Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.6 படிமம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.6 படிமம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 1.
இரவும் பகலும்
எதிரெதிர் மோதிட
உடைந்த பகலின் துண்டுகள் – இக்கவிதையில் படிம உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுக.
Answer:
இரவும் பகலும் மோதிக்கொள்ளும் வினையைக் காட்சிப்படுத்தியதால் இது வினைப்படிமம் ஆகும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
படிமம் என்பதன் பொருள்
அ) சொல்
ஆ) செயல்
இ) காட்சி
ஈ) ஒலி
Answer:
இ) காட்சி

Question 2.
‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.
அ) பயன் படிமம்
ஆ) வினைப்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) வினைப்படிமம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
கூற்று : உவமைஉருவகம்போலபடிமமும்வினை,பயன்,மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் சரி, காரணமும் சரி
ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி

Question 4.
மெய்ப்படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.
அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
ஆ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்
ஈ) வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
Answer:
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்

Question 5.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது” – இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?
Answer:

  • இப்பாடலடிகளில் மெய் (வடிவப்) படிமம் வெளிப்படுகிறது.
  • மாந்தோப்பு பருவ காலத்தின் அழகு பட்டாடையாக மரத்தைப் போர்த்தியிருப்பது பூக்களும் தளிர்களும் பட்டாடையை உடுத்திய பெண்ணின் தோற்றத்தை அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு ஒப்பிட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்” – என்று எருமையின் சுரணையைற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துபவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
ஆ) தேவதேவன்

Question 2.
“கத்தல்களின் நெருக்கடியில்
தத்துவங்கள்
குழந்தைகள் போல்
அடிக்கடி தொலைந்துபோகும்” – என்று எழுதியவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
அ) ஆ.வே.முனுசாமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) தாழைமலர் – 1. பொன்
ஆ) செருந்தி மலர் – 2. அன்ன ம்
இ) முள்ளி மலர் – 3. முத்துகள்
ஈ) புன்னை மலர் – 4. நீலமணி

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 4.
எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்
அ) அதியமான்
ஆ) நல்லியகோடன்
இ) பேகன்
ஈ) நளங்கிள்ளி
Answer:
ஆ) நல்லியகோடன்

Question 5.
‘அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்’- என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) பெரும்பாணாற்றுப்படை
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) மலைப்படுகடாம்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) சிறுபாணாற்றுப்படை

Question 6.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கின்றது’ என்ற படிமக்கவிதையின் ஆசிரியர்
அ) தேவதேவன்
ஆ) ஆ.வே.முனுசாமி
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
இ) ந. பிச்சமூர்த்தி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 7.
‘கட்டில் நிணக்கும் இழிசினன் கையது’ என்னும் புறநானூற்றில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
அ) வினைப்படிமம்

Question 8.
“காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத் துள்ளிவரும்
புதுவெயில்” – என்று கல்யாண்ஜி கவிதையில் படிமப்படுத்தப்படுவது

அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்
ஆ) கன்றின் செயல், காலை இளம் வெயிலின் அழகோடு ஒப்பிடுதல்
இ) கன்றின் செயல் இளைஞரோடு ஒப்பிடல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்

Question 9.
‘நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே’ என்னும் குறுந்தொகை பாடலில் இடம்பெறும் படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) பயன்படிமம்

Question 10.
“யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்” – என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்ப டிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) மெய்ப்ப டிமம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 11.
“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்” – என்னும் ந. பிச்சமூர்த்தியின் கவிதையில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) வடிவப்படிமம்

Question 12.
‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப என்னும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஈ) உருப்படிமம்

குறுவினா

Question 1.
படிமம் என்றால் என்ன?
Answer:

  • படிமம் என்பது காட்சி என்பது பொருள்.
  • காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி.

Question 2.
படிமத்தின் பணிகள் யாவை?
Answer:

  • காட்சித்தன்மை கொண்டவற்றை அப்படியே காணும் வகையில் வெளிப்படுத்தி தெளிவை ஏற்படுத்தலாம்.
  • புதிய முறையில் தோற்றக் கூறுகளை எழுத்துக் காட்டலாம்.
  • கருத்துத்தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டி காட்சித்தன்மை தரலாம்.
  • கருத்துக்களைப் புரிய வைக்கலாம்.
  • காட்சிக்குத் தெளிவுப்படுத்துவது, காட்சிப்படுத்துவது படிமத்தின் பணிகள் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
காட்சிப் படிமத்தை சான்றுடன் விளக்குக.
Answer:
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதி நீரில் கிடக்கும்”

எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துகிறார் கவிஞர். இது காட்சிப் படிமம் ஆகும்.

Question 4.
வினைப்படிவம் சான்றுடன் விளக்குக.
Answer:
கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ அவ்வளவு விரைவாக ஊரைக் கைப்பற்ற வந்த வீரனின் போர் என்று கீழ்வரும் பாடல் வினையைக் காட்சிப்படுத்துகின்றது.

“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனோடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரோ.”

Question 5.
பயன் படிமம் விளக்குக.
Answer:
“நோம் என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!”

இனிய செய்தல் இன்னா செய்தல் என்ற பயன்களை, இனிய வகையாக நெருஞ்சி பூவையும், இன்னாதவையாக நெருஞ்சி முள்ளையும் காட்சிப் பொருளால் படிமப்படுத்தியுள்ளார் கவிஞர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 6.
யானை தன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பின் தோன்றும் – இப்பாடலில் பயின்று வரும் படிமத்தை விளக்குக.
Answer:
இப்பாடலில் மெய்ப்படிமம் பயின்று வந்துள்ளது. மதங்கொண்ட யானையானது தன் வாய்க்குள் துதிக்கையின் மூலம் உணவை வைக்கிறது. யானையின் வாய் மலைக்குகை வாயினைப் போல் உள்ளதாகவும். துதிக்கை மலைக்குகையில் நுழையும் பாம்பினைப் போல் உள்ளதாகவும் வடிவத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

Question 7.
புதுக்கவிதையில் கையாளும் உத்திகள் யாவை?
Answer:
உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகியன.

Question 8.
படிமத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை?
Answer:
வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்).

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

சிறுவினா

Question 1.
சங்கப் பாடலில் காணப்பெறும் உவமைகளில் படிமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – விளக்குக.
Answer:
நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஓய்மா நாட்டின் காட்சி:

“அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழா அலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்”

எனும் பாடலில்

“தாழை மலர் அன்னம் போலவும்
செருந்தி மலர் பொன்னைப் போலவும்
முள்ளி மலர் நீலமணியைப் போலவும்”

புன்னை மரத்து அரும்பு முத்துப் போலவும் காட்சிப்படுத்துவதால் இப்பாடல் படிமங்களாகிறது. சங்கப்பாடலில் உவமை, உள்ளுறை மிகுதியாகக் காண முடிகிறது.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
ஒருமுறை எட்டயபுரம் அரண்மைனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சிறப்பத்தார். அவவருவால் ஒருவா சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 1
பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார். சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

‘என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க்கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக்குறிப்பிடுவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.

தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். : இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை :முன்னின்று நடத்தினார். வ.உ.சி. சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது. அவருடைய தீந்தமிழுக்குச் சான்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

“கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு , எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் : தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு.”.

(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூற்தொகுதி 4- ‘நற்றமிழ்’ என்னும் கட்டுரையிலிருந்து)

வினாக்கள்:
1. பாரதி பட்டம் பெற்ற இருவர் யார்?
2. பின்வரும் தொடருக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக: எளிமையும் தெளிவும்
3. புணர்ச்சி விதி தருக: வழக்கறிஞர்
4. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் ஒன்றினை எழுது.
5. சோமசுந்தர பாரதியார் ஈடுபட்ட போராட்டம் எது?
Answer:

  1.  சுப்பிரமணிய பாரதியார், சோம சுந்தர பாரதியார்
  2. எளிமையும் தெளிவும் – எண்ணும்மை
  3.  வழக்கறிஞர் – வழக்கு + அறிஞர்
    • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி, வழக்க் + அறிஞர் என்றானது.
    • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = கி) வழக்கறிஞர் எனப் புணர்ந்தது.
  4. தசரதனன் குறையும் – கைகேயின் நிறையும்
  5.  இந்தி எதிர்ப்புப் போராட்டம்

தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene

தமிழாக்கம்:
பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அதுமட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சினைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

இலக்கிய நயம் பாராட்டுதல்

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்! – கவிமணி தேசிக விநாயகம்

தலைப்பு :
தீண்டாமையை விரட்டுவோம்.

ஆசிரியர் குறிப்பு :
பெயர் : கவிமணி தேசிக விநாயகம்
பெற்றோர் : சிவதாணு – ஆதிலட்சுமி
பிறப்பு : 1976 – 1954
சூர்யா – இளமைத்தமிழே
ஊர் : கன்னியாகுமரி – தேரூர்
நூல்கள் : ஆசிய ஜோதி, மலரும் மாலையும்

திரண்ட கருத்து:
மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான புகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும். தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார்.

தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு அளபெடை நயங்கள் அமைந்துள்ளன.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

சான்று :
ன்மை
நாடும்
தின்மை
தீண்ட

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

எதுகை நயம் :
மதுரைக்கு வகை
செய்யுளுக்கு எதுகை முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது எதுகை.

சான்று :
பிப்பினால்
சிப்பு
தின்மை
தீண்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.

சான்று :
வாராதப்பா
வேண்டுமப்பா
மேற்குலத்தார்
ஒண்ணாதார்

அணி நயம் :
குளத்துக்கு தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு ஏற்ப இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

முடிவுரை:
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 2
உழைத்து உழவு செய்த
உப்பையெல்லாம்
வண்டியில் பூட்டி எருதோடு வணிகர்கள்
வாழ வழி கண்டு
உப்புக்கு மாற்றாக நெல்லைப் பெற
தன் மகளிரோடு உள்நாட்டுச் சந்தைக்குச்
செல்கின்ற காட்சி
வணிகர்களின் வீதிஉலாபோல்
காட்சி தருகிறது

பேச்சுவழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

எ.கா: இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ .
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும்.

2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான்.

3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.

5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.

வெட்டியும் ஒட்டியும் பேசுதல்

Question 1.
கிராமங்கள் நகரமாவது வளர்ச்சியா?
Answer:
(i) கிராமங்களில் அழிவால் நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அதுமட்டுமல்லாமல் நவீன உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக நகரங்கள் அமைகிறது.

(ii) நகரங்களின் வளர்ச்சியால் கிராமங்கள் அழிக்கப்படுகிறது. இயற்கைப் பாதிப்பு, தொழிற்சாலைப் பெருக்கத்தால் நீர் மாசுபாடு, மனவளம் குன்றல், (வேளாண்மை ) விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படக்கூடும்.

ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 3

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 5 பத்தி அமைத்தல்:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தாகை. மற்றொன்று பத்துப்பாட்டு. எட்டுத்தொகை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அகம் சார்ந்த இலக்கியங்கள் ஐந்து: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை. புறம் சார்ந்த நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

பத்துப்பாட்டு அகம், புறம் என இரண்டு : – வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அகம் சார்ந்த நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை. புறம் சார்ந்த நூல்கள்: மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை. இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.

கீழ்க்காணும் பகுதியைப் படித்து பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது; எல்லாம் மாயை; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விலாசத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.
Answer:
அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் பொய்த்தோற்றம். உள்ளூர நிற்கும் உயிர் மாசுபடவில்லை. தான் வேறு தோற்றம் வேறு. தான் இந்த உலகத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு வடிவம் என்று திடமாக நம்பியிருந்தார்.

ஏனென்றால், அவரது உயிர் அடையாளத்தைச் சோதனைப் போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ, மனிதனுக்கோ நேரம் கிடைத்ததில்லை. மனித வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையைப் புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.

செய்து கற்போம்.

Question 1.
நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைனத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.
Answer:
சிதம்பரம்:
இறைவன் நடராசர் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும் அதுவே சிதம்பரம் என்றாயிற்று என்பர். சித் + அம்பரம் = சிதம்பரம் என்றாயிற்று. சித் என்றால் அறிவு, அம்பரம் என்றால் ஆகாயம் அல்லது வெட்டவெளி. வெட்டவெளிக்கு எல்லைக் கிடையாது. அதுபோல எல்லையற்ற
அறிவைக் கொண்டவராலும் புரிந்துகொள்ள முடியாதவர் நடராசர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

குற்றாலம்:
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் என்று பெயர் பெற்றது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது.

சிவகாசி:
தென் மதுரையை ஆண்ட ஹரிகேசரிபராக்கிரம பாண்டியன் வாரனாசியிலிருந்து (வாரனாசி என்பது காசி) ஒரு சிவலிங்கத்தைக் கொண்டுவந்து நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் காசி சிவலிங்கம் பெயராலே சிகவாசி ஆயிற்று.

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். சென்னையின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது. முன்பு இங்கு நீர்நிலைகளில் செங்கழுநீர் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என்றானது.

நிற்க அதற்குத் தக

(ஆளுமைத்திறன் என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியம நடத்தை, உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, நேர்மறைச் சிந்தனைகள், அடிப்படை ஒழுக்கம், உடற்பயிற்சி ஆகிய அனைத்துமே ஆளுமைப் பண்புகளுள் அடங்கும்)

இமயா இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறாள். ஓட்டுகையில் இடையில் தடுமாறிக் கீழே விழுகிறாள். கற்றுக்கொடுக்கும் அவளுடைய அண்ணன். ‘உன்னால் இருசக்கர வாகனம் ஓட்ட இயலாது’ என்கிறான். நீங்கள் இமயாவாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?
Answer:
அண்ணா நீங்கள் எனக்குத் தொடர்ந்து ஒரு வாரம் பழக்கிக் கொடுங்கள். நிச்சயம் கற்றுக்கொள்வேன். முடியாது என்பது வெறும் பேச்சு , முடியும் என்பது உயிர் மூச்சு. எனவே, பயிற்சி மேற்கொண்டால் எந்த வேலையும் எளிமையாகும் அண்ணா .

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

பள்ளி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு நன்றியுரை நிகழ்த்த ஆசிரியர் அழைக்கின்றார். அந்நிலையில் நீவிர் என்ன செய்வீர்?
Answer:
நன்றியுரை ஆற்ற வருவதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்வேன். தலைவர், சிறப்பு விருந்தினர், : ஆசிரியர், மாணவ மாணவியர், பெற்றோர் என வரிசைப்படுத்தி நன்றி என்றாலே போதுமே! மேலும், சிறப்பு விருந்தினர் கல்வியை விலைக்கு வாங்க முடியாது. கல்விக்கூடங்களில் கற்றால் மட்டுமே கல்வியைப் பெறலாம் என்று கூறியதை முன்வைத்து நன்றி சொல்வேன்.

படிப்போம் பயன்படுத்துவோம் (நீதி மன்றம்)

1. Affidavit – ஆணை உறுதி ஆவணம்
2. Allegation – சாட்டுரை
3. Conviction – தண்டனை
4. Jurisdiction – அதிகார எல்லை
5. Plaintiff – வாதி
6. Sentence – வாக்கியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.5 தலைக்குளம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.5 தலைக்குளம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 1.
நீங்கள் இருக்கும் ஊரை வாழ ஏற்றதாய் மாற்ற மேற்கொள்ளும் வழிமுறைகளைத் தொகுக்க.
Answer:

  • கழிவுநீர் வாய்க்கால் ஊரின் உள்ளே கழிவுநீர்த் தேங்காமல் செய்தல் வேண்டும்.
  • உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை (டுழகூ) மாதம் இருமுறை குளோரின் போட்டு சுத்தம் செய்தல் வேண்டும். காரணம் குடிக்கும் நீரால்தான் அனைத்து நோய்களும் உருவாகுவதால் கவனம் செலுத்த வேண்டும்.
  • வீட்டுக் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல், துப்பரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
  • தெருவில் இடம் இருப்பின் வேப்பங்கன்று, புன்கன் கன்று இவற்றை நட்டு பராமரிக்கலாம்.
    ஆடு, மாடுகளைத் தெருவில் இரவு நேரங்களில் கட்டி அசுத்தம் செய்யக் கூடாது.
  • தேவை இல்லாமல் தெருக்குழாய்களில் தண்ணீரைத் திறந்து விடுதல் கூடாது.
  • தெருக்குழாய்களிலேயே குளிப்பது, துணி துவைப்பது கூடாது.
  • சாலையோரங்களில், வெளியிடங்களில் மலம் கழிக்கக்கூடாது. ஏனெனில் மலம் கழிப்பதால்தான் மிகத் தொற்று நோய்கள் பரவுகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பொது நலம் காக்கும் எண்ணம் இயல்பாக இருக்க வேண்டும்.
  • மேலும், தெருக்களில் எதையும் எரிப்பதைத் தவிக்க வேண்டும்.
  • சுத்தம் சோறு போடு என்று எண்ண வேண்டும். – சுற்றுப்புறமே சுகாதாரம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 2.
கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டினைப் பற்றியும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் பெரியோர்களிடம் அறிந்து வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவர்களே வணக்கம், வாழ்த்துக்கள்!
நாங்கள் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்திருந்த வீடும் – சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி நான் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

  • பண்புடையவர்களால்தான் இன்னும் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சான்றோர் கூறுவர்.
  • நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது போல நல்லவர்களால் தான் மழை பொழியும்.
  • உள்ளத்தால் (ஒருவன்) பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
  • மேற்கண்ட பொன் மொழிகளுக்கு ஏற்ப என் குடும்பத்தார், என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவர்கள்.
  • அன்புடையவர்கள், புறம் பேசாதவர்கள், பொய் பேசாதாவர்கள், ஒப்புரவு உடையவர்கள், உண்டை விளம்பிகள் என எல்லா நற்குணங்கள் பெற்றவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
  • அவர்களின் வழித்தோன்றலாகிய எங்களை ஊதில் அனைவரும் அன்புடன் நடத்துவர்.
    உயிர்களிடத்து அன்பு வேணும் – என்னும் கொள்கையோடு வாழ்ந்ததால் ஊர் மக்களும் எங்கள் குடும்பத்தையே எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
  • வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் பிறர் விரும்புமாறு நல்லதை செய்து நலமோடு வாழுங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
முன்னுரை:
மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, புலம்பெயர்வு, தலைமுறை மாற்றம் இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் முகவரியை இழக்கின்றன.

நகரத்தை நோக்கிச் செல்ல காரணம் :

  • இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் காலமாற்றத்தாலும், பல்வேறு காரணங்களாலும் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
  • பெரும்பாலும் கிராமங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது.
  • அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை.
  • முறையான தொலைதொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காண்ப்படுவதில்லை.
  • இந்தியாவில் 57 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே.
  • இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
  • நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சமவாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர்.
  • மிகச்சரியான உள்கட்டமைப்புடன் கூடிய தரமானக் கல்வி. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நோக்கி இடம் பெயர்கின்றனர்.

அடிப்படை வசதியை நோக்கி நகர்வு :

(i) வறுமை, கல்வியில் பின்னடைவு, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவை இன்றும் கிராமங்களில் காண முடிகிறது.

(ii) மின்சாரம், பேருந்து வசதி, தொழிற்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நாடுகின்றனர்.

(iii) சாதிப் பாகுபாடு இல்லாமல் தரமான கல்வியோடு தொழிற்கல்வி, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் பயிலகம், மின்னணு போன்ற நிறுவனங்கள் நகர்ப்புறத்தில் மேலோங்கி வருவதால் கிராமங்களை மக்கள் வெறுக்கின்றனர்

(iv)  இன்று நகரம் என்பது கிராமத்தைவிட பெரிய மனித குடியிருப்பு உள்ளதாக அமைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வங்கிகள், வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

முடிவுரை :
இத்தகைய காரணங்களால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறம் நோக்கிச் செல்கின்றனர். இதனால் கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து முகவரியற்று கதியின்றி அமைகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்
அ) பீர்முகமது
ஆ) தோப்பில் முகமது மீரான்
இ) அப்துல் ரகுமான்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) தோப்பில் முகமது மீரான்

Question 2.
‘தலைக்குளம்’ என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு
அ) துறைமுகம்
ஆ) கூனன் தோப்பு
இ) சித்தன் போக்கு
ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
Answer:
ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

Question 3.
தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ………….. ஊர் …………. ஆண்டு ………
அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.
ஆ) தஞ்சாவூர், உத்தமதானபுரம், 1942.
இ) சென்னை , மயிலாப்பூர், 1940.
ஈ) திருவாரூர், வலங்கைமான், 1943.
Answer:
அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 4.
தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள்
அ) தமிழ், ஆங்கிலம்
ஆ) தமிழ், இந்தி
இ) தமிழ், கன்ன டம்
ஈ) தமிழ், மலையாளம்
Answer:
அ) தமிழ், ஆங்கிலம்

Question 5.
தோப்பில் முகமது மீரான் ‘சாய்வு நாற்காலி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற ஆண்டு
அ) 1994
ஆ) 1997
இ) 1999
ஈ) 2001
Answer:
ஆ) 1997

Question 6.
தமிழக அரசின் விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் படைப்புகள்
அ) துறைமுகம், கூனன்தோப்பு
ஆ) சாய்வு நாற்காலி, துறைமுகம்
இ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
ஈ) கூனன்தோப்பு, சாய்வுநாற்காலி
Answer:
அ) துறைமுகம், கூனன்தோப்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) உம்மா – 1. அப்பா
ஆ) வாப்பா – 2. அம்மா
இ) ஏச்சு – 3. படித்துறை
ஈ) கடவு – 4. திட்டுதல்

அ) 2, 1, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 2, 1, 3, 4

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) புதுமைப்பித்தன் – 1. மலைவெடிப்பு
ஆ) சண்முகசுந்தரம் – 2. சூரிய வெப்பம்
இ) ஜெயகாந்தன் – 3. அஞ்சிய
ஈ) தி.ஜானகிராமன் – 4. விரைவு
உ) தோப்பில் முகமது மீரான் – 5. நெல்லைத்தமிழ்

அ) 4, 5, 3, 2, 1
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 5, 1
Answer:
ஆ) 5, 4, 3, 2, 1

Question 9.
சரியான கூற்றுகளைக் கண்டறிக.
i) கி. ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார்.
ii) தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் ‘கரிசல் இலக்கியம்’ என்று பெயரிட்டார்.
iii) சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் ‘தஞ்சைக் கதைகள்’ என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 10.
தலைக்குளம் கதையின் கருப்பொருள்
அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.
ஆ) தனக்கு உதவி செய்த மனிதனை தேடிக் கண்டுபிடித்து நன்றி பாராட்டுவது.
இ) பெண்களின் அவலநிலையும் ஆண்களின் அடக்குமுறையும்.
ஈ) இறந்து போன மனிதனின் சிறப்புகளைப் பேசுவது.
Answer:
அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.4 அகநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.4 அகநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 1.
தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் மகளிர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
Answer:
ஒரு பெண் நம் சமூகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் 100 சதவீதம் வேலை செய்தால் போதாது. 200 சதவீதம் உண்மையான கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்றையக் காலத்தில் திருவாரூரில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வணிகத்திலும் : ஈடுபடுத்தி, சிறந்து விளங்குகின்றனர்.

அவ்வகையில் திருவாரூரில் பிறந்து சென்னையில் பிழைப்புத் தேடி வந்த பெண் இன்று வணிகத்தில் சிறந்து விளங்குகிறாள். அவரைப் பற்றி சில வரிகள்.

வறுமை, கல்வி, பொருளாதாரம், கவலை, சோகச்சூழல் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சூழலில் சென்னை வந்த பெண் ஏதாவது செய்யத் துடிக்கிறாள்.

முன் அனுபவம் இல்லாத நிலையில் வடமாநில தோழி மூலம் பினாயில் தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு 500 ரூபாய் கடன் வாங்கி மூலப்பொருள் மூலம் பொருட்கள் வாயிலாக தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். தான் தயாரித்த பினாயிலை, அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், உணவகங்களில் நேரிடையாகச் சென்று விற்க ஆரம்பித்தார். போதிய வருமானம் கிட்டியது. வியாபாரத்தை மேலும் சிறக்கச் செய்ய அதிக மூலதனம் வைத்து இரண்டு பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டார்.

தரம் உயர்தரம் என்ற நோக்கத்தோடு உழைத்த பெண்மணி இன்று தன்னிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களையும் வணிகத்தில் ஈடுபடச் செய்தார். தன் நிறுவனத்துக்கு நிலை ஏஜென்ஸி என்ற பெயர் வைத்து பினாயில் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார் என்றால் மிகையாகாது.

ஆணுக்குப் பெண் சமம் என்று மகளிர் தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 2.
பழங்காலத் தொழில்கள் குறித்துக் கருத்தரங்க உரை உருவாக்குக.
Answer:
பழந்தமிழ் மக்கள் வாழ்வதற்காகப் பொருள் தேடுவதைக் கடமையாகக் கொண்டனர். அதற்காகப் பற்பல தொழில் வகைகளை மேற்கொண்டனர். தம் வாழிடங்களுக்கு ஏற்ப : ! தொழில்களை தேர்ந்தெடுத்தனர். மலைநாட்டு மக்கள் தேனெடுப்பது தினை விதைப்பது, காட்டுப் பகுதியில் வாழ்பவர் நிரை மேய்ப்பது; பால் கடைவது; வயல்வெளியில் உள்ளோர் உழவு செய்து நகர் அமைத்து ஆட்சி செய்வது போன்ற பணிகளையும் செய்தனர். கடற்கரைப் பகுதியில் வாழ்வோர் உப்பு விளைத்தல்; முத்து குளித்தல்; அலை கடல் ஏறி வாணிகம் செய்தல்.

தொழில் செய்தே பொருள் தேடுவதே அவர் கொள்கை. பசுக்களுக்கு நீர் வேண்டும் என்று கருதி இரத்தல் கூட இழிவான செயலாகக் கருதினர். தாமே முயற்சி செய்து நீரைப்பெற்றுப் தர வேண்டும் என்றனர்.

தாமே முயன்று தேடும் பொருளையே தமக்குரியதாகக் கருதினர். எளிய முயற்சியில் வருவதை ஏற்க மறுத்தனர்.

முயற்சி உடையார் இகழச்சியுடையார் என்பதற்கு ஏற்ப இயன்று பழந்தமிழர் தொழில்கள் செய்தனர்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
அ) எருது
ஆ) குதிரை
இ) நாய்
ஈ) யாழி
Answer:
இ) நாய்

குறுவினா

Question 1.
‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:
பெருங்கடல் – சிறுகுடிப் பரதவர்.

சிறுவினா

Question 1.
‘நெல்லின் நேரே வெண்கலம் உப்பு’ – இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.
Answer:
உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்கக் காலத்தில் பண்டமாற்று வணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

விளக்கம் :
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். தன் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒலிக்க வீதிக்குச் சென்றாள். அப்போது அந்த வீதி வழியாக வந்த வணிகனை நோக்கி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப்
பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவினார்’.
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்’
சேரி விலைமாறு கூறலின் மனைய்’
என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

இலக்கணக் குறிப்பு

பெருங்கடல் – பண்புத்தொகை
உழாஅது – செய்யுளிசை அளபெடை
வெரீஇய – சொல்லிசை அளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்

செய்த = செய் + த் + அ
செய் – பகுதி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

சாற்றி = சாற்று + இ
சாற்று – பகுதி
இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. பெருங்கடல் = பெருமை + கடல்

  • ஈறுபோதல்’ என்ற விதிப்படி, மை கெட்டு பெரு + கடல் என்றானது.
  • ‘இனமிகல்’ என்ற விதிப்படி, க-வுக்கு இனமான ங் தோன்றி, பெருங்கடல் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
அ) வேட்டம் – 1. கானவன்
ஆ) செறு – 2. மீன்பிடித்தல்
இ) உமணர் – 3. வயல்
ஈ) புனவன் – 4. உப்பு வணிகர்

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 2, 3, 4, 1

Question 2.
பொருத்திக் காட்டுக.
அ) ஞமலி – 1. சேறு
ஆ) பகடு – 2. விலை
இ) அள்ள ல் – 3. நாய்
ஈ) கொள்ளை – 4. எருது

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) என்றூழ் – 1. மலைவெடிப்பு
ஆ) விடர் – 2. சூரிய வெப்பம்
இ) கதழ் – 3. அஞ்சிய
ஈ) வெரீஇய – 4. விரைவு

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 4, 3
இ) 4, 2, 1, 3)
ஈ) 1, 2, 3, 4
Answer:
ஆ) 2, 1, 4, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 4.
‘மதர்கயல் மலைப்பின் அன்ன’ – என்பதில் ‘கயல்’ என்னும் சொல்லின் பொருள்
அ) மீன்
ஆ) விழி
இ) விண்மீ ன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மீன்

Question 5.
பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
அ) குறவர்
ஆ) ஆயர்
இ) எயினர்
ஈ) பரதவர்
Answer:
ஈ) பரதவர்

Question 6.
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்பது யாருடைய கூற்று?
அ) பரதவரின் கூற்று
ஆ) உமணர் மகள் கூவியது
இ) தலைவியின் கூற்று
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது
Answer:
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது

Question 7.
உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக் கொண்ட இடம்
அ) மணற்திட்டு
ஆ) கருஞ்சேறு
இ) வாய்க்கால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) கருஞ்சேறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 8.
‘வெய்ய உயிர்க்கும் நோயாகின்றே’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) உமணர் மகள் தந்தையிடம்
ஆ) தந்தை உமணர் மகளிடம்
இ) தலைமகன் பாங்கனிடம்
ஈ) பாங்கன் தலைமனிடம்
Answer:
இ) தலைமகன் பாங்கனிடம்

Question 9.
உப்பு விளையும் களத்திற்கு ……………. என்று பெயர்.
அ) அளம்
ஆ) பாலம்
இ) நிலம்
ஈ) களி
Answer:
அ) அளம்

Question 10.
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக விளங்கியது
அ) உப்பு
ஆ) முத்து
இ) துணி
ஈ) ஏலம்
Answer:
அ) உப்பு

Question 11.
பொருத்திக் காட்டுக.
அ) பெருங்கடல் – 1. செய்யுளிசை அளபெடை
ஆ) உழாஅது – 2. சொல்லிசை அளபெடை
இ) வெரீஇய – 3. பண்புத்தொகை

அ) 3, 1, 2
ஆ) 3, 2,1
இ) 1, 2, 3
ஈ) 2, 1, 3
Answer:
அ) 3, 1, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 12.
பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) குறுந்தாகை
ஈ) நற்றிணை
Answer:
அ) அகநானூறு

Question 13.
அகநானூறு ………. நூல்களுள் ஒன்று
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
அ) எட்டுத்தொகை

Question 14.
அகநானூறு …………….. பிரிவுகளை உடையது.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
அ) மூன்று

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள்
ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள்
இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்

அ) 2, 3, 1
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 3, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 16.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்
ii) நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.
ii) இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

அ) i), ii), சரி
ஆ) i), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

குறுவினா

Question 1.
பரதவர்கள் தொழிலான வேட்டையாடுபவை, விளைவிப்பவை எவை?
Answer:
வேட்டையாடுபவன் : கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
விளைவிப்பன : உப்பளங்களில் உழவு செய்யாமல் உப்பு விளைவிப்பவர்

Question 2.
உமணப் பெண்ணின் தோற்றத்தை விவரி.
Answer:

  • அழகும் இளமையும் வாய்ந்தவள்.
  • அவள் தம் கைகளில் அழகிய வளையல்கள் ஒலிக்க தெருவில் கைவீசி நடப்பவள்.
  • உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!’ என்று கூவினாள்.

Question 3.
தலைமகன் பாங்கற்கு உரைத்ததை அகநானூற்றுப் பாடல் மூலம் விளக்குக.
Answer:
(i) வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல. தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

(ii) எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலைய காதல் வருத்தத்திற்கும் உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 4.
உப்பங்கழி என்றால் என்ன?
Answer:
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு உப்பங்கழி என்பர்.

Question 5.
கல் உப்பை எவ்வாறு விளைவிப்பர்?
Answer:

  • உப்பங்கழிகளில் உள்ள கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்ற வகையில் அமைப்பர்.
  • இவ்வாறு அமைக்கப்பட்ட பகுதி ஆடைபோல் படியும் இந்த உப்பைக் கூட்டிச் சேகரித்துப் : பக்குவப்படுத்தி விற்பனை செய்வர்.

Question 6.
உப்பளம் என்றால் என்ன?
Answer:
கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்பர்.

சிறுவினா

Question 1.
அகநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • அகம் + நான்கு + நூறு.
  • எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூல்.
  • நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டது.
    மூன்று பெரும் பிரிவுகளை உடையது:
    களிற்றியானை நிரை – 120; மணிமிடைப் பவளம் – 180; நித்திலக் கோவை – 100
  • திணை அமைப்பு:
    பாலை – 1, 3, 5, 7;
    மருதம் – 6, 16, 26;
    குறிஞ்சி – 2, 8, 12, 18
    நெய்தல் – 10, 20, 30;
    முல்லை – 4, 14, 24
    என்ற முறையில் திணை அமைப்பு அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 2.
அகநானூற்றுப் பாடலில் வரும் நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் விளக்குக.
Answer:
திணை – நெய்தல்
பெரும்பொழுது : ஆறு பெரும்பொழுதுகளும்; சிறுபொழுது : எற்பாடு
முதற்பொருள் : கடலும் கடல் சார்ந்த இடமும்

கருப்பொருள்:
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதன், பரத்தியர்
உணவு – மீன் உப்புக்குப் பெற்றபொருள்
விலங்கு – முதலை, சுறா
பூ – நெய்தல், தாலை
மரம் – புன்னை
பறவை – கடற்காகம்
ஊர் – பட்டினம், பாக்கம்
பறை – மீன் கோட்பறை
யாழ் – விளரியாழ்
பண் – செவ்வழிப்பண்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
சான்று: ‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல்.

நெடுவினா

Question 1.
அகநானூற்றுப் பாடல் வழியாகத் தலைமகன் பாங்கற்கு உரைத்த செய்தியை விளக்குக.
Answer:

  • பழந்தமிழர்களின் தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது.
    கடற்கரையில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் செய்து, அப்பொருட்களை பண்டமாற்று முறையில் உப்பு வணிகத்தைச் செய்தனர்.
  • பரதவர் கடலில் மீன் வேட்டையாடுவர்.
  • உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.
  • வெண்மையான உப்பை வண்டியில் ஏற்றுவர்.
  • எருதுகளை விரட்ட தாழ்கோல் வைத்திருப்பர்.
  • கோடைக்காலத்தில் வெப்பத்தால் பிளவுபட்ட குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனைச் செய்வர்.
  • அத்தகைய உமணரின் பெண் அழகும், இளமையும் வாய்ந்தவள்.
  • அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் நடந்து சென்று உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பைப் பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவுகிறார்.
  • கூவுவதைக் கேட்டு நாய் குரைக்கிறது.
  • எதிர்பாராத அப்பெண் அச்சம் கொண்டு மீன்கள் போர் செய்வதுபோல் கண்கள் மருண்டன.
  • மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் கண்டேன்.
  • தினைப்புனம் அமைக்கும் கானவர் பழைய புனத்தைத் தீயிட்டு அழிக்கும்போது உருவாகும் புகையால் பெண்ணின் தந்தையின் வண்டியானது சேற்றில் சிக்கிக் கொண்டது.
  • துன்பத்தில் உள்ள எருதுக்குத் தந்தை உதவி செய்தார்.
  • எருது அடைந்த துன்பம் போல் பெண்ணின் கண்களால் நான் துன்பம் அடைந்தேன்.
  • வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீ போக்க வேண்டும் என்று தலைமகன் பாங்கற்கு உரைத்தான்.

உள்ளுறை :
எருதைத் தலைவனுக்கும்
தந்தையைப் பாங்கனுக்கும்

என உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கு உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.3 தேவாரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.3 தேவாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 1.
உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக.
Answer:
மேலாளர்,
தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு),
கடலூர் அலுவலகம்,
கடலூர்.

வணக்கம்,
சிதம்பரம் நடராசர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்விழாவினைப் பற்றிய தகவல்கள் நாங்கள் தருகிறோம். அதை உங்கள் நாளிதழிலில் வெளியிட்டு மக்கள் வருகைத்தந்து இறையருளை வேண்டுகிறோம்.

செய்தி

ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நிரல்

பஞ்சசபை, பொற்சபை, ஆகாய தலம் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராசருக்கு ஆருத்ரா தரிசன விழா.

உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறும் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கிய மறுநாள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவகாமிசுந்திரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்குத் திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, பஞ்சாங்கம் படித்தல்.

மார்கழி முதல் நாள் கொடியேற்றத்துடன் துவக்கம். தேரோட்டம் வரும் 25ஆம் தேதியும், 26ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராசமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

காலசந்தி பூஜை, ரகசிய பூஜை நடைபெறும். காலை 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராசர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரம் முன்பு காட்சி தருவார்.

தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். 9.30 மணியளவில் மகாதீபாரதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாகச் செல்வர்.

இரவு 8 மணிக்கு கொடிமர பூஜை பிறகு பஞ்சமூர்த்திகள் தங்கம் வெள்ளி வாகனத்தில் 4 வீதிகளில் உலா,

  • ஞாயிறன்று வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா
  • 21ஆம் நாள் கருட வாகனத்தில் வீதி உலா
  • 22ஆம் நாள் யானை வாகனத்தில் வீதி உலா
  • 23ஆம் நாள் தங்ககைலாச வாகனத்தில் வீதி உலா
  • 24ஆம் நாள் தங்கரதத்தின் பிஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதி உலா.
  • 25ஆம் நாள் தேரோட்டம்.
  • 26ஆம் நாள் அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ராஜசபை என்கிற

ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராச மூர்த்திக்கு மகா அபிஷேகத்துடன் மதியம் 2மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

இறையன்பர்கள் வருகை தந்து இறையருள் பெற வேண்டுகிறோம்.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.
Answer:

  • கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா
  • ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

சிறுவினா

Question 1.
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
Answer:

  • கோவில் திருவிழா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு.
  • ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
  • விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை.
  • இங்கு இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் விழாக்கள் நிறைந்த வீதியுடைய ஊர்.
  • எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
  • மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் மிசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் கண்டு இறைவன் அருள்பெற திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.

இலக்கணக் குறிப்பு

மாமயிலை – உரிச்சொற்றொடர்

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம் 1

புணர்ச்சி விதி

1. பூம்பாவாய் = பூ + வாய்
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் என்ற விதிப்படி, பா-வுக்கு இனமானம் தோன்றி, பூம்பாவாய் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா
அ) பங்குனி உத்திர விழா
ஆ) திருக்கார்த்திகை விழா
இ) சித்திரா பௌர்ணமி விழா
ஈ) தைப்பூச விழா
Answer:
அ) பங்குனி உத்திர விழா

Question 2.
தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம்
அ) மயிலாப்பூர்
ஆ) திருநெல்வேலி
இ) திருவொற்றியூர்
ஈ) வள்ளியூர்
Answer:
ஆ) திருநெல்வேலி

Question 3.
மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
அ) கபாலீசுவரர்
ஆ) தான்தோன்றிநாதர்
இ) லிங்கேசுவரர்
ஈ) பெருவுடையார்
Answer:
அ) கபாலீசுவரர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
‘மாமயிலை’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) உரிச்சொற்றொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
இ) உரிச்சொற்றொடர்

Question 5.
பொருத்திக் காட்டுக.
அ) ஐப்பசி – 1. விளக்குத் திருவிழா
ஆ) கார்த்திகை – 2. திருவாதிரைவிழா
இ) மார்கழி – 3. ஓணவிழா
ஈ) மாசி – 4. கடலாட்டு விழா

அ) 3, 1, 2, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 3, 1, 2, 4

Question 6.
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்
அ) திருநாவுக்கரசர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
Answer:
ஆ) திருஞானசம்பந்தர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 7.
திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர்
அ) சேக்கிழார்
ஆ) இராசராச சோழன்
இ) நம்பியாண்டார் நம்பி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) நம்பியாண்டார் நம்பி

Question 8.
கண்டான் என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) காண்(கண்) + ட் + ஆன்
ஆ) கண் + ட் + ஆன்
இ) காண் + ட் + ட் + ஆன்
ஈ) காண்டு + ஆன்
Answer:
அ) காண்(கண்) + ட் + ஆன்

Question 9.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ……………… என்று அழைக்கப்படுகின்றன.
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருச்சதகம்
ஈ) திருத்தொண்டத்தொகை
Answer:
அ) தேவாரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

குறுவினா

Question 1.
திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகக் குறிப்பிடுவன யாவை?
Answer:

  • கோவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக உள்ளது.
  • ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

Question 2.
திருஞானசம்பந்தர் எங்கு வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திர விழா கொண்டாடுகிறார்?
Answer:
திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் நகரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு விழா கொண்டாடுகிறார்.

Question 3.
மலி விழா, கலி விழா, பலி விழா, ஒலி விழா விளக்கம் தருக.
Answer:

  • மலி விழா – விழாக்கள் நிறைந்தது
  • கலி விழா – எழுச்சி தரும் விழா
  • பலி விழா – பூசையிடும் உத்திர விழா
  • ஒலி விழா – ஆரவார விழா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
திருமுறைகள் எத்தனை? தொகுத்தவர் யார்?
Answer:
திருமுறைகள் – 12, தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி.

Question 5.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் திருமுறையில் எந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன?
Answer:
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடியவை.

Question 6.
சம்பந்தர் பாடலில் விரவிக் கிடக்கும் செய்திகள் சில கூறுக.
Answer:

  • சமயக் கோட்பாடுகள்.
  • இசை தத்துவம்.
  • தமிழுக்கு இருந்த உயர்நிலை.
  • சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

சிறுவினா

Question 1.
திருஞானசம்பந்ார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – சம்பந்தன்
பிறப்பு – சீர்காழி
பெற்றோர் – சிவபாதவிருதயர் – பகவதி அம்மையார்
காலம் – 7ஆம் நூற்றாண்டு
சிறப்பு – அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர். முதல் மூன்று திருமுறைகள் எழுதியவர்.

Question 2.
தேவாரம் – குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் – தே + வாரம் – பாமாலை; தே + ஆரம் – பூமாலை.
  • அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • தேவாரம் மொத்தப் பாடல்கள் – 8227.
  • நம் பாடப்பகுதி முதல் மூன்று திருமுறையில் இரண்டாவது திருமுறை சம்பந்தர் பாடிய திருமயிலாப்பூர் பதிகம்.
  • தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி,

Question 3.
மயிலாப்பூரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  • மடலார்ந்த தெங்கின் மயிலை
  • இருளகற்றும் சோதித் தொன்மயிலை
  • கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
  • கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
  • கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
  • மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
  • ஊர்திரை வேலை உலாவும் உயர்மலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களைக் குறிப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம் 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.2 தெய்வமணிமாலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.2 தெய்வமணிமாலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 1.
தெய்வமணிமாலைப் பாடல் கருத்துகளுக்கு இணையான திருக்குறள்களைத் தொகுத்துத் தருக.
Answer:
புறம்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும் (குறள் – 183)

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது (குறள் – 811)

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (குறள் – 6)

இனையர்இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. (குறள் – 790)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3)

அந்தணர் என்போர் அறவோர்மற்(று) எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறைப் பண்பு
ஆ) எதிர்மறைப் பண்பு
இ) முரண்பண்பு
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஆ) எதிர்மறைப் பண்பு

குறுவினா

Question 1.
‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ தொடருக்குப் பதவுரை எழுதுக.
Answer:
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

சிறுவினா

Question 1.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:
(i) சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

(iii) சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள்புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்.

(iv) நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும் என்று கந்தகோட்டத்துக் கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார்.

நெடுவினா

Question 1.
சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தக்கோட்டப்பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப் படுகின்றன?
Answer:
மயிலாப்பூர்:
(i) இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.

(ii) அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும்.

கந்தகோட்டம்:
(i) அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே!

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(iii) உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.

(iv) நல்ல அறிவும், கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தகோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார்.

இலக்கணக் குறிப்பு

மலரடி – உவமைத்தொகை
மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வளர்தலம் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ
நினை – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பேசுவார் = பேசு + வ் + ஆர்
பேசு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

வைத்து = வை + த் + த் + உ
வை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

புணர்ச்சி விதி

1. உள்ளொன்று = உள் + ஒன்று

  • ‘தனிக்குறில் முன் உயிர்வரின் ஒற்று இரட்டும்’ என்ற விதிப்படி, உள்ள + ஒன்று என்றானது.
  • ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ள் + ஒ = ளொ) உள்ளொன்று எனப் புணர்ந்தது.

2. ஒருமையுடன் = ஒருமை + உடன்

  • ‘இஈஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, ஒருமை + ய் + உடன் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ (ய் + உ = யு) ஒருமையுடன் என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவர்
அ) வள்ளலார்
ஆ) ஞானியாரடிகள்
இ) கிருபானந்த அடிகள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) வள்ளலார்

Question 2.
வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது
அ) வள்ளுவர் கோட்டம்
ஆ) கந்த கோட்டம்
இ) தில்லை கோட்டம்
ஈ) கணபதி கோட்டம்
Answer:
ஆ) கந்த கோட்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 3.
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம்
அ) சென்னை
ஆ) வடலூர்
இ) கடலூர்
ஈ) சிதம்பரம்
Answer:
அ) சென்னை

Question 4.
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் என்று பாடியவர்
அ) இராமலிங்க அடிகள்
ஆ) ஞானியாரடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
அ) இராமலிங்க அடிகள்

Question 5.
தெய்வமணிமாலையின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Answer:
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Question 6.
துறவுக்கு எதிரான ஆசை என்று வள்ளலார் குறிப்பிடுவது.
அ) மண்ணாசை
ஆ) பெண்ணாசை
இ) பொன்னாசை
ஈ) புகழாசை
Answer:
ஆ) பெண்ணாசை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) மலரடி – 1. பெயரெச்சம்
ஆ) மறவா – 2. வினையெச்சம்
இ) வளர்தலம் – 3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நினைக்கின்ற – 4. வினைத்தொகை
உ) வைத்து – 5. உவமைத்தொகை

அ) 5, 3, 4, 1, 2
ஆ) 4, 3, 5, 2, 1
இ) 2, 1, 3, 5, 4
ஈ) 5, 2, 1, 3, 4
Answer:
அ) 5, 3, 4, 1, 2

Question 8.
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ……………. திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்

Question 9.
இராமலிங்க அடிகள் பிறந்த ஊர்
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்
ஆ) கடலூரை அடுத்த வடலூர்
இ) தஞ்சையை அடுத்த வல்லம்
ஈ) மயிலாடுதுறையை அடுத்த தேரழந்தூர்
Answer:
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 10.
திருவருட்பா ………….. திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) பன்னிரு
ஈ) பதினாறு
Answer:
இ) பன்னிரு

Question 11.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிரியர்
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
ஆ) இராமலிங்க அடிகள்

குறுவினா

Question 1.
இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.

Question 2.
இராமலிங்க அடிகளாரின் சீர்த்திருத்த சிந்தனை யாவை?
Answer:
ஆன்ம நேயம், சமய ஒருமைப்பாடு, ஒளி வழிபாடு.

Question 3.
இராமலிங்க அடிகளார் திருவருட்பா மூலம் வெளிப்படுத்தும் செய்தி யாது?
Answer:

  • வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்.
  • ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 4.
வள்ளலார் தெய்வமணிமாலை எங்கு வீற்றிருக்கும் இறைவன் மீது பாடியுள்ளாா?
Answer:
சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமான் மீது பாடியுள்ளார்.

Question 5.
திருவருட்பா – குறிப்பு வரைக.
Answer:

  • திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • திருவருட்பா – 5818 பாடல்கள்.
  • பா – ஆசிரியவிருத்தம்.
  • தொகுப்பு – ஆறு திருமுறை.
  • பாடப்பகுதி – ஐந்தாம் திருமுறை – தெய்வமணிமாலை.

சிறுவினா

Question 1.
வள்ளலார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – இராமலிங்க அடிகளார்
பெற்றோர் – இராமையா – சின்னமை
உடன்பிறந்தோர் – சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை சுந்தராம்பாள்
பிறப்பு – அக்டோபர் 5, 1823
ஊர் – மருதூர் – சிதம்பரம்
சிறப்பு – ஆன்மீகவாதி, சத்திய ஞான சபையை நிறுவியவர்.
முழக்கம் – அருட்பெருஞ்ஜோதி-தனிபெருங்கருணை வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.1 மதராசப்பட்டினம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.1 மதராசப்பட்டினம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 1.
ஒரு திட்டமிட்ட பெருநகரம் உருவாவதற்கு நீவிர் தரும் பரிந்துரைகளை, ‘கனவு நகரம்’ என்னும் தலைப்பில் ஒப்படைவாக உருவாக்குக.
Answer:
கனவு நகரம்

(i) தமிழகத்தின் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவது. இதற்காக நாவல்பட்டு கிராமம் ஒன்றையும் உருவாக்கினர். ஆனால் அந்தக் கனவு திட்டம் இன்று காலாவதியாகிவிட்டது. அத்திட்டத்தைப் பரிந்துரை செய்து நிறைவேற்றுவதே என் கனவு.

(ii) திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றி நாவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கரில் அண்ணா நகர் பகுதியைத் துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினோம். பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கு வசதி செய்யப்பட்டு அகலமான சாலைகள், ஆரம்ப சுகாதார திட்டம் உள்ளிட்ட பசுமை தொழிற்சாலைகள், தரமான கல்வி நிலையங்களின் பாதாள சாக்கடைகள் அமைக்க வேண்டும்.

(iii) பாதாள சாக்கடை நீரைச் சுத்தம் செய்ய தனி இயந்திரம், இயற்கை வேளாண் அங்காடி, குளிரூட்டப்பட்ட நூலகம் சிறாருக்கான தனி நூலகம் எனத் தனி தனியாக நூலகங்கள் அமைக்க வேண்டும்.

(iv) நெகிழி இல்லாத நகரமாகவும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாகவும் உருவாக்க வேண்டும்.
(v) வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
(vi) தடையற்ற மின்சாரம், தூய்மையான குடிநீர்; பாதுகாப்பு வசதி போன்ற வசதிகள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்வேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் –
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ, ஆ, இ அனைத்தும்
Answer:
ஈ) அ, ஆ, இ அனைத்தும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி காரணம் சரி
Answer:
ஈ) கூற்று சரி காரணம் சரி

Question 3.
பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு – 1. மாவலிபுரச் செலவு
ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2. கல்கோடரி
இ) பல்லாவரம் – 3. அருங்காட்சியகம்
ஈ) எழும்பூர் – 4. கூவம்

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 4, 1, 2, 3

குறுவினா

Question 1.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
Answer:

  • காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக் கொண்டு 1869இல் உருவாக்கப்பட்ட நூலகம்.
  • ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் காணப்படுகிறது.

சிறுவினா

Question 1.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  • சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு.
  • அந்தப் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம்.
  • இந்திய சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன.
  • ஆவணங்களை முறையாகக் கையாளும் ஆவணக் காப்பகம் (மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்) சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
  • தென்னிந்திய வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்கு எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம் துணை நிற்கின்றன.
  • இந்தியாவின் பொதுநூலகம் கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நெடுவினா

Question 1.
‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும்’ நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சென்னை :
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னை இன்று தமிழகதெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். சென்னை இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்று மற்றும் தமிழகத்தின் தலைநகரம். சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன.

மானுட எச்சம் :
பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்று கிடைக்கும் மானுட எச்சங்கள் நமது பழமையை உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

பாடல் பெற்ற தலம் :
திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாக உள்ளன.

நீர்நிலை – வடிகால் :
வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென் சென்னைக்கு அடையாறு கீழே பாலாறு இவை நான்கும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய் இருந்தன. 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் வடிகால் : பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்று தெரியவில்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நகரம் – உருவாக்கம் :
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே உள்ள வீடுகள் இருந்த பகுதி வெள்ளை நகரம்’ என்றும் வெளியே இருந்த குடியிருப்பு ‘கருப்பர் நகரம்’ என்றும் அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் வணிகத்தையே செய்தது. இதனால் நெசவாளர்கள் சென்னையை நோக்கி வந்தனர். அவர்கள் வாழ்ந்த பகுதிதான் வண்ணத்துக்காரன் பேட்டை என்பது வண்ணாரப்பேட்டை என்றும் சின்னதறிப்பேட்டை சிந்தாதரிப் பேட்டை என்றும் தோன்றியது. வடசென்னையை மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னையை சென்னைப்பட்டினம் என்றனர். ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். அது இன்று சென்னையாக உள்ளது. ஆங்கிலேயரின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது.

கல்லூரிகள் – பள்ளிகள் :

  • 1715இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’.
  • 1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி.
  • 1837இல் உருவான கிறிஸ்துவக் கல்லூரி.
  • 1840இல் பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி).
  • 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம்.
  • 1914இல் உருவான இராணிமேரிக் கல்லூரி.

போன்ற கல்லூரி பழமை வாய்ந்து அறிவின் நகரமாக விளங்குகிறது.

பண்பாட்டு அடையாளங்கள் :
சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குவது கடினம். இந்திய சாரசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்களாகத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றவை விளங்குகின்றன.

நம் சென்னை (இன்றைய சென்னை:
இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் இன்று சென்னை: முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. : மின்னணுப் பொருள்கள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

முடிவுரை:
இத்தகு பெருமைகொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் :(203) பெருமைகொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம்
அ) மதராசப்பட்டினம்
ஆ) காவிரிபூம்பட்டினம்
இ) புதுச்சேரி
ஈ) கொற்கை
Answer:
அ) மதராசப்பட்டினம்

Question 2.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது
அ) திருப்பதி
ஆ) சென்னை
இ) திருவனந்தபுரம்
ஈ) கன்னியாகுமரி
Answer:
ஆ) சென்னை

Question 3.
தமிழகத்தின் தலைநகரம்
அ) மதுரை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
ஈ) சென்னை
Answer:
ஈ) சென்னை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி நிறுவுவது
அ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
இ) அப்பகுதிகளில் மனித வாழ்வு நடைபெறவில்லை என்பதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை

Question 5.
சென்னையில் ஓடக்கூடிய ………….. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
அ) அடையாற்றுப்
ஆ) பாலாற்றுப்
இ) கூவமாற்றுப்
ஈ) கொற்றலையாற்றுப்
Answer:
ஈ) கொற்றலையாற்றுப்

Question 6.
இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கல்கோடரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
அ) கூடுவாஞ்சேரி
ஆ) பல்லாவரம்
இ) புழல்
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) பல்லாவரம்

Question 7.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி
அ) திருவல்லிக்கேணி
ஆ) மீனம்பாக்கம்
இ) மயிலாப்பூர்
ஈ) வடபழனி
Answer:
இ) மயிலாப்பூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 8.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை …………… காலத்தில் அமைக்கப்பட்டது.
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) முதலாம் நந்திவர்மன்
ஈ) மூன்றாம் நந்திர்வமன்
Answer:
அ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 9.
சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு
அ) பல்லாவரம் கல்வெட்டு
ஆ) திருவல்லிக்கேணி கல்வெட்டு
இ) மயிலாப்பூர் கல்வெட்டு
ஈ) மாதவரம் கல்வெட்டு
Answer:
அ) பல்லாவரம் கல்வெட்டு

Question 10.
சென்னையில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ள இடம்
அ) பல்லாவரம்
ஆ) மாதவரம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) வடபழனி
Answer:
இ) திருவல்லிக்கேணி

Question 11.
வள்ளல் பச்சையப்பர் ……….. நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது.
அ) கூவம்
ஆ) அடையாறு
இ) கொற்றலையாற்று
ஈ) பாலாற்று
Answer:
அ) கூவம்

Question 12.
பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) காமராசர்
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும் – என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஈ) பாரதிதாசன்

Question 14.
கி.பி. 1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் ”தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்’ என்று காணப்படும் குறிப்பால் அறியப்படும் செய்தி
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு
ஆ) வளமிகு சென்னையின் வணிக மேம்பாடு
இ) சென்னை மக்களின் செல்வ வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு

Question 15.
மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியை ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) கால்பர்ட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் பிட்
Answer:
அ) பிரான்சிஸ் டே

Question 16.
கூவம் ஆற்றை …………… என்றும் அழைத்தனர்.
அ) வடபழனி ஆறு
ஆ) திருவல்லிக்கேணி ஆறு
இ) மாதவரம் ஆறு
ஈ) பல்லாவரம் ஆறு
Answer:
ஆ) திருவல்லிக்கேணி ஆறு

Question 17.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னை – 1. பாலாறு
ஆ) தென்சென்னை – 2. கூவம்
இ) மத்திய சென்னை – 3. அடையாறு
ஈ) தென்சென்னைக்கும் கீழ் – 4. கொற்றலையாறு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 18.
பிரான்சிஸ் டே மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைச் சென்னப்பரின் இருமகன்களிடமிருந்து வாங்கிய நாள்
அ) 22.08.1639
ஆ) 23.09.1739
இ) 23.08.1640
ஈ) 24.10.1642
Answer:
அ) 22.08.1639

Question 19.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே இருந்த பகுதி …………….. என்று அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கோட்டைநகரம்
இ) தமிழர் நகரம்
ஈ) கருப்பர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 20.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்தகுடியிருப்புகள்…………..என அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கருப்பர் நகரம்
இ) கோட்டை நகரம்
ஈ) தமிழர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 21.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னைப் பகுதிகள் – 1. மதராஸ்
ஆ) தென்சென்னைப் பகுதிகள் – 2. மதராசப்பட்டினம்
இ) ஆங்கிலேயர்கள் – 3. சென்னைப்பட்டினம்

அ) 2, 3, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 3, 2, 1
Answer:
அ) 2, 3, 1

Question 22.
1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னைநகரின் மக்கள் தொகை
அ) 18,000
ஆ) 25,000
இ) 19,000
ஈ) 29,000
Answer:
இ) 19,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 23.
சென்னை நகராட்சி உருவாக்கபப்ட்ட ஆண்டு
அ) 1639
ஆ) 1646
இ) 1688
ஈ) 1768
Answer:
இ) 1688

Question 24.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் தலைவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) தானியேல்
Answer:
ஆ) எலி யேல்

Question 25.
எலியேலைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தின் தலைவரானவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) தாமஸ் பிட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் மன்ரோ
Answer:
ஆ) தாமஸ் பிட்

Question 26.
……………… ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) இராபர்ட் கிளைவ்
Answer:
இ) தாமஸ் பிட்

Question 27.
சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றிய நூற்றாண்டு
அ) கி.பி. 17
ஆ) கி.பி. 16
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 19
Answer:
இ) கி.பி. 18

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 28.
ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1615
ஆ) 1635
இ) 1675
ஈ) 1715
Answer:
ஈ) 1715

Question 29.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1) 1914
ஆ) கிறித்தவக் கல்லூரி – 2) 1857
இ) பிரசிடென்சி கல்லூரி – 3) 1840
ஈ) சென்னைப் பல்கலைக்கழகம் – 4) 1837
உ) இராணிமேரி கல்லூரி – 5) 1912

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ ) 2, 3, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 30.
ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்
அ) இராணிமேரிக் கல்லூரி
ஆ) பச்சையப்பன் கல்லூரி
இ) சென்னைக் கோட்டைக் கல்லூரி
ஈ) கிறித்துவக்கல்லூரி
Answer:
ஆ) பச்சையப்பன் கல்லூரி

Question 31.
இந்தோ -சாரசனிக் கட்டடப் பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம்
அ) சேப்பாக்கம் அரண்மனை
ஆ) சென்னைப்பல்கலைக்கழகம்
இ) ரிப்பன் கட்டடம்
ஈ) விக்டோரியா அரங்கு
Answer:
அ) சேப்பாக்கம் அரண்மனை

Question 32.
இந்தியாவின் முதல் பொதுநூலகம்
அ) சரசுவதிமகால் நூலகம்
ஆ) கொல்கத்தா நூலகம்
இ) கன்னிமாரா நூலகம்
ஈ) திருவனந்தபுரம் நூலகம்
Answer:
இ) கன்னிமாரா நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 33.
அண்ணாசாலைக்கு (மவுண்ட் ரோடு) அடுத்ததாக மதராசப்பட்டினத்தின் மற்றொரு முக்கியமான சாலை ………………. நெடுஞ்சாலையாகும்.
அ) பூவிருந்தவல்லி
ஆ) திருவொற்றியூர்
இ) சிந்தாதிரிப்பேட்டை
ஈ) மவுலிவாக்கம்
Answer:
அ) பூவிருந்தவல்லி

Question 34.
1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்
அ) எழும்பூர்
ஆ) கிண்டி
இ) இராயபுரம்
ஈ) திருவான்மியூர்
Answer:
இ) இராயபுரம்

Question 35.
ஆங்கிலேயருக்கும் சென்னை மாநகருக்கும் ஏறத்தாழ 300 ஆண்டுகாலமாக இருந்த உறவு முடிவுக்கு வந்த நாள்
அ) 1942 அக்டோபர் 2
ஆ) 1945 ஜூன் 15
இ) 1947 ஆகஸ்ட் 15
ஈ) 1950 ஜனவரி 26
Answer:
இ) 1947 ஆகஸ்ட் 15

Question 36.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னை இலக்கியச் சங்கம் – 1) 1869
ஆ) கன்னிமாரா நூலகம் – 2) 1812
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 3) 1860
ஈ) அண்ணா நூற்றாண்டு நூலகம் – 4) 2010

அ) 2, 3, 1, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 3, 1, 4

Question 37.
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) சரசுவதி மகால் நூலகம்
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
ஈ) சென்னை இலக்கியச் சங்கம்
Answer:
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 38.
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) திருவனந்தபுரம் நூலகம்
இ) சரசுவதிமகால் நூலகம்
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்
Answer:
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்

குறுவினா

Question 1.
சென்னை நகராட்சி, மாகாணம் உருவான அமைப்பை விளக்குக.
Answer:
நகராட்சி : 1646ஆம் ஆண்டின் நகரின் மக்கள் தொகை 19000. இதை அறிந்து 1688இல் நகராட்சி உருவாக்கப்பட்டது.

மாகாணம் :

  • ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாக தென்னிந்தியாவில் பல பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மாகாணத்தை உருவாக்கினர்.
  • தலைவர் – எலி யேல் அவரைத் தொடர்ந்து தாமஸ் பிட். இவரது ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம் என்பர்.

Question 2.
மல்லியர்பா – விளக்குக.
Answer:
தொல் பழங்கால மானுட எச்சங்களை உணர்த்தும் பழமையான சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சூட்டப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 3.
சென்னை – ஓர் காட்டுமரம் விளக்குக.
Answer:
(i) இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடித்தளமாகவும், அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம் மதராசப்பட்டினம்.

(ii) அது இன்று பரப்பரப்பானசென்னைமாநகரமாக வளர்ந்திருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் காட்டுமரம் போல் தன் மனம் போன போக்கில் வளர்கிறது.

(iii) அதனால் சென்னை ஓர் காட்டுமரம் என்பது சாலப் பொருந்தும்.

Question 4.
சென்னை நகரின் பழமையான கோயில்களை குறிப்பிடுக.
Answer:
திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவான்மியூர், மயிலாப்பூர் இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற தளங்கள் ஆகும்.

Question 5.
சென்னை என்ற பெயர் வளர்ச்சி பெற்றதனை விளக்குக.
Answer:

  • வடசென்னைப் பகுதியை மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதியை சென்னைப்பட்டினம் என்றும் அமைத்தனர்.
  • ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று பெயர் சூட்டினர்.
  • மதராஸ் பின்பு மெட்ராஸ் ஆகியது.
  • இன்று சென்னை என்று பெருமையோடு விளங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 6.
மெட்ராஸ் ரெக்காட் ஆபீஸ் – குறிப்பு வரைக.
Answer:
ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது. சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
சென்னைக்கு இயற்கை கொடுத்த வடிகால்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:

  • வடசென்னை – கொற்றலையாறு, தென்சென்னை, அடையாறு.
  • மத்திய சென்னை – கூவம், பாலாறு.

இவை நான்கையும் இணைப்பது, பக்கிங்காம் கால்வாய்.

Question 8.
சென்னை நகரில் காணப்படும் சில கால்வாய்களைக் கூறுக.
Answer:
காட்டன் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக் கால்வாய்.

Question 9.
சென்னையில் அக்காலத்தில் வடிகால்களாக எத்தனை பெரிய ஓடைகள், சிறிய ஓடைகள் காணப்பட்டன?
Answer:

  • 18 பெரிய ஓடைகள், 540 சிறிய ஓடைகள்.
  • மழைநீர் சிறிய ஓடைகள் வழியாக பெரிய ஓடைகளை அடைந்து பிறகு ஆறுடன் சேர்ந்து கடலில் கலக்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 10.
பாரதிதாசன் பக்கிங்காம்கால்வாயில் படகுப் பயணம் செய்தவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Answer:
மயிலை சீனி. வேங்கடாசாமி, ப. ஜீவானந்தம்

Question 11.
கூவம் நதியில் குளித்துவிட்டு கோயிலில் வழிபட்டவர் யார்?
Answer:
வள்ளல் பச்சையப்பர் கூவம் நதியில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலில் வழிபட்டவர் ஆவார்.

Question 12.
சென்னையில் கிழக்கிந்திய நிறுவனம் கால்பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்றிருந்த கிராமங்கள் யாவை?
Answer:
சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி, வெளியே குடியிருப்புகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

  • வெள்ளையர் நகரம் = உள்ளே வீடுகள் இருந்த பகுதி.
  • கருப்பர் நகரம் = வெளியே குடியிருப்புகள் இருந்த பகுதி.

Question 14.
மதராசப்பட்டினம் என்று அழைக்கப்படும் பகுதி எது?
Answer:
உள்ளே வீடுகள் இருந்த பகுதி வெள்ளையர் நகரமும், வெளியே உள்ள குடியிருப்பு பகுதி கருப்பர் நகரமும் இணைந்த பகுதி. மதராசப்பட்டினம் என்று அழைப்பர்.

Question 15.
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் யாது?
Answer:
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் துணி வணிகம் ஆகும்.

சிறுவினா

Question 1.
சென்னை தொன்மைய வாய்ந்த நகரம் என்பதுற்குச் சான்று தருக.
Answer:
(i) சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதியில் மேற்கொண்ட அகழாய்வு. கொற்றலையாற்றுப் படுகை. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி.

(ii) கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்னும் கிடைக்கும் மானுட எச்சம்.

(iii) மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டது. திருநெல்வேலிக்கேணியில் கிடைத்த நந்திவர்மன் கல்வெட்டு
போன்றவை சென்னையின் தொன்மையை விளக்கும் சான்றாக அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
சென்னை அறிவின் நகரம் என்பதற்குச் சான்று தருக.
Answer:

  • 18ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனம் தோன்றின.
  • 1715இல் புனித மேரி தேவாலய தர்மப்பள்ளி
  • 1812 சென்னைக் கோட்டைக் கல்லூரி
  • 1840 மாநிலக் கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி)
  • 1857 சென்னைப் பல்கலைக்கழகம்
  • 1914 இராணிமேரி கல்லூரி

இவை மட்டுமல்லாமல் ஆங்கிலேயரின் உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரியாக பச்சையப்பன் கல்லூரி விளங்குகிறது. மருத்துவக் கல்லூரி, கவின்கலைக் கல்லூரி போன்ற பல்துறை சார்ந்த கல்லூரிகள் இங்குள்ளன.

Question 3.
இந்தோ -சாரசனிக் கட்டடக்கலை – விளக்குக.
Answer:
முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி. இவை மூன்றையும் கலந்து உருவாக்கப்பட்ட கட்டடக்கலை.
சான்று:

  • 1768இல் உருவான சேப்பாக்கம் அரண்மனை
  • மத்தியத் தொடர்வண்டி நிலையம்
  • எழும்பூர் தொடர்வண்டி நிலையம்
  • உயர்நீதிமன்றம்
  • ரிப்பன் கட்டடம்
  • விக்டோரியா அரங்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
மதராசப்பட்டினத்தின் போக்குவரத்துப் பற்றி சில சான்றுகள் தருக.
Answer:
நடந்து சென்றபாதை, மாட்டுவண்டிகள் சென்ற பாதை ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு சாலைகளாக மாறின.

  • சென்னை அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) அடுத்ததாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை.
  • 1856 உருவான இராயபுரத்தில் உருவான தொடர் வண்டி நிலையம்.
  • சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம்.
  • எழும்பூர் தொடர் வண்டி நிலையம்.

Question 5.
சென்னையின் பழமை, அறிவுப் புரட்சி போன்றவற்றை சான்றுடன் நிறுவுக.
Answer:

  • சென்னை இலக்கிய சங்கம் 1812ல் உருவான நூலகம்.
  • 1860இல் கன்னிமாரா நூலகம் அருகங்காட்சியகமாக தொடங்கப்பட்டு இந்தியாவின் முதல் பொது நூலகம் என்ற பெருமை பெறுகிறது.
  • 1869இல் உருவான கீழ்த்திசைச் சுவடி நூலகம்.2010இல் உருவான ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • தமிழாய்வு நூலகம்.
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்.
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
  • மறைமலையடிகள் நூலகம்.
  • செம்மொழித் தமிழாய்வு நூலகம்.
  • உ.வே.சா நூலகம் போன்றவை.

சென்னையின் பழமையையும் அறிவுப் புரட்சியையும் விளக்குவதாக அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 1.
கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை (அ) இன்னிசை வெண்பா எழுதுக.
Answer:
அ) என்றும் விரும்பியே கல்.
உலகில் உத்தமனாய் வாழ கல்வி
எத்திக்கும் உன் புகழை நாட்ட
ஏற்றமிகு கல்வியை கசடற கற்று
என்றும் விரும்பியே கல்

ஆ) ஒழுக்கம் உயர்வு தரும்.
உயிரை விட மேலானது ஒழுக்கம்
தயிரை விட மென்மையானது ஒழுக்கம்
பழகும் முறை அறிந்து வாழ்ந்தால்
ஒழுக்கமே உயர்வு தரும்.

இ) இன்னல் விலகி விடும்.
அன்பினால் அறம் பல செய்து
பண்பினால் பல புகழ் எய்து
உண்மை யினால் உழைத்துநீ வாழ்ந்தால்
இன்னல் விலகி விடும்.

ஈ) உழவின்றி உய்யா உலகு.
கோலும் குடையும் மன்னனுக்கு அவசியம்
எழுதும் கோலுக்கு கூர்முனை அவசியம்
உழும் விவசாயிக்கு ஏர்முனை அவசியம்
உழவின்றி உய்யா உலகு

உ) மொழியின் வழிய தறிவு.
வள்ளுவனின் வாய்மொழியை குற்றமறக் கற்று
கம்பனின் காவியத்தை கசடறக் கற்று
இளங்கோவின் சிலம்பை சீர்தூக்கிப் பார்த்து
மொழியின் வழிய தறிவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 2.
‘இயற்கை’ என்னும் பொருண்மையில் வெண்பா எழுதுக.
Answer:
தென்றல் வீச பூமணம் பரவும் குன்றம்
குளிர குளிரில் வாடும் மயிலும்
ஆட மழைமேகம் சொரியும்
மண்ணு லகைக் காண்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

அ) அன்பே தகளியாய்     (ஆர்வமாய் / தகளியாய்)
ஆ) வான்மழை தூறலில்    (தூறலில் / பொழிந்திடின்)
இ) கண்ணிரண்டும் இல்லார்     (இலாதார் / இல்லார்)
ஈ) வெண்ணிலவு காய்கிறது     (காய்கிறது / ஒளிர்கிறது)
உ) வெய்யோன் காய்ந்திட     (காய்ந்திட / ஒளிர்ந்திட)

Question 2.
மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.

அ) கல்வி கரையில கற்பவர்
ஆ) கல்லாரே ஆயினும் கேட்க (கற்க)
இ) நல்லவை செய்யின் நலமே
ஈ) அவமதிப்பும் ஆன்ற பொருள்
உ) உண்ணாது நோற்பார் சான்றோர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 3.
பொருத்துக.
அ) மாச்சீர் – 1. கருவிளம், கூவிளம்
ஆ) காய்ச்சீர் – 2. நாள், மலர்
இ) விளச்சீர் – 3. தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர் – 4. தேமா, புளிமா

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 3, 1, 2
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஆ) 4, 3, 1, 2

Question 4.
கீழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா / இன்னிசை வெண்பா எழுத முயற்சி செய்யவும்.
Answer:
கடல், வாள், மழை, தேன், மரம்.

கடல் : அலையென எழுந்து ஒலி யெழுப்பி
ஆர்ப்பரிக்கும் பெருங் கடல்.

வாள் : ஒளிவீசிக் கூர்மையொரு எதிரியை வீழ்த்த
பளிச்சிடும் வேந்தன் வாள்.

மழை : வானின்று பொழிந்து மண்ணை வளமாக்கும்
தேன்சுவை அன்ன தமிழ்

தேன் : மணம்தரும் பூவில் சுவைதரும் இனிய
அமுத மெனும் தேன்.

மரம் : இயற்கைத் தாய் உவந்து அளித்த
மறக்க வெண்ணா மரம்.

Question 5.
வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?
Answer:
இயற்சீர் வெண்டளையும், வெண் சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 6.
ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?
Answer:

  • வெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகையும் பெற்று வருவது ஒரு விகற்பம் ஆகும்.
  • வெண்பாவில் முதல் இரண்டடி ஓரெதுகையும், அடுத்த இரண்டடி ஓரெதுகையும் பெற்று வருவது பல விகற்பம் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்ற காலம்
அ) சங்ககாலம்
ஆ) சங்கம் மருவிய காலம்
இ) காப்பிய காலம்
ஈ) ஐரோப்பியர் காலம்
Answer:
ஆ) சங்கம் மருவிய காலம்

Question 2.
சங்கம் மருவிய காலத்தில் வலியுறுத்தப்பட்டது
அ) அறம்
ஆ) அரம்
இ) மரம்
ஈ) மறம்
Answer:
அ) அறம்

Question 3.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) விருத்தப்பா
Answer:
அ) வெண்பா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 4.
வெண்பாவின் ஓசை
அ) அகவலோசை
ஆ) செப்பலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
ஆ) செப்பலோசை

Question 5.
வெண்பா ………….. அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி.
அ) வெண்டளையால்
ஆ) கலித்தளையால்
இ) ஒன்றிய வஞ்சித்தளையால்
ஈ) ஒன்றா வஞ்சித்தளையால்
Answer:
அ) வெண்டளையால்

Question 6.
வெண்ட ளை …………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 7.
தளைத்தல் என்பதற்குப் பொருந்தாத பொருளைக் கண்டறி.
அ) கட்டுதல்
ஆ) பிணித்தல்
இ) பிரித்தல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) பிரித்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) நேர் நேர் – 1. புளிமா
ஆ) நிரை நேர் – 2. தேமா
இ) நிலை நிரை – 3. கூவிளம்
ஈ) நேர் நிரை – 4. கருவிளம்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 9.
பொருத்திக் காட்டுக.
அ) இரண்டடி வெண்பா – 1. கலிவெண்பா
ஆ) மூன்றடி வெண்பா – 2. பஃறொடை வெண்பா
இ) நான்கடி வெண்பா – 3. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா
ஈ) நான்கடி முதல் பன்னிரண்டடி வரை – 4. நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பா
உ) பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – 5. குறள் வெண்பா

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 2, 1, 4, 5
ஈ) 2, 1, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 10.
வெண்பா …………….. வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
ஈ) ஏழு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 11.
நேரிசை வெண்பாவில் ………… அடியில் தனிச்சீர் வரும்
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Question 12.
தனிச்சீரில்லாமல் ……………. சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா .
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

குறுவினா

Question 1.
தளைத்தல் என்பதன் பொருள் யாது?
Answer:
தளைத்தல் என்பதற்குக் கட்டுதல், பிணித்தல் என்று பொருள்.

Question 2.
ஈரசைச் சீர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • மாச்சீர் – தேமா, புளிமா
  • விளச்சீர் – கூவிளம், கருவிளம்.

Question 3.
மூவசைச்சீர்களைக் குறிப்பிடுக.
Answer:
காய்ச்சீர் – தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 4.
வெண்பாவின் ஈற்றுச்சீர் எவ்வெவ் வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்?
Answer:
நாள், மலர், காசு, பிறப்பு.

Question 5.
வெண்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • வெண்பா ஏழு வகைப்படும். அவை:
    1. குறள் வெண்பா
    2. நேரிசை வெண்பா
    3. இன்னிசை வெண்பா
    4. நேரிசைச் சிந்தியல் வெண்பா
    5. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
    6. பஃறொடை வெண்பா
    7. கலிவெண்பா

Question 6.
பஃறொடை வெண்பா, கலிவெண்பா – குறிப்பு வரைக.
Answer:

  • நான்கடிச் சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடிப் பேரெல்லையாகவும் கொண்டது பஃறொடை வெண்பா ஆகும்.
  • பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை கொண்டது ‘கலிவெண்பா’ ஆகும்.

Question 7.
வெண்பாவிற்கான இலக்கணத்தைக் கூறுக.
Answer:

  • இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது வரும்.
  • ஈற்றடி மூச்சீராகவும் ஏனைய அடி நாற்சீராகவும் வரும்.
  • ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் மூவசைச்சீரில் காய்ச்சீரும் வரும்.
  • செப்பலோசை பெற்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரெண்டு அடி வரை வரும்.
  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 8.
இன்னிசை வெண்பா எவ்வாறு அமைக்கப்படும்?
Answer:
தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.

மொழியை ஆள்வோம்

பக்கம்: 102

சான்றோர் சித்திரம்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர். “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்?” என்று பிறர் கேட்ட போது, ‘அஃது’ என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 1

பரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் 112 எழுதவும் இயலும் என்று நடை முறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம்’ எனும் தன்பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக் கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.

இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முலான இதழ்க ளை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

முறையான பள்ளிக் கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.

வினாக்கள்:

1. ஒரு நேர்காணலில் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக என்று கேட்டதற்குப் பதிலாக மறைமலை அடிகள் கூறியது என்ன?
2. சுவாமி வேதாசலம் என்பதன் தமிழாக்கம் என்ன?
3. மறைமலை அடிகள் நடத்திய இதழ் எது?
4. இப்பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணும்மையினை எடுத்து எழுதுக.
5. இப்பாடப்பகுதியின் இடம்பெற்றுள்ள உருவகத்தினை எடுத்து எழுதுக.
Answer:
1. அஃது எனக்குத் தெரியாது
2. மறைமலை அடிகள்
3. ஞானசாகரம்
4. வரலாறும் காலமும்
5. அறிவுக்கடல்

தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.
எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.
ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது.

5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.

தமிழாக்கம் தருக.

The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India’s status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavorably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected; There are no traveling libraries to reach them of kind that are to be found even in some backward countries.

The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits.

இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொது நூலகத்ததை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது.

மேலும், அது தலைநகரத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒரு சில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதைவிட நூலகங்கள் ஏதும் இங்கு இல்லை.

இந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின்தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கைகள் வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது.

பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

Question 1.
யானைக்கும் அடிசறுக்கும்
Answer:
தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும் போல ஆயிற்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 2.
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Answer:
வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும். வாழ்க்கையில் நாம் பிறருக்குத் தீமை செய்து வந்தோம் என்றால் நமக்குத் தீமையே நடக்கும் இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.

Question 3.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
Answer:
நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

Question 4.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
Answer:
வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.

Question 5.
ஊழி பெயரினும் தாம் பெயரார்
Answer:
நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்வு தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாறமாட்டார்கள்.

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் : உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

ருசிக்காக, சாப்பிடக்கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

நமது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை மற்றும் உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவ நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்களின் தேவை மாறுபடும்.

தேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிக : 2 காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.

மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 2

பத்தியின் சுருக்கம்:
இன்றைய சூழலில், ஓய்வின்மை , காலம் தவறிய உணவு, உணவில் மாற்றம் முதலானவை உடல் நலப் பாதிப்புக்குக் காரணம். மருத்துவத்திற்கென தொகை ஒதுக்கும் அளவுக்கு இயந்தரமாகிவிட்டோம். உணவே மருந்தாக உண்டு மகிழ்ந்தனர் முன்னோர். ஒவ்வொருவரும் சமச்சீர் உணவு உட்கொள்வது கட்டாயமாகிவிட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

உணவுப் பொருளில் அடங்கியுள்ள சத்து பற்றி அறிவது நமது கடமை. ருசிக்காக அன்றி பசிக்காக மிகுதியாகச் சாப்பிடுவது பிணிக்குக் காரணமாயிற்று. நமது எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தே உணவு முறையும் உடற் பயிற்சியும் அமைதல் வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலுழைப்பின் அடிப்படையில் ஊட்டச்சத்து தேவைப்படும். காய்கறி, தானியம், பயிறு இவற்றுடன் கூடிய உணவு முறையே சரியான தீர்ப்பு.

மொழியோடு விளையாடு

மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 9
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 10

எண்ணங்களை எழுத்தாக்குக

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 6
கல்வி ஒருவரை அறிவினால் மேதையாக்கும்
கல்வி கற்றால் நீதியரசர ஆகலாம்.
கல்வியின் காரணமாக காவல்துறை அதிகாரி ஆகலாம்
கல்வி கற்பதால் மருத்துவர் ஆகலாம்
கல்வி ஒருவரை நல்லாசிரியனாக்கும்.
கல்வியே ஒருவர்க்குப் பெருமை சேர்க்கும்
கல்வி கற்றவரையே உலகம் போற்றும்.

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

எ.கா. பலகை
பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.
பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின.

1. தாமரை
தடாகத்தில் தாமரை மலர்ந்திருந்தன.
தாவுகின்ற மானை(மரை)ப் பிடிக்க முடியாது.

2. கோவில்
கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது.
அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும்.

3. வெங்காயம்
வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது.
வெம்மையால் உண்டான காயம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

4. தலைமை பள்ளி
ஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
தலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது.

செய்து கற்போம்.

அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பாடப்பிரிவுகளை அட்டவணைப்படுத்துக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 7

நிற்க அதற்குத் தக

கீழ்க்கண்ட இடங்களில் உங்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கும்?
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 8

படிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்)

1. Arrival – வருகை
2. Departure – புறப்பாடு
3. Coaveyor Belt – ஊர்திப்பட்டை
4. Take off – வானூர்தி கிளம்புதல்
5. Passport – கடவுச்சீட்டு
6. Visa – நுழைவு இசைவு
7. Domestic Flight – உள்நாட்டு வானூர்தி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 1.
சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 2

Question 2.
எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலை விபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.
Answer:

பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு.

ராமு : எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இருசக்கர வாகனம் இதுடா!
சோமு : நல்லா இருக்குடா, பல்சரா?
ராமு : பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில் போய் வருவோமா?
சோமு : நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா?
பீமு : நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.
ராமு : என்னன்னு சொல்லு.
பீமு : மூவரும் வண்டியில் போகனும்னா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
ராமு : மூன்று இருக்குடா. போகலாம் வா.

(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்துவிட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

பீமு : தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால்தான் தலையில் அடி படல.
ராமு : பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று பேரு உயிரையும் நீ காப்பித்திட்ட.
சோமு : ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கும்.
பீமு : நான் காப்பத்தலடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு.
மூவரும் : தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்!

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும் :

  • பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
  • தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
  • இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
  • கைபேசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருந்தல் வேண்டும்.
  • காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.

வாகன ஓட்டிகளின் அலட்சியம் :
அவசரம் என்ற ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் :

  • வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
  • பயிற்சியில்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
  • தவறான தட்பவெப்பநிலையும், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
  • இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை சரக்குகளை ஏற்றிச் செல்வது.
  • தொடர் வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
  • மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
    விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

விபத்துகளைத் தவிர்க்க :
(i) பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளைக் கொடுத்தல் வேண்டும்.

(ii) சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

(iii) வேகமாகச் செல்லும் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

(iv) பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.

(v) பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிந்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.

(vi) இவ்வாறு வாகனம் ஓட்டும் போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் : – பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோம் என்றால், சாலை விபத்தில்லாத தமிழ்நாடு’ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை?
அ) 17
ஆ) 21
இ) 18
ஈ) 25
Answer:
இ) 18

Question 2.
சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
அ) 1312
ஆ) 1317
இ) 1315
ஈ) 1318
Answer:
ஆ) 1317

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 3.
சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
அ) 413
ஆ) 613
இ) 418
ஈ) 618
Answer:
அ) 413

Question 4.
தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
அ) 38
ஆ) 33
இ) 37
ஈ) 35
Answer:
ஈ) 35

Question 5.
சாலைப் போக்குவரத்து உதவிக்கு உரிய தொலைபேசி எண்
அ) 108
ஆ) 101
இ) 103
ஈ) 109
Answer:
இ) 103

Question 6.
உரிய வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திய இயக்கினாலோ விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
அ) 3
ஆ) 5
இ) 2
ஈ) 1
Answer:
அ) 3

Question 7.
ஊர்திகளுக்கு உரிய காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் வசூலிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹2,000
ஆ) ₹3,000
இ) ₹450
ஈ) ₹800
Answer:
அ) ₹2,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 8.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் விதிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹1,000
ஆ) ₹ 10,000
இ) ₹5,000
ஈ) ₹2,000
Answer:
ஆ) ₹ 10,000

Question 9.
கூற்று 1 : சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
கூற்று 2 : இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 10.
கூற்று 1 : சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 109-ஐ தொடர்பு கொள்ளலாம்.
கூற்று 2 : எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 11.
கூற்று : 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்குவது சட்டப்படித் தவறு.
காரணம் : இச்சட்டத்தை மீறி ஊர்தி இயக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை .

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 12.
கூற்று 1 : சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.
கூற்று 2 : சாலையின் வகைகள் மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சாலையில் உத்தரவு குறியீடுகள் இடம் பெறாது.
ஆ) சாலைச் சந்திப்புகளில் பாதுகாப்பற்ற அணுகுமுறை தேவை.
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.
ஈ) 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கலாம்.
Answer:
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.

Question 14.
சரியானதைத் தேர்க.
அ) காப்பீடு இல்லாமல் இயக்கினால் – ₹3,000 தண்டத்தொகை
ஆ) தலைகவசம் அணியாமல் பயணித்தால் – ₹2,000 தண்டத்தொகை
இ) மதுகுடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் – ₹1,000 தண்டத்தொகை
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை
Answer:
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் 10,000 தண்டத்தொகை
ஆ) காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் 2000 தண்டத்தொகை
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஈ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் 15,000 தண்டத்தொகை.
Answer:
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

Question 16.
பொருந்தாததைத் தேர்க.
அ) பாரிஸ் நகரில் 1909-ஆம் ஆண்டு ‘பன்னாட்டுச் சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆ) இதர சாலைப் பயனணிகளை நண்பராக எண்ண வேண்டும்.
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.
ஈ) மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும்.
Answer:
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.

Question 17.
பொருத்துக.
அ) மது குடித்துவிட்டு – 1. ₹1,000
ஆ) இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் – 2. ₹2,000
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் – 3. ₹5,000
ஈ) தலைகவசம் அணியாமல் – 4. ₹10,000

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 1, 2, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 18.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பாகிஸ்தான்
ஈ) அமெரிக்கா
Answer:
அ) இந்தியா

Question 19.
ஏறக்குறைய …………. இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன.
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ) 55
Answer:
ஈ) 55

Question 20.
நம் நாட்டில் ……. கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன.
அ) 11
ஆ) 21
இ) 31
ஈ) 51
Answer:
ஆ) 21

Question 21.
நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய …………. இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
அ) 1
ஆ) 10
இ) 5
ஈ) 20
Answer:
இ) 5

Question 22.
நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் உயிரிழப்போர்
அ) மூன்றில் ஒரு பங்கினர்
ஆ) நான்கில் ஒரு பங்கினர்
இ) ஐந்தில் ஒரு பங்கினர்
ஈ) ஆறில் ஒரு பங்கினர்
Answer:
அ) மூன்றில் ஒரு பங்கினர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 23.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம்
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) மத்திய பிரதேசம்
Answer:
ஆ) தமிழ்நாடு

Question 24.
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகள் ……………. விழுக்காடு.
அ) 15
ஆ) 25
இ) 35
ஈ) 55
Answer:
இ) 35

Question 25.
பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது
அ) சட்டப்படி சரியாகும்
ஆ) சட்டப்படி குற்றமாகும்
இ) சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சட்டப்படி குற்றமாகும்

Question 26.
முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு
அ) பாரிஸ், 1909
ஆ) ரியோடி ஜெனிரோ, 1908
இ) ஹாமில்டன், 1907
ஈ) டர்பன், 1915
Answer:
அ) பாரிஸ், 1909

Question 27.
18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திகள் இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம்
அ) மோட்டார் வாகனச் சட்டம், 1988
ஆ) மோட்டார் வாகனச் சட்டம் 1965
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017
ஈ) மோட்டார் வாகனச் சட்டம், 2016
Answer:
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 28.
பொருத்திக் காட்டுக.
அ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் தண்டனைத் தொகை – 1.₹ 10,000
ஆ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் தண்டனைத்தொகை – 2. ₹ 5,000
இ) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் தண்டனைத் தொகை – 3. ₹ 2, 000
ஈ) ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் தண்டனைத் தொகை – 4. ₹ 1,000

அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 2,1
இ) 4, 3, 2, 1
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 29.
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள்
i) உத்தரவுக் குறியீடுகள்
ii) எச்சரிக்கைக் குறியீடுகள்
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) தகவல் குறியீடுகள்

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) ili மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 30.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் கிடைக்கும் தண்டனைகள்
i) ரூ. 5,000
ii) மூன்று மாதச் சிறைத்தண்டனை
iii) அல்லது இரண்டும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

அ) i சரி
ஆ) ii சரி
இ) ii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 1.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக.
Answer:
i) யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

  • யாதானும் நாடாமால் ………….. கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும்
    சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
  • சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறுத்தல்.

ii) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

  • ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது.
  • ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

iii) நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் – செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு – நாலடியார்

  • நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவுகூட உதவமாட்டார்கள்.
  • வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கு உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்
அ) போர்க்கருவி
ஆ) தச்சுக்கருவி
இ) இசைக்கருவி
ஈ) வேளாண்கருவி
Answer:
இ) இசைக்கருவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:

  • கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறுவினா

Question 1.
வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
Answer:
திணை விளக்கம்:
பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.

சான்று விளக்கம்:

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில், ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!’ என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை.
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

இலக்கணக் குறிப்பு

வயங்குமொழி – வினைத்தொகை
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிவும் புகழும் – எண்ணும்மை
சிறாஅர் – இசைநிறை அளபெடை.

புணர்ச்சி விதி

1. எத்திசை = எ + திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி எத்திசை என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கற்றோரது ‘செம்மாப்பு’ என்பதில் ‘செம்மாப்பு’ – பொருள்
அ) பெருமை
ஆ) புகழ்
இ) இறுமாப்பு
ஈ) வெற்றி
Answer:
இ) இறுமாப்பு

Question 2.
புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்
அ) புறம், புறப்பாட்டு
ஆ) புறம், புறப்பொருள்
இ) நானூறு, புறப்பாட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புறம், புறப்பாட்டு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘வயங்குமொழி வித்தித்தாம்’ – ‘வித்தி’ என்பதன் பொருள்
அ) விதி
ஆ) விதை
இ) புத்தி
ஈ) விதைத்து
Answer:
ஈ) விதைத்து

Question 4.
தாழும் நிலை வரினும் கலங்காதவர்
அ) கல்வி கற்றோர்
ஆ) செல்வம் உடையவர்
இ) ஞானம் பெற்றவர்
ஈ) செல்வாக்கு உடையவர்
Answer:
அ) கல்வி கற்றோர்

Question 5.
ஔவையார் அகநானூற்றில் பாடியுள்ள பாடல்கள்
அ) 5
ஆ) 15
இ) 4
ஈ) 7
Answer:
இ) 4

Question 6.
கூற்று 1 : இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
கூற்று 2 : கலைத்தொழில் வல்லவர்களுக்கு எத்திசை சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 7.
கூற்று 1 : அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகப் போர்க்களம் சென்றார்.
கூற்று 2 : அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர் ஔவையார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) எம் யாழினை எடுக்கவில்லை ; கருவிப்பையையும் எடுக்கவில்லை.
ஆ) கலைத்தொழில் வல்ல எங்களுக்கு எத்திசை சென்றாலும் ஒன்றும் கிடைப்பதில்லை.
இ) தச்சனின் பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது.
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.
Answer:
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.

Question 9.
சரியானதைத் தேர்க.
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.
ஆ) புறநானூற்று பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று.
இ) அதியமானிடம் நட்பு பாராட்டும் குணம் இல்லாதவர் ஒளவையார்.
ஈ) ஔவையார் பாடியதாக நற்றிணையில் 8 பாடல்கள் உள்ளன.
Answer:
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.

Question 10.
பொருந்தியதைத் தேர்க.
அ) அறிவும் புகழும் – வினைத்தொகை
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை
இ) வயங்குமொழி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) அடையா – எண்ணும்மை
Answer:
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 11.
பொருந்தாததைத் தேர்க.
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.
ஆ) அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
இ) ஒளவையார் பாடியதாக புறநானூற்றில் 33 பாடல்கள் உள்ளன.
ஈ) புறநானூறு பாடிய ஔவையார் அதியமானிடம் இருந்து நெல்லிகனியைப் பெற்றவர்.
Answer:
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.

Question 12.
புறநானூற்றில் பயின்று வரும் பா
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) குறள் வெண்பா
இ) சிந்தியல் வெண்பா
ஈ) கலிவிருத்தம்
Answer:
அ) நேரிசை ஆசிரியப்பா

Question 13.
பரிசில் துறை என்பது
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
ஆ) மன்னன் பரிசளித்துப் புலவரைப் பாராட்டுவது
இ) பரிசு பெற்ற புலவன் மகிழ்ச்சியாக இல்லறம் திரும்புவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை .
Answer:
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

Question 14.
பொருத்திக் காட்டுக.
அ) உரன் – 1. கோடரி
ஆ) கலன் – 2. கருவிகளை வைக்கும் பை
இ) கலப்பை – 3. யாழ்
ஈ) மழு – 4. வலிமை

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) பரிசிலர் – 1. காடு
ஆ) கல்வி – 2. மரங்க ள்
இ) திசை – 3. சிறுவர்
ஈ) உணவு – 4. கோடரி

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) வயங்குமொழி – 1. எண்ணும்மை
ஆ) அடையா – 2. இசைநிறை அளபெடை
இ) அறிவும் புகழும் – 3. வினைத்தொகை
ஈ) சிறாஅர் – 4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
‘வாயிலோயே! வாயிலோயே!’ என்னும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டதன் காரணம்
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.
ஆ) பேகன் இரவலர்க்கு இரங்காமையால் பாடியது.
இ) பாரி முல்லைத் தேர் கொடுத்தமையால் பாடியது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.

Question 18.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமானச் சொல்
அ) எத்திசை
ஆ) உரனுடை
இ) வலுந்தலை
ஈ) மாய்ந்தென
Answer:
அ) எத்திசை

Question 19.
புறநானூறு ………………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
அ) எட்டுத்தொகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 20.
அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்
அ) ஓதலாந்தையார்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) பரணர்
Answer:
ஆ) ஔவையார்

Question 21.
ஔவை யாருக்காகத் தூது சென்றார்?
அ) அதியமானுக்காக
ஆ) பேகனுக்காக
இ) பாரிக்காக
ஈ) தொண்டைமானுக்காக
Answer:
அ) அதியமானுக்காக

Question 22.
ஔவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை
அ) 22
ஆ) 36
இ) 59
ஈ) 65
Answer:
இ) 59

Question 23.
ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் நூல்களும் (பொருத்திக் காட்டுக).
அ) அகநானூறு – 1) 7
ஆ) புறநானூறு – 2) 15
இ) குறுந்தொகை – 3) 04
ஈ) நற்றிணை – 4) 33

அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 2, 1

Question 24.
அதியமானின் அரசவைப் புலவர்
அ) கபிலர்
ஆ) பாணர்
இ) ஒளவையார்
ஈ) ஒக்கூர் மாசாத்தியார்
Answer:
இ) ஒளவையார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?
Answer:
தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை .

Question 2.
ஔவையார் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கிய பாடல்கள் எத்தனை?
Answer:

  • அகநானூற்றில் 4 பாடல்கள்.
  • குறுந்தொகையில் 15 பாடல்கள்.
  • நற்றிணையில் 7 பாடல்கள்.
  • புறநானூற்றில் 33 பாடல்கள் என மொத்தம் 59 பாடல்கள்.

Question 3.
பாடாண் திணை என்றால் என்ன?
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண் திணை
  • பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.
  • ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 4.
கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?
Answer:

  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக் கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Question 5.
கற்றவர்க்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்பதற்கு ஔவையார் கூறும் உவமை யாது?
Answer:

  • மரம் வெட்டும் தச்சர் பெற்ற சிறுவர்கள் தங்கள் மழுவோடு (கோடாரி) காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு மரம் கிடைக்காமல் போகுமா? என்பதே உவமை.
  • பரிசிலருக்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவிற்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகளாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு
  • 400 பாடல்களைக் கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறப்பொருள் பற்றியது.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.

Question 2.
‘அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுத்தலை உலகமும் அன்றே ; அதனால்
காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை’ – இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் அடிகளானது அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்தபோது ஔவையார் பாடியதாகும். இது புறநானூற்றின் 206 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை. அதனால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். யாழ் முதலிய இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக் கட்டிக் கொண்டோம்.

விளக்கம் :
அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெற சென்றார் ஔவையார். அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் தாழ்த்தியதால் கோபமடைந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறானா, இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை .

இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை உன் மன்னன் பரிசு தரவில்லை என்றால் என்ன ? கலைத்தொழிலில் வல்ல எங்களுக்கு எங்குச் சென்றாலும் உணவு கிடைக்கும். எனவே எங்கள் இசைக்கருவிகளைத் தோளில் எடுத்துவிட்டோம் இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக்கட்டி விட்டோம் என்று கூறுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே’ என்ற ஔவையாரின் செம்மாப்பு கருத்தின் உண்மையை ஆராய்க.
Answer:
(i) கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்.
(ii) கற்றோரின் சொல்லைக் கேட்டு அவர்களுக்கு வாரி வாரி வழங்கினர் பண்டைய தமிழ் மன்னர்கள்.

(iii) நல்ல கருத்துகளைக் கூறி அரசின் நிர்வாகத்தையும், அரசாட்சியின் நடைமுறையையும் சீர்ப்படுத்தும் பணியைக் கற்றறிந்த புலவர்கள் மேற்கொண்டனர்.

(iv) அத்தகைய கற்றறிந்தோரை அரசர்கள் மிகவும் கௌரவித்துப் பரிசுகள் பலவும் வழங்கினர்.

(v) பரிசு தர காலதாமதம் ஆனதால் ஒளவையார் வாயில் காவலனிடம் உன் அரசன் ஒருவனை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது என்று அவன் நினைத்துள்ளானோ?

(vi) மரம் வெட்டும் தச்சனின் மகன் கோடரியுடன் காட்டிற்குச் சென்றால் அவர்கள் வெட்ட காட்டில் ஏதாவது ஒரு மரம் கிடைக்காமல் போய்விடுமா?

(vii) ‘அதுபோலவே, கற்றவர்கள் எத்திசை செல்லினும் அத்திசையில் உணவு கிடைக்கும்.’

(viii) கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ் உண்டாகும்.

(ix) கல்விக்கு அத்தகைய சிறப்புண்டு என்பதை அறிந்ததால் ஔவையார் செம்பாப்புடன் வாயிற்காவலனிடம் எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே என்று வாயிற்காவலனிடம் கூறினார்.

Question 4.
பாடாண் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை – பாடாண் திணை. பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் 12 பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 5.
பரிசில் துறை சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மையை நோக்கி பரிசிலர் அரண்மனையின் வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

Question 6.
“பரிசிலிர்க்கு அடையா வாயிலோயே” என்று வாயிற்காவலளிடம் தன் வருத்தத்தைப் பதியவும் புலவரின் மனக்குமுறல்களை எடுத்தியம்புக.
Answer:
பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!

  • விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை, இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை.
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக் கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்?
  • அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
  • என்று தன் மனக்குமுறலை வாயிற்காப்பானிடம் புலவர் எடுத்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

“அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே”

நெடுவினா

Question 1.
அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசு நீட்டித்தல் குணம் தவறு என்பதை ஔவையாரின் புறநானூற்றுப் பரிசில் துறை பாடல் எங்ஙனம் உணர்த்துகிறது ?
Answer:
(i) வாயில் காவலனே ! வாயில் காவலனே ! புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலையானது வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே உரைப்பதாகும்.

(ii) அவர்களிடம் அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது.

(iii) வள்ளல்கள் பற்றித் தாங்கள் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டும் என நினைத்து வருந்துவர்.

(iv) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி தன்னுடைய தகுதியை அறியாமல் இருக்கின்றான்.

(v) அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்று நினைக்கின்றானோ ? காலம் நீட்டிப்பது சரியான முறையல்ல.

(vi) பரிசிலர் அரண்மனை வருவதை விரும்பும் அதியாமன் நெடுமான் அஞ்சி பரிசு தர நீட்டிப்பது முறையாகாது.

(vii) இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் அழிந்து போகவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகி விடவில்லை.

(viii) பரிசு தரக் காலம் நீட்டித்தான் என்றால், எங்களை அறிந்து பரிசு தருவதற்குப் பல பேர் உள்ளனர்.

(ix) மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள் கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்ட ஒரு மரம் கிடைக்கும்.

(x) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் நீட்டித்தான் என்றால், நான் என் இசைக்கருவியைத் தோளில் சுமந்துக் கொண்டும், என் இசைக்கருவிகளைக் கருவிப்பைக்குள் சுருக்கிட்டுக் கொண் டும் புறப்படப் போகின்றேன்.

(xi) கலைத்தொழில் புரியும் எங்களைப் போன்றோரைக் காத்து வைக்க நினைக்கும் எண்ணம் சரியானது அன்று. ஏனெனில் இவ்வுலகின் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும் என்று உணர்த்துகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.3 இடையீடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.3 இடையீடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 1.
இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளில் இரண்டினைத் திரட்டி, வகுப்பறையில் படித்துக் காட்டி, அவை கவிஞனின் மனநிலையை எவ்விதம் வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 1

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
‘இடையீடு’ – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?
Answer:
இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண் ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

சிறுவினா

Question 1.
‘மூன்றான காலம் போல் ஒன்று” எவை? ஏன்? விளக்குக.
Answer:
மூன்றான காலம் போல் ஒன்று என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்.

எண்ண ம் :
நம் மனதில் உள்ளவையே எண்ணம்.

வெளியீடு :
நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

கேட்டல் :

  • நாம் வெளியிட்டதை கருத்துவேறுபாடின்றி கேட்பது கேட்டல்.
  • எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம்.
  • எப்படி மூன்று காலமும் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை .

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தது?
அ) விளக்கு
ஆ) எழுத்து
இ) நடை
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
ஆ) எழுத்து

Question 2.
கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ்
அ) நடை
ஆ) விளக்கு
இ) யாப்பும் கவிதையும்
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
அ) நடை

Question 3.
கவிஞர் சி. மணி வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கவை
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) இதுவரை
இ) நடை
ஈ) எழுத்து
Answer:
அ) ஒளிச்சேர்க்கை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 4.
கவிஞர் சி. மணி மொழிப்பெயர்த்த சீன மெய்யியல் நூல்
அ) தாவோ ஜிஜிங்
ஆ) தாவோ லி ஜிங்
இ) தாவோதே ஜிங்
ஈ) தாவோ ஸி ஜிங்
Answer:
இ) தாவோதே ஜிங்

Question 5.
கவிஞர் சி. மணி புதுக்கவிதையில் எந்தச் சுவையை மிகுதியாகப் பயன்படுத்துவார்?
அ) உவகை
ஆ) மருட்கை
இ) இளிவரல்
ஈ) அங்கதம்
Answer:
ஈ) அங்கதம்

Question 6.
கவிஞர் சி. மணி இருத்தலின் வெறுமையை எப்படிக் சொன்னவர்?
அ) அழுகையும் அங்கலாய்ப்பும்
ஆ) நகையும் உவமையும்
இ) சிரிப்பும் கசப்பும்
ஈ) பயமும் துக்கமும்
Answer:
இ) சிரிப்பும் கசப்பும்

Question 7.
கூற்று 1 : குதிரை வரையக் குதிரை வராது ; கழுதையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
கூற்று 2 : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை ; சுவைப்போன் பசியை, சுவை முடிச்சைச் சார்ந்தது.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 8.
கூற்று 1 : சொல்ல விரும்பியதெல்லாம் எழுத்தில் வருவதில்லை.
கூற்று 2 : எலிக்குப் பொறிவைத்தால் விரலும் விழுவதுண்டு.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி

Question 9.
கூற்று : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை .
காரணம் : கனியை உண்போனின் பசியைப் பொறுத்ததே கனியின் சுவை.

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று சரி காரணம் சரி

Question 10.
சரியானதைத் தேர்க.
அ) குதிரை வரைய யானையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
ஆ) கனியின் இனிமை அதன் மறத்தால் அறியப்படும்.
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.
ஈ) நீர்த்தேடி அலையும் போது நீர் கிடைக்கும்.
Answer:
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.

Question 11.
சரியானதைத் தேர்க.
அ) கவிஞர் சி. மணி அவர்கள் புதுக்கவிதையின் அங்கதத்தை பயன்படுத்தவில்லை .
ஆ) இருத்தலின் வெறுமையைக் கவிஞர் சி மணி சிரிப்பும் கசப்புமாகச் சொன்னார்.
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.
ஈ) கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நகர்வதில்லை.
Answer:
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 12.
பொருத்தாதைத் தேர்க.
அ) கனியின் இனிமை சுவைப்போன் பசியை சுவை முடிச்சைச் சார்ந்தது.
ஆ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும், கேட்பதில் சிக்கல் உண்டு.
இ) நீர்தேடி அலையும் போது இளநீரும் கிடைக்கும்.
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.
Answer:
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.

Question 13.
பொருத்தாதைத் தேர்க.
அ) கவிஞர். சி.மணி, வே.மாலி, செல்வம் என்னும் புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.
ஆ) கவிஞர். சி.மணி, ஆசான் கவிதை விருது பெற்றவர்.
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.
ஈ) கவிஞர். சி.மணி எழுத்து இதழில் எழுதியவர்.
Answer:
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.

Question 14.
பொருத்தி,
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 2
அ) 4, 2, 1, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3, 1
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஈ) 4, 1, 3, 2

Question 15.
சி. மணியின் (சி பழனிச்சாமி) இடையீடு என்னும் கவிதை………….. தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அ) யாப்பும் கவிதையும்
ஆ) வரும் போகும்
இ) ஒளிச்சேர்க்கை
ஈ) இதுவரை
Answer:
ஈ) இதுவரை

Question 16.
சி. மணியின் கவிதைகள் எழுத்து என்னும் இதழில் வெளிவரத் தொடங்கிய ஆண்டு
அ) 1953
ஆ) 1956
இ) 1959
ஈ) 1962
Answer:
ஈ) 1962

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 17.
சி. மணி படைத்த இலக்கணம் பற்றிய நூல்
அ) யாப்பும் கவிதையும்
ஆ) அணியும் கவிதையும்
இ) எழுத்தும் கவிதையும்
ஈ) சொல்லும் கவிதையும்
Answer:
அ) யாப்பும் கவிதையும்

Question 18.
‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை ‘ என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) வேணுகோபாலன்
ஆ) இரா.மீனாட்சி
இ) சி.மணி
ஈ) ஆத்மாநாம்
Answer:
இ) சி.மணி

Question 19.
சி. மணி, பேராசிரியராகப் பணியாற்றிய துறை
அ) தமிழ்
ஆ) ஆங்கிலம்
இ) கணிதம்
ஈ) இயற்பியல்
Answer:
ஆ) ஆங்கிலம்

Question 20.
‘தாவோ தே ஜிங்’ என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) கவிமணி
ஆ) சி. மணி
இ) நாகூர் ரூமி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஆ) சி. மணி

Question 21.
வே. மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியவர்
அ) சி. மணி
ஆ) ஆத்மாநாம்
இ) நாகூர் ரூமி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
அ) சி. மணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 22.
எம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல என்கிறார் சி. மணி?
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்
ஆ) பார்த்தல், கேட்டல், இரசித்தல்
இ) கேட்டல், பார்த்தல், கவனித்தல்
ஈ) உணர்தல், நினைத்தல், செய்தல்
Answer:
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்

Question 23.
சொல்ல விரும்பியதெல்லாம்
சொல்லில் வருவதில்லை – என்று எழுதியவர்

அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர் ரூமி
இ) சி. மணி
ஈ) கவிமணி
Answer:
இ) சி. மணி

குறுவினா

Question 1.
கல்வி எவற்றையெல்லாம் நமக்கு வழங்குகிறது?
Answer:

  • சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையையும் தருகிறது.
  • நமக்குத் துணை நின்று காக்கும் அறிவையும் வழங்குகிறது கல்வி.

Question 2.
கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே நிகழும் விளைவுகள் என்ன?
Answer:

  • கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நேர்வதும் உண்டு.
  • எதிர்பாராத நல்ல விளைவுகளும் கிடைப்பதுண்டு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 3.
கனியின் சுவை எதைப் பொறுத்தது?
Answer:

  • கனியின் சுவை என்பது கனியைப் பொறுத்தது அல்ல.
  • மாறாக அதைச் சுவைப்பவரின் பசியையும், சுவையின் முடிச்சையும் சார்ந்ததாகும்.

Question 4.
கவிஞர் சி. மணி பெற்றுள்ள விருதுகளைக் கூறுக.
Answer:

  • விளக்கு இலக்கிய விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது.
  • ஆசான் கவிதை விருது.
  • கவிஞர் சிற்பி விருது.

Question 5.
‘மனம்புழுங்கம் பலவுண்டு’ என்று கவிஞர் சி. மணி எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:
கணக்கிலடங்கா மாற்றங்களும் இலக்கைத் தவறிய ஏமாற்றங்களும் மனம் வருந்த செய்வதற்கென்று பற்பலவும் இருப்பதாகச் சி. மணி குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
குதிரை வரையக் குதிரையே
வராது ; கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
நாம் சொல்ல விரும்பிய எல்லாமே சொல்லில் வருவதில்லை. நாம் எண்ணும் எண்ணம் எல்லாவற்றையுமே சொல்லில் கொண்டு வர முடிவதில்லை.

விளக்கம் :
நாம் ஒன்றை நினைத்துப் பேச அது புரிந்து கொள்ளும் விதத்தில் வேறொன்றாகிவிடும் நிகழ்வுகள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கும். எவ்வாறெனில் ஓவியன் குதிரையை வரைய நினைத்து வரையும் போது அது பார்ப்பதற்குக் குதிரை போல இல்லாமல் கழுதைபோலக் காட்சியளிக்கலாம்.

பல நேரங்களில் இரண்டும் கலந்து கூட தோற்றமளிக்கலாம். அதுபோன்றுதான் : நாம் எண்ணுகின்ற எண்ணம் வெளிவரும் போது புரிந்து கொள்ளும் விதத்தில் நம் எண்ணம் அப்படியே புரிந்து கொள்ளப்படலாம் அல்லது மாற்றுக்கருத்தையும் பெறலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 2.
“எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
எலியைப் பிடிக்க பொறிவைத்தால் விரலும் மாட்டிக்கொள்ளும். தண்ணீர் தேடிய அலையும் பொழுது இளநீரும் கிடைக்கும்.

விளக்கம் :
ஒரு செயலைச் செய்கின்றபொழுது அச்செயலுக்கு மாற்றாக வேறு செயல் நடந்து நம்மைத் துன்புறுத்தலாம். நாம் சிறிய குறிக்கோளுடன் செல்லும்பொழுது எதிர்பாராத விதமாக பெரிய குறிக்கோளும் நடக்கலாம், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தலாம். ஆகவே, இடையீடுகள் எப்பொழுதும் நம்மிடம் வந்துபோகும்.