Students can Download 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.3 பரிபாடல்
கற்பவை கற்றபின்
Question 1.
பரிபாடல் இசைப்பாடல் ஆகும். பாடப்பகுதியின் பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
(மாணவர் செயல்பாடு)
Question 2.
பரிபாடல் காட்டும் பெருவெடிப்புக் காட்சியைப் படங்களாக வரைந்து பொருத்தமான செய்திகளுடன் வழங்குக.
Answer:
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. இப்பால் வீதிகள் தூசுகள் போன்று தோன்றும் இப்பிரபஞ்சம் உருவாக பெருவெடிப்புக் கொள்கையே காரணம். இந்த பெருவெடிப்புக் கொள்கைக்கு முன் எதுவுமே இல்லா பெருவெளி மட்டுமே இருந்தது.
இன்றைய அறிவியல் கொள்கைகளின்படி இந்த பிரபஞ்சமானது கிட்டத்தட்ட பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பும் என்ற ஒரு சம்பவத்துடனே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது. இவ்வாறு பெருவெடிப்பு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தினை விளக்கும் முறையினைப் பெருவெடிப்புக் கொள்கை என்கிறோம். இதைப் பரிபாடல் எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது என்கிறது.
பெருவெடிப்பிற்குப் பின் உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் முதலிய பூதங்கள் உருவாகின. அந்த அணுக்களின் ஆற்றலால் பருப்பொருள் சிதறின. இதனால் நெருப்புப் பந்து போல பூமி உருவாகியது. தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தால் பூமி மூழ்கியது. பின்னர் இப்புவி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்ததாலும், சூழல் மாற்றத்தாலும் உயிர்கள் தோன்றி நிலைபெற்றன எனப் பரிபாடல் குறிப்பிட்டுள்ளது. இப்பிரபஞ்சமானது விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்பதனை 1929ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான எட்வின் ஹப்பிள் கண்டறிந்துள்ளார்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
Answer:
ஈ) வானத்தையும் பேரொலியையும்
குறுவினா
Question 1.
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
Answer:
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு.
நெடுவினா
Question 1.
நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
சங்க இலக்கியமான பரிபாடலில்……. பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
Answer:
- எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.
- உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
- அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்தது.
- பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
- மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
- இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
- புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.
இலக்கணக் குறிப்பு.
ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர்
வளர் வானம் – வினைத்தொகை
செந்தீ – பண்புத்தொகை
வாரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
கிளர்ந்த – பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
1. தண்பெயல் – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
2. ஆர் தருபு – செறிந்து திரண்டு
3. பீடு – குளிர்ந்த மழை
4. ஈண்டி – சிறப்பு
அ) 1, 3, 2, 4
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
ஈ) 3, 1, 4, 2
Question 2.
இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 24
ஆ) 34
இ) 44
ஈ) 54
Answer:
அ) 241
Question 3.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ) பரிபாடல்
ஆ) முல்லைப் பாட்டு
இ) நாலடியார்
ஈ) மூதுரை
Answer:
அ) பரிபாடல்
Question 4.
‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.
அ) நக்கீரர்
ஆ) மருதனார்
இ) கீரந்தையார்
ஈ) ஓதலாந்தையார்
Answer:
இ) கீரந்தையார்
Question 5.
பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.
அ) நற்பரிபாடல்
ஆ) புகழ் பரிபாடல்
இ) ஓங்கு பரிபாடல்
ஈ) உயர் பரிபாடல்
Answer:
இ) ஓங்கு பரிபாடல்
Question 6.
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …………………
அ) நற்றிணை
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப் பாலை
ஈ) பரிபாடல்
Answer:
ஈ) பரிபாடல்
Question 7.
பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………
அ) புலவர்கள்
ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்
இ) இலக்கிய ஆய்வாளர்கள்
ஈ) உரையாசிரியர்கள்
Answer:
ஈ) உரையாசிரியர்கள்
Question 8.
எட்வின் ஹப்பிள் என்பவர்………………….
அ) அமெரிக்க மருத்துவர்
ஆ) பிரெஞ்சு ஆளுநர்
இ) அமெரிக்க வானியல் அறிஞர்
ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி
Answer:
இ) அமெரிக்க வானியல் அறிஞர்
Question 9.
எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
அ) 1921
ஆ) 1821
இ) 1924
ஈ) 1934
Answer:
இ) 19241
Question 10.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?
அ) பரிபாடல்
ஆ) கலித்தொகை
இ) பெருமாள் திருமொழி
ஈ) திருவாசகம்
Answer:
ஈ) திருவாசகம்
Question 11.
பொருத்திக் காட்டுக.
i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
iii) வளர் வானம் – 2. பண்புத்தொகை
iii) செந்தீ – 3. வினைத்தொகை
iv) வாரா – 4. அடுக்குத் தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1
Question 12.
பொருத்திக் காட்டுக.
i) விசும்பு – 1. சிறப்பு
ii) ஊழி – 2. யுகம்
iii) ஊழ் – 3. வானம்
iv) பீடு – 4. முறை
அ) 3, 2, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 3, 2, 4, 1
Question 13.
‘கிளர்ந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………
அ) கிளர்ந்து + அ
ஆ) கிளர் + த் + த் + அ
இ) கிளர் + ந் + த் + அ
ஈ) கிளர் + த்(ந்) + த் + அ
Answer:
ஈ) கிளர்+த்(ந்)+த்+அ
Question 14.
முதல் பூதம் எனப்படுவது ………………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) வானம்
Question 15.
“கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்”
– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை
Question 16.
முதல் பூதம் …………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) நீர்
ஈ) காற்று
Answer:
அ) வானம்
Question 17.
பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ……………………..
அ) நெருப்புப் பந்து
ஆ) உருவம் இல்லாத காற்று
இ) வெள்ளம்
ஈ) ஊழி
Answer:
அ) நெருப்புப் பந்து
Question 18.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் அமைந்துள்ள பெரும்பான்மை நயம் ……………….
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) மோனை
Question 19.
நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ……………
அ) பூமி
ஆ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) பூமி
Question 20.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
அ) வானம்
Question 21.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழி’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
இ) யுகம்
Question 22.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின் பொருள் ……………………
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
ஈ) முறை
Question 23.
1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………
அ) மாணிக்கவாசகர்
ஆ) கீரந்தையார்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கபிலர்
Answer:
அ) மாணிக்கவாசகர்
Question 24.
“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ……………………
அ) தண்பெயல்
ஆ) தலை
இ) இய
ஈ) ஊழி
Answer:
அ) தண்பெயல்
குறுவினா
Question 1.
சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?
Answer:
- ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை,
- அறிவாற்றல்,
- சமூக உறவு,
- இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன்.
Question 2.
பரிபாடல் நூல் குறிப்பு வரைக.
Answer:
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல் – அகம் புறம் சார்ந்த நூல்.
- இந்நூல் “ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.
- சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
- உரையாசிரியர்கள் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
- 24 பாடல்களே கிடைத்துள்ளன.
Question 3.
அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
- அண்டப்பகுதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
- கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.
Question 4.
பால்வீதி குறித்து எட்வின் ஹப்பிள் நிரூபித்துக் கூறிய செய்தியை எழுது.
Answer:
- அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால் வீதிகள் உள்ளன.
- வெளியே எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
- வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறுதூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூ சுகளாகத் தெரியும்.
Question 5.
பூமி வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன?
Answer:
தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
Question 6.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – தொடர் பொருள் விளக்குக.
Answer:
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலை பெறும்படியான ஊழிக்காலம் வந்தது.
Question 7.
“விசும்பில் ஊழி ஊழ்” என்பதில் விசும்பு, ஊழி, ஊழ் ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:
- விசும்பு – வானம்
- ஊழி – யுகம்
- ஊழ் – முறை
சிறுவினா
Question 1.
அண்டப் பெருவெளி குறித்து மாணிக்கவாசகர் மற்றும் எட்வின் ஹப்பிள் ஆகியோர் மூலம் அறியப்படும் செய்தி யாது?
Answer:
மாணிக்கவாசகர் கூற்று :
- அண்டப் பகுதியின் உருண்டை வடிவம், ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
- “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்னும் திருவாசகப் பாடலில் மேற்கண்ட செய்தியை 1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.
எட்வின் ஹப்பிள் கூற்று :
- அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
- வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறு தூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும்.
- மேற்கண்ட செய்தியை அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நிரூபித்தார்.
Question 2.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இவ்வடிகள் பரிபாடலில் கீரந்தையார் பாடலில் இடம்பெறுகின்றது.
பொருள்:
உயிர்கள் தோன்றி நிலைபெறுதல்.
விளக்கம் :
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான
ஊழிக்காலம் வந்தது.
Question 3.
பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை நிரூபிக்க.
Answer:
எட்வின் ஹப்பிள்:
நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியில் நின்று பார்த்தால் , சிறு தூசி போல கோடிக்கணக்கில் பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். இதனை 1924 இல் அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்தார்.
மாணிக்கவாசகர்:
1300 ஆண்டுகளுக்கு முன் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திரு அண்டப்பகுதியில்,
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
…………………. ………………….
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”
– என்ற அடிகள் பால்வீதிகள் பற்றிய கருத்துகளைக் கூறுகின்றது. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல பால்வீதிகள் நுண்மையாக இருக்கின்றன.
பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை அறியமுடிகின்றது.