Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்
11th History Guide பாமினி விஜய நகர அரசுகள் Text Book Questions and Answers
I. சரியான விடையினைத் தேர்வு செய்க.
Question 1.
ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக ………… இடம் பணி செய்தனர்.
அ) காகதியர்
ஆ) ஹொய்சாளர்
இ பீஜப்பூர் சுல்தான்
ஈ) யாதவர்
Answer:
ஆ) ஹொய்சாளர்
Question 2.
இபன் பதூதா … நாட்டுப் பயணி
அ) மொராக்கோ
ஆ) வெனிஷிய
இ போர்த்துகல்
ஈ) சீனா
Answer:
அ) மொராக்கோ
Question 3.
கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
அ) சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவவம்சம்
ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
இ சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
ஈ) சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
Answer:
ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
Question 4.
விஜயநகர அரசின் அரசமுத்திரை……………….
அ) பன்றி
ஆ) புலி
இ மீன்
F) வில்
Answer:
அ) பன்றி
Question 5.
…………………….. என்ற நூலைகங்காதேவி எழுதினார்.
அ) மனுசரிதம்
ஆ) ஆமுக்தமால்யதா
இ பாண்டுரங்க மகாத்மியம்
ஈ) மதுராவிஜயம்
Answer:
ஈ) மதுராவிஜயம்
Question 6.
………….. சங்க ம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
அ) முதலாம் தேவராயர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ கிருஷ்ண தேவராயர்
ஈ) வீர நரசிம்மர்
Answer:
ஆ) இரண்டாம் தேவராயர்
Question 7.
கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் …………
அ) பெல்காம்
ஆ) கட்டாக்
இ சிம்மாச்சலம்
ஈ) இராஜமகேந்திரவரம்
Answer:
இ சிம்மாச்சலம்
Question 8.
எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது ……………………….
அ) சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
இ சேர மற்றும் பாண்டிய அரசுகள்’
ஈ) சோழ மற்றும் சேர அரசுகள்
Answer:
ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
Question 9.
ஷாநாமாவை எழுதியவர் …………..
அ) பிர்தௌசி
ஆ) இபன் பதூதா
இ) நிக்கோலோடி கோன்டி
ஈ) டோமிங்கோ பயஸ்
Answer:
அ) பிர்தௌசி
Question 10.
முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம் ………………
அ) பெரார்
ஆ) பீஜப்பூர்
இ பீடார்
ஈ) அகமது நகர்
Answer:
இ பீடார்
Question 11.
………………………….. கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார். (மார்ச் 2019 )
அ) இராஜா கிருஷ்ண தேவ்
ஆ) சுல்தான் குலி- குதுப்- உல் – முல்க்
இ) முகமது கவான்
ஈ) பாமன்ஷா
Answer:
அ) இராஜா கிருஷ்ண தேவ்
II. சரியான கூற்றினை தேர்ந்தெடு
1. விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாக சுமார் 300 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர் 2. ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் விஜயநகர அரசுகளிடையே கடும் போர் நடைபெற்றது.
3. அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமரின் அவைக்கு வந்தார்.
4. பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.
Answer:
3. அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமுத்திரியின் அவைக்கு வந்தார்.
III. கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
அ. (i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும் மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.
(ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றைக் கற்றுத்தரச்செய்தார்.
அ) (i)மற்றும் (ii) சரி
ஆ) (i) மற்றும் (ii) தவறு
இ) (i) சரி(ii) தவறு
ஈ) (1) தவறு (ii) சரி
Answer:
இ) (i) சரி (ii) தவறு
ஆ. கூற்று (கூ) : பாமன்ஷா மிகச்சரியாகத் தாக்குதல்
தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்தவைத்தார்.
காரணம் (கா) : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்றும் தவறுகாரணமும் தவறு
ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.
Answer:
ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.
IV. பொருத்துக கதி
i) அப்துர் ரசாக் – 1. ரஷ்யா
ii) நிகிடின் – 2. சாளுவநாயக்கர்
iii) டோமிங்கோ பயஸ் மற்றும் நூனிஸ் – 3. பாரசீகம்
iv) செல்லப்பா – 4. போர்த்துக்கல்
அ) 1 2 3 4
ஆ) 4 3 2 1
இ 2 1 4 3
ஈ) 3 1 4 2
Answer:
ஈ) 3 1 4 2
I. கூடுதல் வினாக்கள்
Question 1.
முகமது பின் துக்ளக் சிறப்பாக ஆட்சி புரிவதற்காக டெல்லியிலிருந்து தனது தலைநகரை….. க்கு மாற்றினார்.
அ) உஜ்ஜையினி
ஆ) வாரணாசி
இ) தேவகிரி
ஈ) அகமது நகர்
Answer:
இ) தேவகிரி
Question 2.
மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய …………….. சிறந்த அரசியல் விவேகி ஆவார்.
அ) குதுப்ஷாகி
ஆ) பிர்தௌசி
இ) ஜாபர்கான்
ஈ) முகமது கவான்
Answer:
ஈ) முகமது கவான்
Question 3.
டோமிங்கோபயஸ் என்ற வணிகர் ………… நாட்டைச் சேர்ந்தவர்
அ) மொராக்கோ
ஆ) போர்ச்சுக்கல்
இ) இத்தாலி
ஈ) ரஷ்யா
Answer:
ஆ) போர்ச்சுக்கல்
Question 4.
……………..அரசர்கள் “ வராகன் ” என்ற தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்
அ) ஹொய்சாள
ஆ) பாமினி
இ விஜயநகர
ஈ) நாயக்க
Answer:
இ விஜயநகர
Question 5.
வகில் – உஸ்- சுல்தானா என்பவர் ………..
அ) படைத்தலைவர்
ஆ) நிதி அமைச்சர்
இ) வெளியுறவு அமைச்சர்
ஈ) தலைமை நீதிபதி
Answer:
அ) படைத்தலைவர்
Question 6.
மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய ………… சிறந்த அரசியல் விவேகியாவார்.
அ) கொத்வால்
ஆ) முகமது கவான்
இ) பிர்தௌசி
ஈ) ஷெர்ஷா
Answer:
ஆ) முகமது கவான்
Question 7.
பாமினி அரசர்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டவர்…………
அ) முகமது கவான்
ஆ) பாமன்ஷா
இ) கனிஷ்கர்
ஈ) வீர நரசிம்மர்
Answer:
ஆ) பாமன்ஷா
Question 8.
17-ம் நூற்றாண்டில் இந்தியாவின் சிறந்த வைரச்சந்தை ……… ஆகும்
அ) தோ-ஆப்
ஆ) கோல்கொண்டா
இ) பெரார்
ஈ) ரெய்ச்சிங்
Answer:
ஆ) கோல்கொண்டா
Question 9.
கிருஷ்ண தேவராயர் போர்ச்சுக்கீசியருக்கு கோட்டை கட்ட உரிமம் வழங்கிய இடம்
அ) பத்கல்
ஆ) மலபார்
இ) வாரங்கல்
ஈ) சிம்மாசலம்
Answer:
அ) பத்கல்
Question 10.
கிருஷ்ணா , துங்கப்பத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி …………………
அ) ரெய்சூர்
ஆ) அகமதாபாத்
இ) சிம்மாச்சலம்
ஈ) தோ – ஆப்
Answer:
அ) ரெய்சூர்
II. பொருத்துக
i) பாரசீகம் – 1. நூனிஸ்
ii) ரஷ்யா – 2. டோமிங்கோபயஸ்
iii) போர்ச்சுக்கள் – 3. நிகிடின்
iv) இத்தாலி – 4.அப்துல் ரசாக்
அ) 3 2 1 4
ஆ) 2 1 4 3
இ 1 4 3 2
ஈ) 4 3 2 1
Asnwer:
ஈ) 4 3 2 1
V. சுருக்கமான விடையளி
Question 1.
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
Answer:
- கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள பல செப்புப் பட்டயங்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன.
- கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள் என வளமான தொல்லியல் சான்றுகளும் நாணயச் சான்றுகளும் விஜயநகரைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக கிடைத்துள்ளன.
Question 2.
விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?
Answer:
- சங்கமரின் புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் விஜயநகர அரசு ஏற்படுத்தப்பட்டது.
- தலைநகரை ஹம்பிக்கு அருகே கொசபட்னா என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
- தலைநகர் விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் என புதிய பெயர் சூட்டப்பட்டது.
Question 3.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
Answer:
தொடக்கத்திலிருந்தே பாமினி விஜய நகர அரசுகள் தொடர்ந்து மோதிக்கொண்டன.
- இடங்களைக் கைப்பற்றுதல்
- கப்பம் வசூலித்தல்
- குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
Question 4.
தராப் பற்றி எழுதுக.
Answer:
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா சுமுகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றி தன் ஆட்சிப்பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன.
- குல்பர்க்கா, தௌலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்கள் ஆகும்.
- மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி வசூல் போன்றவற்றிற்கு முழு பொறுப்பாவார்.
Question 5.
முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன ? (மார்ச் 2019 )
Answer:
- பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகமது
- இவர் சிறந்த அரசு முறை நிர்வாகத்தைப் பின்பற்றினார்.
- இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது.
- எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார்.
- வழிபறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
கூடுதல் வினா
Question 1.
வராகன் குறிப்பு தருக.
Answer:
- விஜய நகர அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களுக்கு வராகன் என்று பெயர்.
- இந்த தங்க நாணயங்களில் இந்து தெய்வங்களின் உருவங்களும் காளை, யானை, கண்ட பெருண்டா என்ற கற்பனைப் பறவை ஆகிய உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
- நாணயத்தில் அரசனுடைய பெயர் நகரி அல்லது கன்னட எழுத்து வடிவத்தில் பொறிக்கப் பட்டுள்ளது.
VI. குறுகிய விடையளி.
Question 1.
பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால் நிறுவப்பட்டது?
Answer:
- முகமதுபின் துக்ளக் தன் தலைநகரை டில்லிக்கு மாற்றிய பிறகு ஜாபர்கான் வடக்குக் கர்நாடகாவில் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார்.
- தலைநகரை தேவகிரியிலிருந்து குலபர்காவிற்கு மாற்றினார்.
- ஜாபர் கான் 1347 ல் பாமன்ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தை இங்கு தோற்றுவித்தார்.
Question 2.
நாயக்க முறை.
Answer:
- நாயக்க என்னும் சொல் இராணுவத்தலைவர், அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
- ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.
- இந்நாயக்க முறையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் நிறைவு பெற்றது.
- தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குகள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர்.
Question 3.
ராக்சஷி தங்கடி போர் (1565) மார்ச் 2019
Answer:
பிரிந்து கிடந்த பாமினி அரசுகள் தங்கள் பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்க்கும் வகையில் ஐந்து அரசுகளும் ஒரே கூட்டணியாக இணைந்து (பீஜப்பூர், அகமது நகர், பெரார், கோல் கொண்டா) 1565ல் தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசை தோற்கடித்தனர்.
இதற்கு ராஷி தங்கடி போர் என்று பெயர்.
Question 4.
கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் சிறந்த ஆட்சியாளராகப் போற்றப்படக் காரணங்கள் யாவை?
Answer:
- கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசராகக் கருதப்படுகிறார்.
- தான் பெற்ற வெற்றிகளின் நினைவாக சிம்மாச்சலத்தில் வெற்றித் தூணை நிறுவினார்.
- சைவ, வைணவ கோயில்களுக்கு பெருமளவில் கொடை அளித்தார். பல கோவில்களில் அவர் எழுப்பிய கோபுரங்கள் இன்றும் உள்ளன.
- அல்லசானி பெத்தண்ணா போன்ற 10 புலவர்கள் அவரது அவையை அலங்கரித்தனர்.
- ஒரு மதிநுட்பம் மிக்க நிர்வாகியாக அவர் நாயக் அல்லது நாயங்கரா முறையை மறு சீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்தார். இது இவரது தலை சிறந்த சாதனையாக கருதப்படுகிறது.
- இதனால் கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசராகப் போற்றப்படுகிறார்.
Question 5.
இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?
Answer:
- இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப் பட்டவர் அலாவுதின் ஹசன் பாமன் ஷா.
- 11 ஆண்டுகள் பாமன் ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி செய்தார்.
- வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி கொண்ட வீடு ஆகியவற்றிடமிருந்து கப்பம்பெற முயன்றபோது பல போர்களுக்கு இட்டுச் சென்றது.
- அனைத்திலும் அவர் வெற்றி பெற்றார்.
- தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டார்.
Question 6.
கோல் கொண்டா கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவரி.
Answer:
- கோல் கொண்டா கோட்டை ஹைதராபாத்தி லிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள மலை மீது 120 மீட்டர் உயரத்தில கட்டப்பட்டுள்ளது.
- ஒலி அம்ச அடிப்படையில் இது சிறந்த கட்டிடக்கலையின் அம்சமாகும்.
- இக்கோட்டையின் உயர்ந்த பகுதி பாலா ஹிசார் என்றழைக்கப்படுகிறது.
- இதில் ரகசிய நிலத்தடி சுரங்கபாதை உள்ளது. அது தர்பார் அறையிலிருந்த மலையின் கீழுள்ள அரண்மனைக்கு செல்வதாக சொல்லப்படுகிறது.
- இக்கோட்டையில் அரச அவையும், ஒரு மாளிகையும் உள்ளது.
கூடுதல் வினா
Question 1.
தென்னிந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள் யாவர்?
Answer:
- மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இபன்பதூதா.
- பாரசீகப் பயணியான அப்துல் ரசாக்
- ரஷ்யப் பயணியான நிகிடின்
- போர்ச்சுக்கள் நாட்டு வணிகரான டோமிங்கோ பயஸ்.
- இத்தாலி நாட்டைச் சேர்ந்த நூனிஸ் ஆகியோர் தென்னிந்தியாவிற்கு வந்த அயல் நாட்டவர்கள் ஆவார்கள்.
Question 2.
விஜயநகர பேரரசை ஆண்ட வம்சங்களை காலவரிசைப்படி கூறுக.
Answer:
விஜயநகரப் பேரரசை நான்கு அரச வம்சத்தினர் ஆட்சி புரிந்தார். அவை
- சங்கவம்சம் (1336-1485)
- சாளுவவம்சம் (1485-1505)
- துளுவவம்சம் (1505-1570)
- அரவீடுவம்சம் (1570-1650)
ஆகிய நான்கு வம்ச அரசர்களும் சுமார் 300 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளனர்.
VII. விரிவான விடையளி.
Question 1.
விஜயநகரப் பேரரசின் சமூக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.
Answer:
சமூக நிலை :
- தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்கக்கால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும்.
- விஜயநகரப் பகுதிகளைக் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தொரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர்.
- மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும்.
- அனைத்து அயல் நாட்டு பயணிகளும் அரசர்களும், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்த னர்.
- மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
- அடிமை முறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார நிலை :
- விஜயநகர மன்னர்கள் வரி விதிப்பின் மூலமே வருமானத்தை பெற்றனர்.
- விஜயநகர ஆட்சி புதிய பகுதிகளுக்கு பரவிய போது அப்பகுதி மீது ஆளுநர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். இதனால் உழைக்கும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- விஜயநகர இளவரசர் இப்பிரச்சனையில் தலையிட்டு வரித் தொகையை குறைத்ததாக அறியப்படுகிறது.
- விஜயநகர ஆட்சியில் வேளாண்மை சாராத கைவினைத் தொழில்களும் வியத்தகு வளர்ச்சி அடைந்தது.
- சமூகத்தில் நெசவு செய்வோர் உலோக வேலை செய்வோர் மற்றும் கட்டிட கலைஞர்கள் போன்ற கைவினைக் கலைஞர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
- இவர்கள் பட்டடை என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வரியை பணமாகவே வழங்கினர். .
Question 2.
விஜயநகர ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை பற்றி விவரி. (மார்ச் 2019)
Answer:
அரச அமைப்பு :
- விஜய நகர பேரரசில் அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு பல உயர்மட்ட அதிகாரிகள் உதவி செய்தனர்.
- அதில் மகா பிரதாணி என்று அழைக்கப்பட்ட முதல் அமைச்சர் அதிக அதிகாரம் படைத்தவராக இருந்தார்.
- அவர் தளவாய், வாசல் ராயசம் அடைப்பம், காரிய கர்த்தா போன்ற கீழ் நிலை அதிகாரிகளுக்கு தலைவராவார்.
பிரதேச பிரிவு :
- நிர்வாக வசதிக்காக நாடு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இது ராஜ்யா என்று அழைக்கப்பட்டது.
- ஒவ்வொரு ராஜ்யாவுக்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்பட்டார்.
- ஹொய் சாளா, அரகா, பர்கூர் மற்றும் மங்களூர்
போன்றவை முக்கிய ராஜ்யாக்களாகும்.
நிர்வாகம் :
- பிரதானி என்பவர் அரசவை உறுப்பினராகவோ அல்லது இராணுவ அதிகாரியாகவோ இருப்பார். நிர்வாகத்தில் அவருக்கு உதவி புரிய இராணுவ அதிகாரிகளும் கணக்கர்களும் பணி அமர்த்தப்பட்டனர்.
- ஒவ்வொரு ராஜ்யாவும் சீமை , ஸ்தலம், கம்பனா எனும் சிறிய நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
- கிருஷ்ண தேவராயரால் நாயக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ராஜ்யாக்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.
Question 3.
முதலாம் முகமது ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
- பாமினி சுல்தான் அலாவுதீன் பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகமது ஆவார்.
- இவர் விஜய நகரப் பேரரசர்களுடன் நீண்ட காலப் போர்களை மேற்கொண்டார். ஆனால் எந்த ஒரு பயனையும் இப்போர்கள் அவருக்கு தரவில்லை
- 1363 இல் இவர் வாராங்கல் மீது படையெடுத்து அதை கைப்பற்றினார். ரெய்ச்சூர் போர்களினால் ஏற்பட்ட நஷ்டம் இப்போரின் வெற்றியால் ஈடு செய்யப்பட்டது.
- கோல் கொண்டா கோட்டை இவர் வசமானது. அங்கிருந்த ரத்தின சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனம் ஆனது.
- முதலாம் முகமது சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார். டில்லி சுல்தானியர் பின்பற்றிய நிர்வாக முறையை பின்பற்றியே இவரது நிர்வாக முறை அமைந்திருந்தது.
- நிர்வாகத்திற்கென்று எட்டு அமைச்சர் கொண்ட குழுவை அவர் நியமித்தார். அக்குழு பல்வேறு துறைகளை மேற்பார்வை இட்டு நிர்வாகம் சீராக நடைபெற உதவியது.
- நிர்வாகம் மற்றும் புவியியல் ரீதியாக ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே பாமினி அரசுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது.
- வழிப்பறி கொள்ளையருக்கு எதிராக கடுமை யான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
Question 4.
முகமது கவானின் ஆட்சிமுறை மற்றும் ராணுவ நிர்வாகம் பற்றி விவரி
Answer:
- பாமினி சுல்தான் மூன்றாம் முகமதுவின் சிறந்த அமைச்சராக முகமது கவான் விளங்கினார்.
- சிறந்த நிர்வாகியான கவான் தனது திறமையால் பாமினி அரசின் வளர்ச்சிக்கு உதவினார்.
ஆட்சி முறை :
- கவான். மாகாண ஆளுனர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்சி அமைப்பை உருவாக்கினார்.
- நிர்வாக வசதிக்காக நாட்டை விட்டு மாகாணங்களாக பிரித்தார். ஒவ்வொரு மாகாணங்களும் எல்லைகள் வரையறை செய்யப்பட்டன.
- அவற்றிக்கு தனித்தனியே ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர்.
- சில மாவட்டங்களை கவான் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
- கவான் அறிமுகப்படுத்திய நிர்வாக சீர்த்திருத்தங்கள் அரசின் நிலையை உயர்த்தின.
இராணுவ நிர்வாகம் :
- ஆளுனர்களின் இராணுவ அதிகாரிகள் குறைக்கப்பட்டன. ஒரு ஆளுனர் ஒரு கோட்டையை மட்டுமே பராமரிக்க அனுமதிக்கப்பட்டார்.
- மற்ற கோட்டைகள் யாவும் சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
- கொங்கணம் ஒரிசா விஜயநகர மன்னர்களுக்கு எதிராக வெற்றிகரமான போர்களை நடத்தினார். இவர் பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் வெடி மருந்தைப் பயன்படுத்தினார்.
கூடுதல் வினா
Question 1.
முதலாம் முகமதுவின் அமைச்சரவை பற்றிக் கூறு?
Answer:
- முதலாம் முகமது எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அவை முறையே
- வகில் உஸ் சுல்தானா – படைத்தலைவர்
- வசீர் குல் – அமைச்சர்களின் பணியை பார்வையிடுபவர்
- அமீர் – இ – ஜீம்மா – நிதியமைச்சர்
- வசீர் – இ – அஷ்ரப் – வெளியுறவுத்துறை அமைச்சர்
- நசீர் – நிதித்துறை இணை அமைச்சர்
- பேஷ்வா – படைப்பொறுப்பாளர்
- கொத்வால் – காவல்துறை தலைவர்
- சதர் – இ-ஜஹான் – தலைமை நீதிபதி
Question 2.
இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை சிற்றரசர்களை விவரி?
Answer:
- இராமநாதபுரம் : இராமநாதபுரம் சிற்றரசு மதுரை நாயக்க அரசர் முத்து கிருஷ்ண நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் துவங்கி வைக்கப்பட்டது.
- போர் புரியும் மரபினைக் கொண்டிருந்த இப்பகுதி வாழ் மக்கள் பாண்டிய சோழ விஜயநகர அரசர்களிடம் படை வீரர்களாகப் பணியாற்றினார்.
- நாயக்க மன்னர்களின் படைகளிலும் பணியாற்றிய இவர்கள் பரம்பரைக் காவல்காரர் களாக கிராமங்கள், கோவில்கள், ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பணியையும் செய்து வந்தனர்.
- இராமேஸ்வரம் கோவில், உடையான் சேதுபதி என்பவரின் பாதுகாப்பின் கீழ் இருந்தது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை ஒரு சிறிய சிற்றரசராக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் இடையில் அமைந்திருந்தது.
முந்தைய காலத்தில் சோழ, பாண்டிய அரசுகளிடையே இடைப்படு நாடாக இருந்துள்ளது.
இராமநாதபுரம் பகுதி வாழ் மக்களைப் போலவே புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாவர். இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் இப்பகுதி ஒரு சிற்றரசு என்னும் மதிப்பைப் பெற்றது.