Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.4 சொலவடைகள் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.4 சொலவடைகள்
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
Answer:
1. வீட்டுக்கு வீடு வாசற் படி.
2. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்.
3. அடிச்சு வளக்காத புள்ளயும் ஒடிச்சு வளக்காத முருங்கையும் உருப்படாது.
4. எறச்ச கிணறு ஊறும்.
5. நாய் வித்த காசு கொலக்கவா செய்யும்.
6. ஊராரு புள்ளய ஊட்டி வளத்தா தன்புள்ள தன்னால வளரும்.
7. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
8. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
9. காணி சோம்பல் , கோடி கேடு.
10. மானேண்ணா புள்ளி கொறயுமா? மயிலேண்ணா எறகு உதிறுமா?
Question 2.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக
(எ.கா) குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.
Answer:
1. எறும்பு ஊரக் கல்லும் தேயும் :
மாணவர்களிடம் ஆசிரியர் எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல தீய பழக்கங்களின் கொடுமையினைக் கூறி மனமாற்றம் அடையச் செய்வார்.
2. சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
கற்பனையில் மிதந்து இருப்பவர்கள் சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா? என்பதை உணர வேண்டும்.
3. அதிர அடிச்சா உதிர விளையும் :
அதிர அடிச்சா உதிர விளையும் என்பது போல வாழ்வில் முன்னேற தொடர் முயற்சி செய்தால் போதும்.
4. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும் :
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும் என்பது போல உழைப்பவருக்குத் தான் பணத்தின் அருமை தெரியும்.
5. பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா?
தீயவன் கோடி ரூபாயைக் கோவில் உண்டியலில் போடுவது பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா? என்பது போலப் புண்ணியம் கிடைக்குமா?
பாடநூல் மதிப்பீட்டு வினா
பாடப்பகுதி பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
‘ஆளுக்கு ஒரு வேலை’
முன்னுரை
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ‘ஆளுக்கு ஒரு வேலை’ என்னும் பொம்மலாட்டக் கதை நிகழ்வைச் சிறுகதை வடிவில் காண்போம்.
பையனின் பிடிவாதமும் பெற்றோர் அறிவுரையும்
அம்மா, அப்பா, பையன் என சிறுகுடும்பம் ஒன்றுள்ளது. அக்குடும்பத்தில் உள்ள பையன் ஒழுங்காகப் பள்ளிக் கூடம் செல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டே இருப்பான். யார் அறிவுரை கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன். அவனது பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியாது. ஒருநாள் அப்பா அந்தப்பையனிடம், இப்பொழுது நீ படிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது, பள்ளிக்கூடம் போய் படி’ என்றார். அம்மாவும், படிக்கவில்லையென்றால் யாரும்
மதிக்கமாட்டார்கள்’ என்றார். அவன் வேண்டா வெறுப்பாகப் பள்ளிக்கூடம் சென்றான்.
விளையாட அழைத்தல்
வழக்கம் போலவே பள்ளிக் கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கின்றான். விளையாட யாராவது வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எறும்பு ஒன்று வந்தது. அதனை விளையாடக் கூப்பிட்டான். ஆனால் அது தன் குழந்தைகளுக்குத் தீனி கொடுக்க வேண்டும். அரிசி, தவிடு சேகரிக்க வேண்டும். உனக்குத் தான் வேலை இல்லை என்றது. பிறகு தேனீ , பொதிமாடு, ஆமை, முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான்.அவனுக்குப் புத்தி புகட்டும் வண்ணம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவை விளையாட மறுத்து விட்டன.
மனமாற்றம்
ஈரமான குட்டிச் சுவர் மீது அவன் அமர்ந்தான். சுவர் இடிந்து, அதிலிருந்த பூச்சி, எறும்பு, வண்டு ஆகியன ‘உனக்குத் தான் வேலை இல்லை, நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!’ என்றுச் சொல்லி அவனைக் கடித்தன. மனம் மாறிய பையன் தன் அம்மாவிடம், ‘உலகத்தில் ஈ, எறும்பு கூட சும்மா இல்லாமல் வேலை செய்கின்றன. படிப்பது தான் என் வேலை என்பதைப் புரிந்து கொண்டேன். இனி ஒழுங்காகப் பள்ளிக்குச்
செல்கின்றேன்’ என்றான்.
முடிவுரை
‘ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை உண்டு. மாணக்கர்களுக்குப் படிப்பது மட்டும் தான் நம் வேலை’ என்பதை இக்கதையின் மூலம் நாம் அறியமுடிகின்றது.
கதை உணர்த்தும் நீதி : படி ! முதற்படி! அதுவே வாழ்க்கைப் படி!