Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.2 புரட்சிக்கவி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.2 புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

குறுவினாக்கள்

Question 1.
உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?
Answer:

  • உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
  • அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
  • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.

Question 2.
அலைகடல், புதுக்கியவர் – இலக்கணக்குறிப்புத் திருக.
Answer:
அலைகடல் – வினைத்தொகை; புதுக்கியவா வினையாலணையும் பெயர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

கூடுதல் வினாக்கள்

Question 3.
‘உதாரன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்த வன்’ – யார், யாரிடம் கூறியது?
Answer:
“உதாரன் அழகும் அறிவும் இளயையும் வாய்ந்தவன்” என்று அரசனிடம் அமைச்சர் கூறியது.

Question 4.
“சில பேச்சுப் பேசிடுக” – யாடு யாரிடம், எங்கு கூறியது?
Answer:
“சில பேச்சுப் பேசிடுக தலைப்பாகை அதிகாரி, உதாரனிடமும் மங்கையிடமும் கொலைக்களத்தில் கூறியது.

Question 5.
அரசன், அமைச்சரிடம் எதற்கு ஆலோசனை கேட்டான்?
Answer:
அரசன், தன் மகள் இளவரசி அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையைக் கற்றுத் தர விரும்பியதால், அமைச்சரிடம் ஆலோசனை கேட்டான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
அரசன், எதற்குத் தயங்கினான்?
Answer:
அழாம் அறிவும் இளமையும் வாய்ந்த உதாரனே, கவிதை எழுதும் கலை கற்பிக்க ஏற்றவன் என அமைச்சர் கூறியதால், ‘தன் மகள் எளிய கவிஞனோடு காதல் வயப்படுவாளோ?’ என அரசன் தயங்கினான்.

Question 7.
தயங்கிய அரசனுக்கு அமைச்சர் கூறிய உத்தி யாது?
Answer:
“உதாரன் பார்வையற்றவன்” என அமுதவல்லியிடமும், “அமுதவல்லி தொழுநோயாளி” என உதாரனிடமும் கூறி, இருவருக்கும் இடையே, ஒருவரை மற்றொருவர் காணாவகையில் திரை இடுமாறும் அரசனுக்கு அமைச்சர் உத்தி கூறினார்.

Question 8.
பாரதிதாசனைப் ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் என்ன?
Answer:
தம் கவிதைகளில் தாய்மொழி, தமிழினம், குடியாட்சி உரிமைகள், சமூக சீர்திருத்தங்கள் என்பன பற்றி, உரத்த சிந்தனைகளை வெளியிட்டுள்ளமையே, பாரதிதாசனைப், ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 9.
மக்களாட்சி அடிப்படைக் கூறுகளாகப் புரட்சிக்கவி கூறுவன யாவை?
Answer:
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன, மக்களாட்சி அடிப்படைக் கூறுகள் எனப் புரட்சிக்கவி கூறுகிறது.

Question 10.
பாரதிதாசன் இயற்றிய காப்பியங்கள் யாவை?
Answer:
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு என்பன, பாரதிதாசன் இயற்றிய காப்பியங்களாகும்.

சிறுவினாக்கள்

Question 1.
“உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் : பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.
பொருள் : உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.
விளக்கம் : கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதநரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 2.
பெருங்காடு, உழுதுழுது – பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
Answer:
பெருங்காடு – பெருமை + காடு ‘ஈறுபோதல்’ (பெரு + காடு), ‘இனம் மிகல்’ (பெருங்காடு)

உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உந்துது)

கூடுதல் வினா

Question 3.
புரட்சிக் கவிஞர் – குறிப்பெழுதுக.
Answer:
புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்ட கனக சுப்புரத்தினம், பாரதியாரிடம் கொண்ட பற்றுதலால், தம் பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

சமுதாயப் பொறுப்புணர்ந்து கவிதைகளைப் படைத்தார். தம் பாடல்களில் மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியன குத்த கருத்துகளை உரக்க வெளிப்படுத்தியமையால், ‘புரட்சிக் கவிஞர்’ எனவும், ‘பாவேந்தர் எனவும் அழைக்கப்பெற்றார்.

குடும்ப விளக்கு பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு முதலான நூல்களை இயற்றினார். ‘குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.

வடமொழியால் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி 1937இல், புரட்சிக்கவி’யை எழுதி ளார். பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தார்.

இவடைய ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு இவர் பெயரில் திருச்சியில், ‘பல்கலைக்கழகம்’ ஒன்றை நிறுவியுள்ளது.

இவர் இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்னும் பாடலைப் புதுவை அரசு, ”தமிழ்த்தாய் வாழ்த்தாக’ ஏற்றுச் சிறப்பித்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

நெடுவினா

Question 1.
பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
Answer:
உதாரன் புரட்சிக்கவி :
வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ காவியத்தைத் தழுவிப் பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’யைப் படைத்துள்ளார். அதில் புரட்சிக்கவியாக இடம் பெற்றவன் ‘உதாரன்’.

தனிமனித ஆட்சியை, ஆதிக்கத்தை அழித்து, உதாரன் மக்களாட்சியை நிறுவுகிறான். அதற்கு அவன் ஆற்றிய வீரவுரைகளே காரணம். அவ்வுரைகள் அத்தனையும் பாரதிதாசன் சிந்தையில் உருவானவையே.

வாய்ப்பைப் பயன்படுத்தும் உதாரன் :
தொழுநோயாளி என அறிமுகப்படுத்தப்பட்ட இளவரசி அமுதவல்லிக்குப் பார்வையற்றவனாகக் கூறப்பட்ட கவிஞன் உதாரன், கவிதை எழுதும் கலையைக் கற்பிக்கத் தொடங்கினான்.

அவர்கள் இறுதியில் காதலர்களாயினர். அதனால், மரண தண்டனைக்கு உள்ளாகி, இருவரும் கொலைக்களம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே கிடைத்த வாய்ப்பைத் தனதாக்கிப் புரட்சிக்காரனாகிறான் கவிஞன். இங்குக் கவிஞன் உதாரனின் முழக்கமெல்லாம், பாவேந்தரின் கருத்துகளே என்பதில் ஐயமில்லை!

பாட்டாளி மக்களின் உழைப்பால் விளைந்த நலன்களை, உதாரன் பட்டியலிடுகின்றான்! “பாழ் நிலத்தை அந்நாளில் புதுக்கியவர் யார்?”, “பயன்விளைக்கும் நின்ற உழைப்புத் தோள்கள் எவரின் தோள்கள்?”, “கருவியெலாம் செய்த அந்தக் கைதான் யார் கை?”, “கடல் முத்தை எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?” இவையெல்லாம் பாரதிதாசனது உணர்ச்சியின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உதாரன் புரட்சியைத் தூண்டுதல் :
மக்கள் உள்ளத்தில் புரட்சியைத் தூண்ட விரும்பியதால் கவிஞன் உதாரன், தனக்கும் அரகனுக்கும் உண்டான வழக்கின் அடிப்படையை எடுத்துரைக்கிறான்.

“மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?” என்னும் சிந்தனையைத் தூண்டும் மக்களுக்காக மட்டுமே ஆட்சி இருக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாவேந்தர், உகாரன் வாய்மொழியாக வைத்து, “ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அந்தத் தேசம் ஒழதல் நன்றாம்” எனக் கூறுகின்றார்.

புரட்சிக்கவியின் தமிழ்ப்பற்று :
தமிழின்மேல் தமக்குள்ள பற்றுதலைப் பாவேந்தர், உதாரன் மூலமாத வெளிப்படுத்துகிறார். “அமுது சொல்லும் இந்தத் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று சமுதாயம் நினைத்திடுமோ?” அஞ்சுவதாகக் கூறி, “என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ ?” என வேதனைப்படுகிறான்.

எனவே மக்களை நோக்கி, “உமை ஒன்று வேண்டுகின்றேன்; மாசில்லாத உயர் தமிழை உயிர் என்று போற்று மின்கள்” என்கிறான். இவை அனைத்தும் பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவியே என்பதனை உறுதிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

இலக்கணக்குறிப்பு

ஒதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய, வீழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
அலைகடல், நிறைஉழைப்பு, உயர்தமிழ் வழ்கொள்ளி – வினைத்தொகைகள்
தமிழ்க்கவிஞன், பாம்புக்கூட்டம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
பேரன்பு, நெடுங்குன்றம், இளஞ்சிங்கம், பெருங்காடு, சிற்றூர், நெடுமரங்கள், நன்னாடு, பொன்னாடு, பெருமக்கள் – பண்புத்தொகைகள்
ஒழிதல், சாதல், தவிர்தல், முழக்கம் – தொழிற்பெயர்கள்
உழுதுழுது, பதைபதைத்து – அடுக்குத்தொடர்கள்
பெரியோரே, தாபோரே, இளஞ்சிங்கங்காள், பெரியீர், அன்னையீர் – அண்மை விளிகள்
பூட்டி – வினையெச்சம்
வந்திருந்தார், கொண்டவர் – வினையாலணையும் பெயர்
எலாம் – இடைக்குறை
கற்பிளுந்து, மலைபிளந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
அரசனுக்கும் எனக்கும், இவளும் நானும், கவிஞனுக்கும் காதலிக்கும் – எண்ணும்மைகள்
வந்தோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
கண்ணீர்வெள்ளம் – உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உறுப்பிலக்கணம்

1. நின்றார் – நில் (ன்) + ற் + ஆர்
நில் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

2. செய்வான் – செய் + வ் + ஆன்
செய் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அழைத்தான் – அழை + த் + த் + ஆன்
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

4. வேண்டுகின்றேன் – வேண்டு + கின்று + ஏன்
வேண்டு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

5. ஆழ்க – ஆழ் + க
ஆழ் – பகுதி, க – வியங்கோள் வினைமுற்று விகுதி.

6. பறித்தார் – பறி + த் + த் + ஆர்
பறி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுறு விகுதிர

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. உரைப்பாய் – உரை + ப் + ப் + ஆய்
உரை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

8. தந்தார் – தா (த) + த் (ந்) + த் + ஆர்
தா – பகுதி, ‘த’ ஆனது விகாரம், த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.,

9. ஏகுகின்றேன் – ஏகு + கின்று + ஏன்
ஏகு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

10. வாழார் – வாழ் + (ஆ) + ஆர்
வாழ் – பகுதி, (ஆ) – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

11. செய்தார் – செய் + த் + ஆர்
செய் – பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

12. ஓதுக – ஓது + க
ஓது – பகுதி, க – வியங்கோள் விலை கற்று விகுதி.

13. பூட்டி – பூட்டு + இ
பூட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

14. வெட்டி – வெட்டு + இ
வெட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

15. அறுத்தல் – அறு – த + தல்
அறு – பகுதி, த்து சத்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

16. வாழிய – வாழ் + இய
வாழ் – பக்தி, இய – வியங்கோள் வினைமுற்று விகுதி.

17. செய்தேன் – செய் + த் + ஏன்
செய் பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

18. குனந்தான் – குனி+ த் (ந்) + த் + ஆன்
தனி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
‘ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. நீரோடை – நீர் + ஓடை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நீரோடை)

2. சிற்றூர் – சிறுமை + ஊர்
“ஈறுபோதல்” (சிறு + ஊர்)
“தன்னொற்று இரட்டல்” (சிற்று + ஊர்)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (சிற்ற் + ஊர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சிற்றூர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

3. கற்பிளந்து – கல் + பிளந்து
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பிளந்து )

4. மணிக்குலம் – மணி + குலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (மணிக்குலம்)

5. அமுதென்று – அமுது + என்று
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அமுத் + என்று)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அமுதென்று)

6. புவியாட்சி – புவி + ஆட்சி
“இ ஈ ஐ வழி யவ்வும்” (புவி + ய் + ஆட்சி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புவியாட்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. ஒப்பவில்லை – ஒப்ப + இல்லை
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஒப்ப +வ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஒப்பவில்லை)

8. நெற்சேர – நெல் + சேர
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (நெற்சேர)

9. பொற்றுகளை – பொன் + துகளை
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன் + றுகளை)
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (பொற்றுகளை)

10. பேரன்பு – பெருமை + அன்பு
“ஈறுபோதல்” (பெரு + அன்பு), “ஆதி நீடல்” (பேரு + அன்)
“முற்றும் அற்று ஒரோ வழி” (பேர் அன்பு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போன்பு)

11. இளஞ்சிங்கம் – இளமை + சிங்கம்
“ஈறுபோதல்” (இள + சிங்கம்), “இனம் மிகில்” (இளஞ்சிங்கம்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

12. பொன்னாடு – பொன் + நாடு
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன்னாடு)

13. நன்னாடு – நன்மை + நாடு
“ஈறுபோதல்” (நன் + நாடு எனலமுன் றன ஆகும் தநக்கள்” (நன்னாடு)

14. கண்ணீ ர் – கண் + நீர்
“ணளமுன் டண ஆகும் ஆக்கள்” (கண்ணீ ர்)

15. ஆவென்று – ஆல் என்று
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஆ + வ் + என்று),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஆவென்று)

16. தூதொன்று – தூது + ஒன்று
“உதிர்வான உக்குறள் மெய்விட்டோடும்” (தூத் + ஒன்று)
உடலமேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூதொன்று)

17. நிலவில்லை – நலிவு + இல்லை
முற்றும் அற்று ஒரோவழி” (நலிவ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நலிவில்லை)

18. தலைப்பாகை – தலை + பாகை
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (தலைப்பாகை)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

19. நெடுங்குன்று – நெடுமை + குன்று
“ஈறுபோதல்” (நெடு + குன்று), “இனமிகல்” (நெடுங்குன்று)

20. பாம்புக் கூட்டம் – பாம்பு + கூட்டம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பாம்புக் கூட்டம் )

பலவுள் தெரிக

Question 1.
அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன் – யார், யாரிடம் கூறியது?
அ) அமைச்சர் கவிஞரிடம்
ஆ) மன்னன் அமைச்சரிடம்
இ) அமைச்சர் மன்னனிடம்
ஈ) மன்னன் அமுதவல்லியிடம்
Answer:
இ) அமைச்சர் மன்னனிடம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் ……………..
அ) சட்டம், நிருவாகம், நீதி
ஆ) அரசு, அமைச்சர், தூதுவர்
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ஈ) மக்கள் புரட்சி, போராட்டம், மக்களாட்சம்
Answer:
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 3.
மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில்…………….. பெரும்பங்கு உண்டு.
அ) புரட்சிக்கு
ஆ) போராட்டத்திற்கு
இ) இலக்கியத்திற்கு
ஈ) காலத்திற்கு
Answer:
இ) இலக்கியத்திற்கு

Question 4.
“உயிர் எமக்கு வெல்லமன்று” எனக் கூறியவர் ……………..
அ) கவிஞர் உதாரன்
ஆ) மந்திரி
இ) திரண்டிருந்த மக்கள்
ஈ) இளவரசி அமுதவல்லி
Answer:
ஈ) இளவரசி அமுதவல்லி

Question 5.
சிரம் அறுத்தல்……………..பொழுதுபோக்கு!
அ) கவிஞனுக்கு
ஆ) அமைச்சனுக்கு
இ) வேந்தனுக்கு
கொலைகாரனுக்கு
Answer:
இ) வேந்தனுக்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
“சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்” – இதில் இருவர் என்பது …………….. குறித்தது.
அ) அரசன், அமுதவல்லி
ஆ) அமைச்சர், அரசர்
இ) அமுதவல்லி, உதாரன்
ஈ) உதாரன், அமைச்சர்
Answer:
இ) அமுதவல்லி, உதானன

Question 7.
குடிகட்கெல்லாம் ஆளுரிமையைப் பொதுவாக்க நினைத்தது……………..
அ) உதாரன்
ஆ) அமைச்சன்
இ) மக்கள்
ஈ) அமுதவல்லி
Answer:
ஈ) அமுதவல்லி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 8.
‘உலகம்’ என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) முழக்கம்
ஆ) படிகம்
இ) படி
Answer:
வி படி

Question 9.
‘தந்திட்டான் என்னும் சொல்லின் பகுதி ……………..
அ) தம்
ஆ) தந்து
இ) தந்த
ஈ) தந்திடு
Answer:
ஈ) தந்திடு

Question 10.
தெமிழ் அறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவி என் றெனை அவளும் காதலித்தாள் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்
அ) அழகின் சிரிப்பு
ஆ) பாண்டியன் பரிசு
இ) பிசிராந்தையார்
ஈ) புரட்சிக்கவி
Answer:
ஈ) புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 11.
பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’க் காவியத்தை , எதனைத் தழுவி எழுதினார்?
அ) பாரதம்
ஆ) சாகுந்தலம்
இ) பில்கணீயம்
ஈ) பெருங்கதை
Answer:
இ) பில்கணீயம்

Question 12.
எப்பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்?
அ) ராஜகோபாலன்
ஆ) அரவிந்தன்
இ) வில்வரத்தினம்
ஈ) சுப்புரத்தினம்
Answer:
ஈ) சுப்புரத்தினம்

Question 13.
பாரதிதாசன், தமிழ் வடிவில் தந்தது …………….. மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டம்.
அ) ஆங்கில
ஆ) டச்சு
இ) பிரெஞ்சு
ஈ) போர்த்துகீசிய
Answer:
இ) பிரெஞ்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 14.
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் ……………..
அ) வானம்பாடி
ஆ) கரும்பு
இ) இந்தியா
ஈ) குயில்
Answer:
ஈ) குயில்

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம்……………..
அ) பாண்டியன் பரிசு
ஆ) சேரதாண்டவம்
இ) இருண்டவீடு
ஈ) பிசிராந்தையார்
Answer:
ஈ) பிசிராந்தையார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 16.
புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், …………….. எனத் தொடங்கும்.
அ) தமிழுக்கு அமுதென்று பேர்
ஆ) நீராரும் கடலுடுத்த நிலமடந்தை
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்
ஈ) என் அம்மை ஒற்றி எடுத்த நெற்றிகண்
Answer:
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 17.
சொல் பொருள் பொருத்துக.
1. மீட்சி – அ. உலோகங்கள்
முழக்கம் – ஆ. மாணிக்கம்
3. மணி – இ. விடுதலை
4. கனிகள் – ஈ. உலகம்
– உ. ஓங்கி உரைத்தல்
Answer:
1-இ, 2-உ, 3-ஆ, 4-அ