Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்
12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு
iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.
அ) ii,i, iii
ஆ) i, iii, ii
இ) iii, ii,i
ஈ) ii, iii,i
Answer:
ஆ) i, iii,ii
Question 2.
இந்திய அரசாங்கம் …………… வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
அ) முதலாளித்துவ
ஆ) சமதர்ம
இ) தெய்வீக
ஈ) தொழிற்சாலை
Answer:
ஆ) சமதர்ம
Question 3.
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1952
இ) 1976
ஈ) 1978
Answer:
அ) 1951
Question 4.
கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம் | 1. 1951-56 |
ஆ. இந்திய அறிவியல் நிறுவனம் | 2. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் |
இ. மகலனோபிஸ் | 3. 1909 |
ஈ முதலாவது ஐந்தாண்டு திட்டம் | 4. 1956 |
Answer:
இ) 4 3 2 1
Question 5.
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
அ) 1961
ஆ) 1972
இ) 1976
ஈ) 1978
Answer:
ஆ) 1972
Question 6.
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்.
அ) ராம் மனோகர் லோகியா
ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இ) வினோபா பாவே
ஈ) சுந்தர் லால் பகுகுணா
Answer:
இ) வினோபா பாவே
Question 7.
கூற்று : ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 8.
தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 1951
ஆ) 1961
இ) 1971
ஈ) 1972
Answer:
அ) 1951
Question 9.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 2005
ஆ) 2006
இ) 2007
ஈ) 2008
Answer:
அ) 2005
Question 10.
எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
அ) 1961
ஆ) 1991
இ) 2008
ஈ) 2005
Answer:
ஆ) 1991
Question 11.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?
அ) 200
ஆ) 150
இ) 100
ஈ) 75
Answer:
இ) 100
Question 12.
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
அ) 1905
ஆ) 1921
இ) 1945
ஈ) 1957
Answer:
இ) 1945
Question 13.
1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
அ) 5
ஆ) 7
இ) 6
ஈ) 225
Answer:
அ) 5
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
நாடு விடுதலை அடைந்த போது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.
Answer:
- 1947இல் இந்தியா விடுதலையடைந்த போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர் கொண்டது.
- கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
- வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு தனி நபரின் தலாவருமானமும் குறைந்தது.
Question 2.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
Answer:
- பொருளாதாரத்தை வளர்த்தல்.
- வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.
- உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல்.
- வேலை வாய்ப்புகளைப் பெருக்கி வறுமையைக் குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் கொண்டது.
Question 3.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?
Answer:
- சமதர்ம சமூக அமைப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியனவாகும்.
- சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும்.
Question 4.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக?
Answer:
- முதலாவதாக கருத்தியல் நிலையில் அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது. இது பொருளாதாரத்தின் மீது அரசின் அதிக அளவிலான கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது.
- இரண்டாவது நடைமுறை சார்ந்தது. நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவற்றை உருவாக்க மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டது.
Question 5.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
Answer:
- நிலம் இல்லாத ஏழைகளுக்கு உபரியாக நிலம் உள்ளவர்களிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றுத் தருவது பூமிதான இயக்கமாகும்.
- வினோபா பாவே தனது பூமிதான இயக்கத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?
Answer:
- குத்தகையை முறைப்படுத்துவது.
- குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
- நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.
Question 2.
இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவுகள் யாவை?
Answer:
- இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.
- விவசாயிகளிடமிருந்து உபரி உணவு தானியங்களை விலைக்கு வாங்கிய அரசு பெருமளவில் தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்தது.
- மக்களுக்கான உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
- பசுமைப்புரட்சி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தபோதிலும் அது சில எதிர்மறையானவிளைவுகளையும் ஏற்படுத்தியது.
- வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் வசதி வாய்ப்புகள் குறைந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்ற தாழ்வுகளை அதிகரித்தது.
- காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின.
Question 3.
மத்திய அரசு 1980களில் கொண்டு வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக?
Answer:
- 1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
- கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை வழங்குதல் அல்லது சிறிய கடைகள் வைக்கவோ அல்லது வேறுவணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம்.
- இதன் இலக்கு ஐந்து ஆண்டுகளில் (1980-1985) ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது.
- இந்த உதவிகள் 15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
- 1999 ஆம் ஆண்டு வரையின் 53:5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.
Question 4.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்திய வேளாண்மையில் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன,
- நிறுவன காரணி – நில உடைமை மற்றும் விவசாய தொழிலாளர்கள் இடையே நிலவிய சமூக பொருளாதார சிக்கல்கள்.
- தொழில்நுட்ப காரணி – வீரிய விதைகள், இரசாயன உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தாமை ஆகியவையாகும்.
Question 5.
பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
Answer:
- நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்.
- கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் அதிக முதலீட்டு செலவு.
- தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். இதனால் நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்தது. இவைகள் பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணங்களாகும்.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
Answer:
1. ஜமீன்தாரி முறை ஒழிப்பு :
- ஜமீன்தார் என்பவர்கள் நில உடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து அரசுக்கு குறிப்பிட்ட அளவு வரியாக செலுத்துவர்.
- ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்கு உள்ளாக்கினர்.
- இவர்களின் உரிமைகளை ஒழித்து இவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவது அரசின் குறிக்கோளாகும்.
- 1951மற்றும் 1955 இல் அரசு நிறைவேற்றிய அரசியல் அமைப்பு சட்டதிருத்தங்கள் மூலம் 1956ல்ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
- இதன்மூலம் 30 லட்சம் குடியானவர்களும், குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர்.
- இருந்த போதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறுபகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.
2. குத்தகை சீர்திருத்தம் :
- இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காடு நிலங்கள் குத்தகை முறையின் கீழ் இருந்தன.
- குத்தகை என்பது பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில் குறிப்பிட்ட பங்காக பெறப்பட்டது.
- நில உரிமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது, என முடிவு செய்தது.
- குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். குத்தகை உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்கள் வெற்றி பெறவில்லை.
- ஒரு முழுமையான நடைமுறைப்படுத்தக் கூடிய நில உச்ச வரம்பு இல்லாத சூழ்நிலையில் குத்தகை சீர்திருத்தங்கள் பயனற்று போயின.
Question 2.
நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.
Answer:
- நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லாததால் நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அளவை நிர்ணயம் செய்வது சிக்கல்கள் நிறைந்த பணியாக இருந்தது.
- இந்தச் சீர்திருத்தம் நில உச்ச வரம்புச் சட்டத்தில் சில வகையான நிலங்களுக்கு வழங்கப்பட்ட சில விதி விலக்குகளை சிலர் பயன்படுத்திய விதம் குறித்தும் நில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
- உணரத்தக்க அளவில் செயல் திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
- பொருளாதார ரீதியாக, நில உரிமையையும், பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடி மக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
- ஒட்டு மொத்தமாக பார்க்கையில் நிலச்சீர்திருத்த சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை.
Question 3.
சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
Answer:
- கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையம் சுகாதாரக் குறிப்பான்களுமே ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன.
- இந்தியாவில் 1951 இல் 18.3 விழுக்காட்டிலிருந்து எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
- ஆண்களில் 82 விழுக்காட்டினரும், பெண்களில் 65 விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவில் பெண்கள் பின்தங்கியிருந்தனர்.
- தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.
- மேல்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பெருகிற்று. 2014-15 இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க உயர் தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் 38,498 கல்லூரிகளும் 43 மத்தியப் பல்கலைக்கழகங்களும் 316 மாநிலப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன.
- நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர்.
- குறிப்பாகப் பெண் குழந்தைகளே இடை நிற்றலில் அதிகமாக இருந்தனர்.
- சேர்க்கை விகிதத்திலும் இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும் பகுதிகளிலும் பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே இருந்தது.
- இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்தினால் அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் போன்றவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Question 4.
முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:
- முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
- மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள் வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டது.
- இதற்கு பின்னர் தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது.
- பொதுவாக மகலனோபிஸ்திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61)பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு கரைத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில்துறையின் பங்கு இரண்டாவது திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது.
- முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடுவளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதை பொருளாதார நிபுணர்கள் இந்து வளர்ச்சி விகிதம் என அழைத்தனர்.
- இந்த வளர்ச்சி விகிதங்கள் அடையப்பட்டதால் அவை வெற்றி பெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன.
Question 5.
இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
Answer:
அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் :
- விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதியுதவியில் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம் மட்டுமேயாகும்.
- 1945 இல் முன்னவர் ஹோழி. J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பெற்றது.
- புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை.
ஆராய்ச்சி நிறுவனங்களின் வகைகள் :
- அறிவியல் துறையின் வானியற்பியல், மண்ணியல், நிலவியல், சார் இயற்பியல், உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் கணித அறிவியல் மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
அணுசக்தி ஆணையம் :
- அணுச்சக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையானதாக திகழ்கிறது. அணுச்சக்தி உற்பத்தி அணு ஆயூத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
- போர்திறம் சார்ந்த ஆய்வுக்கான பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.
வேளாண்மை:
வேளாண்மை வளர்ச்சியும் ஆய்வுகளையும் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகம் ஒருங்கிணைக்கிறது. இதன் ஆய்வுகள் வேளாண்மை குறித்து மட்டுமல்லாமல் துணை நடவடிக்கைகளாக மீன் வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர மரபியல், உயிரி – தொழில் நுட்பம், பல்வேறு பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது.
வேளாண்மை பல்கலைக்கழகங்கள் :
- வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி கற்பித்தல், வேளாண்மை நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன.
- இந்தியாவில் 67 வேளாண்மை பல்கலைகழகம் உள்ளன. இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
தொழில்நுட்ப நிறுவனங்கள் :
- இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.
- முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து டெல்லி பம்பாய் கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
- இச்சமயம் நமது நாட்டில் 23 IIT கள் செயல்படுகிறது.
- 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும், 23 இந்திய தகவல் தொழில் நுட்பகழக நிறுவனங்களும் செயல்படுகின்றன.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் குறித்த வகுப்பறையில் விவாதம் நடத்தவும்.
12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Additional Questions and Answers
1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. 1950இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையில் பங்கு ………….
அ) 3 விழுக்காடுகள்
ஆ) 13 விழுக்காடுகள்
இ) 23 விழுக்காடுகள்
ஈ) 31 விழுக்காடுகள்
Answer:
ஆ) 13 விழுக்காடுகள்
Question 2.
இந்திய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு …………. சார்ந்திருந்தனர்.
அ) வணிகம்
ஆ) குடிசைத் தொழில்
இ) வேளாண்மை
ஈ) கால்நடை வளர்த்தல்
Answer:
இ) வேளாண்மை
Question 3.
ஜமீன்தார் என்பவர் ……….. வகுப்பை சேர்ந்தோராவார்.
அ) நிலவுடைமையாளர்
ஆ) விவசாயி
இ) தொழிலாளர்
ஈ) வணிகம்
Answer:
அ) நிலவுடைமையாளர்
Question 4.
ரயத் என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) வணிகர்
இ) நிலம்
ஈ) விவசாயி
Answer:
ஈ) விவசாயி
Question 5.
‘மகல்’ என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) மாநகரம்
ஈ) ஒன்றியம்
Answer:
அ) கிராமம்
Question 6.
நிலையான நிலவரித்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி
அ) சென்னை
ஆ) மும்பை
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
Answer:
இ) வங்காளம்
Question 7.
இந்திய அரசியல் அமைப்பில் 2வது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1955
இ) 1965
ஈ) 1972
Answer:
ஆ) 1955
Question 8.
பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக?
i) ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
ii) இந்திய அரசியல் அமைப்பின் 2வது திருத்தம்.
iii) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் அறிமுகம்.
அ) ii,i, iii
ஆ) i, ii, iii
இ) iii, ii,i
ஈ) i, iii, ii
Answer:
அ) ii, i, iii
Question 9.
கொடுக்கப்பட்டுள்ள விடை குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. திட்டக்குழு | 1. ராஷ்டீரிய மத்யமிக் சிக்ஷா அபியான |
ஆ. 2வது ஐந்தாண்டு திட்டம் | 2. சர்வ சிக்ஷா அபியான் |
இ அனைவருக்கும் கல்வி திட்டம் | 3. 1950 |
ஈ அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் | 4. 1956-61 |
Answer:
ஆ) 3 4 2 1
Question 10.
இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகங்கள்.
அ) 67
ஆ) 76
இ) 57
ஈ) 75
Answer:
அ) 67
Question 11.
விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரே ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்ட இடம்.
அ) புனே
ஆ) டெல்லி
இ) பெங்களூரு
ஈ) சென்னை
Answer:
இ) பெங்களூரு
Question 12.
கூற்று : அரசாங்கம் வேளாண்மையை வளர்ப்பதற்காகத் தொழில்நுட்ப மாற்று பாதைக்கு மாறியது.
காரணம் : 1960 களில் கடுமையான உணவு தானியப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் சரி, கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது
Question 13.
திட்டக்குழு கலைக்கப்பட்ட ஆண்டு …………………..
அ) 1950
ஆ) 1951
இ) 2005
ஈ) 2015
Answer:
ஈ) 2015
Question 14.
திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கும் பதிலாக 2015-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு ………………….
அ) புதிய ஐந்தாண்டுத் திட்டம்
ஆ) தாராளமயமாக்கல்
இ) நிதி அயோக்
ஈ) பாரத மிகு மின் நிறுவனம்
Answer:
இ) நிதி அயோக்
Question 15.
2012-ல் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை …………
அ) 252
ஆ) 5
இ) 225
ஈ) 255
Answer:
இ) 225
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான இருகாரணிகளின் தொடர்புகளை பற்றி கூறுக.
Answer:
1. நிறுவனம் சார்ந்த காரணிகள் :
நில உடைமை வர்க்கத்தை சேர்ந்தோருக்கும் இடையே நிலவிய சமூக பொருளாதார உறவுகளைக் குறிப்பதாகும்.
2. தொழில்நுட்பக் காரணிகள் :
சிறந்த விதைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண்மை முறைகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல் டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையவையாகும்.
Question 2.
ஜமீன்தார்கள் என்போர் யார்?
Answer:
- ஜமீன்தார் என்பவர் நிலவுடமையாளர் வகுப்பைச் சேர்ந்தோராவர்.
- ஆங்கிலேயர் ஆட்சியின்போது நிரந்தர நிலவரி திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்டனர்.
- இவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம்செய்யும்விவசாயிகளிடமிருந்து குத்தகைவசூல்செய்து அரசுவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகையை நிலவரியாக செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவர்.
Question 3.
மறைமுக வேலையின்மை – குறிப்பு தருக.
Answer:
- சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர்.
- தானிய உற்பத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கப் போதுமானதாக இல்லை.
- இந்நிலை தானாக தனிநபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு சென்றது.
- இத்தகைய சூழல் “மறைமுக வேலையின்மை ” என அழைக்கப்படுகிறது.
Question 4.
நில உச்சவரம்பு என்றால் என்ன?
Answer:
- நில உச்ச வரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
- இதனை நடைமுறைப்படுத்த 1950க்கு பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன.
- தமிழ்நாட்டில் முதன்முறையாக 1961ல் நடைமுறைபடுத்தப்பட்டது.
Question 5.
குத்தகை சீர்திருத்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட இரண்டு குறிக்கோள்கள் யாவை?
Answer:
- நில உடைமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பது.
- நிலத்தின் பயன்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவது.
Question 6.
பசுமைபுரட்சி என்றால் என்ன?
Answer:
- வேளாண்மையை மேம்படுத்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தப்பட்டன.
- உயர்ரக வீரிய வித்துக்கள் பயன்படுத்தி தானிய உற்பத்தியை அதிகரிக்கப்பட்டது.
- பூச்சிக்கொல்லி மருந்துக்கள், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
- நிலத்தை உழவு செய்ய டிராக்டர் போன்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உணவு உற்பத்தி அதிகரிக்கச் செய்தது
- இதற்கு பசுமை புரட்சி என்று பெயர்.
Question 7.
அணுசக்தி ஆணையம் – குறிப்பு தருக.
Answer:
- அணுசக்தி ஆணையம் அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையாகத் திகழ்கிறது.
- அணுசக்தி உற்பத்தி, அணு ஆயுத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
- இது போர்த்திறம் சார்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும்.
- அறிவியல் சார்ந்த ஆய்வுகளுக்காக பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
‘ஜமீன்தார்கள்’ பற்றிய பொதுமக்களின் கருத்து யாது?
Answer:
- ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்க உள்ளாயினர்.
- பொது மக்களின் கருத்துப்படி, ஜமீன்தார்கள் எனும் இவ்வகுப்பினர் நீதிநெறிமுறையற்றவர்கள், ஆடம்பர பிரியர்கள், பயனற்றவர்கள், சுயமாக சம்பாதிப்பது வருமானத்தில் வாழ்கின்றவர்கள் என்று கருதப்பட்டனர்.
- ஜமீன்தார்களின் உரிமைகளை ஒழிப்பதும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவதும் அரசின் முக்கிய குறிக்கோளாக கருதினர்.
Question 2.
ஆங்கிலேயர்களின் மூன்று வகையான வருவாய் வசூல் முறையைப் பற்றி கூறுக.
Answer:
ஆங்கிலேயர்களால் மூன்று வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அ. நிலையான நிலவரித்திட்டம்
வங்காளம் மற்றும் வட இந்தியாவின் பெரும்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித்திட்டத்தின் கீழ், நிலவரியைச் செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது.
ஆ. ரயத்துவாரிமுறை
- ரயத் என்றால் விவசாயி என்று பொருள்.
- ரயத்துவாரி முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக
- அரசாங்கத்திடம் செலுத்தினர்.
இ. மகல் வாரிமுறை
- நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மகல்வாரி முறை காணப்பட்டது.
- இதில் நிலவரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டு பொறுப்பாகும்.
Question 3.
1948 இல் அறிவிக்கப்பட்ட முதல் தொழில் கொள்கையின் தன்மை யாது? (அ) தொழிலகங்களை எவ்வாறு பிரித்தது?
Answer:
1948 இல் அறிவிக்கப்பட்டது முதல் தொழில் கொள்கை அறிக்கை தொழிலகங்களை நான்கு வகையாகப் பிரித்தது.
- போர்த்துறை சார்ந்த தொழிலகங்கள் அரசின் முற்றுமைகளாக இருக்கும். (அணுசக்தி, ரயில்வே, ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 18 தொழிலகங்கள் (கனரக இயந்திரங்கள். உரம், வீரியமிக்க ரசாயணங்கள், போர்க்கருவிகள் மற்றவை) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
- பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் இடம் பெறும் தொழிலகங்கள்.
- தனியார் தொழிலகங்கள் என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது.
Question 4.
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகள் :
- பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல்
- தேசிய வருமானத்திலும் தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி.
- தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு
- வேளாண்மையில் நவீன இடுபொருட்களைப் பயன்படுத்துவது அதிகரித்தவுடன் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது.
- பொருளாதாரம் அதிக அளவில் பன்முகப்படுத்தப்பட்டது.
Question 5.
திட்டக் குழுவைப் பற்றி நீர் அறிவது யாது?
Answer:
திட்டக்குழு:
- பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக 1950ல் திட்டக்குழு (Planning Commission) நிறுவப்பட்டது.
- இதன் தலைவராக பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இருந்தார்.
- ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூல வளங்களையும் திட்டக்குழு மதிப்பீடு செய்தது.
- வேளாண்மை , தொழிலகம், ஆற்றல், சமூகத் துறைகள் மற்றும் தொழில் நுட்பம், முழுமையான பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்தன.
- தன்னிறைவுப்பொருளாதாரத்தை உருவாக்குவது திட்டமிடலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
Question 6.
“இந்தியா சமதர்ம பாணியிலான சமூகம்” என்பதைப் பற்றி கூறுக.
Answer:
பொருளாதார வளர்ச்சியைப் பெற
- சுதந்திர செயல்பாட்டு முறை
- முதலாளித்துவ பாதை
- சமதர்ம பாதை என இருவழிகள் இருந்தன.
இந்தியா இரண்டாவது பாதையைத் தேர்வு செய்தது. இந்திய அரசியலைமைப்பின் முகவுரையில் “ஒரு இறையாண்மை உடைய, சமதர்ம, மக்களாட்சி குடியரசு” என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
நிலசீர்த்திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை ஆய்க :
Answer:
- நிலச்சீர்திருத்தச்சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை .
- பொருளாதார ரீதியாக நில உரிமையையும் பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடிமக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
- உணரத்தக்க அளவில் செயல்திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
- தொழில்நுட்ப வளர்ச்சியினால் வேளாண்மை முன்னேறியுள்ளதால் அதிகம் திறமை வாய்ந்த நிலச்சந்தை ஒன்று செயல்படுவதாகத் தெரிகிறது. அது நீண்ட கால வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.
- ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் நற்பயனை அளித்துள்ளது.
- நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் விவசாயிகளை தங்கள் உரிமைகள் குறித்த அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறியதோடு அவர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும் மாற்றியுள்ளது.
Question 2.
நில உச்சவரம்பு என்றால் என்ன? நில உச்ச வரம்புச் சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களையும் விவரி:
Answer:
நில உச்சவரம்பு :
- நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
- இதனை நடைமுறைப்படுத்த 1950 களுக்குப் பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன
நில உச்சவரம்பை நடைமுறைப்படுத்துதல் :
- தமிழ்நாட்டில் முதன் முறையாக 1961ல் நடைமுறை படுத்தப்பட்டது.
- 1972 வரை ஒரு ‘நில உரிமையாளர்’ எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
- 1972க்குப் பின்னும் அடிப்படை அலகானது குடும்பம்’ என மாற்றப்பட்டது.
- இதனால் நில உரிமையாளர் தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலங்களுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.
நடைமுறைச் சிக்கல்கள் :
- நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லை .
- நீர்பாசனநிலங்கள், மானாவரிநிலங்கள், ஒருபோக நிலங்கள் மற்றும் இருபோக நிலங்கள் என வேறுபாடுகள் இருந்ததால் நில உச்ச வரம்பு சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
விதிவிலக்குள்ள நிலங்கள் :
- பழத்தோட்டங்கள், காய்கறி, பூக்கள் விளையும் தோட்டங்கள், நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், அறக்கொடை, சமயம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் , கரும்பு பயிரிடப்படும் பெரும் தோட்டங்கள் ஆகியவைகள் நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து விலக்கு பெற்றன.
- இந்த விதி விலக்குகளை சிலர் பயன்படுத்தியவிதம் குறித்தும், சில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
- இறுதியில் 65 லட்சம் ஹெக்டேர் நிலம் உபரியாக கையகப்படுத்தப்பட்டு 55 லட்சம் குத்தகைதாரர்களுக்கு
தலா ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சற்று கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டது.
Question 3.
1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் – தொழில் கொள்கை அறிக்கையின் தன்மை பற்றியும் அதன் விளைவுகளையும் விவாதி.
Answer:
1991 தொழில் கொள்கையின் தன்மை :
- 1991 இல் இந்திய அரசு தன்னுடைய தொழில் கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தது.
- இது உரிமங்கள் வழங்கப்படுவதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாகவும் தனியார்துறையின் அதிகமானபங்கேற்பை அனுமதிப்பதாகவும் அமைந்தது.
- நாட்டில் பொருளாதாரம் குறித்து நுகர்வோரின் மனதில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- மத்திய தர வர்க்கம் ஆசைப்பட்ட உயர்ந்த வாழ்க்கை கிட்டியது.
நேர்மறை விளைவு :
- தாராளமயமானது இந்தியாவை மிக அதிகமாக அந்நிய நாடுகளின் முதலீட்டினை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது.
- மாநில அரசுகள் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது.
- இவை அனைத்தும் ஒரு செல்வ செழிப்பான பொது சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்மறை விளைவுகளில் :
- தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் அதிக ஊதியம் மற்றும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்கு இடையிலான ஊதிய ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது.
- முறை சார்ந்த தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
- முறை சாராத தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு அதிகம் உருவாயிற்று.
- இவ்விரு துறைகளுக்குமிடையிலான ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து விட்டன.
முடிவு :
- தாராளமயமாக்களின் அளவானது சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் மற்றும் இடதுசாரி பொருளாதார நிபுணர்கள் ஆகிய இருசாராருக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை .
- தனியாருக்கு சுதந்திரம் வழங்கியதன் மூலம், சமூக நீதியையும், மக்கள் நலத்தையும் உறுதிப்படுத்தி, முன்னேற்ற வேண்டிய தனது பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொண்டதாக சில பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.