Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 3.1 கடல் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 3.1 கடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது………………………
அ) பெருமைகடல்
ஆ) பெருங்கடல்
இ) பெரியகடல்
ஈ) பெருமைக்கடல்
Answer:
ஆ) பெருங்கடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 2.
கருங்கடலே என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………………
அ) கருமை + கடலே
ஆ) கருங் + கடலே
இ) கரும் + கடலே
ஈ) கரு + கடலே
Answer:
அ) கருமை + கடலே

Question 3.
‘திரை’ என்ற சொல்லின் பொருள்………………………
அ) மலை
ஆ) அலை
இ) வலை
ஈ) சிலை
Answer:
ஆ) அலை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 4.
மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது………………………
அ) வானம்
ஆ) பூமி
இ) கடல்
ஈ) நெருப்பு
Answer:
இ) கடல்

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
எ.கா. எல்லை – அல்லும்
…………………………
…………………………
…………………………
…………………………
Answer:
பொங்கு – எங்கும்
மலையை – விலைகொள்
கடலே – கடலே
திரைகளோ – நிரைதாமோ?

இ. முதலெழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
எ.கா. அல்லும் – அலப்பும்
…………………………
…………………………
…………………………
…………………………
Answer:
மலையை – மகர
விலைகொள் – விளையாடற்
மழைக்கு – மதித்து
கடலே – கடலே

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?
Answer:
மீன்கள், முத்துகள், சிப்பிகள்.

Question 2.
பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.
Answer:

  • பெருங்கடலே! நீ இரவு பகல் உறங்காது அலைவீசி, ஓய்வில்லாமல் இருக்கின்றாய்.
  • அலைகள் குதிரைகள் அணிவகுத்து வருவது போல் உள்ளது.
  • அலையோசையா? இடியோசையா? என ஐயம் எழுகின்றது.
  • அலைகள், மீன்கள், சிப்பிகள், முத்துகள் ஆகியவற்றைக் கொண்டது கடல்.
  • பூமியில் மழை பெய்யவும், மழைநீரைத் தேக்கும் கலமாகவும் கடல் விளங்குகின்றது. ஆகவே, உன் பெருமைகளைச் சொல்ல வல்லவர்கள் யாரும் இல்லை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

உ . சிந்தனை வினா.

Question 1.
எல்லையறியாய் பெருங்கடல் என்று கூறக் காரணம் என்ன? வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கடல் எல்லையற்றது. அதற்கு இதுதான் முடிவு என்று கூறமுடியாது. அது விரிந்து பரந்துள்ளது. எனவே எல்லையறியாய் பெருங்கடல் என்று கவிஞர் கூறியிருக்கின்றார்.

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
Answer:
ஆசிரியர் உதவியுடன் பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டவும்.

Question 2.
கடலைப் பற்றி இப்பாடல் மூலம் நீ அறிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
கடல் மிகவும் அழகாக இருக்கும். கடலில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் கப்பல்கள் செல்லும். சங்கு, முத்து, மீன்கள் ஆகிய எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் அலை வீசிக் கொண்டே இருக்கும். மழையாக பெய்யும் நீரான இறுதியில் கடலையேச் சென்றடையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 3.
கடலைப் பற்றி நீ அறிந்த பாடல்களை வகுப்பறையில் பாடி மகிழ்க.
Answer:
கடல்
அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா
உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்
போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா
பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!
முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!
சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!
முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்
வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
மழை நீரைச் சேமித்து வைக்கும் கலன் ……………..
அ) அலை
ஆ) குதிரைகள்
இ) கடல்
ஈ) சிப்பி
Answer:
இ) கடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 2.
தேசிக விநாயகனார் பிறந்த ஊர் ………
அ) கரூர்
ஆ) தேரூர்
இ) சிதம்பரம்
ஈ) மைலாப்பூர்
Answer:
ஆ) தேரூர்

Question 3.
மகரம் என்ற சொல்லின் பொருள் …………..
அ) அலைகள்
ஆ) களைப்பு
இ) குதிரை
ஈ) மீன்
Answer:
ஈ) மீன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 4.
தேசிக விநாயகனார் …………… என்று போற்றப்பெற்றார்.
அ) கவிஞர்
ஆ) புரவலர்
இ) கவிமணி
ஈ) புலவர்
Answer:
இ) கவிமணி

விடையளி :

Question 1.
பெருங்கடல் எப்படி இருக்கும்?
Answer:
பெருங்கடல் எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருக்கும்.

Question 2.
கடல் அலைகள் எவைகள் போல அணிவகுத்து வருகின்றன?
Answer:
கடல் அலைகள் குதிரைகள் போல அணிவகுத்து வருகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 3.
ஐயம் எழக் காரணம் யாது?
Answer:
எங்கும் கேட்கும் ஒலி அலையோசையால் எழுந்ததா? அல்லது இடியோசையால் எழுந்ததா? என்று ஐயம் எழுகின்றது.

Question 4.
தேசிக விநாயகனார் கவிமணி எனப் போற்றப்பட காரணம் யாது?
Answer:
இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால் தேசிக விநாயகனார் ‘கவிமணி’ எனப் போற்றப்படுகின்றார்.

பாடல் பொருள்

எல்லையின்றிப் பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலே! நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய். உனக்கு ஓய்வு என்பதே இல்லை. பொங்கி வருகின்ற உன் அலைகள், பார்ப்பதற்குக் குதிரைகள் அணிவகுத்து வருவதைப்போல் காட்சியளிக்கின்றன. எங்கும் ஒலிக்கின்ற உன் ஒலி, அலையோசையால் எழுந்ததா அல்லது இடியோசையால் எழுந்ததா என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

உன்னுள் உயர்ந்த மலையும் அடங்கிக் கிடக்கிறது. எண்ணில்லாத மீன் வளங்களையும் விலை மதிப்புடைய முத்துகளையும் கொண்டுள்ள நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும் உதவுகிறாய். இப்பூமியில் மழை பெய்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய். அந்த மழைநீரைச் சேமித்து வைக்கும் பெரிய கலனாகவும் விளங்குகிறாய். ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைக்க வல்லவர்கள் இங்கு எவரும் இலர்.

நூல் குறிப்பு :

இப்பாடலைப் பாடியவர், கவிமணி தேசிக விநாயகனார். இவர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். இவர், இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால், கவிமணி என்று போற்றப்பெற்றார். நம் பாடப்பகுதியிலுள்ள பாடல், குழந்தைப்பாடல்கள் என்னும் தலைப்பில் முதற்பாடலாக அமைந்துள்ளது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

சொல்பொருள்

1. அலுப்பு – களைப்பு
2. புரவி – குதிரை
3. மகரம் – மீன்
4. திரைகள் – அலைகள்
5. மகிமை – பெருமை