Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்
வாங்க பேசலாம்
Question 1.
கதையை உம் சொந்த நடையில் கூறுக
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.
Question 2.
இதே போன்று தெனாலிராமனின் வேறு கதைகளை அறிந்து வந்து கூறுக.
Answer:
அரசவை விகடகவியாதல் :
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ணதேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.
தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார்.
இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தெனாலிராமன் எழுந்து நின்றான்.
தத்துவஞானியைப் பார்த்து, ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா? எனக் கேட்டான்.
அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.
அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.
அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
Question 3.
நீ அறிவுக் கூர்மையுடன் நடந்து கொண்ட நிகழ்வுகளைக் கூறுக.
Answer:
நிகழ்வு – 1 :
பள்ளியில் என்னை எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிக்கும். காரணம், நான் நன்றாக படிப்பேன். ஆசிரியர் தரும் வீட்டுப் பாடங்களைச் சிறப்பாகச் செய்வேன். எல்லா ஆசிரியர்களுக்கும் உரிய மரியாதை கொடுப்பேன். அதனால் எல்லா ஆசிரியர்களும் என்னை விரும்புவர். இதைக் கண்டு பொறாமைப்பட்ட என் நண்பன் என்னிடம் வந்து, ”உன்னை எல்லா ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர். அந்த இரகசியத்தை எனக்கு மட்டும் கூறு.
அது எனக்கு பயன் மிகுந்ததாக இருக்கும்” என்றான். “அந்த இரகசியத்தை உன்னிடம் நான் கூறினால் அதனை நீ எவரிடமும் கூறக்கூடாது” என்று கூறினேன். அதற்கு அவன், “இரகசியத்தை எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் கூறமாட்டேன்” என்றான். “அப்படியா- மிக்க மகிழ்ச்சி. ஒரு இரகசியத்தைக் காப்பாற்றும் ஆற்றல் உனக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு. ஆதலால் இந்த இரகசியத்தை யாரிடம் எந்தச் சூழ்நிலையிலும் சொல்லமாட்டேன்”. என்று கூறினேன். என்னிடம் அவன் தந்திரம் பலிக்காததால் ஏமாற்றத்துடன் சென்று விட்டான்.
நிகழ்வு -2 :
என் வகுப்பில் படிக்கும் மாணவன் நோட்டு வாங்குவதற்காக நுறு ரூபாய் கொண்டு வந்திருந்தான். அவன் வைத்திருந்த நுறு ரூபாயை ஏதோ ஒரு மாணவன் திருடி விட்டான்.
ணத்தை இழந்த மாணவன் மிகவும் வருத்தப்பட்டு அழுவதைக்கண்ட வகுப்பாசிரியர் திருடிய மாணவனைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று மிகவும் கோபத்துடன் இருந்தார். மாணவர்களிடம் பலமுறை கேட்டும், எந்த மாணவனும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
காரணம் திருடியது தான் என்று தெரிந்தால் எல்லோரும் தன்னைத் திருடன் என்று அழைப்பாளர்களே என்ற பயமும் ஒரு காரணமாக அமைந்தது. ஆசிரியரிடம் நான் கூறினேன், இப்படி ஒரு காரணம் இருப்பதால் திருடியவன் தயங்குகிறான் என்று நினைக்கிறேன். அதனால் அனைவரும் வகுப்பறைக்கு வெளியே சென்று நிற்போம்.
பிறகு ஒவ்வொரு மாணவனாக உள்ளே சென்று வரச் சொல்வோம். திருடியவன் எடுத்தப் புத்தகப் பையிலேயே வைத்துவிட வேண்டும். என்று நீங்கள் கட்டளை பிறப்பியுங்கள் என்றேன். ஆசிரியரும் எனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். இறுதியில் நுறு ரூபாய் அந்த மாணவனுக்குக் கிடைத்தது. திருடியவனும் பழியிலிருந்து தப்பித்துக்கொண்டான்.
சிந்திக்கலாமா?
நீ தெனாலிராமனாக இருந்திருந்தால் விஜயவர்த்தன அரசரின் எதிர்பார்ப்பை எவ்வாறு நிறைவேற்றிருப்பாய்.
Answer:
நான் தெனாலிராமனாக இருந்திருந்தால், என் ஒரு கூண்டைக் கொண்டு வந்து அவையில் உள்ள விஜயவர்த்தனிடம் கொடுத்திருப்பேன். தாங்கள் கேட்ட அப்பறவை இக்கூண்டிற்குள் தான் இருக்கிறது. ஆனால், இப்பறவை எல்லோர் கண்களுக்கும் தெரியாது. ஒழுக்க நெறியில் வாழும் மனிதர்களின் கண்களுக்கு மட்டும்தான் தெரியும். உங்களுக்கு இப்பறவை தெரியும் என்று நான் நம்புகிறேன், என்று அரசரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருப்பேன்.
வினாக்களுக்கு விடையளி
Question 1.
விஜயநகர அரசின் அவைப்புலவர் யார்?
Answer:
விஜயநகர அரசின் அவைப்புலவர் தெனாலிராமன் ஆவார்.
Question 2.
விஜயவர்த்தன அரசர் எப்படிப்பட்ட குருவியைக் கொண்டு வரும்படி கேட்டார்?
Answer:
விஜயவர்த்தன அரசர் தெனாலிராமனிடம், தனக்குக் காலையில் தங்க மஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலும் உருமாறும் அற்புதக்குருவி ஒன்றை கொண்டு வந்து தர வேண்டும். மேலும், அது சில சமயம் மூன்று கால்களாலும், சில சமயம் இரட்டை கால்காளாலும் நடக்க வேண்டும். பிறகு ஏழு இறக்கைகளைக் கொண்டு வானில் பறக்க வேண்டும் என்று கேட்டார்.
Question 3.
குருவி கூறியதாகத் தெனாலிராமன் அரசவையில் சொன்னது என்ன?
Answer:
“அரசரிடம் போய் சொல், காலைப் பொழுதாகவும் இருக்கக்கூடாது, நடுப்பகல் பொழுதாகவும் இருக்கக்கூடாது, மாலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, வெளிச்சமாகவும் இருக்கக்கூடாது, இருளாகவும் இருக்கக்கூடாது அந்த நேரத்தில் நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து திரும்ப வந்து விடுவேன்” என்று குருவி கூறியதாக தெனாலிராமன் அரசவையில் சொன்னார்.
குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடி! மணிமகுடம் சூட்டிக்கொள்!
1. மணக்கும் எழுத்து.
Answer:
பூ
2. அரசரும், அமைச்சர்களும் கூடும் இடம்.
Answer:
அரசவை
3. நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம்.
Answer:
இரவு
4. பாகற்காயின் சுவை.
Answer:
கசக்கும்
5. சிக்கலைத் தீர்க்க உதவும் குணம்
Answer:
சாந்தம்
சொல்லின் இடையில் ஓர் எழுத்தைச் சேர்த்து புதிய சொல்லை உருவாக்குக
Answer:
கலையும் கைவண்ணமும்
இக்கதையில் வருகின்ற ஏழு இறக்கைக் குருவியை உம் கற்பனைக்கேற்ப வண்ணம் தீட்டி மகிழ்க.
செயல் திட்டம்
Question 1.
உங்கள் பள்ளியிலுள்ள நூலகத்திலிருந்து தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பீர்பால் கதைகள், அப்பாஜி கதைகள் முதலிய புத்தங்களை தேடிப் படித்து ஒவ்வொரு நூலிலும் உனக்குப் பிடித்த ஒரு கதையை எழுதி வருக.
Answer:
தெனாலி ராமன் கதை – ராஜகுருவின் நட்பு :
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார். தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.
அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனான்.
ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.
“நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன்பின் நீவா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.
தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை . ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று நகரம் வந்து சேர்ந்தான்.
பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.
ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.
உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.
பீர்பால் கதை – முட்டாள்களிடம் எப்படி பேசுவது?
அக்பர் ஒரு நாள் பீர்பாலிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு புதுமையான கேள்வி ஒன்று எழுந்தது. உடனே பீர்பாலிடம் முட்டாள்களிடம் எப்படி பேசுவது? என்று அக்பர் கேட்டார். திடீரென்று அக்பர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று எதிர்பாராமையால், மன்னர் பெருமானே இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார் பீர்பால்.
மறுநாள் காலை – பீர்பால் டில்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று ஒருவனிடம் நான் சொல்வது போன்று செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.அவனும் பீர்பால் சொல்வது போன்று செய்வதாகக் கூறினான். உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மன்னரிடம் அறிமுகம் படுத்தி வைப்பேன்.
அச்சமயம் மன்னர் உன்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். மன்னர் என்ன கேள்விகள் கேட்டாலும் நீ வாய் திறந்து பதில் பேசாது மவுனமாக நின்று கொண்டிருக்க வேண்டும் என்றார். பீர்பால் கிராமத்தானை அரசவைக்கு அழைத்துச் சென்றார்.
மன்னர் பெருமானே! இவன் எனது உறவினன், படித்தவன், உலக அறிவு மிக்கவன், தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும் இவனால் உடனடியாகப் பதில் கூற மன்னர் அவனை நோக்கி, பீர்பாலிடம் கேட்ட அதே கேள்வியை, முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார். கிராமத்துக்காரன் பீர்பாலிடம் சொல்லியபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றும் பேசாது மவுனமாக நின்றிருந்தான். மன்னர் பலமுறை இதுபோன்று கேட்டும் அவன் பதில் கூறாது வாய்மூடி மவுனம் சாதித்தான்.
இதனால் அக்பர், பீர்பாலை நோக்கி, என்ன? உங்கள் உறவினரிடம் பலமுறை கேட்டும் இதற்குப் பதில் கூறாது மவுனம் சாதிக்கிறானே! நீங்கள் கூறியபடி இவன் அறிவாளியாக இருப்பான் என்று தெரியவில்லையே! என்றார்.பீர்பால், மன்னர் பெருமானே! தாங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார்.
நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் கூறினான் மவுனமாக நின்று கொண்டிருக்கிறானே! என்றார் அக்பர். மன்னர் பெருமானே! நேற்றைய தினம் முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று தானே கேட்டீர்கள். அதற்கான விடையைத் தான் தன்னுடைய மவுனத்தின் மூலம் விடை கூறியுள்ளான். அதாவது முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் மவுனமாக இருக்க வேண்டும் என்பதை தான் பேசாது வாய்மூடி மவுனமாக இருந்தான் என்றார் பீர்பால்.
முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைக் குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் .. பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற முடியாது. ஆகையினால் அவர்களிடம் a பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் நுண் அறிவைப் 9 பாராட்டினார் அக்பர்.
மரியாதை ராமன் கதை – யாருடைய முத்து? :
நீதிமன்றத்தில் ஒரு ஏழை தன் பணக்கார நண்பன் மீது வழக்குத் தொடுத்தான். “நீதிபதி அவர்களே என்னிடம் விலைமதிப்பற்ற நல்ல முத்துக்கள் இரண்டு உள்ளன. அவற்றை எனது நண்பனிடம் கொடுத்துவிட்டு வியாபார விசயமாக வெளியூர் சென்றுவிட்டேன்.
திரும்பி வந்து நான் கேட்கும் பொழுது அவ்விரு முத்துக்களையும் திருப்பித் தரமால் நான் கொடுக்கவே இல்லை என்று மோசம் செய்தான்” என நண்பன் புகார் கூறினான்.
அதற்கு நண்பனே “நான் அம்முத்துக்களை வாங்கியதும் இல்லை, பார்த்ததும் இல்லை. அவை போன்ற முத்துக்கள் எதுவும் என்னிடம் இல்லை. நான் பணக்காரன் என்பதால் என்னிடம் பணம் பறிக்க பொய்சொல்லுகிறான் என்றான்.
அவனுடைய மோச கருத்தை முகக்குறிப்பினால் உணர்ந்த மரியாதை இராமன் “போதிய சாட்சியம் இல்லாததால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறினான். ஏழை அழுதபடியே வீட்டிற்குச் சென்றான்.
இருவரையும் அனுப்பி விட்டு சில நாட்கள் கடந்ததும் ஏழையின் முத்துக்களைப் போன்று 98 முத்துக்களை அரண்மனையிலிருந்து வரவழைத்து, அவற்றை ஒரு நைந்த சரத்தில் கோர்த்து முத்துமாலையாக்கி அதை மாலை நேரத்தில் மோசக்காரனிடம் கொடுத்து, “நண்பனே நீ முத்துக்களைக் கோர்ப்பதில் கைதேர்ந்தவன் என்று கேள்விப்பட்டேன்.
என்னிடம் உள்ள இந்த முத்துமாலையில் நூறு முத்துக்கள் இருக்கின்றன. சரடு நைந்து போய் விட்டால், புதிய சரடில் கோர்த்து அழகான முத்துமாலையாக கட்டிக் கொண்டு வந்து தா” எனச் சொல்லி அனுப்பினான் இராமன்.
அதை வாங்கிச் சென்றவன் மறுநாள் பிரித்து எண்ணிப் பார்க்கும் போது 98 முத்துக்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். “தான் அவற்றைக் கைதவறுதலாக காணாமற் போக்கடித்துவிட்டோமோ” என்று குழம்பி திகிலுற்றான். பிறகு குறையும் இரண்டு முத்துக்களுக்குப் பதிலாக ஏற்கனவே தான் நண்பனிடம் மோசடி செய்து வைத்திருந்த இரண்டு முத்துக்களையும் சேர்த்து மாலையாக கட்டி நீதிபதியிடம் கொண்டு போய் கொடுத்தான்.
அந்த முத்துமாலையில் 100 முத்துக்கள் இருப்பதை எண்ணிப்பார்த்த மரியாதை இராமன் அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி கோபத்துடன் “நண்பனே நான் கொடுத்தது 98 முத்துக்கள் தான். அவற்றோடு நீ சேர்த்திருக்கும் இரண்டு முத்துக்களும் உனது சிநேகிதனிடமிருந்து சில காலத்திற்கு முன் நீ அபகரித்தவையாகும்” என்றான்.
மோசடிகாரனுக்கு வேறு வழி தோன்றவில்லை. தனது திருட்டை ஒப்புக்கொண்டபின், பின்பு இராமன் அவ்விரு முத்துக்களையும் உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு மோசடி செய்தவனுக்கு 10 பவுன் அபராதம் விதித்தான்.
Question 2.
நூலகத்தைப் பயன்படுத்தி எவையேனும் ஐந்து கதைகளின் பெயர்களையும், அந்தக் கதைகளின் ஆசிரியர் பெயர்களையும் பட்டியலிடுக.
Answer:
கூடுதல் வினாக்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
Question 1.
தெனாலிராமனின் அறிவுக் கூர்மையைச் சோதிக்க யார் யாரிடம் அனுமதி பெற்றார்?
Answer:
அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் கிருஷ்ணதேவராயரிடம் தெனாலிராமனின் அறிவுக்கூர்மையைச் சோதிக்க அனுமதி பெற்றார்.
Question 2.
பறவையைத் தேடிச் சென்ற தெனாலிராமன் அரசவைக்கு வந்தபோது எவ்வாறு காட்சியளித்தான்?
Answer:
தெனாலிராமனின் நிலை மோசமாக இருந்தது. உடை கிழிந்து இருந்ததுடன், அதில் முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. அவரது கையில் காலியான பறவைக் கூண்டு ஒன்று இருந்தது.
Question 3.
விகடகவி என்றால் என்ன?
Answer:
விகடகவி என்றால் நகைச்சுவை தோன்ற பாடுபவர் என்பது பொருள்.