும். உவமை உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
சான்று:
“இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்”
இப்பாடலில்
இன்சொல் – நிலம்
வன்சொல் – களை
வாய்மை – எரு
அன்பு – நீர்
அறம் – கதிர்
என உருவகிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது எது?
அ) யாப்பு
ஆ) பொருள்
இ) சொல்
ஈ) அணி
விடை:
ஈ) அணி
Question 2.
உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?
அ) உவமை
ஆ) உருவகம்
இ) பிறிதுமொழிதல்
ஈ) சிலேடை
Answer:
ஆ) உருவகம்
Question 3.
புகழ்வது போல பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும் …………. ஆகும்.
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி
இ) வஞ்சப் புகழ்ச்சியணி
ஈ) சிலேடை அணி
Answer:
இ) வஞ்சப் புகழ்ச்சியணி
Question 4.
பின்வருநிலையின் வகை…………..
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
Asnwer:
அ) 3
Question 5.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு – இக்குறட்பாவில் இடம் பெறும் அணி………………….
அ) சொல் பின்வருநிலையணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) சிலேடை அணி
Answer:
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
Question 6.
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
அ) உருவகம்
ஆ) உவமை
இ) வஞ்சப்புகழ்ச்சி
ஈ) தற்குறிப்பேற்றம்
Asnwer:
இ) வஞ்சப்புகழ்ச்சி
குறுவினா
Question 1.
அணி என்றால் என்ன?
Answer:
செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும். சொல்லாலும், பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது அணி ஆகும்.
Question 2.
பின்வருநிலை அணி என்றால் என்ன?
Asnwer:
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருவதால் ‘பின்வருநிலை’ அணியாகும்.
Question 3.
பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?
Answer:
மூன்று வகைப்படும்.
- சொல் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
Question 4.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer”:
இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி சொற்பின்வருநிலையணி ஆகும்.
விளக்கம்:
முன்வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து. வேறு பொருள் உணர்த்துவது சொற்பின்வருநிலையணி ஆகும்.
‘துப்பு’ – என்ற சொல் பல இடத்தில் வந்துள்ளது. ஆனால், நல்ல, நன்மை, உணவு – என பல பொருளில் வருகிறதால், இக்குறட்பா சொற்பின்வரு நிலைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.