Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது …………..
அ) சிலம்பம்
ஆ) மற்போர்
இ) மட்டைப்பந்து
ஈ) நீர் விளையாட்டு
Answer:
இ) மட்டைப்பந்து

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
‘மஞ்சு விரட்டு’ என்பதைக் குறிக்கும் விளையாட்டு …………………
அ) மற்போர்
ஆ) ஏறுதழுவுதல்
இ) சிலம்பாட்டம்
ஈ) வில்வித்தை
Answer:
ஆ) ஏறுதழுவுதல்

Question 3.
மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) மற் + போர்
ஆ) மள் + போர்
இ) மல் + போர்
ஈ) மறு + போர்
Answer:
ஈ) மறு + போர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 4.
தன் + காப்பு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ……………
அ) தன்காப்பு
ஆ) தண்காப்பு
இ) தனிகாப்பு
ஈ) தற்காப்பு
Answer:
ஈ) தற்காப்பு

Question 5.
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை …….
அ) சிலம்பாட்டம்
ஆ) வில்வித்தை
இ) ஏறுதழுவுதல்
ஈ) வழுக்கு மரம் ஏறுதல்
Answer:
ஆ) வில்வித்தை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
அ) சிலம்பு + ஆட்டம் = …………………….
ஆ) வீரம் + கலை = …………………….
Answer:
அ) சிலம்பு + ஆட்டம் – சிலம்பாட்டம்
ஆ) வீரம் + கலை – வீரக்கலை

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) தனக்கென்று= ……………………. + ……………………….
ஆ) கொடைத்திறம்= ……………………. + ……………………….
Answer:
அ) தனக்கென்று – தனக்கு + என்று
ஆ) கொடைத்திறம் – கொடை + திறம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

ஈ. பொருத்துக

1. காளை – கம்பு
2. சிலம்பு – மூங்கில்
3. சிறுவாரைக்கம்பு – திமில்
4. தாளாண்மை – உழவு
வேளாண்மை – முயற்சி
Answer:
1. காளை – திமில்
2. சிலம்பு – கம்பு
3. சிறுவாரைக்கம்பு – மூங்கில்
4. தாளாண்மை — முயற்சி
5. தாளாண்மை – உழவு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக.
Answer:

  • சிலம்பாட்டம்
  • ஏறுதழுவதல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
ஏறுதழுவுதல் என்றால் என்ன?
Answer:
ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும்.

Question 3.
சிலம்பாட்டம் – பெயர்க்காரணம் தருக.
Answer:
சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் உண்டு.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 4.
வல்வில் ஓரியின் வில்லாற்றல் சிறப்பைக் கூறுக.
Answer:
(i) கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ‘வல்வில் ஓரி’ வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.

(ii) அவர், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பெரிய யானையொன்று எதிர்ப்பட, அதன் மீது அம்பெய்தினார்.

(iii) அந்த அம்பானது, அப்பெரிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீர்ந்தது என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

(iv) படைத் திறமும் கொடைத் திறமும் கொண்டு விளங்கிய வல்வில் ஓரியை வன்பரணர் இவ்வாறு பாடி மகிழ்ந்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 5.
மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது?
Answer:
இருவர் கைகோர்த்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவர் போர் செய்வதே மற்போர்.

ஊ. சிந்தனை வினாக்கள்.

Question 1.
சிலம்பாட்டம் தற்காப்புக் கலைகளுள் ஒன்று. ஏன்?
Answer:
(i) சிலம்பாட்டம் தற்காப்புக் கலைகளுள் ஒன்றுதான்.

(ii) ஏனென்றால் சிலம்பு எடுத்து சுழற்றும்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன.

(iii) கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.

(iv) ஒரே ஒரு தடியைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பாட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
உடலில் உறுதி உடையவரே உலகை ஆளும் உள்ள உறுதி உடையவர். இவ்வரிகளை பற்றி உமது கருத்து யாது?
Answer:
‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நம் உடல் நலம் நன்றாக இருந்தால்தான் உள்ளமும் நன்றாக இருக்கும். உடல் வலிமை பெறும்போது எதையும் தாங்கும் திறனைப் பெற முடியும். தெளிவான மனம் அமையும். சோம்பலின்றி சுறுசுறுப்பாகச் செயலாற்ற முடியும். உள்ளம் துடிதுடிப்பாக இருக்கும். அதனால் உலகை ஆளும் அளவிற்கு உள்ள உறுதியைத் தருகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

எ. எதிர்ச்சொல் உருவாக்குக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் - 3
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் - 1

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றிப் பேசுக.
Answer:
எங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று வழுக்கு மரம். ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மர விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்பட்டு, மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவுவார்கள். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்பட்டு இருக்கும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக எங்கள் கிராமத்தில் இவ்விளையாட்டு நடத்துகிறார்கள்.

Question 2.
உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகள் எவை? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த விளையாட்டு கபடி. கபடி விளையாட்டு ஓர் அற்புதமான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு உடல் வலிமை வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு ஏறு தழுவுதல்) தயாராகும் முன் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. எதிரணிக்குச் செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

அவ்வீரரைத் தொடவிடாமல் மடக்கிப் பிடித்து, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்குச் சமமாகும். மூச்சு விடாமல் ‘கபடி கபடி’ என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். அப்படிப்பட்ட ஓர் அருமையான விளையாட்டு.

இந்த விளையாட்டிற்கு நல்ல உடல் வலிமை வேண்டும், உடல் வலிமை இருந்தால் தான் இந்த விளையாட்டு வீரர்கள் அதில் சாதனை படைக்க முடியும். தம் அணிக்குத் திரும்பும் முன் ‘கபடி கபடி’ என்று பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழந்து விடுவார்.

Question 3.
விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் எவை? அவற்றைப் பற்றி உங்களுடைய கருத்துகளைக் கூறுக.
Answer:
விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் :

  • தவளை ஓட்டம்
  • இசை நாற்காலி
  • கயிறு இழுத்தல்
  • பானை உடைத்தல்
  • மெதுவாக சைக்கிள் ஓட்டுதல்

அவற்றைப் பற்றி என் கருத்து :
திருவிழாக்கள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை. உழைத்து உழைத்துக் களைத்தவர்கள் தங்களின் களைப்பைப் போக்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்டவைதான் திருவிழாக்களும் விளையாட்டுகளும்

விளையாட்டுகளின் மூலம் ஒற்றுமை உணர்வு உண்டாகிறது. விட்டுக் கொடுக்கும் பழக்கம் வளர்கிறது. தன்னம்பிக்கை கூடுகிறது. உடல் உறுதியடைகிறது. மனவலிமை பெறுகின்றனர். திட்டமிட்டுச் செயல்படக் கற்றுக் கொள்கின்றனர். ஒழுக்கத்துடன் இருக்க விளையாட்டு பயன்படுகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

படித்து அறிக

வங்கனூர் வாழ் பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி… டம்… டம்… டம்…
இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், வரும் பொங்கல்
திருவிழா அன்று மாலை 4.00 மணியளவில் பூங்கா நகர்
மைதானத்தில் சிலம்பாட்டம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள்
திரு. மணி அவர்களிடம் பெயரைப் பதிவு செய்யுமாறு ஊராட்சி சார்பில் தெரிவிக்கலாகிறது.
டம்… டம்… டம்
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் - 2

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
ஏறுதழுவுதலுக்கு உகந்த நிலம் ……….
அ) நெய்தல்
ஆ) முல்லை
இ) பாலை
ஈ) குறிஞ்சி
Answer:
ஆ) முல்லை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
ஏறுதழுவுதல் மறுபெயர் …..
அ) சிலம்பாட்டம்
ஆ) சிலம்பம்
இ) மற்போர்
ஈ) மஞ்சுவிரட்டு
Answer:
ஈ) மஞ்சுவிரட்டு

Question 3.
சிலம்பு என்பதன் பொருள்
அ) கொம்பு
ஆ) சுருள்பட்டா
இ) ஒலித்தல்
ஈ) வளரி
Answer:
இ) ஒலித்தல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

விடையளி :

Question 1.
சிலம்பக் கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • மான்கொம்பு
  • பிச்சுவா கத்தி
  • சுருள் பட்டா
  • வளரி

Question 2.
மற்போரில் வெற்றிப் பெற்றவர்களை எவ்வாறு அழைப்பார்கள்?
Answer:
மற்போரில் வெற்றிப் பெற்றவர்களை ‘மல்லன்’ என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. மற்போரில் சிறந்து விளங்கியமையாலேயே மாமல்லன் என்று அக்கால அரசர்கள் போற்றப்பெற்றனர்.