Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 4.4 தொல்காப்பியம் – சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 4.4 தொல்காப்பியம் – சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

குறுவினாக்கள் – கூடுதல் வினாக்கள்

Question 1.
தொல்காப்பியம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:
தமிழ்மொழியில் கிடைத்துள்ள நூல்களில், காலத்தால் மிகமிகப் பழமையான இலக்கணநூல்
தொல்காப்பியம். இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களாக இருபத்தேழு இயல்களையும் பெற்றுள்ளது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.

Question 2.
தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல், தெள்ளிதின் விளக்குவது யாது?
Answer:
நாட்டின் எதிர்காலமாக விளங்கும் பெருமை பொருந்திய மாணவர்கள், எவ்வாறு கற்க வேண்டும் என்பதனைத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் தெள்ளிதின் விளக்குகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

Question 3.
கற்றலில் சிறப்புற மாணவர் என்னென்ன செய்வர்? ‘
Answer:
கற்றலில் சிறப்புற மாணவர், ஆசிரியரிடம் உலகவழக்கு, நூல்வழக்கு இலக்கணங்களைக் குற்றம் நீங்கக் கற்பர். உயர்சிந்தனை உடையவர்களுடன் கலந்து உரையாடிப் பயிற்சியும் பெறுவர். தம் ஐயங்களை ஆசிரியர்களிடம் வினவித் தெளிவு பெற்று, அவற்றைப் பிறருக்கு உணர்த்தியும் தெளிவு அடையச் செய்வர்.

சிறுவினா – கூடுதல் வினா

Question 1.
மாணவர் பாடம் கேட்கும் முறைமை குறித்துத் தொல்காப்பியம் கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.
Answer:
மாணவர் அறியாமை இருள் நீக்குநெறி :

  • உலகவழக்கு, நூல்வழக்கு என்னும் மொழி வழக்கு இலக்கணங்களை அறிதல் வேண்டும்.
  • பாடங்களைப் போற்றிக் கற்றல், கற்றலின்போது கேட்டவற்றை மீண்டும் நினைத்தல் வேண்டும்.
  • ஆசிரியரை நெருங்கிப் பொருந்தி இருந்து, கருத்துகளைக் கேட்டுத் தெளிவு அடைதல் வேண்டும்.
  • உயர்சிந்தனை உடையவர்களுடன் கலந்து, உரையாடிப் பயிற்சி பெறுதல் வேண்டும்.
  • தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை வினாவாக எழுப்பித் தெளிவு பெறுதல் வேண்டும்,
  • அவ்வாறு உணர்ந்த கருத்துகளைப் பிறர்க்கு உணர்த்தித் தெளிவு பெறச்செய்தல் வேண்டும்.
  • இவையே, பாடம் கேட்கும் மாணவர் அறியாமையை நீக்கும் நெறிமுறைகளாகும்.

பாடம் கேட்கும் முறை :
பாடம் கேட்கும்போது, ஆசிரியர் கூறும் கருத்துகளை மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை கேட்டால், நூலைப் பிழையின்றிக் கற்கும் திறன் பெறுவர்; மும்முறை கேட்டால், பிறர்க்கு முறையாக எடுத்து உரைக்கும் ஆற்றலையும் பெறுவர்.

பாடம் கேட்டலைக் கடமையாகக் கொண்ட மாணவர்கள், இந்நெறிகளைக் கடைப்பிடித்தால், அறியாமையிலிருந்து விலகிச் சிறப்புறுவர் எனத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் உணர்த்துகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

இலக்கணக்குறிப்பு

அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல், வினாதல், விடுத்தல் – தொழிற்பெயர்கள்
நனிஇகக்கும் – உரிச்சொற்றொடர்
இகக்கும், உரைக்கும் – செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுகள்.
கேட்போன் – வினையாலணையும் பெயர்.

உறுப்பிலக்கணம்

1. விடுத்தல் – விடு + த் + தல்
விடு – பகுதி, த் – சந்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

2. அறிந்து – அறி + த் (ந்) + த் + உ
அறி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

3. கேட்டல் – கேள் (ட்) + ட் + அல்.
கேள் – பகுதி, ‘ள்’, ‘ட்’ ஆனது விகாரம், ட் – சந்தி, அல் – தொழிற்பெயர் விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

புணர்ச்சி விதிகள்

1. இழுக்கின்றி – இழுக்கு + இன்றி
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (இழுக்க் + இன்றி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இழுக்கின்றி)

2. முறையறிந்து – முறை + அறிந்து
“இ ஈ ஐ வழி யவ்வும்” (முறை + ய் + அறிந்து)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (முறையறிந்து)

3. ஆசாற்சார்ந்து – ஆசான் + சார்ந்து
“ணனவல் லினம்வர டறவும்” (ஆசாற்சார்ந்து)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

பலவுள் தெரிக

Question 1.
தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை……..
அ) 9
ஆ) 3
இ) 27
ஈ) 2
Answer:
இ) 27

கூடுதல் வினாக்கள்

Question 2.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்………..
அ) இளம்பூரணர், பரிமேலழகர்
ஆ) இளம்பூரணர், சேனாவரையர்
இ) மணக்குடவர், சேனாவரையர்
ஈ) நச்சினார்க்கினியர், பரிமேலழகர்
Answer:
ஆ) இளம்பூரணர், சேன வரையர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

Question 3.
தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் …………
அ) ஐந்து
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) மூன்று
Answer:
ஈ) மூன்று

Question 4.
தொல்காப்பியத்தின் ஒவ்வோர் அதிகாரமும், ………………. இயல்களைக் கொண்டுள்ளது.
அ) மூன்று
ஆ) எட்டு
இ) ஒன்பது
ஈ) பத்து
Answer:
இ) ஒன்பது

Question 5.
தொல்காப்பியத்தில் வாழ்வியல் இலக்கணம் கூறுவது
அ) எழுத்ததிகாரம்
ஆ) சொல்லதிகாரம்
இ) பொருளதிகாரம்
ஈ) யாப்பதிகாரம்
Answer:
இ) பொருளதிகாரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

Question 6.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்……………..
அ) கல்லாடனார்
ஆ) பேராசிரியர்
இ) சேனாவரையர்
ஈ) இளம்பூரணர்
Answer:
ஈ) இளம்பூரணர்

Question 7.
‘கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்’ – இத்தொடரில் ‘கடமை’ என்னும் பொருளுணர்த்தும் சொல் …………………………..
அ) கொளின்
ஆ) மடம்
இ) கடன்
ஈ) இகக்கும்
Answer:
இ) கடன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

Question 8.
முறையறிந்து உரைக்கும் ஆற்றல் பெற,…………. வேண்டும்.
அ) ஒருமுறை கேட்க
ஆ) இருமுறை கேட்க
இ) மும்முறை கேட்க
ஈ) நான்குமுறை கேட்க
Answer:
இ) மும்முறை கேட்க

Question 9.
“முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்” என்னும் தொல்காப்பிய நூற்பா இடம்பெற்ற பகுதி,……………….
அ) பொதுப் பாயிரம்
ஆ) சிறப்புப் பாயிரம்
இ) எழுத்ததிகாரம்
ஈ) சொல்லதிகாரம்
Answer:
ஆ) சிறப்புப் பாயிரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.4 தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

Question 10.
பொருத்துக.
1. இழுக்கு – அ. நீக்கும்
2. மடம் – ஆ. சிறப்பு
3. மாண்பு – இ. மனக்கலக்கம்
4. இகக்கும் – ஈ. அறிவின்மை
– உ. குற்றம்
Answer:
1 – உ
2 – ஈ
3 – ஆ
4 – அ